வல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு”
திரைப்படப் பாடல் போட்டிக்கு அனுப்பிய பாட்டு
ஆண்:
செல்லமே செல்லமே மௌனமா?
கொல்லவே கொல்லவே வேண்டா
மதியைப் பிரியுமா வானம்...
சகியே சொல்வாய்!
பெண்:
அன்பே! ஆருயிரே! அனிச்சம் மலர்போல்
நானே... வாடுகிறேன்...
காதலில் விழுந்தேன்
கடுஞ்சொல்ஏனோ? தீயாய் சுடுகிறதே...ஓ...
திசைதெரியாத மேகமாகியே
விசையின்றி நானே அலைகிறேன்
விதியை எண்ணியே வாழுகிறேன்
விழிமூடிக் கிடக்கிறேன்
ஆண்:
செல்லமே செல்லமே மௌனமா?
கொல்லவே கொல்லவே வேண்டா!
மதியைப் பிரியுமா வானம்...
சகியே சொல்வாய்
கண்ணே கனியே மானே மயிலே
எல்லாம் பொய்யா?
இதயத்தையே இடம்மாற்றிய
திருடா நீயே! மெய்யே! நீயே
சொல்வாயே வனமாகுதே! பாலை வனமாகு...தே... ஏ...
பெய்யாய்ச் சீண்டியது மெய்யாக மெய்தான்
வஞ்சிமலரே உன்னை
கெஞ்சுகிறேன்
கொஞ்சி மகிழ
கொஞ்சம் தாராய்?
பெண்:
போதுமே
குறும்பு மாலைதந்து விரும்பு
ஆண்:
நாணத்தால் நீ சிவந்து
நாயகி நீ விருந்து
மாலைவரும் வேளைவருமே விரைந்தே
ஓலைவருமே...கலங்காதே... மயங்காதே!
பெண்:
வசந்த காலமினியே...
வாசம் வீசுமினியே
காதல்... பேசும் விழியே
காலம்... வாழ்த்துப் பாடும்
ஆண்:
சொல்லவே சொல்லவே வார்த்தையில்ல
உள்ளத்தில்
உன்னையன்றி யாருமில்ல
உள்ளத்தைக் கேட்டுப்பார் பொய்யுமில்ல
பாடல் இசையைக் கேட்க கீழே ‘கிளிக்’ செய்யவும்.
பாடல் இசையைக் கேட்க கீழே ‘கிளிக்’ செய்யவும்.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.










