சனி, 27 ஜூன், 2015

கவிதைப் போட்டியில் (2015) ஆறுதல் பரிசு பெற்ற என்னுடைய கவிதை...உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் முடிவுகள்-2015


                                                                              
சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு ரூபன் யாழ்பாவாணன் இணைந்துநடத்திய 

 ஆறுதல் பரிசு பெற்றவர்கள்


வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னுடைய கவிதை...இணையத் தமிழே இனி !

பஃறொடை வெண்பா


மணவை ஜேம்ஸ்.ஆறா வதுபூதம் !  ஆறறிவின் அற்புதம்!

பேறாம்நீ மானிடத்தின் பேராறு கண்டடைந்த

ஆழிநீ என்பேன். அகிலத்தை ஆள்பவளே!

வாழியே எல்லாம் வடித்துத் தருபவளே!

எங்கள் மகாகவிக்குக் கிட்டாப் புதுவார்ப்பு

எங்களுக்குக் கிட்டிட்ட ஈடில்லா மாசத்தி

நீரின்றி யேயமையா ஏதுமே நாட்டினிலே               

நீரிணைப்பாய் அன்புள்ள நெஞ்சத் தவரை

பலதுறை பல்லுறவுப் பெட்டகமாய் இந்த

உலகைச் சமைத்தவளே! உற்றுனில் கற்போம்!

இணையப் பெருவரமே! நீவாழ வாழும்

இணையத் தமிழே இனி!


 

கண்ணீர் இலங்கையாய்க் காட்சிகள் வேண்டாமே!

மண்ணில் புதைந்து மடிந்தது போதுமே!

வென்று மகிழ்ந்தினி வெற்றிக் கொடிகட்டி

என்று விடுதலை என்றைக்குக் காண்போம்?

கனவினில் வாழ்ந்தே கழித்தது போதும்

நனவினில் வாழுகின்ற நாள்வரும் எப்போது?

வாடும் தமிழினத்தின் வாட்டத்தைப் போக்கியே

பாடும் குயில்களெனப் பாரில் மகிழ்ந்து
                                                                 
வலைத்தளம் பற்றுகின்ற வண்ணத் தமிழாய்

கலைத்தனம் மட்டுமின்றி காயம்பட் டோர்க்காய்

இணைப்பாய்த் தமிழனையே ஈழம் கிடைக்க

இணையத் தமிழே இனி!-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in


  


20 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. தாங்கள் போட்டியில் வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

   நன்றி.

   நீக்கு
 2. இணையத் தமிழில் உலகத் தமிழரை்களை இணைத்து ஒரு அருமையான பஃறொடை வெண்பாவைத் தந்திருக்கிறீர்கள்.

  பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. அருமையான கவிதை! போட்டியில் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள் சார்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

   தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

   நீக்கு
 5. கவிதைப் போட்டியில் வென்றமைக்குப் பாராட்டுக்கள். உங்களது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தனித்து நிற்கும் உங்களது பாணியே இவ்வெற்றிக்குத் துணையாக இருந்துள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. எனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன்.

   நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் வாழ்த்துக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. எனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன்.

   நன்றி.

   நீக்கு
 7. பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள் ...! நலமா சகோ எப்படி இருக்கிறீர்கள்.ம்...ம்

  இன்னல்கள் ஏராளம் ஈழத் தமிழர்க்கு
  என்றெண்ணி ஈந்தகவி யென்நெஞ்சை தொட்டது
  கண்ணீரும் காயாதோ துன்பநிலை மாறாதோ
  என்றீர் ரறிய உலகு !

  நன்றி வாழ்த்துக்கள் ...! ஈழத் தமிழர்க்குமாய் இணைத்தீரே இக் கவியை நன்றி நன்றி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. காயம் கொஞ்சம் கொஞ்சமாக குணம் அடைந்து வருகிறது. இன்னும் ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன். வெண்பாவில் அருமையான கவிதை. தாங்கள் போட்டியில் வெற்றி பெற்றததற்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   நன்றி.

   நீக்கு
 8. அருமையான கவிதை அண்ணா.
  // எங்கள் மகாகவிக்குக் கிட்டாப் புதுவார்ப்பு

  எங்களுக்குக் கிட்டிட்ட ஈடில்லா மாசத்தி// எவ்வளவு உண்மை! இணையம் பாரதிக்குக் கிடைத்திருந்தால்.... :)
  பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. விபத்தா!! விரைவில் முழுக்குணம் பெற வேண்டுகிறேன். கவனித்துக் கொள்ளுங்கள் அண்ணா

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துகள் நண்பரே! அருமையாக உள்ளது நண்பரே! கவிதை...

  தங்கள் உடல் நலம் எவ்வாறு உள்ளது நண்பரே! தேறி வருகின்றதா. பிரார்த்திக்கின்றோம்...உடல் நலத்தைப் பேணுங்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

   உடல் நலம் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது. இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அய்யாவின் அன்பிற்கு நன்றிகள் பல.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...