ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

கால்களை இழந்து தவிக்க வைத்த விபத்து!

     எங்கோ ஏற்பட்ட கவனக்குறைவு !


தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ

உங்கள் அங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ

கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா


இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா
கவிஞர் மருதகாசியின் இந்தப்பாடல் கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.

          

நாம் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொள்கிறோம்.  எதையுமே
 முதன்மையாகக் கருதுவதில்லை. எதையாவது இழந்த பிறகுதான் அதன்
 அருமையை உணர்கிறோம். 

அன்றாடம் விபத்துகள் பற்றிய செய்திகள் வராமல் இருப்பதில்லை. வாகனங்கள் மற்றும் மக்கள்தொகை பெருக்கமும் முக்கியக் காரணம் என்றாலும்கூட; அதற்கேற்பச் சாலைகள் இல்லாதததும், சாலை விதிமுறைகளைக் கடைபிடிக்காதததும்தான் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் முக்கியக் காரணம். 

------------------------------------------------------------------------

வேளாண் கல்லூரி மாணவியின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட விபத்து: கால்களை இழந்து தவிக்கும் பரிதாபம்

                                                       பட்டம் வாங்கிய கையோடு தனது ஏழைப் பெற்றோரின் கண்ணில் காட்டுவதற்காக மகிழ்ச்சியுடன் சென்ற வேளாண் கல்லூரி மாணவியின் வாழ்க்கையை விபத்து ஒன்று புரட்டிப் போட்டுவிட்டது.
             
                          

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பனங்காட்டூரைச் சேர்ந்தவர் எம்.வேடி, கூலித் தொழிலாளி. மனைவி சித்ரா. இவரது மூத்த மகள் வி.ரம்யா (21). தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் திருச்சியில் செயல்பட்டு வரும் அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியில் பி.எஸ்சி. வேளாண்மை பட்டப் படிப்பைத் தற்போது நிறைவு செய்துள்ளார்.


                                            
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், கடந்த 17-ம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் பட்டப்படிப்புக்கான பட்டத்தைப் பெற்றுக்கொண்டு பேருந்து மூலமாக ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

                                      
 சேலம் - தருமபுரி இடையே தீவட்டிப்பட்டியில் அவர் சென்ற தனியார் பேருந்து, நின்றுகொண்டிருந்த லாரி ஒன்றின் மீது மோதியது.
இந்த விபத்தில் இரு கால்களையும் இழந்துள்ளார் ரம்யா.


இரு கால்களையும் இழந்து சிகிச்சை பெற்று வரும் ரம்யா. படம்: ம.சரவணன்

இரு கால்களையும் இழந்து சிகிச்சை பெற்று வரும் ரம்யா. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத் 
துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைச் சுற்றி, உடன் படித்த மாணவிகளும், பெற்றோரும் சோகமே உருவாக நின்றிருந்தனர்.


"பிளஸ் 2 தேர்வில் 1,117 மதிப்பெண் எடுத்தாள். இதைய டுத்து அரசு வேளாண் கல்லூரி யிலேயே படிப்பதற்கு இடம் கிடைத்து. பட்டப்படிப்பு சான்றிதழ் வாங்குவதற்கு எங்களைக் கூப் பிட்டாள். எங்களால் வேலையை விட்டுவிட்டுப் போக முடியவில்லை. பட்டம் வாங்கிட்டேன், சேலம் வந்துட்டேன்பா, தருமபுரி தாண்டியதும் கூப்பிடுகிறேன்” என்றாள்.


ஆனால், நீண்ட நேரம் ஆகியும் போன் வரவில்லை. அதன்பின்னர், செல்போனுக்குத் தொடர்பு கொண்ட போது எடுக்கவில்லை. இதனி டையே, இரவு 2.30 மணிக்கு போன் வந்தது. சேலம் அரசு மருத்துவ மனையில் விபத்துச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

அங்கு சென்று பார்த்தோம். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காகக் கோவைக்கு அழைத்து வந்தோம். இருப்பினும், அவரது இரு கால்களையும் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவித்துவிட்டனர். “நாங்கள் சாதாரணக் குடும்பம்தான். அவளது மருத்துவச் சிகிச்சைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார் ரம்யாவின் தந்தை வேடி.

அப்போது உடன் படித்த மாணவி வினோதினி கூறும்போது, 

‘விபத்து நடந்தவுடன் இரவு 9.30 மணியளவில் சேலம் அரசு மருத்துவமனைக்கு ரம்யாவை கொண்டு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட அவரது கால்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளித்து இருந்தால் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், ஏதோ கவனக் குறைவாக இருந்துள்ளனர். அடுத்த நாளே இங்கு கொண்டு வந்தோம்.

கால்களில் ரத்த ஓட்டம் தடை பட்டுவிட்டதால் இரு கால்களையும் அறுவைச் சிகிச்சை மூலமாக அகற்றியாக வேண்டும் எனத் தெரிவித்து விட்டனர். இதையடுத்து, அன்றைய தினமே அவரது கால்கள் இரண்டும் முட்டிக்கு மேல் வரை அகற்றப்பட்டுவிட்டன. பட்டப்படிப்பு முடித்தவுடன் பால் நிறுவனம் வைத்து முதலீட்டாளர் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தாள். ஆனால், நிலைமை இப்படி ஆகியுள்ளது’ என்றார்.

இதுகுறித்துக் கங்கா மருத்துவமனையின் இயக்குநரும், முதன்மை மருத்துவருமான எஸ்.ராஜசபாபதி கூறும்போது, 

‘விபத்தினால் முட்டிக்குப் பின் பகுதியில் அவரது 2 கால்களின் ரத்தக் குழாய்களிலும் சிதைவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக அதிகபட்சம் 5 மணி நேரத்துக்குள் கொண்டு வந்தால் ‘மைக்ரோ சர்ஜரி’ செய்து காலை காப்பாற்றிவிட முடியும். ஆனால், மருத்துவச் சிகிச்சைக்கான நமது போக்குவரத்தில் குறைபாடு இருக்கிறது. வெளிநாடுகளில் கடைபிடிக்கப்படுவது போல் மிகத் தீவிரமான நிலைக்கு ‘ஏரோ டிரான்ஸ்போர்ட்’ தேவை. இரண்டாவதாக, பாதிப்பின் தீவிரம் உடனடியாகக் கண்டறிவது அவசியம்.

ரம்யாவைப் பொறுத்தவரை இன்னும் 8 வாரம் வரை தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டி வரும். அதன் பின்னர் அவருக்குச் செயற்கைக் கால் பொருத்தி பயிற்சி கொடுக்க உள்ளோம். அவரைக் கோவை மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் வந்து பார்த்துச் சென்றனர். முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளித்து வருகிறோம்’ என்றார்.

நவீன மருத்துவத் தொழில்நுட்பம் இருந்தபோதிலும் எங்கோ ஏற்பட்ட கவனக்குறைவால் மாணவிக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக ஏழை மாணவியின் பெற்றோருக்கு உதவி செய்ய விரும்புவோர் 99651 78222 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவலாம்.

நன்றி:தி இந்து 27.8.2015

-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

23 கருத்துகள்:

 1. இதுபோன்ற நிகழ்வுகளில் கவனமாக இருப்பது அவசியம். படிக்கும்போது வேதனையாக இருந்தது. அவருடைய மனதிற்கு இறைவன் தைரியம் கொடுக்க பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   இந்த நிகழ்வில் மாணவின் தவறு எதையும் சொல்ல முடியாது. பேருந்து ஓட்டுநர் கவனக்குறைவு, லாரியை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்லுதல் போன்ற காரணங்களைச் சொல்லலாம். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனையில் விபத்துச் சிகிச்சைப் பிரிவில் சேர்த்து பிறகு மருத்துவர்கள் அரசாங்க மருத்துவனையில் காட்டிய அலட்சியமாக இருக்கலாம்... அல்லது அவர்களிடம் போதிய வசதியில்லாமல் இருந்திருக்கலாம்... எங்கோ ஏற்பட்ட கவனக்குறைவால் இரு கால்களை இழந்து தவிக்க வைத்த விட்டது இந்த விபத்து! அவரின் எதிர்காலம்...?

   தாங்கள் முதலாவதாக வந்து கருத்திட்டதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. தாங்கள் சொல்வது போல எங்கோ நடந்த கவனக்குறைவு தான் இந்த விபத்திற்கு காரணம் என்றாலும் தக்க நேரத்தில் சிகிச்சை கிடைத்திருந்தால் அந்தப்பெண் கால்களை இழந்திருக்க வேண்டாம் என்பதை நினைக்கும் போது வேதனையாகத்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   உண்மைதான்...உரிய நேரத்தில் உயரிய சிகிச்சை கிடைத்திருந்தால் அந்தப்பெண் கால்களை இழந்திருக்க வேண்டிய நிலைமையைத் தவிர்த்திருக்கலாம்.
   இப்பொழுதாவது 108 இலவச சேவை ஆம்புலன்ஸ் வசதி இருக்கிறது. முன்பெல்லாம் விபத்து என்றால் அரசாங்க மருத்துவமனைக்கு மட்டும்தான் நோயாளியைக் கொண்டு செல்ல முடியும் என்ற நிலை இருந்தது... நல்ல வேளை இப்பொழுது அந்த நிலை இல்லை.
   வெளிநாடுகளில் கடைபிடிக்கப்படுவது போல் மிகத் தீவிரமான நிலைக்கு ‘ஏரோ டிரான்ஸ்போர்ட்’ தேவை. அந்த நிலை என்று வருமோ?

   தங்ககளின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வருத்தமளிக்கும் செய்தி...எல்லோருடைய கவனக்குறைவிற்கும் நாம் அவருடைய விலைமதிப்பிலாத கால்களை விலையாய் கொடுத்துவிட்டோம்... சங்கடம் அளிக்கும் செய்தி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   ஆமாம்...விலைமதிப்பிலாத கால்கள்தான்! தங்ககளின் கருத்திற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்ககளின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.


   நீக்கு
 5. வரும் விழாவில் வருகைப் பதிவு செய்து விட்டீர்களா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   நான்காவது வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் எனது வருகையைப் பதிவு செய்யவில்லை. சகோதரி திருவாளர். புதுகை மாலதி அவர்கள் உரிமையுடன் விழாவிற்கு குடும்பத்துடன் வரவேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார்.

   விபத்தின் காரணமாக ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன். உடல்நிலை இன்னும் சரியாகவில்லை. தாங்கள் விழாவிற்குச் செய்யும் வேலைகள் எல்லாம் வியப்பாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கும் மேல் காலஅவகாசம் இருப்பதால் என்னால் இயலுமானால் அவசியம் வர முயற்சி செய்கிறேன்.

   -மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   ஆமாம்... ! தங்ககளின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. வேதனையான நிகழ்வுகளே.... வரும் முன் காப்போம் உரத்த சிந்தனை...
  தமிழ் மணத்தில் நுழைக்க... 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   தங்ககளின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. சாலை விபத்தில்தான் எண்ணற்றவர்களின் இப்படி வேதனை தரும் நிகழ்வு நடக்கிறது . அதற்கு முழு முதற்க்காரணம் டாஸ்மாக் என்பது பகிங்கிர உண்மை அய்யா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   குடி குடியைக் கெடுக்கும். தங்ககளின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. சோகமான நிகழ்வு ,உங்கள் பதிவு மருத்துவ விழிப்புணர்வை தந்தது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜீ,

   தங்ககளின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்ககளின் கருத்திற்கு மிக்க நன்றி.

   நீக்கு
  2. அன்புள்ள அய்யா,

   தங்ககளின் கருத்திற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 11. ஒரு சிறு கவனக்குறைவு கூட பெரிய இழப்புகளை தந்துவிடுகிறது:(( சிந்திக்கவேண்டிய செய்தி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புச் சகோதரி,

   உண்மைதான். தங்ககளின் கருத்திற்கு மிக்க நன்றி.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...