புதன், 30 செப்டம்பர், 2015

கணினியில் தமிழ் வளர்ச்சி

இணையத் தமிழை எளிதாக்குவோம்!

கணினி:
               மனிதனின் மூளையால் கண்டுபிடிக்கப்பட்ட கணினி,  மூளையையும் விஞ்சி விட்டது.  1983 ஆம் ஆண்டு்த்  தமிழ்க் கணினி வல்லுநர்கள் ,  தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர்.  “தேமதுரத் தமிழோசை  உலகமெலாம் பரவும் வகை  செய்திடல் வேண்டும்” என்ற பாரதியின் கனவை   இன்று ‘கணினி’  நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்றால்  அது  மிகையில்லை.
தமிழில் மென்பொருள்:
                சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர்,  கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கே வசதி  கிடையாது.     தமிழ் எழுத்துருக்கவிசைப்பலகைகள் உருவாக்கப்படவில்லை.  தமிழ் உரையை ரோமன் எழுத்துகளில் உள்ளீடு செய்து,  அதைத் தமிழ் எழுத்துருக்களில் மாற்றும் வசதி உருவாக்கப்பட்டது
               1984ஆம் ஆண்டு   கனடாவில் வாழும் முனைவர் ஸ்ரீநிவாசன் என்பவரால் தமிழில் முதலில் மென்பொருட்களில்  ஆவணங்கள் எழுதும் ஆதமி (Adami) உருவாக்கப்பட்டது.  இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக ‘ஆதவின்’ என்ற மென்பொருளும் MS  Windows இயங்கு தளத்தில் பயன்படக் கூடியதாகப்  பின்னாளில் உருவாக்கம் பெற்றது.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

பெண்கள் முன்னேற்றம்

நீ பாதி... நான் பாதி...!

பெண்கள்:
               அகிலத்தில் அன்று முதல் இன்று வரை காலங்காலமாக ஆணாதிக்கச் சமூகத்தில்தான் பெண்கள் வாழவேண்டிய அவலநிலை இருக்கின்றது என்பதே நிதர்சனம்.  ஆணுக்கம் பெண்ணுக்கும் சில உறுப்புகளால் வேறுபாடு இருந்தாலும் அவர்களின் அறிவுஆற்றல்பெருமைகளில்  எந்த வேறுபாடு இல்லை.
சமூகத்தில் பெண் குழந்தை:
               நம்நாட்டில்  பெண் குழந்தை பிறந்தது என்றால் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்து விடுகிறது.  இவளைத் திருமணம் செய்து கொடுக்கப்  பெரிய தொகை செலவு செய்ய வேண்டி வருமே என்ற கவலையும் பெற்றோருக்கு அந்தப் பெண் குழந்தையுடன் சேர்ந்து பிறக்கிறது.  பெண் குழந்தை பிறந்தவுடனே கள்ளிப்பாலை  அதன் வாயில் ஊற்றிக் கொல்லும் கொடுமை தமிழ்நாட்டில்தானே நடந்தது.  இதுபோன்ற அவலங்களைத் தடுப்பதற்காகத்தானே அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தை’ த் தொடங்கியது.  இந்தத் திட்டத்தில் வளர்ந்த  குழந்தைகளில் அதிகம் பெண் குழந்தைகள்தான்.  

திங்கள், 28 செப்டம்பர், 2015

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

புகையும் மதுவும் விலக்கு... விலக்கு...!
சுற்றுச்சூழல்:
சுற்றுச்சூழல் என்றால் நிலம்நீர்காற்றுஆகாயம்நெருப்பு ஆகிய ஐம்பூதங்களான புவி மண்டலம் சீராக இயங்குவதற்கும் இவற்றிற்குப் பாதிப்பு நிகழாமல் பாதுகாப்பதுதான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.    ஆனால் மனிதனை மற்றும் மனித  வளங்களைப்  பாதுகாப்பதும்   சுற்றுச்சூழல் பாதுகாப்புதான்  என்பதை நாம் ஏனோ இன்னும் அறியாமல் இருக்கின்றோம்!
மனிதர்கள் அனைவரும் உடல்நலத்தோடும் வளத்தோடும் வாழவே விரும்புகிறார்கள்.  ஆனால் சுற்றுப்புறச் சூழல் அவர்களை அவ்வாறு வாழ அனுமதிக்கின்றதா என்ற வினாவிற்கு ‘இல்லை என்பதுதான் பதிலாக வருகிறது.   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் புகைபிடித்தல் மற்றும் மது அரக்கனின் கோரப்பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகி உருக்குலைந்து வருகின்றது மனித சமூகம்.

சனி, 26 செப்டம்பர், 2015

முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை



பாரில் பாரதத்தின் பண்பாடு போலில்லை...!

                                                                                                                   
                                                                                 
             







நாகரிகப்பண்புத் தொட்டிலைத்

தாலாட்டாமல் பண்பாட்டிற்கு

முகாரி பாடும் மூடர் கூடமே!

முன்னேறிய உலகில்-

பின்தங்கி விட்டனவே

வாழ்க்கை நெறிமுறை விழுமியங்கள்!

வியாழன், 24 செப்டம்பர், 2015

இளைய சமூகத்திற்கு நம்பிக்கை


கணினிப் படை வருக!

                             


உச்ச  மலைவிலகி  ஓடு  சிறுபரலாய்
   உள்ள  ஒளியணைந்த  ஓட்டை  இருட்குடமாய்
அச்சப்  புழுவதட்ட  ஆண்மை   இழகளிறாய்
   அட்டை   அறிவுறிஞ்ச ஆனவுன்  கோலமென்ன?
மெச்சு  மினத்திரளே! மிஞ்சு  தமிழ்ப்புலமே!
   மேடை  நடிகரிடை மேன்மை   இழந்தவனே!
எச்ச  இனக்குறியே  ஏடுகள்   பாடியஉன்
   ஏற்ற  சரித்திரத்தோ  எச்சில்  உமிழுகிறாய்?

வியாழன், 17 செப்டம்பர், 2015

இந்த வினாக்களுக்கு மட்டும் விடை தெரியவேயில்லை...!

                                                     

எங்கள் பெரியார்

       
                     

                       கவிமதியின் கவிதை வரிகள்....



மூடிமறைத்துப்  பேச
அறியார்
மூடப் பழக்கம் எதுவும்
தெரியார்
நூலார் திமிர் அறுத்த
வாளார்
நூற்றாண்டு கடந்து வாழும்
வரலாறார்
நரியார் தோலுரித்த
புலியார்
நால்வகை வர்ணம் கலைத்த
கரியார்
எளிதாய்க் கடந்து செல்லும்
வழியார்
ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த
விழியார்
தெளியார் அறிவு நெய்த
தறியார்                                                                                         தெளிந்தோருக்குத் தெளிவான
குறியார்

உலகத் தமிழருக்கு
உரியார்
உணர்ந்தால் விளங்கும்
மொழியார்
மநூ வேதம் கொளுத்திய
திரியார்
மாதருக்குத்  தெளிவான
ஒலியார்
தேடிப் படிக்கச் சிறந்த
நெறியார் - தூய
தாடி முளைத்த
தந்தை பெரியார்.
-நன்றி: கவிமதி.

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

அண்ணாவின் பிறப்புப் பற்றித் தரம் தாழ்ந்து எழுதியவன்...!






அண்ணா... நீர் பெரியார்!




அண்ணா-
காஞ்சியில்
காவியத் தலைமகனாய்ப் பிறந்தாய்...!
அரசியல்...
அரிச்சுவடியைக் கற்றுத் தந்தாய்...!


தமிழனின்-
கிழிந்து கிடந்த மானத்தைத்
தன்மானத் தறிபூட்டி...                    
வெகுமானப் பட்டாடை
நெய்துகொடுத்த நெசவாளன்!

சனி, 5 செப்டம்பர், 2015

ஆசிரியர் தினத்தில் வாழ்த்து!




ஆசிரியருக்கு வாழ்த்து!
                                                                  

                                                                        



                                         ஆசிரியர்                                     


                                                                                                                                   
ஆசு இரிதலால் ஆசிரியர் ஆகியே

மாசு மருவற்ற மாணக்கர் ஆக்கியதால்

பேசுகின்ற தெய்வமாய்ப் பேற்றினைப் பெற்றிட்டு

வீசுகின்றாய் கல்வியெனும் காற்று. 


‘சர்வபள்ளி’  இராதகிருஷ்ணன்!




இந்தியநாட்டின்-
இரண்டாவது குடியரசுத்தலைவர்...
இரண்டுமுறை குடியரசுத் துணைத்தலைவர்!
சுரண்டிய வெள்ளையனைத்  தன்  பேச்சால்                     
மிரண்டு போக  வைத்தவர்.


ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

கால்களை இழந்து தவிக்க வைத்த விபத்து!

     எங்கோ ஏற்பட்ட கவனக்குறைவு !


தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ

உங்கள் அங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ

கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா


இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா




கவிஞர் மருதகாசியின் இந்தப்பாடல் கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.

          

நாம் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொள்கிறோம்.  எதையுமே
 முதன்மையாகக் கருதுவதில்லை. எதையாவது இழந்த பிறகுதான் அதன்
 அருமையை உணர்கிறோம். 

அன்றாடம் விபத்துகள் பற்றிய செய்திகள் வராமல் இருப்பதில்லை. வாகனங்கள் மற்றும் மக்கள்தொகை பெருக்கமும் முக்கியக் காரணம் என்றாலும்கூட; அதற்கேற்பச் சாலைகள் இல்லாதததும், சாலை விதிமுறைகளைக் கடைபிடிக்காதததும்தான் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் முக்கியக் காரணம். 

------------------------------------------------------------------------

வேளாண் கல்லூரி மாணவியின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட விபத்து: கால்களை இழந்து தவிக்கும் பரிதாபம்

                                                       



பட்டம் வாங்கிய கையோடு தனது ஏழைப் பெற்றோரின் கண்ணில் காட்டுவதற்காக மகிழ்ச்சியுடன் சென்ற வேளாண் கல்லூரி மாணவியின் வாழ்க்கையை விபத்து ஒன்று புரட்டிப் போட்டுவிட்டது.
             

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

அன்னை தெரசாவை காறித் துப்பியவனைத் தெரியுமா?



அன்னை தெரசா !




அன்னை தெரசா  அகிலமே  போற்றிடுமே!

அன்பை   விதைத்து   அனாதைகளைக்   காத்து

தொழுநோய்  போக்கிடும்  தொண்டினைச்  செய்து

தொழுதிடவே  வைத்திட்ட  தாய்!

                                                                                   -மணவை.

1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ந்தேதி யூகோஸ்லாவியாவில் அக்னேஸ் கோன்ச்ஹா போஜக்ஸ்ஹயு (Agnes Gonxha Bojaxhiu) என்ற குழந்தை பிறந்தது. 


                                                                                                                         


திங்கள், 24 ஆகஸ்ட், 2015

கிளி ஜோஸ்யமும் சீட்டு எடுக்கும் கிளியின் இரகசியமும்...!



நீங்க கிளி ஜோஸ்யம்  பார்த்ததுன்டா...?





                     கிளி ஜோஸ்யம் பார்த்து நம்முடைய வாழ்க்கையில் நடந்தவை, நடக்கின்றவை, நடக்கப் போறவை பற்றி எல்லாம் சொல்லுகின்ற ஜோஸ்யக்காரரைப் பார்த்து  பள்ளிப் பருவத்தில் வியந்து போயிருக்கிறேன்.
என் வியப்பிற்குக்  காரணம்  என்னவென்றால்...  அடைத்து வைக்கப் பட்டிருக்கும் கிளி கூண்டைத் திறந்தவுடன்  வெளியே  வந்து அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் சீட்டை எடுப்பதைக்கண்டுதான்.



                      மணப்பாறைக்கு அருகிலுள்ள ஆண்டவன் கோயில் போல இருக்கும் கோவிலின் திருவிழாக் காலங்களில், ‘வள்ளி திருமணம்’ போல நாடகம் நடக்கக்கூடிய இரவு நேரங்களில்,  மக்கள் கூடும் சந்தைகளில்,  சாலை ஓரங்களில் , கிராமங்களில் கிளிக்கூண்டை மிதிவண்டிகளில் வைத்தோ அல்லது கைகளில் தூக்கிக்கொண்டோ  ஜோஸ்யம் பார்ப்பவர்கள் செல்வது  வாடிக்கை.  ஜோஸ்யம் பார்ப்பவர்களை  வேடிக்கை பார்ப்பது  எனது வாடிக்கை.

சனி, 22 ஆகஸ்ட், 2015

தப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா!





தப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா!



வலைப்பூவில் அநேகர் எழுதுகிறார்கள். பலருக்கு வலைப்பூவின் பதிவுகளில் இடம்பெறும் சந்திப் பிழைகளோ எழுத்துப் பிழைகளோ உறுத்துவதே இல்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லையே? அப்படி இருக்க முடியாதவர்களில் ஒருவர் நீச்சல்காரன்.

இவரிடம் ‘வலைப்பூவில் சந்திப் பிழையுடன் எழுதுகிறீர்கள்’ என்று ஒருவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த விமர்சனத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை ‘நீச்சல்கார’னால். சந்திப் பிழையைச் சரிசெய்யும் மென்பொருள் ஒன்றைக் கண்டடையும் முயற்சியை மேற்கொண்டார். அப்படி முதலில் இவர் உருவாக்கியதுதான் ‘நாவி’ என்னும் தமிழ் சந்திப் பிழை திருத்தி. தனக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பயன்படும்படி ஆன்லைனில் இயங்கும் ‘நாவி’யை உருவாக்கிய ‘நீச்சல்கார’னின் நிஜப் பெயர் ராஜாராமன்.

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல் 

சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது?
வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்


புதன், 19 ஆகஸ்ட், 2015

ஊமையான உண்மைகள்!



ஊமையான உண்மைகள்!  


                                  
                
        


           உறங்கிக் கொண்டிருந்த ஊரார்களை உசுப்பி எழுப்பியது அந்த கோவிலின் வெண்கல மணியோசை.  இந்த இரவு நேரத்தில் கோவில் மணியை அடித்தது யார்?  மணி எதற்காக அடிக்கப்பட்டது,  நல்லதுக்கும் கெட்டதுக்கும் ஊரில் மணியடித்துத் தெரிவிப்பது வழக்கம்தான்  என்றாலும் வழக்கத்திற்கு மாறாக  ஏதோ அவசர அழைப்பாகவே எண்ணத் தோன்றியது.  சிறிது நேரத்தில் சொல்லி வைத்தாற்போல் ஆண் பெண் பேதமின்றி ஊரார்கள் அனைவரும் கோவில் முன் வந்து கூடிவிட்டனர்.


          அங்கே ஊர் பெரியவர்களில் மணியக்காரர், கோவில்பிள்ளை வந்துவிட்ட பின்னும் ‘பெரியவர்’ என்றழைக்கப்படும்  நாட்டாண்மை மட்டும் வரவில்லை. ‘ கோவில் மணியை அடித்தது யார்?’- என்று தெரிந்துகொள்ள கோவிலுக்குள் கூட்டம் விரைவாக  நுழைந்தது.  கோவிலுக்குள்ளிளிருந்து அழுதுகொண்டே இழுத்துப் போர்த்திய சேலை முந்தானையால் கண்களைத் துடைத்தவாறு வெளியே வந்தாள் அனுசூயா.

சனி, 15 ஆகஸ்ட், 2015

மனித நேயத்துடன் மாணவிக்கு உதவி கிடைத்தது எப்படி?

முசிறி மாணவி  நேரில் பார்த்த மனித தெய்வங்கள்! 



முகவரி தவறியது எப்படி?

மாணவி சுவாதி திருச்சியில் உள்ள வேளாண் பல்கலை 
கல்லுாரியில் உள்ள உதவி மையம் மூலமே, 'ஆன் - லைனில்' விண்ணப்பித்துள்ளார். கோவை பல்கலையுடன் அவருக்கு நேரடித் தொடர்பு ஏதும் இல்லை.  இதனால், கலந்தாய்வு எங்கு நடக்கிறது என்ற விவரத்தை முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. மேலும், கலந்தாய்வுக்குப் புறப்படும்போது, சுவாதியின் தாய் தங்கப்பொண்ணு, தன் உறவினரிடம் கேட்டு,  கோவையில் தான் கலந்தாய்வு என்பதை உறுதி செய்துள்ளார். ஆனால், சுவாதியின் தோழி ஒருவர், 'சென்னையில் தான் அண்ணா அரங்கு உள்ளது; அங்கு தான் கலந்தாய்வு நடக்கிறது' என்று கூறி குழப்பி விட்டதால், இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

                                                                       

சொந்த கிராமத்தில் மாணவி சுவாதி



.
மாணவி சுவாதி திருச்சி மாவட்டம் முசிறி பைபாஸ் ரோடு, உழவர்சந்தை அருகே வசிப்பவர் ராஜேந்திரன் மனைவி தங்கப்பொண்ணு(வயது40). இவர் கணவனால் கைவிடப்பட்டவர். இவர்களுக்குச் சுவாதி, சுஸ்மிதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

சனி, 8 ஆகஸ்ட், 2015

மறக்க முடியுமா சசிபெருமாளின் மரணத்தை...?





சசிபெருமாள் உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி: சொந்த ஊரில் நல்லடக்கம்

காந்தியவாதி சசிபெருமாள் உடலுக்கு இறுதி அஞ்சலி
காந்தியவாதி சசிபெருமாள் உடலுக்கு இறுதி அஞ்சலி
சசிபெருமாள் உடல் அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில் அவரது வீட்டுக்கு முன்பாகவே நல்லடக்கம் செய்யப்பட்டது. அதே இடத்தில் சசிபெருமாள் நினைவு மணி மண்டபம் கட்டப்படவுள்ளது.
முன்னதாக, அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சேலத்தில் இருந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டுக்கு கொண்டுவரப்பட்டது. வழிநெடுகிலும் சசிபெருமாள் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சசிபெருமாளின் சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில், அவரது வீட்டுக்கு முன்பாக சசிபெருமாள் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சசிபெருமாள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
இறுதி அஞ்சலி செலுத்தும் இடத்துக்கு அருகில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், சசிபெருமாள் உடல் அவர் வீட்டுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதே இடத்தில் சசிபெருமாள் நினைவு மண்டபம் கட்டப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்தார். இன்றோடு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். ஆனாலும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம் என்று விவேக் கூறியுள்ளார்.

சசிபெருமாள் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி: திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி

  

சசிபெருமாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் ஸ்டாலின் | படம்: ஸ்டாலின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுத்தது.
சசிபெருமாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் ஸ்டாலின் |

சசிபெருமாள் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
சேலம் அருகேயுள்ள இமேட்டுக்காட்டில் வைக்கப்பட்டுள்ள சசிபெருமாள் உடலுக்கு ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சசிபெருமாள் மனைவி மகிழத்தை சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்டாலின், திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவியை அளித்தார்.
சசிபெருமாள் மரணத்துக்கு அரசின் அலட்சியமே காரணம் மறைந்த சசிபெருமாள் குடும்பத்துக்கு திமுக எப்போதும் துணையாக இருக்கும் என்று ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.
"இன்று மாலை ஆளுநர் ரோசய்யாவிடம் திமுக சார்பில் திமுக தலைமை நிலைய முதன்மை செயலாளர் துரைமுருகன் மனு அளிக்க உள்ளார். அதில், சசிபெருமாள் மரணம் குறித்து நீதி விசாரணை செய்ய வேண்டும்.
டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடி, புழல் சிறையில் அடைக்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கருணாநிதி கூறியுள்ளார்.
சசிபெருமாள் என்ன நோக்கத்திற்காக போராடினாரோ அந்த நோக்கம் நிறைவேற திமுக பாடுபடும். 2016ல் திமுக ஆட்சிக்கு வரும் போது தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்" என்று ஸ்டாலின் கூறினார்.


நினைவு மண்டபம் கட்ட ரூ. 5 லட்சம் நிதி

                                      
                                             
சசிபெருமாள் புதைக்கப்பட்ட இடத்தில் நினைவு மண்டபம் அமைப்பதற்கு

ரூ.5 லட்சம் நிதியை வைகோ, தொல்திருமாவளவன், குமரிஅனந்தன்,

தமீம் அன்சாரி, ராமகிருஷ்ணன் ஆகியோர் விவேக்கிடம் வழங்கினர். 

டாக்டர் அன்புமணி ராமதாஸ்

சசிபெருமாள் மகள் கவியரசியின் படிப்புச் செலவு முழுவதையும் பா.ம.க.

ஏற்கும் என்று அவர்களிடம் தெரிவித்தார்.

 பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று காலை மறைந்த சசிபெருமாளின் சொந்த ஊரான இ.மேட்டுக்காடு கிராமத்திற்கு வந்தார். பின்னர், அவர் சசிபெருமாள் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து சசிபெருமாளின் உருவப்படத்திற்கு அன்புமணி ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு அவரது மனைவி மகிளம், மகன்கள் விவேக், நவநீதன், மகள் கவியரசி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த போராடி உயிரிழந்த, சசிபெருமாளின் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக சென்னையில், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எழுதிய கடிதிய கடிதத்தை, அவர் வாசித்து காட்டினார்.


சசிபெருமாள் மகன் உண்ணாவிரதம்

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி, மறைந்த காந்தியவாதி சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் சனிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகேயுள்ள மேட்டுக்காட்டில் காந்தியவாதி சசிபெருமாள் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு முன்பாக அவரது மூத்த மகன் விவேக் சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
மாலையில், நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது சகோதரி கவியரசி பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.         

கீழே கிளிக் செய்க

                                                                              






-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்‘
Related Posts Plugin for WordPress, Blogger...