சனி, 6 பிப்ரவரி, 2016

பிழையின்றித் தமிழில் எழுதலாம்! - 2


பிழையின்றித் தமிழில் எழுதலாம்! 


பிழையான சொல் ‘சிவப்பு வண்ணத்திலும்...

பிழை திருத்தம் ‘பச்சை வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.1.நீங்கள் அனுப்பிய புத்தகங்கள் ஒவ்வொன்றும் புதுமையாக உள்ளன.
(‘ஒவ்வொன்றும்  என்னும் ஒருமைச் சொல் ‘உள்ளன என்னும் பன்மை வினை கொண்டு முடிவது பிழையாகும்.  எனவே ‘புதுமையாக உள்ளதுஎன ஒருமையில் தொடர் முடிதல் வேண்டும்.)

நீங்கள் அனுப்பிய புத்தகங்கள் ஒவ்வொன்றும் புதுமையாக உள்ளது.

2.ஒவ்வொரு கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.(‘ஒவ்வொரு’  என்னும் ஒருமைச் சொல்லைத் தொடர்ந்து ‘கிராமங்கள்என்னும் பன்மைச் சொல் வருவது பிழையாகும்.  எனவே ‘ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன எனத் தொடர் அமைதல் வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.

3. அவள் உள்ளத்தில் சந்தேகத்திற்கு மேல் சந்தேகம் எழுந்தன.(இரண்டாவதாக வரும் ‘சந்தேகமே எழுவாய். ஆதலால் ஒருமை முடிவு பெற வேண்டும்.)

அவள் உள்ளத்தில் சந்தேகத்திற்கு மேல் சந்தேகம் எழுந்தது.

4. காய்கள் பெரியதாய் இருக்கும்.


(காய்கள் என்னும் பன்மைப்பெயர் ‘பெரியதாய் இருக்கும்என்னும் ஒருமை வினை கொண்டு முடிவது பிழையாகும்.  எனவே, ‘பெரியனவாய் இருக்கும்எனத் தொடர் பன்மை வினை கொண்டு முடிதல் வேண்டும்.

காய்கள் பெரியனவாய் இருக்கும்.

5.  பிரபாகரன் கொடுத்த புத்தகம் இது அல்ல.
‘இது என்னும் அஃறிணை ஒருமைப் பெயர் ‘அல்ல என்னும் அஃறிணைப் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடிவது பிழையாகும்.  எனவே ‘இதுவன்றுஎனத் தொடர் முடிதல் வேண்டும்.

பிரபாகரன் கொடுத்த புத்தகம் இதுவன்று.

6.  பரிசு பெற்றவள் அவள் அல்ல.
‘பரிசு பெற்றவள்என்னும் உயர்திணைப் பெண்பாற் ஒருமைப் பெயர், ‘அல்ல‘ என்னும் அஃறிணைப் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடிவது பிழையாகும்.  எனவே ‘அவள் அல்லள் எனத் தொடர் முடிதல் வேண்டும்.

ரிசு பெற்றவள் அவள் அல்லள்.

7.  வைகை அணைக்கட்டில் 10 அடி தண்ணீரும் மேட்டூர் அணைக்கட்டில் 50 அடி தண்ணீரும் இருக்கின்றன.(தண்ணீருக்குப் பன்மையில்லை ஆதலால் ஒருமையில் இருக்கிறது எனத் தொடரை முடிக்க வேண்டும்.)

வைகை அணைக்கட்டில் 10 அடி தண்ணீரும் மேட்டூர் அணைக்கட்டில் 50 அடி தண்ணீரும் இருக்கிறது.

8.  யானைகள் போர்க்களம் சென்றது.(‘யானைகள்’  என்னும்அஃறிணைப் பன்மைப்பெயர் ‘சென்றது’  என்னும் அஃறிணைப் ஒருமை வினைமுற்றைக் கொண்டு முடிவது பிழையாகும்.  எனவே ‘சென்றன எனப் பன்மையில் தொடர் முடிதல் வேண்டும்.

யானைகள் போர்க்களம் சென்றன.


9.  தமிழ்நாடு முப்புறமும் பறவையால் சூழப்பட்டுள்ளது.(பறவை – காக்கை குருவி போன்ற பறவைபரவை – கடல்)

தமிழ்நாடு முப்புறமும் பரவையால் சூழப்பட்டுள்ளது.

10.  கடலில் கப்பல்கள் முழ்கியது.‘கப்பல்கள் என்னும் அஃறிணைப் பன்மைப் பெயர்ச்சொல் மூழ்கியது என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிவது பிழையாகும்.  எனவே மூழ்கின எனப் பன்மையில் தொடர் முடிதல் வேண்டும்.

கடலில் கப்பல்கள் மூழ்கின.


                                             (தொடரும்...
-மாறாத அன்புடன்,


மணவை ஜேம்ஸ்.

நன்றி:பிழையின்றி நல்ல தமிழ் எழுதுவது எப்படி?

38 கருத்துகள்:

 1. அருமை ,பிழைகளைப் படம் பிடித்து காட்டிவிட்டீர்கள் :)

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள ஜீ,

  தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. இது போன்று எழுதுவது எளிதான நடையில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. தொடருங்கள்

  //முப்புரமும் பறவையால் சூழப்பட்டுள்ளது// இதில் "ற" வரவேண்டுமே ? முப்புரம் என்ற சொல் சரியா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   வணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   ‘முப்புரம்’ என்றே எழுதப்பட்டு இருக்கிறது. ‘முப்புரம்’ என்ற சொல் தவறுதான். தவறைச் சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி. பிழையைத் திருத்திவிட்டேன்.

   மிக்க நன்றி.

   நீக்கு
 4. அனைவரும் மிக இயல்பாகச் செய்யும் தவறுகள்
  கற்றுக் கொள்கிறோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. எளிமை ! அருமை ! படிக்கவும் பயன்பெறவும்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்புள்ள கரந்தையாருக்கு,

   தங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. வணக்கம்
  ஐயா

  மிகவும் அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்.ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   வணக்கம். தங்களின் வருகைக்கும் வாழ்த்துதலுக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. படிப்பதற்கு மிகவும் சுலபமாக இருக்கின்றது மணவையாரே
  தமிழ் மணம் 5

  பதிலளிநீக்கு
 9. அன்புள்ள ஜி,

  தங்களின் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 10. பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. அனைத்தும் அருமை. பரவை என்ற சொல்லுக்கான பொருள் அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள முனைவர் அய்யா,

   தங்களின் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய சிறப்பான பதிவு அய்யா!
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. அருமை மணவையாரே! நாங்கள் எழுதும் போது பொதுவாகப் பேசுவது போலவே எழுதிவிடுகின்றோம். எத்தனைப் பிழைகள் நாங்கள் எழுதுவதில் என்று அறிந்து கொள்கின்றோம். தொடருங்கள் நண்பரே! கற்றுக் கொள்கின்றோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் பாராட்டிற்கும் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. நிறைய பதிவுகள் இப்படி வந்தால் நன்றாக இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் பாராட்டிற்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் தமிழ்மணம் வாக்கிற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 16. பதில்கள்
  1. அன்புள்ள பெரும்புலவர் அய்யா,

   தங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 17. வணக்கம்.மிக நல்ல, எல்லோருக்கும் பயன்படும் பதிவு. வாழ்த்துக்கள் அய்யா.
  முனைவர்.வா.நேரு, மதுரை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள முனைவர் அய்யா,

   வணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 18. பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   வணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 19. அருமை அய்யா... தமிழை பிழையின்றி எழுத உதவும் தொடர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   வணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 20. நல்ல முயற்சி. ஆனால், வகைபிரித்து ,ஒருமை-பன்மை, ல-ள, ன-ண வேறுபாடுகள் என்பன போல அமைத்துக் கொண்டு எழுதினால் நினைவில் நிறுத்த எளிதாகுமே? ஒன்றுக்கு மேற்பட்ட எடுத்துக்காட்டுகளையும் தவிர்க்கலாம். நல்லது எவ்வழியேனும் தொடருங்கள், பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் பாராட்டிற்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 21. //அவள் அல்லள்// //இதுவன்று// ஹ்ம்ம் திருத்திக் கொள்கிறேன்.
  நன்றி அண்ணா

  பதிலளிநீக்கு
 22. அன்புள்ள சகோதரி,

  தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...