செவ்வாய், 6 ஜூன், 2017

புதிய உடன்படிக்கை - 12 நாடகம்காட்சி  12

இடம்சாலை

பாத்திரங்கள்ஜான்சன், கனகராஜ், செல்வம், சேகர்.

(அனைவரும்  நின்று கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள்)

செல்வம்: என்னா மச்சி... அதையே நெனச்சு ‘பீல் பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி...?
                                                         
கனகராஜ்:  நம்ப பிளான்னே அவுட்டாயிடுச்சே... ஏன்டா ஜான்சன்... நாற்பதாயிரம் முடியாட்டி... ஒரு இருபதாயிரம் வாங்கிட்டு வரச் சொல்ல வேண்டியதுதானே...

ஜான்சன்: அட நீ ஒன்னுடா... அவள் ஒத்த ரூவாகூட வாங்கிட்டு வர முடியாதுன்டா... அட அதை வுடு... குடிக்கிற விசயத்த... எங்க அப்பாக்கிட்ட சொல்லுவாளாம்...

செல்வம்: ஒங்க அப்பாக்கிட்ட சொல்லிட்டாங்களா...?

ஜான்சன்: ஆமாடா...!  இவ்வளவு நாளும் அவருக்கு... இந்த விசயம் தெரியாது...

சேகர்: என்ன ஆச்சு... விசயத்த சொல்லுடா...?

ஜான்சன்: என்ன ஆச்சா...! அவ்வளவுதான் மனுசன் ஆடித் தீத்திட்டாரே... அடிக்காத குறைதான்... அப்பப்பா என்னா புத்திமதி... ஈன்னு கேக்க முடியலை... ஓரே தலைவலி... போதும் போதும்ன்னு ஆயிடுச்சு... எல்லாத்துக்கும் காரணம் எனக்கு வந்து வாய்ச்சிருக்கிறாளே... அவதான்...!

கனகராஜ்: டே... மச்சி... ஓ லைப் இப்படி ஆகுமுன்னு நாங்கெல்லாம் நெனச்சுக்கூடப் பாக்கலைடா... நீ என்னடா பாவம் செஞ்சா...?

ஜான்சன்:  அதான்டா எனக்கும் தெரியலை...!

சேகர்: தெரியலை... இப்ப செஞ்சிக்கிட்டு இருக்கிறதே பாவம்தானே...

ஜான்சன்: இருக்கிற கடுப்புக்குப் பொளீர்ன்னு வச்சிடுவேன்டா...(அடிக்க கையை ஓங்க நகர்ந்து கொள்கிறான் சேகர்)

கனகராஜ்:  டே விடுறா மச்சி... ஆமா... நேத்தைக்கி ஆளையே இங்கிட்டு காணாமே...

ஜான்சன்: அது பெரிய கதைடா... முந்தா நாளு புல்லா கிக்கில போனேன்னா... பணம் அவுங்க அப்பன்ட்ட வாங்கிட்டு வர முடியாதின்ட்டாளா...

செல்வம்: ஆமா...

ஜான்சன்: ச்சீ... என்னா லைப்...? என்னா லைப்...? பணத்துக்கும்... மனசுக்கும் மசிய மாட்டேங்கிறாளே... லைப்ல ஒரு என்ஜாய்மென்டே இல்ல... அதான் நேத்து மனசு தாங்காம தனியாத் தண்ணி அடிக்கப் போயிட்டேன்...

கனகராஜ்: இருந்தாலும் நீ இப்படி நடந்திருக்க கூடாதுடா... ஏண்டா நாங்கள்ளலாம் இருந்தா... ஒனக்கு ஆறுதலா நாலு வார்த்தை சொல்லமாட்டோம்... தப்பு பண்ணிட்டாடா...

ஜான்சன்: பணம் வேற பத்தாம இருந்திச்சு... அதான் கோவிச்சிக்காதிங்கடா... இன்னக்கி புல்லா அடிக்கலாம்...

கனகராஜ்: அதனால என்ன...?  இன்னக்கி அடிச்சி இழப்பை ஈடு செஞ்சிடுவோம்... சொல்ல மறந்திட்டேன்...

ஜான்சன்: (ஆவலாக) என்னடா...?

கனகராஜ்: பம்பாய் ரெட்லைட் ஏரியாவுல இருந்தவளாம்...

நம்ம தமிழ்நாட்டுக்காரியாம்... அங்க அவளக் கடத்திட்டுப் போயிட்டாங்களாம்... இப்ப நம்ம டவுன்லதான் குடியிருக்கிறாளாம்... தெரியுமா...?

ஜான்சன்: இப்பத்தானே சொல்றா... எனக்கு எப்படிடா தெரியும்... ஆமாம் அதுக்கென்னடா...?

கனகராஜ்:  அதுக்கு என்னான்னா கேக்கிறா... அதுக்கு என்னடா தங்கத்துக்கு... சும்மா தேர்ல வர்ற சிலை மாதிரி... ஆட்டோவில நேத்து வந்தா பாரு... அய்யய்யோ... தக்காளிப்பழம் மாதிரி சிவப்பு... அவள நீ நேரா பாத்தீன்னா அசந்து போயிடுவாய்... தெரியுமுல்ல...

ஜான்சன்: அப்படியாடா... அவ்வளோ அழகா...!

கனகராஜ்: எவ்வளோன்னு கேக்கலாமுன்னு போனேன்னா... அப்பா அசந்து போயிட்டேன்...

ஜான்சன்: ஏன்டா...?

கனகராஜ்:  அந்த தொழில்ல இருந்து விடுபடத்தான் இங்க ஓடியாந்தேன்... யாரோடாவாவது ஒருத்தர்ட்டயே இருந்து வாழனுமுன்னுதான் வந்தேன்... நீங்க ரெடின்னா... நானும் ரெடின்னுட்டா...

சேகர்:  துண்டக்காணோம்... துணியக் காணோமுன்னு ஓடியாந்திருப்பியே...

கனகராஜ்: எ பொண்டாட்டி டின்னுக்கட்டிடுவாள்...

ஜான்சன்: அளு நல்லா இருப்பாளா...?

கனகராஜ்: இருப்பாளான்னா கேக்கிறாய்...?  இந்தா அட்ரஸ் (அட்ரஸ கொடுக்கிறான்) போய்ப்பாத்துட்டு அப்புறம் சொல்லு... அவளும் வாழ்ந்த மாதிரி இருக்கும்... நீயும் வாழ்க்கைய அனுபவிச்ச மாதிரியும் இருக்கும்... ஒனக்கு வசதியிருக்கு... அனுபவி ராஜா அனுபவி...

ஜான்சன்: நல்ல ஐடியா கொடுத்தாடா... அப்புறம் எ பொண்டாட்டி எ காலப்புடுச்சு கதறுவா...‘ஏங்க ஒங்க சொல்படி கேக்கிறேன்னு...என்னா நா சொல்றது...?

கனகராஜ்: சொல்றது எல்லாம் சரிதான்... சரி... உடனே ஆக வேண்டியத பாரு...

ஜான்சன்: நாளைக்கே போய்ப் பாக்கிறேன்...

கனகராஜ்:  அதான் பாப்பியே...  இன்னக்கி ஆக வேண்டியது...

ஜான்சன்:  வாங்க போவோம்... ஒயின் ஷாப்புக்கு...
            (அனைவரும் செல்கின்றனர்)

                                                                                                                          

                                                   -தொடரும்...

-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.
Related Posts Plugin for WordPress, Blogger...