சனி, 17 அக்டோபர், 2015

சுட்டார்... சுட்டேன்... புதுகை வலைப்பதிவர் விழா!


நான்காம் ஆண்டு - புதுகையில் வலைப்பதிவர் திருவிழா-2015

திருமன விழாவாக...!


கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின்
மகன் வலைப்பதிவுச் செல்வனுக்கும்

வலைச்சித்தர் திண்டுக்கல் தனபால் அவர்களின் 
 மமகள் இணையச் செல்விக்கும்

11-10-2015 ஞாயிற்றுக் கிழமை
காலை 9,30 மணியளவில்  ஆரோக்கியமாதா மக்கள் மன்றத்தில்

அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர்
முனைவர் சொ.சுப்பையா தலைமையில்

கோவை முதன்மைக் கல்வி அலுவலர்
முனைவர் நா.அருள் முருகன்,

சென்னை தமிழ் இணையக்கல்விக் கழக உதவி இயக்குநர்
முனைவர் மா.தமிழ்ப்பரிதி &

விக்கி மீடியா திட்ட இயக்குநர்
அ.இரவிசங்கர் ஆகியோரின் முன்னிலையில்

‘திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச் செல்வம் ஆகமாட் டாயா? 
 தமிழ்ச் செல்வம் ஆகமாட் டாயா?‘

என்று கேட்ட பாவேந்தரின் பாடலான 
‘தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்’ 
இனிய பாடலுடன் தமிழிசைப் பாடல்களைப் பாடிய   
‘தமிழ்ச்செல்வி‘ சுபாஷினி 
மகா.சுந்தர் அவர்களின் மகள் மட்டுமல்ல,
 மனவிழாவிற்கு மகுடம் சூட்டிய
எங்கள் தங்கம்.

மனவிழா இனிதே நடைபெற்றது.

கரந்தையாரின் வித்தக விரல்களால்
ரூபனின் கவிதை
நூல்களால் நெய்த
பொன்னாடைகளைப் போர்த்திமகிழ
வந்திருந்தவர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

அதுசமயம்

எழுத்தாளர் முனைவர் எஸ்.ராமகிருஷ்ணன்

நல்வாழ்த்துகளுடன் கூடிய அறிவுரையும்

‘நீச்சல்காரரான’ ராஜாராமன்
எதிர்நீச்சல் போட்டு முன்னேற வழிகாட்டினார்.

தமிழ் இணையக்கல்விக் கழகம் ரூபாய் 50,000/-மொய்யாக
மெய்யாகக் கொடுத்து வாழ்த்த

வந்திருந்த சொந்தங்கள் அனைத்தும் மனமுவந்து கொடுக்க
ரூபாய் ஒன்றரை இலட்சம் தொட்டது மிகுந்த மகிழ்ச்சி!

வந்த உறவுகளைப்  புதுகை கணினித் தமிழ்ச்சங்கத்தார்
விருந்தளித்து உபசரித்தது விழாவின் உச்சம்!  வயிறும் மனமும் குளிர்ந்தது!

அய்யா கஸ்தூரியின் தலைமையில் இந்த நிகழ்வனைத்தும் நேரலையில் பன்னாடும் கண்டு களித்து வாழ்த்தி மகிழ்ந்தது.  

விழாவிற்கு வந்தவர்களை வெறுங்கையோடு அனுப்பக்கூடாதென்று
‘உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு’ 

இலவசமாகத்  தாம்பூலப் பையில் வைத்துக் கையோடு கொடுத்து அனுப்பினர்.

புதுகை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய 
வரலாற்றுச் சாதனை!

வாழ்த்துகள்!  பாராட்டுகள்!

இணையம் இணைத்த கைகள்!


நீ சிரித்தால் தீபாவளி!அரங்கேறிய தொண்டைமான்கள்


வரவேற்பே அசத்தல்!  என்னம்மா இப்புடி பண்ணீறீங்களேம்மா!புதுகை சின்னக்குயில் ‘தமிழ்ச்செல்வி‘ சுபாஷினி மணவையின்  மனத்தை  முனைவர்கள் பார்த்து  மனவிழாவில் மகிழ்தல்!வரிசைகட்டும் வலைத்தள முகங்கள்இந்தப்படை போதுமா?


அன்பும் அறனும்  -  மலருடன் மது!“அறிவு மழை பொழியும் எழில் வழியும்-இருள் கழியும் தெளிவுமிகு உரைகள் பல ஒளிரும் திறன் மிளிரும்-கடலின் மடை அலையின் ஒலி-மலையின் முடி, தழுவும் முகில் வழியும்!  அறிவு மழை பொழியும்” தந்தை பெரியார் பற்றி அன்று  கலைஞர் சொன்னது இன்று முனைவர் எஸ்.ரா.வுக்கும் பொருந்தும்.மாபெரும் சபையினில் நீ நடந்தால் மாலைகள் விழவேண்டும்!முனைப்போடு செயலாற்றும் முனைவர் திருமிகு. அருள்முருகன் &
முனைவர் திருமிகு. மதிவாணன் அய்யா அவர்களுடன்  மணவை!


திருமன விழாவில் அன்பளிப்பு - கவிதை ஓவியம்...!

‘நீ என்ன பெரிய ஓவியமாக்கும்?’ - யாரும் கேட்க முடியாதில்ல...!


உலகத்திற்கே வழி காட்டும் கைகாட்டி!


-மாறாத அன்புடன்,

 மணவை  ஜேம்ஸ்.

39 கருத்துகள்:

 1. உங்களை சந்தித்து உரையாட முடிந்ததில் மகிழ்ச்சி அய்யா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜீ,

   தமிழ்மணம் உச்சத்தில் இருக்கும் தங்களிடம் மனதோடு உறவாடி உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி. முதலில் வந்ததற்கும் வாக்கிற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

   நீக்கு
 2. ஆசிரியருக்கு நன்றி! அப்படியே சுட்டவர்கள் பெயரையும் போட்டு தள்ளி இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   வணக்கம். என்னை மட்டும் புகைப்படத்தால் சுட்டவர் தாங்கள்தான். மற்ற யாரும் என்னைச் சுட்டதாக எனக்குத் தெரியவில்லை. வேறு உறவுகளைச் சுட்டு இருக்கலாம். தாங்கள் சுட்டதைத்தான் நான் சுட்டேன்.

   நன்றி.

   நீக்கு
 3. ஆஹா விழா இப்படி மாறிடுச்சா..சூப்பர்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   நிதிப்பொறுப்பாளர் அவர்களே! பம்பரமாய் சுழன்று பணியாற்றிக் கொண்டு இருந்தீர்கள். அதனால் விழா அப்பவே இப்படி மாறியதைத் தாங்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை. தங்களின் வாழ்ததிற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 4. படங்கள் அருமை ஐயா முத்து நிலவன் ஐயா பாயும் பாயும் புலிபோல் தோற்றமளிக்கிறார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   முத்து நிலவன் அய்யா பாயும் புலிபோல ‘ரஜினி’ மாதரியா... இல்ல ‘புலி‘ விஜய் மாதரியான்னு... அத சொல்லலையே!
   தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. நீங்கள் மேற்கூறிய இருபுலிகளும் அரிதாரம் பூசிய புலிகள் ஐயா முத்துநிலவன் அவர்களோ செயல்புலி "இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் " இந்த குறள்அவருக்கும் அவர் சார்ந்த விழா குழுவினருக்கும் பொருந்தும்

   நீக்கு
 5. அடடே புதுமையான பதிவுதான் மணவையாரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   புதுகைன்னா புதுமை இல்லாமலா...? புதுக்கோட்டையில் அத்தனையும் முத்துக்கள்...!
   ‘முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும் பொன்மகள் வந்தாள்
   பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக கண்மலர் கொஞ்சம்
   கனிவோடு என்னை ஆளாக்கினால் அன்பிலே...’
   தங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. அய்யா நல்ல கற்பனை கலந்த நாடகாசிரியர் என்பதை நிறுவிவிட்டீர்கள். ரசி்த்தோம் அய்யா.
  கல்யாணம்னா சம்பந்தி சண்டை ஏதும் கிடையாதுல்ல..? நம் சில நண்பர்கள்தான் கல்யாணத்திற்கு வராமலே மொய் எழுதிவிட்டார்கள்.. உங்கள் விஜூதான்.. சரி அவரவர் சூழல்.தங்களின் இனிய வருகைக்கும் ரசனையான பதிவிற்கும் நன்றியும் வணக்கமும் அய்யா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   வணக்கம். தங்களின் அன்பு வெண்கொற்றக் குடையில் அத்தனை புதுக்கோட்டை வலைப்பதிவு தொண்டைமான்களும் கணினிப் படைவீரர்களாய்ப் பணியாற்றியது கண்டு மிகுந்த மகிழ்ச்சி. தங்களின் அனுபவம் ‘இதுவரை எங்குமே இதுபோல் விழா நடந்தது இல்லை’ என்பதை மெய்ப்பித்துக் காட்டியது என்றால் அது மிகையில்லை. இனிமேல் இதுபோல் நடக்குமா? நடத்த முடியுமா? என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. இதற்கெல்லாம் மூல முதற்காரணம் ‘வெட்டி வா என்றால் கட்டிவரக்கூடியவர்கள்’ புதுகை - சகோதர சகோதரிகள்... தாங்கள் கொடுத்து வைத்தவர்!

   தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. மிக மிக வித்தியசமாக
  மிக மிக அருமையாக
  பதிவர் சந்திப்புக் குறித்துப்
  பதிவிட்டிருப்பது மகிழ்வளிக்கிறது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் அன்பான பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. ஆகா
  அற்புதம் ஐயா
  தங்களால் மட்டுமே இது போல் எழுத இயலும்
  அருமை அருமை
  தம+1

  பதிலளிநீக்கு
 9. அன்புள்ள கரந்தையாருக்கு,

  தங்களின் இதயப்பூர்வமான பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வித்தியாசமான பாணியில்.... அருமை ஐயா... ரசித்தேன்...

  நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

   சம்மந்தி இரண்டு பேரிடமிருந்து நல்ல செய்தி வந்திருச்சு... இனி சமபந்திதான்...! தாங்கள் ரசித்துப் படித்ததற்கும் வாக்கிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. உங்களை சந்தித்து உரையாட முடிந்ததில் மகிழ்ச்சி !ஊமைக் கனவுகள் நண்பர் வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள பெரும்புலவர் அய்யா,

   தங்களைச் சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நன்றி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. உங்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. புகைப்படக் காமிரா என் மகனிடமிருந்தது. உங்களைப் படம் எடுக்கவில்லை. நண்பர் ஜோசப் விஜுவைத் திருச்சியில் சந்தித்தேன் என் தளத்துக்கு வாருங்களேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   மூத்த பதிவரான தங்களைப் புதுகையில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி. தங்களை, பெரும்புலவர் அய்யா அவர்களை எல்லாம் பார்க்கின்ற பொழுது உள்ளத்தில் உற்சாகம் பிறக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. அவசியம் தங்கள் தளத்திற்கு வருகிறேன்.

   நன்றி.

   நீக்கு
 14. அட! மிக அருமையான கற்பனை நண்பரே! அழகான மனப்பந்தல் புகைப்படங்கள்! நம் புகைப்படங்கள்! நட்புறவுகளின் புகைப்படங்கள் என அசத்திவிட்டீர்கள்! மிக்க நன்றி நண்பரே. தங்களைச் சந்தித்து அளவாளாவியது மிகவும் மகிழ்வுக்குரியது. அடுத்த நமது சந்திர்ப்பிற்கு ஆவலுடன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களையும் சகோதரி கீதா அவர்களையும் புதுகையில் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் நெஞசார்ந்த நன்றி.

   நீக்கு
 15. வித்தியாசமான முறையில் விழாவை விமர்சித்த தங்களுக்கு நன்றிகள் அய்யா! விழாவில தங்களை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி!
  த ம 11

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

   நீக்கு
 16. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

  "கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" வரிசையில் எனது பதிவையும் சேர்த்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி.

  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.

  பதிலளிநீக்கு
 17. புதுகையில் கண்ட புதுமை என்றே சொல்லலாம் போலிருக்கின்றது ஐயா!

  திருமன விழா அழைப்பிதழ் என்று வித்தியாசமான கோணத்தில்
  தங்கள் பதிவு மிகச் சிறப்பு! படங்களும் துல்லியமாக இருக்கின்றன!

  நல்ல பதிவும் பகிர்வும் ஐயா! நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் இதயப்பூர்வமான பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 18. அருமையான பதிவு சகோ. உங்களை எல்லாம் சந்திக்க முடியாததில் மாபெரும் வருத்தம்தான். எதிர்பாராமல் 4 தினங்களுக்கு முன்னர் சென்னை செல்ல வேண்டியதாகிவிட்டது. ஹ்ம்ம் அடுத்த வருடம் கலந்து கொள்ளக் கொடுப்பினை இருந்தால் பார்ப்போம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் கருத்திற்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 19. இளமையாகவும் புதுமையாகவும் அமைந்துள்ள பதிவு. தங்கள் கற்பனையோட்டம் அழகாக இருக்கிறது. - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 20. புதுவை விழா செய்தியை, கவிவழியே இப்புவி முழுதும் சொல்லிவிட்டீர்களே!!! அருமை ஐயா!

  பதிலளிநீக்கு
 21. ரொம்ம்பத் தாமதமா வந்துட்டேனே :-)
  அடுத்த பதிவிற்கு ஓடுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...