சனி, 13 ஜூன், 2015

‘இதயங்கள் சங்கமம்’ - நாடகம்.


‘இதயங்கள் சங்கமம்’
ஆத்ம திருப்திக்காக                    ஆசிரியர்கள் கடைசிவரை ஆசிரியராகத்தான் இருப்பார்கள்.

ஆனால் அந்த ஆசிரியர்கள்தான் பெரிய வழக்கறிஞர்களையும், 

மருத்துவர்களையும்,  ஐ.ஏ.எஸ்,   ஐ.பி.எஸ். அதிகாரிகளையும்,

பேரறிஞர்களையும் உருவாக்குபவர்கள் என்கிற அரிய பணியைச்

செய்கிறார்கள் என்பதால் நான் ஆசிரியர் பணியை அரும்பணியாக ஏற்று

திருச்சி ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிகிறேன்.  இருந்தாலும் நான்

படிக்கிற காலத்திலிருந்து இன்று ஆசிரியப் பணி ஆற்றிக்கொண்டிருக்கும்

இன்று வரை நாடகம் போடுவது, கதை எழுதுவது,  நல்லக் கருத்தை வைத்துக்

குறும்படம் எடுப்பது என்பது என் ஆத்ம திருப்திக்காகச் செய்வது.  சமீபத்தில்

 ஓர் இளைஞன் விபத்துக்குள்ளாகி,  மூளைச்சாவு ஏற்பட்ட காரணத்தால்

அவரின் இதயம் தானமாகக் கொடுக்கப்படுகிறது என்கிற கருத்தை மையமாக

வைத்து,  நான் இயக்கிய ‘இதயங்கள் சங்கமம்’ நாடகத்தில் நான் தமிழக

முதல்வர் அவர்களின் வேடமேற்று நடித்தது ஆயிரம் மடங்கு ஆத்ம திருப்தி.

                                                                                                                                   -மணவை.
                                                                                                                     
_________________________________________________________________________________
தமிழாசிரியர் மணவை  ஜேம்ஸ்.
_________________________________________________________________________________
                                                                                                       நன்றி- பாக்கியா(27-3-2009)

(விரைவில்  இந்த நாடகத்தின்  ‘வீடியோ‘ காணொளிக் காட்சியாக...)-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.


25 கருத்துகள்:

 1. இது போன்ற நாடகங்கள் பல தாங்கள் தொடர்ந்து நடத்த எமது வாழ்த்துகள் மணவையாரே....
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. உடல்நலம் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை.

   நீக்கு
 2. நாடக முயற்சி வாழ்த்துக்கள். மென்மேலும் தாங்கள் துறையில் இத்துறையில் முன்னுக்கு வருவீர்கள் என்பதை இக்காட்சிகள் உணர்த்துகின்றன. விரைவில் காணொளி காண காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 3. அன்புள்ள அய்யா,


  தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி. உடல்நலம் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை. காணொளிக் காட்சியை எப்படி வெளியிடுவது என்ற தொழில் நுட்பம் தெரியவில்லை. விரைவில் வெளியிட முயற்சிக்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. ஆகா!!!!! வேடப் பொருத்தம் அருமை! உளங்கனிந்த வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. ஐயா வணக்கம்.

  நலம் பேணுங்கள்.

  இந்த நாடகத்தை கண்டவர்களுள் நானும் ஒருவன்.

  என் மாணவர்களைப் பார்க்க மலரும் நினைவுகள்.

  காணொளிக்காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  இப்படி எல்லாம் இருந்தது ஒரு காலம்.!!!

  நன்றி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   வணக்கம். உடல்நலம் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை. நாடகத்தைக் கண்டவர்களில் ஒருவர் என்பதைவிட தங்களின் மாணவர்களை நடிக்க வைக்க வேண்டும் என்று வேண்டிய பொழுது உடனே தாங்கள் ஒத்துக்கொண்டதற்கும் என்.சி.சி. மாணவர்களும் அதிக ஒத்திகையில்லாமலே அருமையாக ஒத்துழைப்புக் கொடுத்ததையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். அது ஒரு காலம். கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. தாங்கள் உடல் நலம் இல்லை என்று அறிந்தோம், விரைவில் நலம் பெறட்டும், தங்கள் சேவை தொடர்ந்து நடக்கட்டும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   வணக்கம். உடல்நலம் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை. சிறு விபத்து. ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன். தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 7. ஆஹா அருமையான படங்களும், பொருத்தமான வேடமும், ம்..ம் நல்ல நோக்கமும், பயன் தரும் விருப்பமும் கொண்டுள்ளது கண்டு மகிழ்வடைந்தேன்.

  எண்ணமும் இன்செயலும் எடுத்தாள பெருகுமே
  இன்பம் எந்நாளும் தொடர்ந்து !
  நன்றி !
  நலமா சகோ !தங்கள் இயலாமை கண்டு மனம் வருந்துகிறேன்.
  மேலும் எல்லாம் வல்ல இறவன் துணை புரிவான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் வெண்பாவும் பாராட்டும் கண்டு மனம் மகிழ்ந்தேன்.
   உடல்நலம் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை. ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன்.

   -மிக்க நன்றி.

   நீக்கு
 8. முன்பு போல் அய்யாவின் பதிவை பார்க்க முடியவில்லையே என்ற போதே வேலை பளுவாக இருக்கும் என்று நினைத்தேன். இப்போதுதான் காரணம் புரிகிறது. உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள். அய்யா. விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் அன்புடன் கூடிய உடல் நலம் பூரண குணமடைய வேண்டும் என்ற நேசத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி. ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன். அதனால் அதிகம் தட்டச்சு செய்யமுடியல்லை.

   -மிக்க நன்றி.

   நீக்கு
 9. போட்டோவே அருமை ,வீ டியோ காணவும் ஆவல் பிறக்கிறது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜீ,

   தங்களின் பாராட்டிற்கும் மிக்க நன்றி. வீடியோ வெளியிட தொழில் நுட்பம் தெரியவில்லை. விரைவில் வெளியிட ஆவன செய்கிறென். ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன். அதனால் அதிகம் தட்டச்சு செய்யமுடியல்லை. எனக்கு வருத்தம் என்னவென்றால் இரண்டு ‘ஜீ’- களுக்கும் பின்னூடம் இடமுடியவில்லையே என்றுதான். பொருத்தருள்க!

   -மிக்க நன்றி.

   நீக்கு
 10. ஆசிரியரே உடலும் உள்ளமும் நலம்தானா? இதயங்கள் சங்கமம் உங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தியை தரட்டும்.
  த.ம.8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் அன்பு கண்டு உள்ளம் நெகிழ்ந்து போனேன். ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வெடுக்காமல் தங்களின் உழைப்பு ஆர்வம் கண்டு வியந்து போகிறேன். தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. வேடப் பொருத்தம் ரொம்பவே அருமை...

  உங்கள் உடல்நலம் விரைவில் குணமாகும் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

   தங்களின் பாராட்டுதலுக்கும் ஆறுதலுக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி அய்யா.

   நீக்கு
 12. நாடகம் இயக்கியதற்கு வாழ்த்துகள்! அருமையான கருத்து...எல்லாவற்றையும் விட தங்களுக்கு வேடம் சூப்பராகப் பொருந்துகின்றது..அப்படியே கலைஞரைப் போல...யார் மேக்கப் செய்தவர்...அவருக்கு எங்கள் உள்மார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கவும்...

  தங்களது முயற்சிகள் யாவும் வெற்றிய அடைய வாழ்த்துகள்! காணொளி வடிவத்தில் காணா ஆவல்!

  தங்கள் உடல் நலத்தையும் பேணவும் நண்பரே! அது முக்கியம் மேலும் பல நாடகங்கள் இயக்கிட....விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்

  பதிலளிநீக்கு
 13. அன்புள்ள அய்யா,

  தங்களின் மேலான கருத்திற்கும் வாழ்த்திற்கும் பராட்டிற்கும் மிக்க நன்றி. நாடகத்திற்கு ஒப்பனை செய்தது நண்பர் மாதாகுமார் என்ற எங்கள் பள்ளியின் மேனாள் மாணவர். அவசியம் தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அவருக்குத் தெரிவிக்கிறேன். அவரும் நாடக நடிகர். காணொளி தொழில்நுட்பம் தெரியவில்லை.
  ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன். அதனால் அதிகம் தட்டச்சு செய்யமுடியல்லை.

  -மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,
   (சொல்ல மறந்த உண்மைகள்)

   ‘இதயங்கள் சங்கமம்’ நாடகத்தில் நடித்த ஒரு மாணவன்(+2) ...மிகமிக நன்றாக படிக்கக் கூடிய அந்த மாணவன்...தேர்வு நடப்பதற்கு ஒரு வாரம் இருக்கின்ற வேளையில் வீட்டில் அண்ணன் தம்பிக்குள் ...திட்டிவிட்டார்கள் என்ற காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டான்.

   படத்தில் இருக்கின்ற எங்கள் பள்ளியின் தாளாளர் தந்தை. அருட்பணி.நிக்கோ தேமூ அடிகளார் அவர்கள் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஒரு சில ஆண்டுகளுக்குமுன் இயற்கை எய்தினார்.

   நாடகம் எங்களோடு பணியாற்றும் ஆசிரியரின் மகன் விபத்துக்குள்ளாகி மரணம் ஏற்பட்டதின் பாதிப்பைக் கூடவே இருந்து உணர்ந்ததால் இந்த நாடகம் எழுதினேன்.

   -மிக்க நன்றி,

   நீக்கு
  2. நண்பரே! இதை வாசித்தத்தும் மனம் மிகவும் வேதனை அடைந்தது. அந்த நிலையில் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ண முடிந்தது...இறைவனால் படைக்கப்பட்ட படைப்புகளாகிய னமக்கு நேரும் அனுபவங்கள் நமது படைப்புகளாகி வெளிவருகிறது இல்லையா நண்பரே! இதுதான் வாழ்க்கை இல்லையா?!

   ஆஹா ஒப்பனை கலைஞர் தங்களது முன்னாள் மாணவரா...நல்ல விடயம்...அவரது வாழ்வு மிளிர வாழ்த்துகள்.

   எங்களுக்கும் இப்படி எங்கள் பள்ளியில் படித்த/படிக்கும் மாணவர்கள் குறும்படத்தில் நடிக்க, வேறு வேலைகள் செய்ய என்று உதவுவார்கள். அதுதான் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையில் இருக்கும் நல்ல உறவு....

   மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
  3. அன்புள்ள அய்யா,

   மரணம் வாழ்க்கைப் புத்தகத்தின் இறுதி அத்தியாயம். அதற்குள் எழுதுவதை எழுது முடித்துக் கொள்ள வேண்டும். காலம்... சேமிக்க வேண்டியவைகளை மட்டும் சேமித்துக் கொள்ளும்.

   விரைவில் இந்த நாடகம் வெளியிட ஆவன செய்யப் படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

   நன்றி.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...