செவ்வாய், 28 மார்ச், 2017

எனது டூரிங் டாக்கிஸ் அனுபவங்கள் ! (1)


என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ 

பார்க்கிறாய் புனித சூசையப்பர் நடுநிலைப்பள்ளி, பொத்தமேட்டுப்பட்டியில் நான் எட்டாவது படித்துக் கொண்டு இருக்கின்ற பொழுது... எங்கள் பள்ளிக்கருகில்  ‘சக்தி டூரிங் டாக்கிஸ் இருந்தது;. அதன் அருகில் மான்மூண்டி ஆற்றுப்பாலம் வெள்ளைக்காரன் கட்டியது இன்று பயனற்றுக் கிடக்கிறது. 
                                                          
அந்த டூரிங் டாக்கிஸின் உரிமையாளர் எங்கள் ஊரில் முத்துக்காளை என்று அழைக்கப்படும் தாத்தாதான்.  பட்டு வேட்டி பட்டு முழுக்கைச் சட்டையுடன் சின்னதாக மடித்துள்ள சரிகைத் துண்டு, கட்டைவிரல் தவிர்த்து இரண்டு கைகளின் அனைத்து விரல்களிலும் வைரக்கல் பதித்த தங்க மோதிரம் டாலடிக்க வலம் வருவார்.  (அவர் இப்பொழுது மறைந்துவிட்டார்)  தோட்டம் காட்டிற்குச் சென்றாலும் சைக்கிளை ஓட்டிக்கொண்டுதான் செல்வார்... சென்று கோவணம் கட்டிக்கொண்டு தோட்டத்தில் வேலை செய்வார்.  அவர் மனைவிக்கு மட்டும் வாழ்க்கை கொடுக்காமல் பல பெண்களையும் சேர்த்து வாழ்வு கொடுத்தார்.

என்னோடு படிக்கும் மாணவர்கள் பலர் அன்றைக்குச் சினிமாவுக்குத் தரை டிக்கட் 25 பைசா கொடுக்க இயலாமல் தியேட்டருக்கு வரும் சைக்கிளை உள்ளே தள்ளிவைக்கும் வேலையைத் தினமும் பஸ்ட் ஷோவிற்காகப் பார்த்து டைட்டில் போட்டுப் படம் கொஞ்சம் ஓடியவுடன் இலவலசமாகப் படம் பார்த்து வந்ததை அடுத்த நாள் பள்ளிக்கு வந்து கதைகதையாகச் சொல்வது வழக்கமாக இருக்கும்.

ஞாயிறு, 26 மார்ச், 2017

பள்ளியறைப் பாடமாகிறது திருக்குறள்பிளஸ் 2 வரை திருக்குறள் பாடம்


 நீதிபோதனை வகுப்பில் திருக்குறள் பாடம் கற்பிக்க அரசு ஏற்பாடு
திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருமிகு. ராஜரத்தினம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், திருக்குறளில் இடம் பெற்றுள்ள அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்.26-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், உயர் நீதி மன்றத்தின் உத்தரவை நடை முறைப்படுத்தும் வகையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்பில் அறத்துப்பால், பொருட்பால் பகுதியில் குறிப்பிட்ட குறள்களைக் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலர் டி.உதயச்சந்திரன் அரசாணை வெளியிட்டுள்ளார்.
‘திருக்குறளில் உள்ள 108 அதிகாரங்களையும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது ஆய்வின் அடிப்படையில் திருக்குறளில் இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் நீங்கலாக, அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள 108 அதிகாரங்களில் உள்ள அனைத்து குறள்களையும் கணக்கிட்டு நன்னெறிக் கல்விக்கான பாடத்திட்டத்தை வகுத்துள்ளது. அந்தக் குழு பரிந்துரை செய்த நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக 15 அதிகாரங்கள் 2017-18-ம் கல்வி ஆண்டிலிருந்து பயிற்றுவிக்கப்படும்.
உலகப் பொதுமறையான திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் நன்னெறிக் கருத்துகளின் அடிப்படையில் நீதிக் கதைகள்,  இசைப்பாடல்கள்,  சித்திரக் கதைகள்,  அனிமேஷன் படங்கள் மற்றும் இணையவழி 

‘கிளிக்’ செய்க
திருக்குறள்களை நவீனமுறையில் உருவாக்கி கற்பிக்கப்பட இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

                              ‘கிளிக்’ செய்க

- மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.


வியாழன், 23 மார்ச், 2017

அசோகமித்திரன் காலமானார்

அசோகமித்திரன் காலமானார்


தமிழ் எழுத்துலகின் பிதாமகன்களில் முக்கியமானவரான அசோகமித்திரன் இன்று சென்னையில் காலமானார்.

தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராகப் போற்றப்படுபவரான அசோகமித்திரன் (Ashokamitran)  

*ஆந்திர மாநிலம், செகந்திராபாத்தில் 22 செப்டம்பர்   1931 இல் பிறந்தார்.  இவரது இயற்பெயர் ஜ.தியாகராஜன். தந்தை, ரயில்வே குமாஸ்தா. 1952-ல் தந்தையின் திடீர் மரணத்துக்குப் பின் சென்னை யில் குடியேறினார். ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றினார். 1956களில் எழுதத் தொடங்கினார்.

*1960களின் மத்தியில் ஒருமுறை திடீரென்று எஸ்.எஸ்.வாசன் நீங்கள் எழுத்தாளர்தானே? எதற்காக புத்தகங்கள் எழுதாமல் என்னிடம் வேலை பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டாராம். அதுவே இவர் முழுநேர எழுத்தாளராக மாறக் காரணமாக அமைந்துவிட்டது. ஜெமினி ஸ்டுடியோ அனுபவங்கள் அடிப்படையில் மை இயர்ஸ் வித் பாஸ்என்ற ஆங்கில நூலை எழுதினார்.

*1966 முதல் முழு நேர எழுத்தாளராக மாறினார். அசோகமித்திரன்என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். சிறுகதைகள், நாவல் கள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதினார். டெக்கான் ஹெரால்டு’, ‘இல்லஸ்ரேட் வீக்லிஉள்ளிட்ட பத்திரிகைகளிலும் எழுதிவந்தார்.

* இவரது படைப்புகள் பலவும் பிற இந்திய மொழிகள், ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

*இவரது கதை எழுதும் பாணி தனித்துவம் வாய்ந்தது. உணர்ச்சி வசப்பட்ட நடையைத் தவிர்த்து எதையும் தணிந்த குரலில், தாழ்ந்த சுருதியில், அதிராமல் சொல்லிவிடுவார். ஆனால், இவரது எழுத்து வாசகரிடத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கும்.

* இவரது கதைகள் பெரும்பாலும் சென்னை அல்லது செகந்த ராபாத்தைக் களமாகக் கொண்டிருக்கும். திரைப்பட நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு கரைந்த நிழல்கள்என்னும் நாவலை எழுதியிருக்கிறார். சாதாரணமான கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மூலம் அசாதாரணமான வாசிப்பு அனுபவத்தைச் சாத்தியப்படுத்துபவர் எனப் போற்றப்படுகிறார்.

* கணையாழியில் ஏறக்குறைய 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அப்போது நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அச்சுக் கோர்ப்பவர்கள் சிரமப்படக் கூடாது என்பற்காக புரியாத கையெழுத்துப் பிரதிகளை அப்படியே கொடுக்காமல் தானே மீண்டும் தெளிவாக எழுதிக் கொடுப்பாராம்.

*செகந்தராபாத்தைப் பின்னணியாகக் கொண்ட இவரது ‘18வது அட்சக்கோடுஎன்னும் நாவல், தேசப் பிரிவினை சமயத்தில் அங்கு இந்து - முஸ்லீம் இடையே நடந்த கலவரங்களை மையமாகக் கொண்டது. 8 நாவல்கள், 250 சிறுகதைகள், நூற்றுக் கணக்கான கட்டுரைகள், ஏராளமான மொழிபெயர்ப்புகள், பத்தி எழுத்து எனப் படைப்புலகில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.*’'ஃபோர்டீன் இயர்ஸ் வித் பாஸ்’, ‘தி கோஸ்ட் ஆஃப் மீனம்பாக்கம்’, ‘ஸ்டில் ப்ளீடிங் ஃபிரம் தி வூண்ட்உள்ளிட்ட இவரது ஆங்கில நூல்கள் மிகவும் பிரபலம். ஆங்கில நாளிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். நாடகத்தின் முடிவு’, ‘வாழ்விலே ஒரு முறை’, ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’, ‘பிரயாணம்’, ‘தண்ணீர்’, ‘இன்று’, ‘மானசரோவர்’, ‘ஒற்றன்’, ‘ஆகாசத் தாமரை’, ‘விடுதலைமுதலான இவரது பல படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.

* சாகித்ய அகாடமி விருது, டால்மியா மத நல்லிணக்க விருது, தேவன் விருது, திரு.வி.க. விருது, சாரல், இலக்கியச் சிந்தனை, அக்ஷரா உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். நோபல் பரிசு பெறத்தக்க எழுத்தாளர் என விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறார். தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கிவரும் அசோகமித்திரன் இன்று 86வது வயதில் காலமானார்.
                   அசோகமித்திரன் - நேர்காணல்


                                                   ( ‘கிளிக்’ செய்க)

                                             


தமிழ் இலக்கியவெளியில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆளுமை அசோகமித்திரன். சாகித்ய அகாதெமி விருது (1996) டால்மியா மத நல்லிணக்க விருது (1995) தேவன் விருது (1997) என்று பல விருதுகள் பெற்றவர். இதில் டால்மியா விருதை அன்னை தெரசா வழங்கி கெளரவித்தார். எழுபத்தைந்து வயதைத் தாண்டியும் பங்களிப்பு செய்பவர். தண்டீஸ்வர் நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் தீராநதிக்காக சந்தித்தோம். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட அவரின் பேச்சில் மையப் புள்ளியாக Non violence கருத்து வலியுறுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது. இதை இந்த நேர்காணலும் உணர்த்தவே செய்யும்.
தீராநதி :1972_ல் உங்களின் வாழ்விலே ஒரு முறைவெளியானது. இதையொட்டி காலமும் ஐந்து குழந்தைகளும்...’ 1988_ல் மீண்டும் அது மறுபதிப்பு கண்டது. அது பரவலாக விற்பனைக்குப் போகும் முன்னதாக எலிக்கும், கறையானுக்கும் உணவாகிப் போனதாக ஒருமுறை வருந்தி எழுதியிருந்தீர்கள். ஆனால், இன்று தமிழ் பதிப்பகங்கள் சர்வதேச தரத்திற்கு வளர்ந்திருக்கின்றன. இம்மாற்றத்தை எப்படி உணருகிறீர்கள்?

Related Posts Plugin for WordPress, Blogger...