வியாழன், 7 ஆகஸ்ட், 2014

மனிதன் சுத்தமாவது எப்படி?


எங்கள் சுதந்திரத்திற்கு
பொன்விழா கொண்டாடிவிட்டோம்...
ஆனால்
நாங்கள் குடிதண்ணீருக்கே
திண்டாடிக்கொண்டு
இருக்கிறோம்.

கங்கையில் -
சாக்கடை சங்கமம்...
காவிரியும் காய்ந்த பிறகு
நாக்கு வறண்டாலும்
எங்கள் சுதந்திரத்திற்கு
பொன்விழா கொண்டாடிவிட்டோம்...

இந்த தேசம்-                                                        
மகாத்மாவையே
அப்புறப்படுத்திய பிறகு
மதுவிலக்கை மட்டும்
எப்படி அமல்படுத்தப்போகிறது?
ஓ... அண்ணலே...
அரசு அவமானப்பட்டாலும்
வரும் வருமானத்தை இழக்குமா?
இந்த இழப்பை யார் ஈடு செய்வது?
கேட்பது அரசங்கம்...
பதில் சொல்ல நீதான் வரவேண்டும்.

போதையில் இருப்பது...
வீதியில் விழுவது...
புகை பிடிப்பது...
எனது சுதந்திரம்
என உரிமை கொண்டாடும் பொழுது...
சுற்றுப்புறத்தாரின் சுதந்திரம்
பற்றி எரிகிறது.

காறை களங்கப்படுத்தும்
கயவர்களே...
உங்களுக்கு புற்று  பற்றும்
ஆனால்...
எங்களுக்கும் புற்று பற்ற வைப்பது
என்ன கொடுமை?

காற்றுகூட
அசுத்தமாவிட்ட பிறகு
அதை சுவாசிக்கும்
மனிதன் சுத்தமாவது எப்படி?          
                                                                                -மாறாத அன்புடன்,
                                                                                  மணவை ஜேம்ஸ்.                                                                                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...