செவ்வாய், 5 மே, 2015

அந்தாதி -சிற்றிலக்கிய அறிமுகம்.


அந்தாதி        அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோசீரோஅசையோஎழுத்தோ அடுத்த செய்யுளின் முதலாக அமையப் பாடுவது அந்தாதியாகும். 

       அந்தம் (இறுதி) ஆதியாக (முதலாக) வருவதால் இப்பெயர் பெற்றது.


       மூன்று முடிச்சு  திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் அவர்களால் இயற்றப்பட்ட இந்தப் பாடல் அற்புதமான அந்தாதி.  திரைப்பாடலில் வேறு அந்தாதி பாடல் இருந்தால் அறியத்தரலாமே!வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மிதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
 நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் தொடர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்
மலர்க்கணைகள் பாய்ந்துவந்தால் மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளிகொண்டால் மனமிரண்டும் தலையணைகள்
தலையணையில் முகம்புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்..

மணவினைகள் யாருடனோ மாயனவன் விதிவலைகள்
விதிவகையை முடிவுசெய்யும் வசந்தகால நதியலைகள்...
மணவினைகள் யாருடனோ மாயனவன் விதிவலைகள்
விதிவகையை முடிவுசெய்யும் வசந்தகால நதியலைகள்...

"ஆடி வெள்ளி தேடியுன்னை நானடைந்த நேரம்
     கோடியின்பம் தேடிவந்தேன் காவிரியின் ஓரம்

ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன்கவிதைச் சாரம்
     ஓசையின்றிக் கேட்குமது ஆசையென்னும் வேதம்
வேதம் சொல்லி மேளமிட்டு மேடைகண்டு ஆடும்
     மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தைபல நாடும்

நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும்மொழிமௌனம்
     ராகந்தன்னை மூடிவைத்த வீணையவள் சின்னம்
சின்னம்மிக்க அன்னக்கிளி வண்ணச்சிலைக்கோலம்
     என்னையவள் பின்னிக்கொள்ள என்றுவரும் காலம்
காலமிது காலமிது காதல்தெய்வம் பாடும்
     கங்கைநதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்புறநானூற்றில் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய பாடலில் முதல் ஐந்து வரிகளில் அந்தாதி அமைப்பினைக் காண முடிகிறது.
மண் திணிந்த நிலனும்
தமிழில் தோன்றிய முதல் அந்தாதி காரைக்கால் அம்மையார்பாடிய அற்புதத் திருவந்தாதி ஆகும்.அந்தாதிகள் பல வகைகளாக உள்ளனஇவற்றுள் பின்வருவன அடங்கும்:
·         ஒலியந்தாதி
·         பதிற்றந்தாதி
·         நூற்றந்தாதி
·         கலியந்தாதி
·         கலித்துறை அந்தாதி
·         வெண்பா அந்தாதி
·         யமக அந்தாதி
·         சிலேடை அந்தாதி
·         திரிபு அந்தாதி
·         நீரோட்ட யமக அந்தாதி


·         அந்தாதி வகை இலக்கியம்;(8)
·         அற்புதத்திருவந்தாதி - காரைக்கால் அம்மையார்
·         பொன்வண்ணத்தந்தாதி - சேரமான் பெருமான் நாயனார்
·         கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி - நக்கீர தேவ நாயனார்
·         சிவபெருமான் திருஅந்தாதி - கபில தேவர்
·         சிவபெருமான் திருஅந்தாதி - பரணதேவர்
·         திருவேகம்பமுடையார் திருவந்தாதி - பட்டினத்தார்
·         திருத் தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
·         ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
அந்தாதி. 
       பெரும்பாலும் அந்தாதிகள் வெண்பா, விருத்தம், கலித்துறை எனும் பாவினங்களில் பாடப்பெற்றுள்ளன.
====================================================


நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்

தீ முரணிய நீரும் - (புறம் - 2)


அற்புதத் திருவந்தாதி
 

காரைக்கால் அம்மையாரால் இயற்றப்பெற்ற இந்நூல் 101  வெண்பாக்களால் ஆகியது.   இது பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.   சிவபெருமானிடம் இந்த உலகில் பிறந்து பேசக் கற்றுக் கொண்ட நாளிலிருந்து உன் திருவடிகளையே சரண் அடைந்துள்ளேன்.  என் துயர் தீர்ப்பது எந்நாளோஎன்ற உள் உணர்வோடு பாடல்களைப் பாடியுள்ளார். இறைவனின் பெருமைகளையும், தம் அன்பின் வெளிப்பாட்டையுமே மையமாக வைத்துப் பாடியுள்ளார் அம்மையார். 
 
பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம்எனத் தொடங்கிப் பேராத காதல் பிறந்துஎன நூல் முடிவதால் மாலைபோல் அமைந்தது இந்நூல்.
அபிராமி அந்தாதி

அபிராமிப் பட்டர் எழுதிய அபிராமி அந்தாதி பெரிதும் வாசிக்கப் படுவது

வாசகர்களுக்கு சீர்காழி கோவிந்தராஜனின் இசைப்பேழைகளை அல்லது குறுவட்டுக்களாக கிடைக்கின்றன.


குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்,
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே - 99

பொருள்: ஏ, அபிராமி! அன்று கைலயங்கிரித் தலைவனாகிய சிவபிரானுக்கு மணம் முடித்த மலையரசன் மகளே! கடம்பவனத்தில் உறைந்த குயிலே! இமயமலையில் தோன்றிய் அழகிய மயிலே! ஆகாயத்தில் நிறைந்திருப்பவளே! தாமரை மீது அன்னமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத்தையுடையவளே! (மதுரையில் குயிலாகவும், இமயத்தில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞானசூரிய ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் அம்பிகை விளங்குகின்றாள் என்பது வழக்கு).

குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே! - 100

பொருள்: ஏ, அபிராமி! குழையிலே தவழும்படியாகவுள்ள கொன்றை மலரால் தொடுத்த மாலையின் மணம்கமழும் மார்பகங்களையும் தோளையும் உடையவளே! மூங்கிலை ஒத்த அழகிய கரும்பு வில்லும், கலவிபோருக்கு விரும்பக்கூடிய மணம் மிகுந்த ஐவகை மலர் அம்பும், வெண்மையான முத்துப்பல் இதழ்ச் சிரிப்பும், மானை ஒத்த மருண்ட கண்களுமே எப்பொழுதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அத் திருமேனியையே நான் வழிபடுகின்றேன்.


   பொன்வண்ணத்தந்தாதி - சேரமான் பெருமான் நாயனார்


சேரமான் பெருமாள் நாயனாரால் பாடப்பட்ட நூல். இவர் 63 நாயன்மார்களில்ஒருவர். அந்தாதி முறையில் தொடுக்கப்பட்டுள்ள 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் இதில் உள்ளன.
நூலின் முதல் பாடல்
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை, வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை, தன்னைக்கொண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.
பொன்வண்ண மேனி. மின்வண்ணச் சடை, வெள்ளைநிறக் காளை ஆகியவற்றைக் கொண்டிருப்பவன் ஈசன். (இவற்றில் வியப்பு ஒன்றும் இல்லை) என் மனத்தின் வண்ணம் எப்போதெல்லாம் எப்படி எப்படி இருக்கிறதோ அப்படியெல்லாம் காட்சி தருகிறானே!

கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று.எழுதியவர் நக்கீரதேவ நாயனார்; காலம் 10ஆம் நூற்றாண்டு. இதில் 100 வெண்பாக்கள் உள்ளன.
காளத்தியில் கயிலையைக் கண்டவர் அப்பர். இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு தோன்றியது இந்த நூல். இந்தத் தொடுப்பில் கயிலை பற்றி ஒரு பாடலும், காளத்தி பற்றி அடுத்த பாடலும் என மாறி மாறிப் பாடல்கள் அமைந்துள்ளன.

பாடல்

எடுத்துக்காட்டுக்கு இரண்டு வெண்பாக்கள் அந்தாதித் தொடையுடன்
கயிலை
மாறிப் பிறந்து வழியிடை ஆற்றிடை
ஏறி இழியும் இதுவல்லால் - தேறித்
திருக்கயிலை ஏத்தீரேல் சேமத்தால் யார்க்கும்
இருக்கையிலை கண்டீர் இனிது. 
கயிலையை ஏத்தினால் பிறப்பிருக்கை இல்லை.
காளத்தி
இனிதே பிறவி இனமரங்கள் ஏறி
கனிதேர் கடுவன்கள் தம்மின் - முனிவாய்ப்
பிணங்கிவரும் தண்சாரல் காளத்தி பேணி
வணங்கவல்லார் ஆயின் மகிழ்ந்து. 
காளத்தியைப் பேணுவார்க்கு என்றும் மகிழ்ச்சி.
கயிலை
மகிழ்தலரும் வண்கொன்றை ... சிவபெருமான் திருவந்தாதிவெண்பாஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந்
தொன்றும் மனிதர் உயிரையுண் - டொன்றும்
மதியாத கூற்றுதைத்த சேவடியான் வாய்ந்த
மதியான் இடப்பக்கம் மால்.
1


மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றை
மாலை ஒருபால் முடியானை - மாலை
ஒளியானை உத்தமனை உண்ணாநஞ் சுண்டற்
கொளியானை ஏத்தி உளம்.
2


உளமால்கொண் டோடி ஒழியாது யாமும்
உளமாகில் ஏத்தவா றுண்டே - உளம்மாசற்
றங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும்
அங்கமல வண்ணன் அடி.
3


அடியார்தம் ஆருயிரை அட்டழிக்குங் கூற்றை
அடியால் அருவாகச் செற்றான் - அடியார்தம்
அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி
அந்தரத்தார் சூடும் அலர்.
4


அலராளுங் கொன்றை அணியலா ரூரற்
கலராகி யானும் அணிவன் - அலராகி
ஓதத்தான் ஒட்டினேன் ஓதுவான்யான் ஓங்கொலிநீர்
ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்...................

பரணதேவ நாயனார் அந்தாதி

ஒன்றுஉரைப்பீர் போலப் பலஉரைத்திட்டு ஓயாதே
ஒன்றுஉரைப்பீர் ஆயின் உறுதுணையாம் – ஒன்றுஉரைத்து
பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுஉழலும்
பேரரவம் பூணும் பிரான்.
இது நூலின் தொடக்கப் பாடல்.
உறுமும்தம் முன்னே உடையாமல் இன்னம்
உறுமும்தம் முன்னே உடையாமல் – உறுமும்தம்
ஓர்ஐந்து உரைத்துஉற்று உணர்வோடு இருந்துஒன்றை
ஓர்ஐந்தும் காக்கவல்லார்க்கு ஒன்று.

திருவேகம்பமுடையார் திருவந்தாதிஎன்னும் சைவ நூல் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. அந்தாதி என்பது ஒரு சிற்றிலக்கியம்இதன் ஆசிரியர் பட்டணத்துப் பிள்ளையார்காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தவர். காலம் பத்தாம் நூற்றாண்டு. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலிலுள்ளசிவபெருமானை இந்த நூல் போற்றிப் பாடுகிறது.

நூல் 

இந்த நூலில் கட்டளைக்கலித்துறைப் பாடல்கள் 100 அந்தாதியாகத் தொடுக்கப்பட்டுள்ளன.
நூல் ‘மெய்த்தொண்டர்’ என்று தொடங்கி ‘மெய்த்தொண்டரே’ என முடிகிறது. அந்தாதி நூல் அமையும் முறை இது.
பாடல் 98
இன்றுசெய் வோமித னிற்றிரு வேகம்பர்க்(கு) எத்தனையும்
நன்றுசெய் வோம்பணி நாளையென் றுள்ளிநெஞ் சேயுடலில்
சென்றுசெ யாரை விடும்துணை நாளும்வி டாதடிமை
நின்றுசெய் வாரவர் தங்களின் நீள்நெறி காட்டுவரே.

திருத்தொண்டர் திருவந்தாதி நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி.
காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழன் காலம்.
சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் சைவத்தொண்டைப் போற்றிப் பாடுகிறது. திருத்தொண்டர் திருவந்தாதி அவர்களின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுகிறது.

திருத்தொண்டர் திருவந்தாதி நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி.
காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழன் காலம்.
சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் சைவத்தொண்டைப் போற்றிப் பாடுகிறது. திருத்தொண்டர் திருவந்தாதி அவர்களின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுகிறது.

ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி.
காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழன் காலம்.
ஆளுடைய பிள்ளையார் என்பவர் திருஞானசம்பந்தர். நம்பியாண்டார் நம்பி இயற்றிய 10 நூல்களில் 6 நூல்கள் திருஞானசம்பந்தரின் புகழைப் பாடுபவை.
இந்த நூலிலுள்ள வரலாறு சேக்கிழார் பெரியபுராணம் செய்ய உதவியது.

நூல் 

இந்த நூலில் 100 கட்டளைக்கலித்துறைப் பாடல்களும், இறுதியில் ஒரு வெண்பாவும் உள்ளன. 100ஆவது பாடல் சீர்காழியின் 12 பெயர்களை முதன்முதலாத் தொகுத்துக் கூறுகிறது.
இறுதியிலுள்ள வெண்பா இந்த நூலின் பெருமையாச் சொல்கிறது.
பாடல் 
பார்மண்ட லத்தினில் பன்னிரு பேரொடு மன்னிநின்ற
நீர்மண்ட லப்படப் பைப்பிர மாபுர நீறணிந்த
கார்மண்ட லக்கண்டத்(து) எண்தடத் தோளன் கருணைபெற்ற
தார்மண்ட லம்அணி சம்பந்தன் மேவிய தண்பதியே.

                                                                                      வ(ள)ரும்... மாறாத அன்புடன்,
                                  
 மணவை ஜேம்ஸ்.


      

31 கருத்துகள்:

 1. ஐயா வணக்கம்.

  சிற்றிலக்கிய வகைகளின் இலக்கணங்களை அவற்றிற்குரிய இலக்கணத்தோடு தரும் உங்கள் முயற்சி இன்று பெரிதும் தேவைப்படுகிறது.
  திரைப்படப்பாடல் என்றெல்லாம் இணைத்துக் கொண்டுசெல்வது, படிப்பவர்கள் மனத்தில் அணுக்கத்தை ஏற்படுத்தும்.

  தங்களின் இப்பணி தொடர வேண்டும்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள அய்யா,

  தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. சங்க இலக்கியங்களில் பதிற்றுபத்து நான்காம் பத்து அந்தாதி அமைப்பு உண்டு என்பது பலர் கருத்து, எனினும் தாங்கள் சொன்ன காரைக்கால் அம்மையார் நூலே முதல் நூல் என்பர்.
  உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
  மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
  முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்,,,,,,,,,,,,,
  எனும் இளம்பூரனர் பாடல் அந்தாதிக்கு சான்று காட்டுவர்,
  தங்கள் பதிவு மிகவும் பயன்படக் கூடியது இன்றைய நிலையில். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   அந்தாதி இலக்கியத்துக்கான அறிகுறி ... பாடல் பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தில்தான் இருக்கிறது என்ற தகவல் இருக்கிறது. தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அந்தாதியை இலக்கியப் பாடல்களாக சொல்லியிருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு புரிந்திருக்காது. ஆனால் அதையே திரைப் படப்பாடலில் சொன்னதால் சட்டென்று விளங்கியது.

  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. அந்தாதி பற்றி அறியாச் செய்திகள் பல அறிந்தேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 6. பழமையையும் (அந்தாதி) புதுமையையும், (சினிமா) ஒன்றாகக் கலந்து சுவையாகச் சொன்னீர். இது போன்ற படைப்புகள் தொடரட்டும்.
  வலைத்தளம் புதிய வடிவினில் மிளிர்கின்றது. வாழ்த்துக்கள்.
  த.ம.4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. அந்தாதி பற்றிய விபரங்கள் திரைப்படப் பாடல் மூலம் இலகுவாக புரிய வைத்தமை இனிதே.
  பதிவுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 8. அன்புள்ள சகோதரி,

  தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 9. இனிமையான பாடல்... அருமையான விளக்கங்கள்...

  பாராட்ட வார்த்தைகள் இல்லை...

  வாழ்த்துக்கள் பல...

  பதிலளிநீக்கு
 10. அன்புள்ள வலைச்சித்தரே!

  தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 11. அந்த காலத்தில் இப்படி அந்தாதி வடிவில் வந்த பாடல்களை இன்றும் ரசிக்க முடிகிறது ,இன்னைக்கும் பாடல்கள் வருதே கொலை வெறியாய் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜீ,

   உண்மைதான் பகவானே...! அந்தக் காலப்பாடல்கள் நெஞ்சில் நிலைத்து நிற்பவை. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. அந்தாதியைப் பற்றி எவரும் தெரிந்துகொள்ளும் வகையில் மிக அழகான ஒப்புமைகளுடன் தாங்கள் பகிர்ந்துள்ள விதம் அருமையாக உள்ளது. சிற்றிலக்கியங்களில் ஒரு வகையான அந்தாதியைப் பற்றி பல அரிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. ஆடி வெள்ளி தேடி உன்னை...என்ற பாடலுக்காக அத்திரைப்படத்தை நாங்கள் பல முறை பார்த்தது தற்போது நினைவிற்கு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. அண்ணா! கலக்குங்க !! அந்தாதியை இவ்ளோ அழகா,எளிமையா, சினிமா பாட்டு உதாரணமெல்லாம் கொடுத்து விளக்கிய விதம் சூப்பர் அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புச் சகோதரி,

   உதகைக்குச் சென்று வந்ததால் தாமதம். தங்களின் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. வணக்கம் மணவையாரே...
  தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் காரணம் எனது பதிவில் சொல்லி இருக்கிறேன்.
  திரைப்படப்பாடல்களையும் இணைத்து அழகாக விளக்கம் கொடுத்து விட்டீர்கள் அருமை. நிறைய விடயங்களை இந்தப்பாமரனுக்கு அறியத்தந்தமைக்கு நன்றி
  தமிழ் மணம் 10

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. அந்தாதி அருமை வாழ்த்துகள்
  தொடரட்டும் தமிழ்ப்பணி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 16. முதலில் அருமையான ப்திவிற்கு எங்கள் வணக்கம்!

  அதுவும் மிக மிக அழகான திரைப்படப் பாடல்களுடன் விவரித்து, இலக்கியங்களில் இருந்து பல பாட்டுகள் கொடுத்து விளக்கியது அருமை! தங்கள் முயற்சி மிகவும் பாராட்டிற்குரியது. இதை நாங்கள் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டுள்ளோம்......நண்பரே! உங்கள் அனுமதியுடன்.

  பதிலளிநீக்கு
 17. அன்புள்ள அய்யா,

  வணக்கம். தாராளமாக செய்து கொள்ளுங்கள். தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் அண்ணா
  நலமா? கை நன்றாகச் சரியாகிவிட்டதா? கேட்கவேண்டும் என்று நினைத்து நினைத்து வண்டி தாமதமாக வந்துள்ளது :-)

  அந்தாதி பற்றி அழகாகக் கற்றுக்கொடுத்தற்கு நன்றி. நீங்களும் விஜூ அண்ணாவும் செய்யும் பணி பெரிது! இருவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   வணக்கம். வண்டி தாமதமாக வந்தது பரவாயில்லை, வண்டி வேகமாகப் போனதால்தான் எனது இடது கையில் சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் சேதமடைந்துள்ளன. அந்த விரல்களில் எந்த வேலையும் (தட்டச்சு உட்பட) செய்ய இயலாது.

   தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 19. அந்தாதித் தொடையைப் பற்றி அருமையான விளக்கத்துடன் எடுத்துக்காட்டுகளும் அளித்தமைக்கு நன்றி!

  அந்தாதியில் அமைந்த 'ஆழ்வார்கள் நான்மணிமாலை' என்னும் கவிதைப் பதிவை எழுதிவருகிறேன். இந்தப் பதிவு பற்றிய தங்கள் கருத்துகளையும் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  இமயவரம்பன்
  https://www.imayavaramban.com/ஆழ்வார்கள்-நான்மணிமாலை/

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...