சனி, 24 அக்டோபர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...!

நீங்க நினைக்காத நெஞ்சம்...!

     இந்தக் கதை  திருச்சி எஸ்.ஐ.டி. யில்  பாலிடெக்னிக்கல் (அப்பொழுது கல்லூரி என்று சொல்லுவது இல்லை) டிப்ளோமா மெக்கானிக்கல் இன்சினியரிங்...  நான்  படித்துக் கொண்டிருந்த பொழுது...  13-12-1983 அன்று... முப்பத்தொரு ஆண்டுகளுக்கு முன் எழுதியது.  அதன் நகல் (carbon paper) காணக் கிடைத்தது.  தங்களின் பார்வைக்காக...  

                                                
   ‘செல்வி சசிரேகாவின் பரதநாட்டியத்தை அடுத்து’  ஒலிபெருக்கியில் ஒலித்த வார்த்தை,  தனியார் அலுவலகத்திலிருந்து பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த ரோஸியின் கவனத்தை ஈர்த்தது. 
                                                    
   அன்னை  சத்யா கல்லூரி -  பொன்விழா தங்களை அன்புடன்    வரவேற்கிறது’ -என்ற வாசகம் ரோஸியையும் உள்ளே இழுத்தது.

   அந்த அரங்கம் வண்ண வண்ண மின்விளக்குகளால் வெளிச்சத்தில் குளித்துக் கொண்டிருந்தது;   உள்ளே நுழைந்த ரோஸியின் கண்கள் இருக்கையைத் தேடி, இரண்டாவது வரிசையில் இரண்டு இருக்கை காலியாக இருப்பதைப் பார்த்தது.  இது போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்தது இல்லை என்றாலும் மனதில் ஏற்பட்ட பயத்தை வெளியில் யாரால் பார்க்க முடியும் என்ற தைரியத்தில் அந்த இருக்கையில் அமர்ந்தாள்.

   தமிழிலக்கியம் இரண்டாம் ஆண்டு  பயிலும் தமிழினியன் ‘இன்றைய காதல்’ என்ற தலைப்பில் அவர் இயற்றிய கவிதை... அவரே உங்கள் முன்னால் இதோ என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஒலிபெருக்கியின் முன் குரலைச் சரி செய்து கொண்டு தமிழினியன் வாசிக்கத்  தொடங்க,  கூடியகூட்டம் தன் காதுகளைக் கொடுத்தது.

‘காதல்-
கல்லூரியில் மலிவு விலையாகி-
கடைச்சரக்காகிப் போனதோ?
காதல் போயின் சாதலா?
அது அந்தக் காலம்...!

வீதியில் சிவப்பு விளக்கு எரிகிறது...!
இருளில் இருந்து...
வெளிச்சத்தைத்  தேடி 
விதியே என்று...
விழுந்து அழியும் விட்டில்கள்!
சமூகம் இவர்களுக்கு வைத்த பெயர்
‘விபச்சாரி.’

பசியிங்கே...
பரிணாமம் பெற்றுப்
பண்டமாற்று முறையில்
பகிர்ந்து கொள்ளப்படுகிறது!
..............................................................

-இன்னும் கவிதையைச்  சில நிமிடங்களில் வாசித்து  முடித்தான்.  அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

   இருக்கையில் அமர வந்த தமிழினியன் தன் இருக்கையில் செல்வி சசிரேகா அமர்ந்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான்;  ஆனால்  செல்வி சசிரேகா அமர்ந்திருந்த இருக்கையில் வேறொரு பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்துப் பின் புறம் வந்து நின்று கொண்டான்.

   அதன் பிறகு எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்தாலும் ரோஸியின் நினைவு அந்தக் கவிதையில்தான் புதைந்து கிடந்தது.  விழா முடிந்ததால் வீட்டிற்கு அனைவரும்  திரும்பிக் கொண்டிருந்தனர்.



   தமிழினியன் வெளியில் போவதைப் பாத்த ரோஸி அவனருகில் சென்றாள்.
“எ  பேரு ரோஸி...சார்...உங்க  கவிதையைக்  கேட்டேன்... ரொம்ப நல்லா... அருமையா இருந்திச்சு...!”

“தேங்க் யு வெரி மச்...”  கையெடுத்துக் கும்பிட்டான்.

“ஒன்னு சொன்னா தப்பா நெனக்க மாட்டீங்கன்னா சொல்றேன்...!”

“ம்...ம்... சொல்லுங்க...”

“தப்பா நெனக்க மாட்டீங்கன்ன சொல்றேன்னு... சொன்னேன்... அதுக்கு நீங்க ஒன்னும் சொல்லலையே...!”

   தமிழினியன் ஏதோ யோசித்துக் கொண்டே, “ஒன்னும் நெனக்க மாட்டேன்...ம்...ம்...சொல்லுங்க...” -என்று ரோஸியின் முகத்தைப் பார்த்தான்.

“.......................................................................................”  ரோஸியும் சிறிது நேர மௌத்துக்குப் பின் பேசினாள்.

                                                                                                                                 வ(ள)ரும்....

-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.



45 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா! இந்த கதை எழுதிய சமயத்தில்கூட நான் பிறந்திருக்கமாட்டேன்! அருமை! அதிலும் கவிதை மிக மிக அருமை அடுத்து வருவதை ஆவலுடன்,,,,,,,,!!! நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி. ‘செல்‘ வைத்தே செல்லும் இடமெல்லாம் பார்த்துச் சிறப்பாகக் கருத்திடும் தங்களுக்கு வாழ்த்துகள்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

      தங்கள் தொடர்வதற்கும் வருகைக்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. ஐயா,வணக்கம்.தொடர்ந்து படிக்க ஆவலாய் இருக்கிறது

      நீக்கு
    3. அன்புள்ள அய்யா,

      வணக்கம். தாங்கள் வருகை தந்து கருத்திட்டதற்கு நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  3. சிறப்பாக இருக்கிறது! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இனிய நடை !தொடருங்கள் தொடர்வேன்! முடிவில் கருத்து சொல்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள பெரும்புலவர் அய்யா,

      தங்களின் பாராட்டுக்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. 'சிறுகதை'யென நினைத்துப் படித்தேன்...
    ஆனால், 'சிறு தொடர்கதை'யென்று தெரிகின்றது.

    எனினும் அருமையாய் இருக்கிறது. ஆனாலும்...
    இன்னும் சில பத்திகள் சேர்த்து பதிவிட்டிருக்கலாம்!

    தொடர்கிறேன் ஐயா, இறை நாட்டம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தாங்கள் சொல்வது உண்மையே! ‘சிறுகதை தான்... சற்று நீளமாக இருப்பதால் ஒரே தடவையில் படிக்க சற்று சிரமப்படுவார்கள் என்ற எண்ணத்தில்தான் தாங்கள் சொல்லியது போல ‘சிறு தொடர்கதை’யாக போடலாம் என்று பதிவிட்டேன்.
      தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஒரு நல்ல சிறுகதைக்குரிய இலக்கணத்தோடு இக்கதையின் எடுப்பு வாசிப்பாளனை தன்பால் ஈர்த்துள்ளது. இதுபோலவே தொடுப்பும் முடுக்கமும் முடிப்பும் இருக்கும் என நம்புகிறேன். மாணவப்பருவத்திற்குரிய கதைக் கருவாகக் காதலைத் தொட்டிருக்கிறீர்கள்... வளரட்டும் காதல்கதை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. aya naan prantha varudathil elutheyathai tharpodhu veli itatheil magelche. vitheyasamana karpanai kadhai, padagal kavithai arumai. athanudan tamiliniyan irukaiyai theduvathu arumai. vaalthukal aya:

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அருமை மணவையாரே தொடர்கிறேன்
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தங்களின் பாராட்டிற்கும் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. க(வி)தையைப் போலவே இரண்டாவது படமும் சூப்பர் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      ஆமாம்... கதையில் வரும் ரோஸி கவிதையைப் போல் அழகனாவள். தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. சிந்திக்க வைக்கும் பதிவு
    தொடருங்கள்
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.



      நீக்கு
  12. கடந்த கால நினைவுகளை நினைத்துப் பார்க்கும்போது கிடைக்கும் சுகம் அலாதியானது. பகிரும் போது அவை இன்னும் அதிகமாகவே இருக்கும். எங்களுக்கு இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  13. அருமை ஐயா அருமை
    தொடருங்கள் காத்திருக்கிறேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள கரந்தையாருக்கு,

      தங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. வணக்கம்...உங்கள் பக்கங்கள்.....
    பதிவுகள்...யாவும்.....அட்டகாசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. நல்ல பகிர்வு மிகவும் ரசித்துப்படித்தேன். கவிதையும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  16. அன்புள்ள சகோதரி,

    தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  17. சுவாரஸ்யமான துவக்கம்
    தொடர்கிறேன்
    வாழ்த்துக்களுடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  18. ஆஹா சிறு கதை ஆரம்பமே அசத்தல் கவிதையும் அருமை ! தொடர்கிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் பாராட்டிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. கதையும் கவிதையுமாக என்னைக் கட்டிப்போடுகிறது ஐயா!

    மிக அருமை! காட்சிப்படுத்தும் கதை நடை அற்புதம்!
    தொடர்கிறேன் ஐயா!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  20. ஆர்வத்துடன் வாசித்தேன் அண்ணா , நன்றாக இருக்கிறது .. அடுத்தப் பகுதி எப்போ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி. இதோ அடுத்த பகுதி!

      நீக்கு
  21. அட! அருமையான காதல் க்தை...இப்போதுதான் முதல் பகுதி வாசித்தோம். அடுத்த பகுதிக்குச் செல்கின்றோம். நல்ல ஆரம்பம்...

    அந்தப் படம் மிக அழகாக இருக்கின்றதே நண்பரே!

    தொடர்கின்றோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  22. சகோதரரே, கவிதையோடு கதையும் அருமை நேரம் ஒதுக்கி தொடர்ச்சிகளையும் வாசிக்கவருவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் தொடரை வாசிக்க நேரம் ஒதுக்குவதற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  23. சகோ,கில்லர்ஜியின் கடவுளைக்கண்டேன்பதிவில் தோழிகீதாதொடுக்கப்பட்டார் தொடர்ந்து நானும்
    தொடுக்கப்பட்டேன் நான்தங்களின்10ஆசைகளை கடவுளிடம்கேட்க அழைத்துள்ளேன்(எனதுவலைப்பக்கம்)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...