வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

பிழையின்றித் தமிழில் எழுதலாம்! -3


பிழையின்றித் தமிழில் எழுதலாம்! - 3பிழையான சொல் ‘சிவப்பு வண்ணத்திலும்...

     பிழை திருத்தம் ‘பச்சை வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.1.  எனக்குப் பல நண்பர்கள் இருக்கிறார்கள்.     ‘பலஎன்பது அஃறிணைப் பன்மை.  பலர் என்பதே உயர்திணைப் பன்மை.

எனக்கு நண்பர்கள் பலர் இருக்கிறார்கள்.


 2.  எங்கள் பள்ளி மாரியம்மன் கோயிலுக்கு அருகாமையில் உள்ளது.     அருகு மை – எனப் பிரித்தால் அருகில் இல்லாமை என எதிர்மறைப் பொருள் தரும்.

எங்கள் பள்ளி மாரியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ளது.

3.  பறவைகள் வானில் பறக்கிறது.     பறவைகள் – அஃறிணைப் பன்மை.  பறக்கின்றன  என்று அஃறிணைப் பன்மை வினையில்தான் முடிய வேண்டும்.

பறவைகள் வானில் பறக்கின்றன.

4.  நாளைக்குப் பள்ளிகள் இயங்காது.இயங்காது – அஃறிணை ஒருமை வினை முடிவு.  பள்ளிகள் – அஃறிணைப் பன்மை.  எனவே வினை முடிவும் பன்மையிலேயே இருக்க வேண்டும்.

நாளைக்குப் பள்ளிகள் இயங்கா.

5.  சின்னத்திரையில் நாடகம் பார்த்தேன்.


                                                                           
     சிறிய பெரிய என்னும் சொற்களுடன் பிற சொல் இணையும்போது வல்லினம் மிகாது.  சிறியதிரை, பெரியதிரை -  சிறிய என்பதன் திரிபு சின்ன என்பது.  எனவே சின்னதிரை என்பதே சரியானது.

சின்னதிரையில் நாடகம் பார்த்தேன்.

6.  நிதியமைச்சர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் .     மாண்புமிகு என்னும் அடைமொழி ஒருவர் வகிக்கும் மேலான பதவி கருதி பதவிப் பெயரோடு ஒட்டி வருவதாகும்.  பதவி போனால் அடைமொழியும் போய்விடும். 

மாண்புமிகு நிதியமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம்.

7.  இன்று மாலை சரியாக ஏழு மணியளவில் விழா நடைபெறும்.     சரியாக என்று சொல்லியபின் ‘அளவில்என்று சொல்வதன் பொருள் சரியில்லை.

     சரியாக ஏழு மணிக்கு விழா நடைபெறும்.

8.  பஞ்ச பாண்டவர்களில் பீமனே உடல் வலிமை வாய்ந்தவன்.     பாண்டவர்களுள் ஒருவனைப் பிரித்துக் காட்டுவதற்கு ‘உள் விகுதியைப் பயன்படுத்த வேண்டும்.

பஞ்ச பாண்டவர்களுள் பீமனே உடல் வலிமை வாய்ந்தவன்.

9.  பத்து நாடுகளுக்கு மேல் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டன.


     நாடுகள் என்ற எழுவாயை முதலில் இட்டு எண்ணிக்கையை அடுத்ததாகக் குறிப்பிட வேண்டும். 

நாடுகள் பத்திற்கு மேல் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டன.

10.  முகர்ந்து பார்க்கலாமா?     ‘முகர்ந்து என்று தமிழில் இல்லை.  நுகர்ந்து – நுகர்ச்சி – அனுபவம் அனுபவித்து என்ற பொருள் வருவதால்

நுகர்ந்து பார்க்கலாமா?

                                                (தொடரும்...

நன்றி: தமிழாசிரியர் முழக்கம்.

 -மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.    
    
    
    24 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   முதலில் வந்து தமிழ்மணம் வாக்களித்ததற்கு நன்றி.

   நீக்கு
 2. உங்கள் பதிவை நுகர்ந்து பார்த்தேன் ,தமிழ் மணம் கமழ்கிறது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜீ,

   மிக்க நன்றி... தமிழ் மணம் கமழ வாக்களித்ததற்கு.

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்கள் வாக்கிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. படிப்பதற்கு சுலபமாக இருக்கின்றது மணவையாரே தொடர்கிறேன்

  கவனிக்கவும் - பன்னீர்செல்லவம் - என்று இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   தாங்கள் தொடர்வதற்கு மிக்க நன்றி. பிழையைத் திருத்தி விட்டேன்.

   நீக்கு
 5. எழுதும் போது எவ்வளவு தவறுகள் செய்கின்றோம் என்பது தெரிகின்றது...அப்படி என்றால் எழுத்தாளர்கள் எழுதுவது எல்லாம் சரியல்ல இல்லையா நண்பரே! ஊடாகங்கள் உட்பட....

  திருத்திக் கொள்ள வேண்டும். எளிமையாகப் புரிகின்றது

  பதிலளிநீக்கு
 6. அன்புள்ள அய்யா,

  தாங்கள் சொல்வது உண்மைதான். தவறு செய்பவன்தானே மனிதன்... தவறுகளைத் திருத்துவதற்குச் சிறு முயற்சி. வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 7. பதில்கள்
  1. அன்புள்ள கரந்தையாருக்கு,

   தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. வணக்கம் திரு மணவை ஜேம்ஸ் அவர்களே, தமிழிற்க்காக ஒரு பதிவு, தங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி! சுரேந்திரன், குண்டூர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   வணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மேலான கருத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தாங்கள் தொடர்வதற்கும் தமிழ்மணம் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. நாடுகள் பத்திற்கு மேல் என்பது சற்றே சிரமம்தான். இருந்தாலும் பயன்படுத்திப் பார்ப்பேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள முனைவர் அய்யா,

   தாங்கள் சொல்வது உண்மையே! தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 11. அருமையான சேவை அய்யா
  தொடரட்டும்
  உடல் நலம் பேணுக
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   வணக்கம். தாங்கள் தொடர்வதற்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. ஒவ்வொரு தவறையும் சுட்டிக் காட்டியது அருமை! இதை படிக்கும் போதுதான் எவ்வளவு தவறாக நாம் எழுதிக் கொண்டிருக்கிறோம் என்பது புரிகிறது. பகிருக்கு மிக்க நன்றி அய்யா!
  த ம வரவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. ஆகா! தவறுகளைத் திருத்திக் கொள்ள உதவும் பயனுள்ள பதிவு!
  அருகாமையில் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...