வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

மகாத்மாவே...!பாரத நாடு?                                      மகாத்மாவே ...!பாரத நாடு?

சாராயக்கடைகளை-

சர்க்காரே நடத்தி...

சாதனை சரித்திரத்தில்

இடம் பிடித்துவிட்டனர்.


மகாத்மாவே...!

உன்-

மதுவிலக்குக் கொள்கையையே...

விலக்கி வைத்து விட்டனர் தெரியுமா?


பாருக்குள்ளே நல்ல நாடு- எங்கள்

பாரதநாடு...!
பாரதநாட்டில்-

மதுவினால் மாண்டு போனவர்கள்...

ஆண்டொன்றிற்கு

பதினெட்டு இலட்சத்திற்கு மேல்..!.
                                                                                            
தமிழகத்தில் மட்டும்

இரண்டு இலட்சத்திற்கு மேல்..!.                  


தேசப்பிதாவே...!

நம் தேசத்தில்...

மது அரக்கனால்

ஒன்றரை இலட்சம்

சாலை விபத்துகள்...!

அவற்றில் மரணம் மட்டும்

பதினைந்தாயிரத்துக்கும் மேல்...!


குடிமகன்களால்...

குற்றச்சம்பவம்-

இரண்டேகால் இலட்சத்திற்கும் மேல்...!

பாலியியல் வன்முறை                                        

அறுநூற்றுக்கு மேல்

பாழாய்ப்  போன பாரதத்தில்...!

.


தமிழகத்தில் மதுவினால்...                                  
       

நடப்பாண்டில் மட்டும்-                                    

நாட்டின் ஈட்டிய வருமானம்

எவ்வளவு தெரியுமா?

இருபத்து  ஓர் ஆயிரம் கோடிக்கும் மேல்...இது வெகுமானமா?

இல்லை -

உனக்கிது அவமானமா?


சாரயக்கடைகளில்...
                                                                                         
எச்சில் தம்ளர்களில்                                              

சமத்துவம் சங்கமமாகி...

வெளியில்

சாதிச்சண்டைகளில்

எச்சில் காறி

உமிழப்படுகிறது...

                                                                                           -மாறாத அன்புடன்,

                                                                                             மணவை ஜேம்ஸ்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...