புதன், 13 ஆகஸ்ட், 2014

தாயைப் போல பிள்ளை...!                 தாயைப் போல பிள்ளை...!


இந்த-

மணிமேகலை நிற்பது


தெய்வமாக அல்ல...

தெருவில்!.


ஏன் இத்தனை


ஆண்களின் தரிசனம்...?

இவர்களின் கண் அம்புகள்

இதயத்தையல்லவா

குத்தி ரணப்படுத்துகின்றன...!


இவள்-

கையில் இருப்பது

அமுதசுரபியெனும்

அட்சய பாத்திரமல்ல...!

பிச்சைப் பாத்திரமெனும்                

அலுமினியப் பாத்திரம்...!


இவளின்-

வயிற்றைப் போலவே
                                                                     
இதுவும்

காலியாகக் கிடக்கிறது...

இந்தப்பிள்ளை-

தாயைப் போல ஆக...

தயாராக இருக்கிறாள்.

                                                                               -மாறாத அன்புடன்,

                                                                                  மணவை ஜேம்ஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...