வியாழன், 15 அக்டோபர், 2015

காலமிது காலமிது... மதவாதிகளின் காலம்... கலாம்! 2020 கனவு மெய்ப்படும்!இந்தியா-
இரண்டாயிரத்து இருபதில்...                 
வல்லரசாகி  வலிமை பெறக்
கனவு கண்ட நாயகனே!

இரண்டு கோடிக்கு மேல்
இளைஞர்களைச்  சந்தித்து
உரையாடி...உறவாடி...
நம்பிக்கை  விதைகளை
விதைத்திட்ட வித்தகரே!

இந்திய மனங்களையெல்லாம்
கொள்ளை கொண்ட
கொள்ளைக்கரான் - நீ
கொள்கைக்காரன்!

உன் மகுடிக்குத்தான்
மாணவத் தலைகளெல்லாம் 
மயங்கித் தலைகள் ஆட்டினவே!
ஆமாம்... எதை வாசித்து
உன்னை நேசிக்க வைத்தாய்...?!

கலாமே!
நதிகளை இணைக்கச் சொன்னாயே...
நாதி இல்லை...!
நீர் வழிச்சாலையை
நீர் சிந்தித்தீர்...! 
ராமர் பாலம் 
நீருக்குள் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு- 
தேசியச் சின்னமாக
அறிவிக்கக் கோரும்  மனிதச் சாமிகள்
நீதி மன்றத்தில் மனுசெய்யும்
மதவாதிகளின் காலமிது!


சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்
சேதமுற்றுக் கிடக்கிறது...!
எந்த அணில்களும் உதவவில்லை...
‘சாண்  ஏற முழம் வழுக்குகிறது
இருந்தாலும்- 
இந்திய இளைஞர்கள் விடுவதாய் இல்லை...!

நீ செல்லும் பாதையில் 
தடைகள் ஏதும் இல்லை என்றால்-அது
நீ  செல்லும் பாதை அல்ல...
யாரோ ஒருவர் சென்ற பாதைஎன்று
நீ தானே சொன்னாய்...!
தடைகள் உண்டென்றால்
தடைகளைத் தகர்க்கத்
தடந்தோள் உண்டென்று
இளைஞர் பட்டாளம் புறப்பட்டு விட்டது...!   

மாற்றுத் திறனாளர்களின் வாழ்வில்-
மாற்றம் கொண்டு வர
மூன்று கிலோவுள்ள ‘காலிபரை’
முன்னூறு கிராமாக ஆக்கியதே...
தான் செய்த மகத்தான சாதனையென 
மெச்சி மகிழ்ந்தாய்!

                                                         
தாய்மொழித் தமிழில்  படித்தே - இந்தியத்
தாய்நாட்டின் - குடியரசுத்
தலைவனானாய்...!
மாணவரின் நாடி பிடித்தே-
மாணவரிடம் பேசிப் பேசியே... 
மாணவரிடம் பேசியபடியே - உன்
நாடித்துடிப்பை நிறுத்திக் கொண்டாய்...!

இந்தியரின் இதயங்கள்-
அணுகுண்டாய் 
வெடித்துச் சிதற விட்டு...
அக்னிப் பறவையாய்ப்  பறந்து விட்டாய்...!

ஏழையாய்ப்  பிறந்து-
எளிமையாய் இருந்து...
அறிவியல் அறிஞனாய்த் திகழ்ந்து...
மனித நேயமிக்க மனிதாய் வாழ்ந்து...
மனித இதயங்களையெல்லாம்
அன்பாலே வாங்கி 
செல்வந்தராகிப் போன சீமானே...!

இளைஞரின் எழுச்சி நாயகனே...
உனது பிறந்த நாளை-
இளைஞரின் எழுச்சி நாளாக்கி
விழித்துக் கொண்டு கொண்டாடுகிறோம்...!
உனது 2020 கனவு மெய்ப்படும் நாள்
தூரத்தில் இல்லை...!(  மறைந்த அப்துல் கலாம் அவர்களின் 84-ஆவது பிறந்த நாள் இன்று - இராமேஸ்வரத்தில் அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது)
-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.

16 கருத்துகள்:

 1. பிறந்த நாள் சிறப்புக் கவிதை
  மிகச் சிறப்பு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. அவர் பிறந்த பயனை அடைந்து விட்டார் ஐயா . அவர் சிறப்புகளைக் கவிதைபாடி அசத்தி விட்டீர்கள் அருமை ஐயா! நன்றி வாழ்த்துக்கள் சகோ !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. கலாமுக்கு நல்லதோர் கவிதாஞ்சலி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜீ,

   தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அருமை மணவையாரே அழகான புகழாஞ்சலி வாழ்த்துகள் உமக்கு....
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. அவர் நினைவினைப் போற்றிய பாடல் அருமை,
  வாழ்த்துக்கள் ஐயா,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. ஐயா வணக்கம்.

  உரியவர்க்கு உரிய நாளில் உரிய கவிதை.

  மிகவும் அருமை.

  தொடர்கிறேன்.


  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. அருமை அருமை மணவையாரே! அருமையான கவிதைக்கு! வாழ்த்துகள் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. மாமனிதரை நினைவுகூர்ந்த விதம் நன்று. கவிதை அருமை.
  அந்த அறத்தின் உக்கிரத்தில் வரலாற்றில் முதலில் பொசுங்கப்போகிறவர்கள் அப்படிக் கேலி பேசும், மவுனமாக இருக்கும் எழுத்தாளர்களேதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...