சனி, 16 ஜனவரி, 2016

தடம்மாற்றிய பண்டிகை! - சிறுகதை.


தடம்மாற்றிய பண்டிகை!

(மணவை ஜேம்ஸ்)

     ல்லிக்கட்டு நடத்த  உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதால் மக்களனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தனர்.

     முத்தப்பனைத் தெரியாதவர்களே இருக்கமுடியாது.  ‘மாடுபிடி வீரன்’ எனப்பெயரெடுத்தவன்.  இவனின் வீரத்தில் மயங்கித்தான் மகாலட்சுமி இவனைப் பதினெட்டு  வயதில் கரம் பிடித்தாள்.

     கல்யாணமான மூன்று வருடத்தில் மூன்று பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். இன்று கொத்தனாராகிக் குடும்பத்தைப் பொறுப்பாகப் கவனித்துக் கொள்கிறான் என்றால் அதற்குக் காரணம் மகாலட்சுமிதான்.

     ழவர்திருநாளாம் இன்று தன்வீட்டில் இருக்கும் பசுமாட்டிற்குப் பொங்கல் வைத்துப் படைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.  மகாலட்சுமிக்கு முப்பது வயது;  மாநிறத்தில் ஒல்லியாக அழகான உடம்பு!   முத்தப்பனுக்கோ அவளைவிட மூன்று வயதுகூட!  கருப்பு என்றாலும் ஆணழகனென்றே சொல்லலாம்.
                                         


     பெரியவள்‘ஐஸ்வர்யா ஆறாம்வகுப்பும்;  நடுப்பெண்‘பிரியங்கா அய்ந்தாம்வகுப்பும் சின்னவள்‘அஞ்சலி நான்காம்வகுப்பும் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கிறார்கள்.

“மஞ்சுவிரட்டுக்குப் போகணுமுல்ல!“  முத்தப்பன் வேகப்படுத்தினான்.

“மாடு கன்னுபோடுற நெலமையில் இருக்கு...அத நா பாத்துக்கிறேன்...புள்ளகளக் கூட்டிட்டுப்போயி... காலரியில் நின்னு ஜல்லிக்கட்டப் பாருங்க...”  தயங்கித் தயங்கித்தான் சொன்னாள்.


“அடிப்போடி பொசகெட்ட கழுத... நல்லா இருக்கே கத...இந்தா பாரு மாடுபிடிக்கிறதுக்கு டோக்கனெல்லாம் வாங்கி வச்சிருக்கேன்.   நீ வரலன்னா டி.வி.யில நேராக் காட்டுவாங்க... பாத்துக்கிட்டு இரு... புள்ளகளக் கூட்டிட்டுப்போயி பத்தரமா ஒக்காரவைக்கிறேன்... கிளம்புங்கம்மா...பிள்ளைகளை அழைத்துக்கொண்டு  புறப்பட்டான்.

மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாகத்தான் இருந்தது. பிள்ளைகளைக் காலரியில் அமரவைத்துவிட்டு, “நா வந்து கூட்டிட்டுப் போற வரைக்கும் நீங்க இந்த எடத்தவிட்டு நகரக்கூடாது...!“ கண்டிசன் போட்டுவிட்டுச் சென்றான்.


வந்திருந்த ஆயிரம் காளைகளையும் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு இருந்தனர். 

முத்தப்பனும் பரிசோதனை முடித்து... சீருடையைப் போட்டுக்கொண்டு வாடிவாசலுக்குமுன் வந்து நின்றான். 

      “ம்ம ஊரு ஜல்லிக்கட்டு ஆரம்பமாவுது... மொதல்ல நம்ம கோயில்மாடு வருது... அத யாரும் பிடிக்கக்கூடாது...”  அறிவிப்புச் செய்யப்பட்டு மாடு அவிழ்க்கப்பட்டது. 
                                      
மாடுகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.  யாருக்கும் பிடிகொடுக்காமல் நிறையமாடுகள் ஓடிக்கொண்டே இருந்தன.  பிடிபட்ட மாடுகள் மிகச்சிலவேமாட்டுக்காரர்களே பரிசுகளை அள்ளிக்கொண்டு சென்றனர்.

“வர்ற மாட்டைப் பிடிக்கிறவனுக்கு பீரோ...கட்டில் பரிசு
தாவி வந்த செவலைமாட்டை, முத்தப்பன் வலதுகையால் லாவகமாகத் திமிலில் கைபோட்டு இடது கையால் கொம்பைப்பிடித்து மாட்டைக்கட்டி... எல்லைக்கோடுவரை சென்றான்.

பரிசை வாங்கிப் பத்திரப்படுத்துவதற்குள் பலமாடுகள் அவிழ்த்துவிடப் பட்டுக்கொண்டே இருந்தன.

 “ய்... அடுத்த மாடு பெரிய மாடுப்பா...பத்துபேரக் கொல பண்ணுனமாடு... ஜாக்கிரத...... ஒரு பவுன் மோதிரம்... மாட்டுக்கரார் ஆயிரம் ரூவா...பிடிங்கப்பா... ஆம்பள சிங்கம்ன்னா பிடிங்கப்பா...“

பிடிகாரரெல்லாம் பயந்து விலக வாடிவாசலருகே முத்தப்பனோடு மூன்று பேர்மட்டுமே அந்த மாட்டைப் பிடிக்க நின்றிருந்தனர்.

“மாடு வாடிவாசலவிட்டு வெளியே வர மாட்டேங்கிதுப்பா... தரையக்குத்துது... ரொம்பக் கோபமாக இருக்கு... ஜாக்கிரத......” அறிவிப்பு செய்துகொண்டிருக்கும் பொழுதே தாவிக்குதித்து வெளியில் வந்த கருப்புக்காளையின் திமிலைப்பிடிக்க முத்தப்பன் தாவினான்...பிடி சரியாகக் கிடைக்காமல் அவன் கைநழுவ...  மாட்டின் இரண்டுகொம்புகளை வேகமாகப் பற்றினான்... தலையை வேகமாக அந்தமாடு ஆட்ட ஆறடிக்குமேல சென்று கீழே வந்தவனைத் தன்கொம்பிலேயே நடுவயிற்றில் தாங்கி;   முத்தப்பனின் குடல்சரிய... அவனைச் சுமந்துகொண்டே  அந்தமாடு எல்லைக்கோட்டையும் தாண்டிச்சென்று... அவனைத்தரையில் வீசியது;   தரையில்விழுந்தவனின் மார்பில் மீண்டும் குத்தியது.  ‘முடிந்தால் என்னைத் தொட்டுப்பாருங்கள்’  என்பதைப்போல அந்தமாடு ஓடாமல் நடந்தே சென்றது. 


தொலைக்காட்சி நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த மகாலட்சுமி ‘அய்யய்யோ...‘வெனக் கத்தியபடி மயங்கி விழுந்தாள். 

பெரியவள்‘ஐஸ்வர்யா செய்வதறியாது அழுதுகொண்டே தன்தங்கைகளை அழைத்தாள்.  நடுப்பெண்‘பிரியங்கா’ அக்காவைக் இறுகக்கட்டிப்பிடித்துச் சத்தம்போட்டு அழஆரம்பித்தாள்.

“நா வந்து கூட்டிட்டு போற வரைக்கும் நீங்க இந்த எடத்தவிட்டு

நகரக்கூடாதுன்னு சொன்னாருல்ல... அப்பா... வந்து கூட்டிட்டுப்போவார்“ சின்னவள்‘அஞ்சலிஅசையாமல் நின்றாள். 

மருத்துவர்கள் முத்தப்பனின் உடலைப் பரிசோதித்துப் பார்த்து...
கைவிரித்தனர்! 
                                       

     ல்லிக்கட்டு நடந்துகொண்டிருந்தது...!
                                                                     


                                                                        


(திருவாளர்கள் ரூபன் &  யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய  சிறுகதைப் போட்டி(2015)யில்  சிறப்புப் பரிசு பெற்றவர் வரிசையில்    இடம் பெற்ற எனது சிறுகதை... மீள்பதிவு)


-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in

27 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   தாங்கள் முதலாவதாக வந்து தமிழ்மனம் மாறாது தமிழ்மணத்தில் வாக்களித்ததற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 2. அன்பு நண்பர் ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்! ஒரு மாடுபிடி வீரனின் ஆர்வக் கோளாறையும், அந்த ஆர்வத்தால் மாடுபிடிக்கச் சென்று, ஜல்லிக்கட்டில் இறந்ததையும், அதன்பின்னர் அவன் குடும்பம் படும் அவலத்தினையும் அருமையாக படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.

  உங்களது இந்த மீள்பதிவை எனது _ ‘ஜல்லிக்கட்டு – தடை வேண்டும்’ http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post.html என்ற எனது பதிவினில் , இப்போது சுட்டியாக இணைத்துள்ளேன். நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   எனது சிறுகதையைத் தங்களின் பதிவில் சுட்டியாக இணைத்துள்ளதற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 3. வாழ்த்துக்கள் சார்! சிறப்பாக இருக்கிறது! ஜல்லிக்கட்டின் மற்றொரு கோணத்தை சித்தரித்தவிதம் சிறப்பு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. எந்த ஒரு நிகழ்விற்கும் மறுபக்கம் என்று உண்டல்லவா
  மறுபக்கம் வேதனையினைத் தருகிறது
  நன்றி ஐயா
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள கரந்தையாரே!

   ஒரு நாணயத்தின் இருபக்கங்களையும் பார்க்க வேண்டும் தானே! தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அய்யா.

   நீக்கு
 5. வணக்கம் ஐயா.

  முன்பே படித்த பதிவுதான் என்றாலும் இச்சூழலில் மீள்பதிவாய் வரும் இக்கட்டுரை உரிய கவனம் பெறும்.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   வணக்கம். தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. ஐயா,

   கட்டுரை என்பதைக் கதை எனத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.

   நன்றி.

   நீக்கு
 6. அப்போதே வாசித்தோமே!!! சிறப்பான கதை வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. அன்புள்ள வலைச்சித்தரே!

   தங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. முன் எப்போதையும் விட இன்றைக்கு தேவையான கதை !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜீ,

   தங்களின் கருத்துக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. தம +
  இலக்கியம் என்ன செய்ய வேண்டுமோ அதை கச்சிதமாக செய்திருக்கிறீர்
  வாழ்த்துகள்
  நிகில் குறித்து சில செய்திகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. வணக்கம் மணவையாரே
  மறுபக்கத்தை அழகாக விவரித்தீர்கள் இந்த சோகம் காலம் காலமாய் நடக்கும் நிகழ்வுகள்தான் என்றாலும் தக்க தருணத்தில் இந்த மீள் பதிவை வெளியிட்டது சிறப்பு வாழ்த்துகள்
  ஜல்லிக்கட்டில் ஒட்டகம் பிடிப்பதற்காக 2 தினங்களாக துபாய், சார்ஜா என அலைச்சல் எனக்கும் அரேபியர்கள் தலையில் இடும் வட்டு இரண்டு கிடைத்தது (பாக்கிஸ்தானி கடையில் வாங்கினேன் என்று நினைத்து விடாதீர்கள்) ஆகவே கருத்துரை இட முடியவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   வணக்கம். தங்களின் வாழ்த்திற்கும் வாக்களித்த பிறகும் மீண்டும் வந்து கருத்திட்டதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. இப்போது போலவே முன்பு ஒருமுறை ஜல்லிக்கட்டு வேண்டுமா வேண்டாமா என்ற வாதங்கள் உச்சத்தில் இருந்தன. அப்போது ஒரு பெரும் கட்டுரை ஒன்றை எழுதினேன். அதில் பலரை பேட்டிக்கண்டேன். இதுபோன்ற ஏராளமான கதைகள். கேட்க நேர்ந்தது. தங்களின் கதையைப் படிக்கும்போது அந்த நினைவு வந்தது.
  த ம 10

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. நண்பர் எஸ்.பி.செந்தில்குமார் அவர்களே! அந்த கட்டுரையை மீண்டும் உங்கள் வலைத்தளத்தில் இப்போது சொன்னால் இக்காலச் சூழலுக்கு நன்றாகவே பொருந்தும்.

   நீக்கு
  3. அன்புள்ள அய்யா,

   திருவளார்.தமிழ் இளங்கோ அவர்கள் சொல்லியதே என் எண்ணத்திலும் தோன்றியது.

   நன்றி.

   நீக்கு
 12. இயல்பு வாழ்வு மின்னும்
  உள்ளத்தைத் தொடும்
  உணர்வுகள் உலாவும்
  அருமையான கதை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் பாராட்டிற்கு நெஞ்சார்ந்த நன்றி.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...