புதன், 20 மே, 2015

தூது - சிற்றிலக்கியம்

தூது         ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது இலக்கியம்.

         காதலாலோ  துயரத்தாலோ ஆண் அல்லது பெண் தூது அனுப்புவது.
              
         அஃறிணைப் பொருளைத் தூது சென்று வருமாறு அனுப்புவது;  அவர்களிடம் மாலை வாங்கி வருமாறு தூது செல்லும் பொருளிடம் வேண்டுவது. 

                                                           
                ‘பச்சை விளக்கு’ திரைப்படத்திற்காக  கண்ணதாசன்- தூது செல்ல ஒரு தோழி வேண்டி தலைவியின் பாடல்.

தூது செல்ல ஒரு தோழி இல்லையென

துயர் கொண்டாயோ தலைவி                                                  துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை

என்ன செய்வதடி தோழி

தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி

கண்கள் வாடுதடி தோழி......................

              ‘பதினாறு வயதினிலே’ திரைப்படத்திற்காக கங்கை அமரன்  அவர்கள் பூவையும் காற்றையும்  குயிலையும் குருவியையும் மயிலையும் பறவைகளையும் தூது விடுகிறார்.   இந்தப் பாடலைப் பாடிய எஸ். ஜானகி அம்மாவுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
                                                             
                                                              

செந்தூரப் பூவே! செந்தூரப் பூவே! ஜில்லென்றக்  
காற்றே!                                          
என் மன்னன் எங்கே? என் மன்னன் எங்கே?
நீ கொஞ்சம் சொல்லாயோ? செந்தூரப் பூவே!

தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்!
கண்களை மூட விட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்!
கன்னிப் பருவத்தின் வந்தக் கனவிதுவே!
என்ன இனிக்கிது அந்த நினைவதுவே!
வண்ணப் பூவே! தென்றல் காற்றே! 
என்னைத் தேடி சுகம் வருமோ? – செந்தூரப் பூவே!


நீலக் கருங்குயிலே! தென்னைச் சோலைக் குருவிகளே!
கோலமிடும் மயிலே! நல்ல கானப் பறவைகளே!
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்!
காலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்!
வண்ணப் பூவே! தென்றல் காற்றே! 
என்னைத் தேடி சுகம் வருமோ? – செந்தூரப் பூவே!

திங்கள், 11 மே, 2015

கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் - கவிதை.கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் 


கவிதை இன்று (11.5.2015)  முரசொலி நாளிதழில் வெளிவந்தது. பார்வைக்காக:அண்ணன் காட்டிய வழியில்

கலைஞர் ஊட்டிய மொழியில்


எந்தச் சரிகமபதனிக்குள்ளும்
முடங்கிக்கிடப்பதல்ல மடங்கிக்கடப்பதல்ல
புரட்சிப்பூபாளம்!
சிலந்திவலைக்குள் சிக்கக்கூடியவையல்ல
தந்தை பெரியாரின் கந்தகச் சிந்தனைகள்!
உடையா நடைமுறைச் சிந்தனைகள் அவை
வாழ்வுக்குள் வரமறுக்கும்
கற்பனைக் காவியக்கனவுகள் அல்ல.
வெற்றியின்  முகவரியில் காத்திருக்கும்
வெப்ப வினாக்களின் வெளிச்சவிடைகள்!
கடக்கத் துணிந்தவனுக்குக்
கடலின் எல்லா அலைகளிலும் கதவுகள்
திறந்தே இருக்கும்!
சாதிக்கமுடியாத சாக்கரடீசு-தனது
சந்ததி பெரியார்மூலம் சாதித்துக்கொண்ட
சரித்திரம்தான் திராவிடஇயக்கம்!

செவ்வாய், 5 மே, 2015

அந்தாதி -சிற்றிலக்கிய அறிமுகம்.


அந்தாதி        அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோசீரோஅசையோஎழுத்தோ அடுத்த செய்யுளின் முதலாக அமையப் பாடுவது அந்தாதியாகும். 

       அந்தம் (இறுதி) ஆதியாக (முதலாக) வருவதால் இப்பெயர் பெற்றது.


       மூன்று முடிச்சு  திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் அவர்களால் இயற்றப்பட்ட இந்தப் பாடல் அற்புதமான அந்தாதி.  திரைப்பாடலில் வேறு அந்தாதி பாடல் இருந்தால் அறியத்தரலாமே!வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மிதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
 நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் தொடர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்
Related Posts Plugin for WordPress, Blogger...