சனி, 5 செப்டம்பர், 2015

ஆசிரியர் தினத்தில் வாழ்த்து!
ஆசிரியருக்கு வாழ்த்து!
                                                                  

                                                                                                                 ஆசிரியர்                                     


                                                                                                                                   
ஆசு இரிதலால் ஆசிரியர் ஆகியே

மாசு மருவற்ற மாணக்கர் ஆக்கியதால்

பேசுகின்ற தெய்வமாய்ப் பேற்றினைப் பெற்றிட்டு

வீசுகின்றாய் கல்வியெனும் காற்று. 


‘சர்வபள்ளி’  இராதகிருஷ்ணன்!
இந்தியநாட்டின்-
இரண்டாவது குடியரசுத்தலைவர்...
இரண்டுமுறை குடியரசுத் துணைத்தலைவர்!
சுரண்டிய வெள்ளையனைத்  தன்  பேச்சால்                     
மிரண்டு போக  வைத்தவர்.

1888 செப்டம்பர் 5-                                                                    
சர்வபள்ளியில் பிறந்தவரின் பிறந்தநாளை
சகோதரராகப் பழகியவர்கள் 
கொண்டாட வேண்டிய பொழுது...
அன்றைய தினத்தை...
 ‘ஆசிரியர் தினமாகக் கொண்டாடுங்கள்’
1962 -இல் கேட்டுக் கொண்டதில் இருந்து
கொண்டாடப் பட்டு வருகிறது.

                                                                                                                             
ஆசிரியர் பால்-
அவரின் மதிப்பு  அளப்பரியது...
திருத்தணியில் ஆரம்பக்கல்வி-
திருப்பதியில் உயர்கல்வி-
வேலூர்... சென்னையில்...                                                      
இளங்கலை முதுகலைப்பட்டம்
தத்துவத்தில் பெற்ற தத்துவவாதி!


இந்தியாவின் ‘பிரசிடென்ட்’ ஆவதற்கு முன்பே
சென்னையில் பிரசிடென்சி கல்லூயில்
தத்துவத்துறை பேராசிரியரவர்...!
இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவருக்கு முன்பே
ஆந்திரா...   உத்திரப்பிரதேசப் பல்கலைக்கழகங்களில்  
துணை வேந்தரவர்!            1954 - இல் பாரத தேசம்-                                                             
‘பாரதரத்னா’ இராதகிருஷ்ணன் ஆக்கி...
பெருமைப்பட்டுப் பார்த்தது!1975  ஏப்ரல் 17-இல்-
87 ஆவது அகவையில்...
சென்னையில் கண்ணை மூடி நீடு துயிலானார்!                 -மாறாத அன்புடன்,                                                                                                                                                                                      

 மணவை ஜேம்ஸ்.
28 கருத்துகள்:

 1. ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் எனது உளங்கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் ஆசிரியர் தின வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. சிறப்பான நாளில் அருமையான பதிவு ஐயா...

  ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

   தங்களின் பாராட்டிற்கும் ஆசிரியர் தின வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்புள்ள கரந்தையாருக்கு,

   ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! தங்களின் ஆசிரியர் தின வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பொருத்தமான நாளில் சுருக்கமான, அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. எனது உளங்கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள புலவர் அய்யா,

   தங்களின் ஆசிரியர் தின வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. சிறப்பான பதிவு !!! உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புச் சகோதரி,

   ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! தங்களின் பாராட்டிற்கும் ஆசிரியர் தின வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் ஐயா!

  சிறப்பான பதிவு! மகிழ்ச்சி!
  வாழ்த்துக்கள் ஐயா!

  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,


   தங்களின் பாராட்டிற்கும் ஆசிரியர் தின வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. நல்லதொரு விடயங்களோடு பதிவு தந்த மணவையாருக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்
  தமிழ் மணம் நவரத்தினம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   தங்களின் பாராட்டிற்கும் ஆசிரியர் தின வாழ்த்திற்கும் நவரத்தின மாலையைத் தமிழ் மணத்தில் சூடியதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. என் உளங்கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,


   தங்களின் ஆசிரியர் தின வாழ்த்திற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 10. தங்களுக்கு வாழ்த்துக்கள்! அய்யா...இந்த ஆசிரியர் தினத்தில் ஏகலைவன் கட்டவிரலை காணிக்கையாக வாங்கிய ஆசிரியர்தான் என் நிணைவுக்கு வருகிறார்கள். அய்யா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் ஆசிரியர் தின வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   “நான் வேடுவன் என்பதினால் நீங்கள் கற்றுத் தரவில்லை. எனவே உங்களைப் போன்ற சிலையை செய்து நானே இவற்றினைக் கற்றுக் கொண்டேன்”.
   “உனது வலது கை கட்டை விரலை எனக்கு குரு தட்சினையாக தருவாயா?” என்று துரோணாச்சாரியார் கேட்க,

   ஏகலைவன் குரு தட்சணையாக கருதி, தன் மானசீக குருவான துரோணாச்சாரியாவிற்கு தன் கட்டை விரலை வெட்டி அளித்தார்.

   வேடவக் குலத்தில் பிறந்ததற்காக அப்பொழுதே கல்வி மறுக்கப்பட்டு இருக்கிறது. ஏகலைவனிடம் இருந்த தனுர் வேத நுணுக்கங்கள் மறைந்தன. வேடுவனுக்கு இக்கலை தேவையில்லை என்பதினாலேயே துரோணர் இவ்வாறு செய்தார் என்றாலும் குற்றமே செய்திருக்கிறார்.
   என்ன செய்வது அப்படிப்பட்ட துரோணாச்சாரியார் இருந்ததாலே ஏகலைவன் இன்றும் நிலைத்த புகழுடன் வாழ்கிறான்.

   நன்றி.   நீக்கு
 11. வணக்கம்,
  தங்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்,
  பகிர்வு அருமை, எனக்கும் ஏகலைவன் நினைவே வந்தது, யாரும் இதனைக் கேட்பார்களோ என நினைத்தேன்,,,,,,,,
  அருமை வாழ்த்துக்கள்,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,   ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! தங்களின் ஆசிரியர் தின வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   பேராசியரே...நீங்களும் கேட்டு விட்டீர்கள்!

   கானகத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுடன் துரோணர். தன் சிலையை வைத்துத் தனது ஆசிகளால் வில் வித்தை பயின்றேன் என்று சொன்ன ஏகலைவனைப் பார்க்கிறார் துரோணர்.
   அவர் மனது பேசுகிறது "ஏகலைவா, எனது சுயநலத்திற்காக நான் உன்னையும் பயன்படுத்தப் போவதில்லை. எனது ஆணவத்திற்காக, சபதத்திற்காக, பாசத்திற்காக நான் எனது சிஷ்யர்களைப் பயன்படுத்துகிறேன். ஸ்வதர்மை விட்டு விலகிச் செல்கிறேன். பெற்ற பாசத்திற்காக குருவம்சத்தினரை பலி கொடுக்கப் போகிறேன். என்ன ஒரு கேவலமான நிலை இது. ஆனாலும் நீ பரிசுத்தமானவன், உனக்கும் உன் குலத்துக்கும் பழிச்சொல்லும் இழிச்சொல்லும் வராமல் பார்த்துக் கொள்வது இந்த சிஷ்யனுக்கு இந்த குருவின் தஷிணை -- என் புகழை மேலும் உலகறியச் செய்ததற்கு. என் பெயருக்குக் களங்கம் வந்தாலும் பரவாயில்லை, தர்மம் சாயக் கூடாது. அதற்கு நீ காரணமாகக் கூடாது. சகலம் கிருஷ்ணார்ப்பணம்" "
   இப்போது துரோணரின் உதடுகள் பேசியது "ஏகலைவா, அப்படியானால், குரு தஷிணையாக உனது வலது கை கட்டைவிரலைக் கொடுப்பாயா?"

   நன்றி.


   நீக்கு
 12. ஆசிரியராக இருந்து நாட்டுக்கு பெருமை சேர்த்த முதலாமவர் ,இரண்டாவதாக ,அய்யா அப்துல் கலாம் நினைவுக்கு வருகிறார் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜீ,

   இரண்டு ஆசிரியர்களும் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர்கள். தமிழகத்தால் பெருமைப் பட்டவர்கள். இந்தியாவின் முதல் குடிமகன்களை இன்றைய தினத்தில் நினைவில் கொள்வோம்.
   நன்றி.

   நீக்கு
 13. இன்று நாளிதழில் படித்தேன் ஒருவர் President turned teacher மற்றொருவர் Teacher turned President. பொருத்தமான பதிவு பொருத்தமான நாளில். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. துரோணர் செய்தது குற்றமே. கல்வி என்பது எல்லோருக்கும் கற்பிக்கப்பட வேண்டும் அதில் பாகுபாடு கூடவே கூடாது....அப்படி இருந்தால் அதுமனிதத் தன்மையே அல்ல....நல்லதொரு பதிவு....தாமதத்திற்கு மன்னிக்கவும்...

  பதிலளிநீக்கு
 15. அன்புள்ள அய்யா,

  தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...