புதன், 18 அக்டோபர், 2017

எனது டூரிங் டாக்கிஸ் அனுபவங்கள் ! (3)

தீபாவளி  அன்று...  மூன்று திரைப்படங்கள்!

ஒரு பார்வைதீபாவளி  அன்று ...!

பள்ளி இறுதி வகுப்பான பத்தாம் வகுப்புப்  படித்துக்  கொண்டிருந்த எழுபத்து ஒன்பதுகளில்...

தீபாவளி வருவதற்கு முன்னதாகவே எல்லோரும்  கருப்புத் துப்பாக்கி வாங்கினால் நான் வெள்ளைத்  துப்பாக்கியை வாங்கி வைத்து...

சுருள் கேப் ரோலாக வைத்துக் கொண்டு அதைச் சுட்டுச் சுட்டு  மகிழ்வதும்...
தீபாவளி அன்று கம்பி மத்தாப்பு, சாட்டை, சங்கு  சக்கரம்,  கலசம்,  பாம்பு மாத்திரை இதை வைத்துக் கொளுத்துவதும்... வெடிவெடிப்பவரை வேடிக்கை பார்ப்பதும் உண்டு.எது எப்படியோ அப்பொழுதெல்லாம்  தீபாவளி நாளில்... அன்றைய தினம் சினிமா பார்ப்பது கண்டிப்பாக நடக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...