சனி, 23 ஜனவரி, 2016

பிழையின்றித் தமிழில் எழுதலாம்! 1பிழையின்றித் தமிழில் எழுதலாம்!

                                                                                


நாம் எழுதுகின்ற சொற்றொடர்களில் ஏற்படும் பிழைகளைத் திருத்தி  எழுத வேண்டுமல்லவா...?  வாருங்கள்... முயற்சி செய்து பார்ப்போம்.  முயற்சி செய்தால் முடியாதது என்று ஒன்று உண்டோ?

பிழையான சொல் ‘சிவப்பு வண்ணத்திலும்
பிழை திருத்தம் ‘பச்சை வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
                                


1. என் முதற்கண் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(முதற்கண் நன்றி என்றால் இரண்டாம் கண் நன்றி.  மூன்றாம் கண் நன்றி என்று என்று உள்ளதாக அமைந்துவிடும்.)

   என் நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.
          


2. செய்திகள் வாசிப்பது சித்ரா.(இது தவறு)

   செய்திகள் வாசிப்பவர் சித்ரா.- (சரியானது)                       3. இந்த நூலை இயற்றியது பேராசிரியர் சாலமன் பாப்பையா.

   இந்த நூலை இயற்றியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா.

‘இயற்றியது என்பது அஃறிணைச் சொல்.  அதனால் இயற்றியவர் என்று இருப்பதே சரியானது.4. அவர் பெரிய செல்வந்தர்

   அவர் பெரிய செல்வர்.

                                                                5. அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(ஆங்கில மொழியின் தாக்கத்தால் அமைந்த பிழை வழக்கு.)

   அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

                                                                    6. அமைச்சர் தனது தொகுதிக்குச் சென்றார்.

(அமைச்சர் என்பது பன்மைக்குரிய சொல்.  தனது என்பது ஒருமைக்குரிய சொல்.)

   அமைச்சர் தமது தொகுதிக்குச் சென்றார்.

                                                               7. இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் ஒழுங்கீனங்கள் ஏற்படாது.

(ஒழுங்கீனங்கள் என்னும் எழுவாய் ஒரு பன்மைச் சொல் அதற்குப் பயனிலையும் பன்மையில்தான் அமைய வேண்டும்.  ஏற்படாது என்பது ஒருமைக்குரிய பயனிலை. 

   இத்திட்டத்தை நிறைவேற்றுதில் ஒழுங்கீனங்கள் ஏற்படா.

                                 8. ஊட்டியை மலையரசி என்று அழைக்கிறார்கள்.

   ஊட்டியை மலையரசி என்று வழங்குகிறார்கள். / குறிப்பிடுகிறார்கள்.
                                                                                   9. பிரதி ஞாயிறுதோறும் விடுமுறை.

பிரதி (வடசொல்) என்றாலும் தோறும் என்றாலும் ஒரே பொருள்தான்.

   ஞாயிறு தோறும் விடுமுறை /
   பிரதி ஞாயிறு விடுமுறை.


                                                                       


10. தசரதனது மகன் இராமன்.


தசரதன் +   அது என்பதில் அது என்பது அஃறிணைக்குரியது.  தசரதனது மகன் என்று எழுவது பிழையாகும்.
நான்காம் வேற்றுமையில் கூற வேண்டியதை ஆறாம் வேற்றுமையில் கூற முயல்வதால் தசரதனது மகன் என்னும் தவறு உண்டாகிறது.
சிலர் இந்த ஆறாம் வேற்றுமையை வைத்துக் கொண்டு அஃறிணை உருபை மட்டும் மாற்றி ‘தசரதனுடைய மகன் இராமன்என்று எழுதுகிறார்கள்.  ‘உடைய’ என்பது ஆறாம் வேற்றுமைக்குச் சொல்லுருபு.  இக்காலத்தில் இத்தொடரைப் பிழையற்றதாய் ஏற்றுக் கொள்கிறார்கள்.  வேற்றுமை உருபைத் தராமல் ‘இன்என்னும் சாரியையினை மட்டும் இணைத்து ‘தசரதனின் மகன் இராமன்’ என்பதையும் தற்காலத்தில் ஏற்கின்றனர்.

         தசரதனுக்கு மகன் இராமன்.நன்றி: தமிழாசிரியர் முழக்கம்.                                                                தொடரும்...

-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.                        


32 கருத்துகள்:

 1. படங்களுடன் அழகான விளக்கங்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள வலைச்சித்தரே!

  தாங்கள் முதலில் வந்து கருத்திட்டு வாக்களித்தற்கு ‘என் நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்’.

  பதிலளிநீக்கு
 3. இவ்வாறான பதிவு அனைவருக்கும் உதவியாக இருக்கும். எனக்கும்கூட. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள முனைவர் அய்யா,

   தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 4. இப்பதிவு உதவியாக இருக்கும் . நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   தமிழ்மண வாக்கிற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 6. பிழை நீக்கி எழுத உதவும் பதிவு. மிகவும் நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 7. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள கரந்தையாரே!

   தங்களின் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. மணவையாருக்கு என்னைப்போன்ற பாமரனுக்கு உதவும் பதிவு தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   பரமார்த்த குரு போல இருந்து கொண்டு... ‘பணியுமாம் என்றும் பெருமை...’ என்று சொன்ன வள்ளுவரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

   நன்றி.

   நீக்கு
 9. எளிதாக புரிந்தது!
  த ம வாசகர் பரிந்துரைக்கு ஏழாம் வாக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜீ,

   ஏழுமலை வாசா, எமை ஆளும் சீனிவாசா... பகவானின் பரிந்துரைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
  2. சீனியே எனக்கு ஆகாது ,நானா சீனிவாசன் :)

   நீக்கு
  3. சீனி உங்களுக்கு ஆகாது... ஆனால் சீனிக்கு...?

   நீக்கு
 10. ஆஹா!பிழை என தெரியாமலே சரியென நினைத்து பயன் படுத்தும் வார்த்தைகளின் திருத்தம்!
  அவர்,அது அஃறினை அறிந்தேன். நன்றி ஐயா!
  த,ம வாக்கிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. நன்று!
  மணவை முஸ்தபா எனும் தமிழறிஞர் இருந்தாரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   மணவை முஸ்தபா எங்கள் ஊர்க்காரர்... முதுபெரும் தமிழறிஞர் அவர்.

   நன்றி.

   நீக்கு
 12. அருமையான தொடர்; பலர் கற்றுத் தேற வேண்டிய அறிவு!
  இத்தொடரைத் தொடர்ந்து எழுதுங்கள்; இத்தொடரை மின்நூலாக வெளியிட்டு ஒத்துழைப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் மேலான கருத்திற்கும் பாராட்டிற்கும் ஊக்கப்படுத்தியதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் மகிழ்ச்சிக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 14. பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்கள் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. பலருக்கும் பயனுள்ள பதிவு அய்யா!
  த ம 9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் மேலான கருத்திற்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 16. மிகவும் பயனுள்ள பதிவு. குறித்தும் வைத்துக் கொண்டோம். ஏனென்றால் இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தவறுகள் எங்கள் பதிவுகளில் பல காணப்படும். அருமை அருமையான் பதிவு. இது போன்று தொடருங்கள் நண்பரே. நாங்களும் கற்றுக் கொள்கின்றோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. தொடர்கிறேன்.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...