புதன், 9 டிசம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (9)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (9)

   சசிரேகாவின் வீட்டின்  காலிங் பெல்லை ரோஸி அழுத்தினாள்.  வேலைக்காரி அலமேலு கதவைத் திறந்தாள். 


    ஈஸிச்  சேரில் சாய்ந்தவாறு  செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்த ரெங்கராஜ் ரோஸியை ஏற இறங்கப் பார்த்தார்.  அறைக்குள்ளிருந்து வெளியே வந்த  சசிரேகா ஒரு கணம் திகைத்துப் போய் நின்று,  சட்டெனச் சுதாரித்துக் கொண்டு...

   “வா... ரோஸி... நல்லா இருக்கியா... வா...வா...” அன்போடு வரவேற்றாள். 

   “நீ...யாரு...?” ரெங்கராஜின் அதட்டலான கேள்விக்கு என்ன சொல்வது என்று ரோஸி யோசித்த பொழுதே  சசிரேகா... “என்னோட காலேஜ் மெட்” என்றாள்.

   “ஓ கோ...என்ன விசயம் வந்தது...?”  என்றார் ரெங்கராஜ்.

   “திடீர்ன்னு... காலேஜுக்கு வரலையே... என்னான்னு பாத்து கேட்டிட்டு போகலாமுன்னு...!”  பயந்து தயங்கித் தயங்கிப் பேசினாள் ரோஸி.

   “இனி சசி காலேஜுக்கெல்லாம்  வரமாட்டாள்... சசியோட  அத்த மகனுக்கும் இவளுக்கும்  வர்ற ஞாயிற்றுக்கிழமை கல்யாணம்... கல்யாணம் முடிஞ்ச கையோட ... உடனே அமெரிக்கா போயிடுவாங்க... இந்தா பத்திரிக்கை...!”  எழுந்து பத்திரிக்கையை எடுத்துக் கொடுத்தார்.  அந்தப் பத்திரிக்கையை வாங்கிக் கொண்டாள் ரோஸி. 
                                                       
   “கன்கிராட்ஸ்”  என்று புன்முறுவலுடன் ரோஸி கூறினாள்.

   “காபியா...டீயா...” என்று கேட்டாள் சசிரேகா.

   “ஏதாவது...” என்றாள்  ரோஸி.  சசிரேகா அலுமேலு அம்மாவிடம் காப்பி கொண்டு வாங்க என்றாள்.

   “சரிம்மா...” என்று அடுக்களைக்குள் புகுந்தாள் வேலைக்காரி அலமேலு.

   “காலேஜு பிரண்ட்ஸ்ட்ட எல்லாம் இந்தப்  பத்திரிக்கையே எல்லாத்துக்கும் கொடுத்ததா நினைச்சு...  முக்கியமானவங்கள எல்லாம்  வரச்சொல்லு... ஏன்னா  எல்லாத்துக்கும் சசியால பத்திரிக்கை  தனித்தனியா வைக்க நேரமில்ல... இந்தா இன்னும் அஞ்சாறு பத்திரிக்கை வச்சுக்க...”  ரெங்கராஜ் மேலும் சில பத்திரிக்கையைக் கொடுக்க வாங்கிக் கொண்ட ரோஸி பத்திரிக்கையைப் பிரித்துப் படித்தாள்.

   ரெங்கராஜ் இருவரையும்  ஈசிச்சேரில் அமர்ந்தவாறே பார்த்துக் கொண்டிருந்தார்.  அலமேலு  காபி கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கிக் குடித்தாள்.

   காபி குடித்த டம்ளரை ரோஸி கொடுக்க அதை வாங்கிக் கொண்டு அடுக்களைக்குள் சென்றாள் அலமேலு;  அப்பொழுது  டெலிபோன் மணி ஒலித்தது.  ரெங்கராஜ் வேகமாகச் சென்று   எடுக்கச் சென்றார்.  ரோஸி தன் பேக்கில்  இருந்த லெட்டரை எடுத்துச் சசிரேகாவின் கையில் திணித்தாள்;  உடனே தனது ஜாக்கெட்டிற்குள்  மறைத்தாள்.

   “ஹலோ...யார் பேசுறது...?” என்று கேட்டுக் கொண்டே  இவர்கள் இருவரையும் நோட்டமிட்டார்  ரெங்கராஜ்.
                                                     
   “யாரு... மாப்பிள்ளையா... சொல்லுங்க... ... இன்னக்கிப் புடவை...நகையெல்லாம் எடுக்கப் போகணுமா...?  என்ன உடனே புறப்படணுமா...?  சசிட்ட சொல்றேன்...” ரிசிவரைக்  கையால் மூடிக்கொண்டே அப்பா ரெங்கராஜ் சசியிடம் கேட்டார்....

   “உடனே மாப்பள கிளம்பச் சொல்றார்... நகை புடவை எடுக்க...”

   “இன்னக்கி எனக்கு உடம்பு சரியில்ல....”

   ரெங்கராஜ் டெலிபோனில் பேசினார் “மாப்பிள  அப்புறம் நான் பேசுறேன்...”  என்று  ரிசிவரை வைத்தார்.

   “சரி... சசி... நா அப்ப கிளம்புறேன்...  நா வர்றேம்ப்பா...” என்று விடைபெற்று ரோஸி  வெளியே வந்தாள்.

   த்தை  வீட்ல புடவை நகை எடுக்கக்  கூப்பிடுறாங்க...அடம்பிடிக்காம போயிட்டு வாம்மா...”

   “நா போகலை... எனக்கு உடம்பு சரியில்ல...என்னால முடியாது”

   “மாப்பிளைட்ட என்ன சொல்ல...?”

   “என்னக் கேட்டா...?” 

   “உன்னக் கேக்காம...?”

   “என்னக் கேட்டா எல்லாம் செய்றீங்க...?”

   “உன்னக் கேட்டு எல்லாம் செய்ணுங்கிற அவசியம் இல்ல...!”

   “அப்ப இப்ப மட்டும் என்ன ஏ கேக்குறீங்க...?  உங்க இஷ்டத்துக்குச் செய்யுங்க...” என்று  சசி தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.  கட்டிலில் அமர்ந்து மறைத்து வைத்திருந்த  கடிதத்தை எடுத்துப் படித்தாள்.

 ‘அன்பிற்கினிய சசியே!  என் சகியே!

   உனது நிலையை அறிந்தேன்.
   எனது  நிலையை நன்றாக அறிவாய்...!
   உன்னைத்  திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
   என்னை நம்பி நீ வருவதாக இருந்தால்
   நாளை மறுதினம் ‘புதன் கிழமை’ இரவு  பன்னிரண்டு மணிக்கு
   வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் பேருந்து நிலையம் வரவும்...
   உனக்காகக் காத்திருக்கிறேன்...
   ஏதாவது வேலை செய்து உன்னைக் கண் கலங்காமல் காப்பாற்றுவேன்...
   என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு...!
   என்னை நம்பி நீ வரலாம்... உன் வரவுக்காகக் காத்திருப்பேன்...!


உன் அன்புத் தமிழ்.


கடிதத்தைப் படித்தவுடன் சசிரேகாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது; தலையணைக்கடியில் கடிதத்தை மறைத்து வைத்துக் கட்டிலில் படுத்தாள்.

                                                                                 
   ‘வருகின்ற ஞாயிற்றுக்கிழமை  கல்யாணத்திற்காக அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டு  இருக்கும் வேளையில் இவ்வாறு செய்தால் அப்பாவிற்கும் அத்தை வீட்டாருக்கும் சொல்லொண்ணா தலைக்குனிவு ஏற்படுமே!   சொந்த பந்தங்களெல்லாம்  தூற்றி விடுவார்களே...!
தமிழினியன் குறிப்பிட்டதைப் போல நாம் நாளை வீட்டை விட்டுப் புறப்பட்டால் அப்பாவை எதிர்த்து வாழ்ந்திட முடியுமா?  நம்மை அப்பா வாழ விட்டு விடுவாரா...?   தமிழினியனிடம் தன் மனைதைப் பறிகொடுத்துக்
 காதலித்து விட்டு,  இன்னொருவருடன் எப்படி வாழமுடியும்?   அப்படி வாழ்வது என்னை நானே ஏமாற்றிக் கொண்டு அவரையும் ஏமாற்றுவது ஆகாதா?  எதற்கும் துணிந்துதானே காதலில் விழுந்திருக்க வேண்டும். ‘ஏதாவது வேலை செய்து  கண் கலங்காமல் காப்பாற்றுவேன்...’
என்கிறார் தமிழினியன்;    .  வீட்டைவிட்டு வெளியில் சென்றால் கடுமையாகத்தான் போராட வேண்டி இருக்கும்!  அவரை மட்டும் வேலைக்குப் போக விட்டிட்டு நான் என்ன சும்மாவா இருப்பேன்...?  நானும் வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிச்சுக் குடும்பத்தக் காப்பாற்ற மாட்டேனா...? ’ என்ற எண்ணங்கள் அவளுடைய மனதில் மாறி மாறி  வந்தன.

   சசிரேகா புரண்டு புரண்டு படுத்தாள்;  நீண்டநேரம் ஆகியும் தூக்கம் வரவே இல்லை.  என்ன செய்வது  என்று யோசித்தாள்.

            தொலைக்காட்சியைப்  பார்க்க  முனைந்தான் சசிரேகா... இந்தப் பாடல் ஒலித்தது.

                                                                                                                                   


                                                                                                                                 காணொளி                                                  

                                                                                                                                          -வ(ள)ரும்...

                                                                                                                           

                                                                                                                                           .

 
படிக்க  ‘கிளிக்’ செய்க                                                                                                                                                                                                                                                          
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (7)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (8)



-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.





செவ்வாய், 1 டிசம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (8)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (8)

   மிழினியனும் அவனது தாய் தங்கம்மாளும் ரோஸியின் வீட்டில் தங்கி இருந்ததை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஏற இறங்கப் பார்த்தார்கள்.



           “தாயைப் போல பிள்ளைங்கிறது... தப்பாப் போகும்மா என்ன...?”  அந்தத் தெருவில் வசிக்கும்  மாரியப்பன்  ரோஸி காதில் விழும்படியாக சத்தமாகக் கூற, அருகில் இருந்த  ஆறுமுகம் அதைவிடச் சத்தமாகக் கத்தினான்.

            “ஆமாமா... தப்பாப் போகும்மா என்னான்னா கேக்கிறாய்...?  தப்பாத்தான் போயிடுச்சே... பாத்தாத் தெரியல... யாரோ ஒரு பய வசமா மாட்டிக்கிட்டான் போல  தெரியுது...! புரோக்கர் தொழிலுக்கு   ஒரு வயசான கிழவி ஒருத்தி சிக்கிருக்கா...”

           “தாய் எட்டடி பாஞ்சா... குட்டி பதினாறு அடி பாயணுமுல்ல...  இளம் கன்று பயம் அறியாதுல்ல... வசூல் ராணியா வலம்வலப் பேறான்னு சொல்லு...”

            “ராணிக்கு ரேட்டுதான் என்னன்னு தெரியல...” மாரிமுத்து மறுபடியும் கூற ஆறுமுகம் சிரித்துக் கொண்டே இருவரும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றனர்.

             தங்கம்மாளின் காதில் இந்தப் பேச்சு விழுந்தாலும் ஒன்றும் புரியவில்லை.  ஆனால் தமிழினியனுக்குப் இது  புரியாமலா இருக்கும்?  நன்றாகவே புரிந்தது.  ரோஸி தன் நிலையை எண்ணி அடுக்களைக்குள் சென்று அழ ஆரம்பித்தாள்.

            தமிழினியன்  ரோஸிடம்  “வேலியோரத்து பூக்களையே வீதியில போறவங்க கிள்ளி வேடிக்கை பார்க்கிறப்ப... வீதியோரத்து பூவ கசக்கிப் பார்க்க இந்த உலகம் அஞ்சவா போகுது...?  தெருநாய் குரைக்கிறதுக்கு நீங்க  ஒன்னும் கவலப்படாதே...  நாங்க ஒன்னும் கவலப்பட மாட்டோம்...”

            ரோஸி நிமிர்ந்து பார்த்து, “வக்கரப் புத்தி நிறைஞ்ச மனுசங்க நடுவுல... வாஞ்சையுள்ள மனுசனா ஒங்களப் பாக்கிறேன்... உடம்பப் பாத்தே பழகிப்போனவுங்க மத்தியில உள்ளத்தப் பார்க்கிற மனுசனா உஙகளப் பாக்கிறேன்...” தனது முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
         

 ரோஸி சமைத்து விட்டு அலுவலகத்திற்குச் செல்வதால் சிரமமில்லாமல் வேளாவேளைக்கு மாத்திரைகளை எடுத்துக் கொண்டு ஓய்வெடுப்பது அவன் அம்மாவிற்குச்  சௌகரியமாகத்தான் இருந்தது.

    தாயும் ரோஸியும் வற்புறுத்தியதால்  தமிழினியன் அன்று கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றான்.  கல்லூரியின் வாயிலிலேயே தமிழினியனை நண்பர்கள் வழிமறித்துக் கொண்டனர்.

           இத்தனை நாள் ஏன் கல்லூரிக்கு வரவில்லை என்று விசாரணையில் ஈடுபட்டனர்.

           “ தீடிர்ன்னு...அம்மாவிற்கு  உடம்பு சரியில்ல... அதான்” என்றான் தமிழினியன்.

           “வீடு வேற தீப்பிடிச்சு எரிஞ்சிருச்சுன்னு கேள்விப்பட்டோம்...” -ஆமாம் என்பதைப் போல தலையாட்டினான்.
     
   “ அம்மாவிற்கு உடம்பு சரியில்லை... நீ வரவில்லை... ஆமாம்...சசிரேகா உன்னைப் போலவே வரவில்லை ஏன்?” என நண்பன் இக்பால் கேட்டான்.

   “என்னது... சசிரேகா... வரவில்லையா...?”

          “என்ன உனக்குத் தெரியாதா?  சசிரேகாவுக்கு கல்யாணமாம்... கேள்விப்படலையா...?”

          “இதோ வருகிறேன் ?” என்றவாறு கல்லூரிக்குள் செல்லாமல்  வெளியே  வந்தான்.   தமிழினியன் மனக்குழப்பத்துடன் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே   நடந்தான்.

   சசிரேகா வீட்டின் தொலைபேசிக்கு,  அருகிலிருந்த கடைக்குச் சென்று  ‘காயின் பாக்ஸில்’  காசைப் போட்டு  ‘டயல்’ செய்தான்.  நீண்ட நேரம் ரிங் போய்க் கொண்டே இருந்தது.
                                                                               
   “ஹலோ...” மெதுவாக ஒரு பெண் குரல் கேட்டது.  அந்தக் குரல் சசிரேகாவின் குரல்தான் எனக் கேட்டமாத்திரத்திலேயே தெரிந்து கொண்டான். பாத்ரூமிலிருந்து என்ன வேகத்தில்தான் வந்தாரோ அவளின்  அப்பா தெரியவில்லை.  வந்த வேகத்தில போனைப் பிடுங்கிக் கொண்டார்.

   “நான்தான் தமிழினியன் பேசுறேன்... என்ன சசி... ஏன் இத்தன நாளா காலேஜ் வர்ல... அம்மாவுக்கு உடம்பு சரியில்ல அதான் நானும் காலேஜுக்கு 
வர்ல...இப்பத்தான் கேள்விப்பட்டேன்... நான் கேள்விப்பட்டது உண்மையா இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்... சசி... பேசு சசி...என்ன நா பேசிக்கிட்டே இருக்கேன்... நீ பேசாமலே இருக்காய்...  சசி... சசி....   என்னாச்சு...  சசி  சொல்லு சசி...? ” 

   “ஏண்டா எச்சிக்கல நாயே... என்னா தைரியம்டா எ  பொண்ண  லவ் பண்றதுக்கு...?  என்னப் பத்தி ஒனக்குத் தெரியாதுடா... ஓ வீடு தீப்பிடிச்சு எரிஞ்சப்பவே நீங்க அங்கேயே  செத்துப் போயிருக்கணும்... வீட்ல இல்லாம  போனதால... பொழச்சுப் போயிட்டீங்க...!  உயிர் மேல ஆசை இருந்தா இத்தோட இந்த நெனப்ப  விட்டிடு... இல்ல ஆள வச்சு ஒன்னத் தீத்துக் கட்டிட்டு போயிடுவேன்... என்னடா இப்ப பேச்சயே காணாம்...”  குரலை உயர்த்தி மிகவும் கோபமாகவும் சத்தமாகவும்   பேசினார்.  நேரம் முடியப்போவதை அறிந்து தமிழினியன் பேசாமலே மீண்டும் காசைப்  போட்டான்.

   “ எ பொண்ணோட அத்தமகனுக்கும் அவளுக்கும்  ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபத்தில அடுத்த வாரத்தில... கல்யாணம்... பாக்கு வெத்தல மாத்திப் பத்திரிக்கை எல்லாம் அடிச்சாச்சு... அமெரிக்காவில மாப்பிளைக்கு  வேலை... ஒன்ன மாதரி அன்னக்காவடியோ... அழிசாதிக்  கூட்டமோ...  அன்றாடங் காய்ச்சியோ இல்ல... தெரிஞ்சிக்க... பணக்காரப் பொண்ணக்  காதலிக்கிறமாதரிக் காதலிச்சு ஏமாத்திக்  கல்யாணம் பண்ணிக்கிட்டா இருக்கிற சொத்த எல்லாம் வளைச்சு போட்டுடலாங்கிறதுதானே ஒங்க ஜாதிப் புத்தி... ஒ கனவு நிச்சயம் பலிக்காதுடா...!  பலிக்க விட மாட்டேன்...!”

   நேரம் முடிந்து தொலைபேசியின் இணைப்புத்  துண்டிக்கப்பட்டது.  தமிழினியன் இதைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை:   ‘என்ன செய்வது?’ என்று ஒன்றும் தெரியாமலே பைத்தியம் பிடித்ததைப் போல இருந்தான்.   அவனின் மனம்  தெளிவில்லாமல்  குழப்பத்தின் உச்சியில்  இருந்தது.  கல்லூரிக்குச் செல்ல மனமில்லாமல் நடந்தே இரயில்வே ஜங்சன் பூங்காவிற்கு வந்தான்.  வந்த அவன் புல் தரையில் படுத்தான்;  ஏதோ குத்துவதை உணர்ந்தவன் எழுந்து பார்த்தான் நெருஞ்சிமுள் இருந்ததைப்  பிடுங்கி எறிந்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டு யோசித்தான்.  அழுகை வந்து அவனின் கண்களை மறைத்து  வழிந்த கண்ணீர் கன்னங்களில் கீழே ஓடியது.

   சூரியன் சுள்ளெனச்  சுட்டான்.   தமிழினியன் எழுந்து அமர்ந்தான்.  தன்னிடமிருந்த நோட்டை விரித்தான்;  எழுதத்தொடங்கினான்...

‘அன்பிற்கினிய சசியே!  என் சகியே!

   உனது நிலையை அறிந்தேன்.  
   எனது  நிலையை நன்றாக அறிவாய்...!
   உன்னைத்  திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
   என்னை நம்பி நீ வருவதாக இருந்தால்
   நாளை மறுதினம் ‘புதன் கிழமை’ இரவு  பன்னிரண்டு மணிக்கு
   வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் பேருந்து நிலையம் வரவும்...
   உனக்காகக் காத்திருக்கிறேன்...
   ஏதாவது வேலை செய்து உன்னைக் கண் கலங்காமல் காப்பாற்றுவேன்...
   என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு...!
   என்னை நம்பி நீ வரலாம்... உன் வரவுக்காகக் காத்திருப்பேன்...!

உன் அன்புத் தமிழ்.

-எழுதியதை மீண்டும் படித்தான்;  நோட்டில் இருந்த தாளைக் கிழித்துச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.   புல்லின் மீது படுத்தான்;  தூரத்தில் பூத்திருந்த செம்பருத்தி இவனைப்பார்த்துச் சிரிப்பது போலச்  சிரித்துக்  காற்றில் தலையை ஆட்டியது.

   தமிழினியனை யாரோ அடித்துப் போட்டது போல இருக்க... அப்படியே படுத்தபடியே உறங்கிப் போனான்.  மாலைப் பொழுதில் பூங்காவிற்கு வந்த சிறுவர்களின் சத்தம் கேட்டு உறக்கம் கலைந்து எழுந்து ரோஸியின் வீட்டை நோக்கி நடந்தான்.

   ரோஸிடம் நடந்ததையெல்லாம் விளக்கமாகச் சொன்னான்;  அதை அப்படியே கேட்டு உள் வாங்கிக் கொண்டாள்.

   “சரி... இப்ப என்ன செய்யலான்னு இருக்கீங்க...?”

   “எனக்காக ஒரு பெரிய உதவி செய்யணும்...”

   “என்ன செய்யனும்... சொல்லுங்க...?”

   “சசி வீட்டுக்கு நாளைக்குப்  போகணும்...”

   “போயி...?”

   “போயி... நீ காலேஜு ஸ்டுடண்ட்... சசிய விசாரிக்கிறமாதரி... போயி... இந்த ‘லட்டர்’ கொடுத்திட்டு வரணும்...”-என்று சொல்லிச்  சட்டைப் பையிலிருந்த கடிதத்தைக் கொடுத்தான்.

   “இவ்வளவுதானே... கொடுத்திட்டாப் போச்சு...!  சரி... வாங்க....அம்மா சாப்பிட்டுட்டு  நல்லாத்  தூங்கிறாங்க... வாங்க சாப்பிடலாம்...” -என்று சொல்லி ரோஸி  சாப்பாடு போட்டாள்;   பசியோடு இருந்த தமிழினியன்  சாப்பிட்டான்.

   “என்ன லட்டர்ல எழுதி இருக்கீங்க...?” சாப்பிட்டு முடித்த தமிழினியனிடம் கேட்டாள் ரோஸி.

   “என்னான்னு படிச்சுப் பார்க்க வேணடியதுதானே...!”

   “அடுத்தவங்க லெட்டர படிக்கிறது நாகரிகம் இல்லல்ல...”

   “நான்தான் படிக்கச் சொல்றேன்ல்ல... அப்புறமென்ன...?”

   “என்னதான் இருந்தாலும் அடுத்தவங்க லெட்டர படிக்கக்கூடாது...”

   “சரி... அதுக்கு மேல உங்க இஷ்டம்...” -என்று கூறிய படி அம்மாவிற்கு அருகில் சென்று படுத்தான் தமிழினியன்.

   அந்த வீட்டில் இருந்த இன்னொரு சின்ன அறையில் ரோஸி சென்று படுத்தாள்.

   ‘தமிழினியன் கடிதத்தில் என்ன எழுதி இருப்பாரோ... அதை அவரே பார்க்கச் சொல்லி விட்டதால் பார்க்கலாமா?’  என்ற மனம்  ஆசைப்பட்டாலும்... யோசித்து அது தப்பு என்று முடிவெடுத்துப்  படுக்கையில் புரண்டவள் சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.
                                                      
    பொழுது விடிந்ததும்  தெருக்குழாயில் தண்ணீர் பிடித்த ரோஸி சமைக்க ஆரம்பித்தாள்.  சற்று நேரம் கழித்து எழுந்த தமிழினியன் டீக்கடைக்குச் சென்ற ஒரு பார்சல் டீயை வாங்கி வந்து கொடுக்க மூவரும் குடித்தனர்.
                                                                     
   ரோஸி சமையல் முடித்துக் குளித்து முடித்து அனைவரும் சாப்பிட்ட பிறகு புறப்படத் தயாரானாள்.  சசிரேகாவின் வீட்டின் அடையாளத்தை நன்கு கேட்டு அறிந்து கொண்டு புறப்பட்டாள் பேக்கில் ‘அந்தக் கடிதத்தை’ எடுத்துக் கொண்டு...!

                                                                                                                          -வ(ள)ரும்... 


படிக்க  ‘கிளிக்’ செய்க

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)

-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.








புதன், 25 நவம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (7)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (7)


   காரிருள் சூழப் பகலிலேயே வானம் இருண்டுகொண்டு கனமழைக்கான மேகச் சுவடுகளுடன் இருந்தது.  

     டாக்டர் ‘பயாப்ஸி’ எடுத்து டெஸ்ட்டுக்கு கொடுத்த ரிசல்ட் கையில் வைத்து அமைதியாக அதையே  பார்த்துக் கொண்டு இருந்தார்;  எதிரே அமர்ந்திருந்த தமிழினியனின்    இதயத்துடிப்பு அதிகரித்துக் கொண்டே போக அனைத்துக் கடவுளையும் வேண்டிக் கொண்டு   அமர்ந்திருந்தான்.

   “மிஸ்டர்...................” - டாக்டர் அவனின் பெயரை  யோசித்தார்.

   “தமிழினியன்...டாக்டர்”

   “ஓ...எஸ்... மிஸ்டர்  தமிழினியன்... நெறையாப் பேரப் பார்க்கிறதால பேர மறந்திட்டேன்... சாரி...”

   “பரவாயில்லைங்க டாக்டர்...எத்தன பேர் வர்றாங்க... போறாங்க... எல்லாருடைய பேரும் ஞாபகம் வச்சுக்க முடியாதில்ல...!”

   “சரியாச் சொன்னீங்க... மிஸ்டர் தமிழினியன்... சரி...நா விஷயத்துக்கு வர்றேன்... நா சந்தேகப்பட்ட மாதரியே ஒங்க அம்மாவுக்கு லங்ஸில்ல கேன்சர்ன்னு  கன்பார்ம் ஆயிடுச்சு”  தமிழினியனின் விழிகளிலிருந்து நீர் வழிந்தது.  அவனால் பேச முடியவில்லை;  வேண்டிய தெய்வங்கள் எல்லாம் கைவிட்டதாக மனதுக்குள் நினைத்துக் கொண்டு வழிந்த கண்ணீரைத் துடைத்தான்.

   “டாக்டர்... எங்க அம்மாவ எப்படியாவது காப்பாத்துங்க... எனக்கின்னு வேறு யாருமில்ல...பிளிஸ்”  கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டான்.

   “மிஸ்டர் தமிழினியன்... கேன்சர்ன்னா... எல்லாமே ஆளக் கொன்னுடுமுன்னு நெனக்க வேண்டியதில்ல... ஒங்க  அம்மாவுக்குப்  புற்றுநோய் இருப்பதைத் தொடக்கத்திலேயே கண்டிபிடிச்சாச்சு...  இது பர்ஸ்ட் ஸ்டேஸ்தான்... நோ பிராபளம்... பயப்பட வேண்டியதில்ல... குணப்படுத்த முடியாதுன்னு முன்பு கருதப்பட்ட புற்றுநோயத் தற்போது குணப்படுத்த வழி உருவாகி இருக்கு... பயப்பட வேண்டியதில்ல...மருந்து மாத்திரை நான் தாறேன்... சீக்கிரம் குணமாக்கிடலாம்... டோன்ட் ஒர்ரி...  ‘தெரபி’ கொடுக்க அவசியம் இருக்காது... தேவை ஏற்பட்டா...  பிறகு பார்த்துக்கலாம்.

   “டாக்டர்... ஒங்களத்தான் நா தெய்வமா நம்பி இருக்கேன்... கைவிட்டுடாதிங்க...”  டாக்டரின் காலைப்பிடித்துக் கெஞ்சினான்.”

   “என்ன இது...?  எழுந்திரு... கவலப்படாதே... நா இருக்கேன்... கவலப்படாதே... மாத்திரை எழுதித் தாரேன்... வீட்டுக்குக் கூட்டிட்டுப்  போ...!”

   ‘வீட்டுக்கா...?’   வீடு இருந்தால்தானே... மனதுக்குள் நினைத்துக் கொண்டே மாத்திரைச் சீட்டை வாங்கிக் கொண்டு,   மாத்திரையை வாங்கினான்.  
   கருத்திருந்த மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு இடியுடன் மழையைப் பெய்து வானமும் அழத்தொடங்கியது.

   தமிழினியன் அம்மாவிடம் சிரித்துக் கொண்டே வந்தான்.  

   “என்னப்பா... ராசா... டாக்டர் என்ன சொன்னாரு...?” தங்கம்மாள் கேட்டாள்.

   “ஒன்னுமில்லையாம்மா... சும்மா சின்ன நீர்க்கட்டியாம்... பயப்பட ஒன்னுமில்லட்டாரு...”

   “அப்ப... நம்ம... வீட்டுக்குப்  போலாமாப்பா...?”

   “போலாம்மா...” என்ன சொல்வது  என்று யோசித்துக் கொண்டிருந்த போது   மழையில் நனைந்திருந்த  ரோஸி  இவர்களின் அருகில் வந்து நின்றாள்.  ரோஸியை சற்றும் எதிர்பார்க்காத அவனுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

   “வாங்க... ரோஸி... அம்மா... இவுங்க எனக்குத் தெரிஞ்சவுங்கம்மா...எங்கம்மா”  அறிமுகப் படுத்தினான் தமிழினியன்.

   “வாம்மா... மகாலட்சுமி மாதரி இருக்கே.... அய்யோ ஒடம்பெல்லாம் நனைஞ்சு போயிருக்கே... இங்க வாம்மா...வா...”  அருகில் அழைத்து தன் முந்தானையால் ரோஸியின் தலையின் ஈரத்தைத் துவட்டி விட்டு அவளின் முகத்தைத் துடைத்து விட்டாள். 

   “என்ன இங்க வந்திருக்கீங்க...”  ரோஸியப் பார்த்துக் கேட்டான் தமிழினியன்.

   “ஒங்க வீடு தீயில எரிஞ்சு போனதப்  பேப்பர்ல பார்த்தேன்...”

   “அய்யய்யோ...  நம்ப வீடு தீயில எரிஞ்சிடுச்சா.... என்னப்பா...?” பயத்துடன் நடுங்கியபடித்  தங்கம்மாள் கேட்டாள்.

   “ஆமாம்மா... நம்ம ஆஸ்பத்திரிக்கு வந்தோமில்ல அன்னக்கி ராத்திரி...”

    “அய்யய்யோ... அம்மாவுக்குத் தெரியாதா... ?  

   “நா சொல்லல...பரவாயில்ல... எப்ப இருந்தாலும் தெரிஞ்சுதானே ஆகனும் ”

   “ஆபிஸ்ல வேலை... உடனே என்னால வர முடியல... இன்னக்கி  சண்டே ... அதான்”

   ”என்னப்பா சண்டே...” தங்கம்மாள் பதறிக் கேட்டாள்.

   “அய்யோ... இன்னக்கி ஞாயிற்றுக் கிழமைன்னு சொல்றாங்க...!”

   “அதானே... சண்டேயோ என்னமோன்னு நா  பயந்தே போயிட்டேன்...”

   “ஒங்க வீட்ட விசாரிச்சு அங்க போனதுக்கு அப்புறம்தான்... நீங்க ஆஸ்பத்திரியில இருக்கிற விவரம்  தெரிஞ்சது...  அதான் நேரா இங்க வந்தேன்....”

   “அம்மாவுக்கு என்னாச்சு...?”

   ”ஒன்னுமில்ல... வயித்துவலி... மாத்திரை கொடுத்திருக்காரு... வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாரு...”  தமிழினியின் சொன்னான்.

   “சரி... கௌம்புங்க... எ வீட்டுக்குப்  போகலாம்...!  நா தனியாத்தானே இருக்கேன்... வாங்க போகலாம்...!   வாங்கம்மா... ! ” தங்கமாளை அழைத்துக் கொண்டு தமிழினியனிடன் சம்மத்தைக்  கேட்டாமலே புறப்பட்டாள்.  தமிழினியனும் வேறுவழியின்றிப்  பின் தொடர்ந்தான்.

                                                                                                                      - வ(ள)ரும்...

படிக்க  ‘கிளிக்’ செய்க

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)

வெள்ளி, 20 நவம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)



   சிரேகாவின் அறையின் கதவைத் தட்டினாள் வேலைக்காரி அலமேலு.  கதவு திறக்கப்படவில்லை.  மீண்டும் வேகமாகத் தட்டினாள்.  சிறிது நேரத்தில் சசிரேகா கதவைத் திறந்துவிட்டு,  உடனே கட்டிலில் போய் படுத்துக் கொண்டாள்.

   “அம்மா... டீ...ம்மா...” என்று சொல்லி அருகில் வைத்துவிட்டுச் சென்றாள்.
 சசிரேகாவிற்கு நினைவு தெரிந்ததிலிருந்தே வேலைககாரியாக 
 அலமேலு வேலைக்குச் சேர்ந்தவள்; தனிமரமான  இவள், இன்று அம்பது வயதைத் தாண்டியும் குடும்பத்தில் ஒருத்தி போலவே வீட்டிலேயே இருந்து, வேலைகளைச்  செய்து காலத்தைக் கழிக்கிறாள்.

   ரெங்கராஜ் மருத்துவ விடுப்பு   போட்டுவிட்டு  வீட்டிலேயே இருந்தார்.  சசிரேகாவைக் கல்லூரி செல்ல அனுமதிக்காமல் வீட்டுக்காவலில் வைத்து, வேலைக்காரி அலமேலு அம்மாளிடம்  மகளைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

சனி, 14 நவம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)

                             


    மிழினியன்  பேருந்தைப் பிடித்து வீட்டிற்குப் பயணப்பட்டாலும்;  அவனுக்கு மனசு மட்டும் சசிரேகாவைச் சுற்றியே சுழன்றது.  அவளின் தந்தையிடம் மாட்டிக்கொண்டு என்ன பாடு பட்டாளோ?  என்ற எண்ணம் மட்டும் மாறிமாறி மனதுக்குள் வந்து வட்டமிட்டுக் கொண்டே  இருந்தது.

   வீட்டிற்குள் நுழைந்த தமிழினியன், ‘அய்யோ...அம்மா... வலி தாங்க முடியலையே...அய்யோ எனத் தனியாகக் கத்திக்கொண்டிருந்த தங்கம்மாளின் குரல் கேட்டு  ஓடினான்.

   அம்மா... என்னம்மா...?  என்னாச்சு...?” தமிழினியன் பதட்டத்துடன் கேட்டான்.

   ரெண்டு மூணு நாளாவே... சரியாச் சாப்பிட முடியலப்பா...ஒன்னிட்ட சொன்னா சங்கடப்படுவேன்னு சொல்ல... இன்னக்கிச் சுத்தமாச் சாப்பிட முடியலப்பா... வயித்து வலி என்னால தாங்க முடியலப்பா... முடியல...!

   என்னம்மா...எதா இருந்தாலும் என்னிட்டச் சொல்ல வேண்டியதுதானே...  சரி மொதல்லஆஸ்பத்திரிக்குப் போலாம்... பொறப்படுங்க...”- என்று சொன்னவுடன் தங்கம்மாள் தன் சுருக்குப் பையை எடுத்துக் கொடுத்தாள்.  அதில் ஆயிரத்து இருநூறு ரூபாய் இருந்ததைப் பார்த்தான்.

   நாம தர்மாஸ்பத்திரிக்குத்தான் போறோம்...” - என்று வாங்கிய சுருக்குப் பையைத் திருப்பிக் கொடுத்தான்.

   இருக்கட்டுப்பா... அத நீயே வச்சுக்க... பத்தலைன்னா... காதுல மூக்குல கிடக்கிறத... கழட்டியாவது என்ன காப்பாத்துப்பா...”  தங்கம்மாள் அவனின் முகத்தைத் தடவியபடி கையெடுத்துக் கும்பிட்டாள்.

   என்னம்மா...நீ... ஒனக்கு ஒன்னும் இல்ல... பேசாம இரு... பொறப்படு...

   அதுக்கு இல்லப்பா... நா சாகறதப் பத்திக் கவலைப் படுல... ஒனக்கு ஒரு கண்ணாலம் காட்சியப் பாத்திட்டு... கண்ண  மூடணும்... ஏன்னா என்ன விட்டா யாரிருக்காக... எ ராசாவுக்கு...நீ  அனாதையா அலையக்கூடாது பாரு...!
தங்கம்மாள் சொல்வதில் அவனுக்கு மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆமாம் அவளை விட்டால் அவனுக்கு யாரிருக்கிறார்கள்.


   காத்மா காந்தி அரசு மருத்துவமனையில் தங்கம்மாளை உள்நோயாளியாகத் தங்க வைக்க அம்பது ரூபாயை மருத்துவமனை ஊழியரிடம் கொடுத்த பிறகே அவர்கள் மனது வைத்த பின்னே இடம் கிடைத்தது.
                                                       

   மருத்துவர்  வந்து தங்கம்மாளை நீண்ட நேரம் பரிசோதனை செய்தார். இரைப்பையில் கட்டி இருப்பது போல் தெரிகிறது  ஸ்கேன்எடுக்கவும், வேறு சில டெஸ்ட்கு எழுதித் தாரேன்.  மொதல்ல அத எடுத்திட்டு வாங்க... நர்ஸ்ட்ட எல்லாம் சொல்லி இருக்கேன்... என்னென்ன செய்யனுமோ... அவுங்க செய்வாங்க... போங்கஎன்று அனுப்பி வைத்தார்.

   நர்ஸ் அழைத்துச் சென்று பெட்டைக் காண்பித்தார்.  
பணம் ஏதும் வேணுமா வாங்கிக்கங்க சிஸ்டர்...!  எங்கம்மாவை கொஞ்சம் நல்லா பாருங்க...சிஸ்டர்... பிளிஸ்...!
தமிழினியன் கெஞ்சியதை உற்றுப் பார்த்து,   “அரசாங்கம் இந்த வேலை பார்க்கத்தான் எங்களுக்குச்  சம்பளம் கொடுக்கிது... நீ ஒன்னும் காசுதர வேணாம்... இப்படிக் காசு வாங்கினா எங்க குடும்பமெல்லாம் நல்லா இருக்காது... நீ ஒன்னும் கவலைப்படாதே...ஏன்... யாரும் பாத்துக்கப் பொம்பளைங்க இல்லையா!”  

   இல்லீங்க... சிஸ்டர்... எங்களுக்க யாருமில்ல... எனக்கு அம்மா... அம்மாவுக்கு நான்... அவ்வளவுதான்.. எங்க அம்மா கூலி வேலைக்குப் போயிதான் என்ன காலேஜ்ல்ல படிக்க வக்கிது... ரொம்பக்  கஷ்டப்படுற குடும்பம் சிஸ்டர்...” 

   அதான் சிஸ்டர்... நா ஒருத்தி இருக்கேன்ல்ல... கவலைப்படாதே...!
-அந்த நர்ஸின் ஆறுதல் வார்த்தை அவனுக்கு ஒரு தெம்பைக் கொடுத்தது. 
அனைத்து டெஸ்ட்டுக்கும் அவரே செலவு செய்யாமல் எடுக்கச் செய்தார்.  ஸ்கேன்எடுப்பதற்கு இவர்களின் ரேசன் கார்டை வாங்கி  இலவசமாக எடுக்க ஆவன செய்தார். 
                                                                          

   சாப்பிடுறதுக்குச் சாப்பாடு வாங்கி வாறேன்...” -என்று சொல்லித் தமிழினியன் புறப்பட்டான்.

   வேண்டாம்ப்பா... என்னனால சாப்பாட்ட முழுங்க முடியாது... ரொம்பக் கஷ்டமா இருக்கு...!

   சரிம்மா... சாத்துக்குடி ஜுஸ் வாங்கிட்டு வாறேன்...

சிறுது நேரத்தில் ஜுஸைக் கொண்டு வந்து கொடுக்கத்  தங்கம்மாள் அதைப் பருகினாள்.

   அன்று மருத்துவமனையில் கொடுத்த உணவைத்  தமிழினியன் சாப்பிட்டான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த தங்கம்மாளின் கண்ணில் நீர் வழிந்தது.  
   அப்படியே தங்கமாள்  உறங்கிப் போக,  தரையில் படுத்த தமிழினியன் உறங்கிப் போனான்.  

   தமிழினியன் விழித்த பொழுது,  சூரியன் உதித்திருந்த்து.  அம்மாவைப் பார்த்தான் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.  தேநீர் அருந்தாலாம் என்று எண்ணி வெளியில் கடைக்குச் சென்றான். 

   ஸ்ட்ராங்க...டீ ஒன்னு...” - சொல்லிவிட்டு  இன்றைய  செய்தி என்னவென்று அறியத்  தொங்கிக்கொண்டிருந்த வால்போஸ்டரைப் பார்த்தான்.  திருச்சி தீ குடிசை தீயில் எரிந்தது!என்றிருந்தது.  தேநீரை வாங்கிக் குடித்துக் கொண்டே திருச்சியில் எந்தப் பகுதியில் தீப்பிடித்த்து என்று தெரியவில்லையேஎண்ணியவாறு ஒரு தந்தி’  கொடுங்க என்று வாங்கி டீக்கும் சேர்த்துக்  காசைக் கொடுத்தான்.  

   துவாக்குடி செய்தியைத் தேடிப் பார்த்தான்.   எரிந்து கொண்டிருக்கும் வீட்டின்  படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது;   படத்தைப் பார்த்தும் திடுக்கிட்டுப் போனான்.  அது அவனுடைய வீடுதான் படத்தில் வந்திருந்தது. அவனுக்குக்  கையும் ஓடவில்லை,  காலும் ஓடவில்லை.   அவனின் அம்மாவின் பெயரும் அவனின் பெயரும் இடம்பெற்று இருந்தன.  அவர்கள் என்ன ஆனார்கள் என்பதும் அவர்களின் நிலை என்ன என்பதும் தெரியவில்லை.    தீ விபத்திற்கான காரணம் ஏதேனும் முன்விரோதம் காரணமா?  அல்லது இவர்களுக்கு எதிரிகள் யாரும் இருக்கிறார்களா?  என்ற கோணத்தில் காவல்துறை  விசாரணை நடைபெறுகிறது என்று செய்தி வெளியாகி இருந்தது.   

   தமிழினியன் நினைத்துப் பார்க்கையிலே தலை சுற்ற ஆரம்பித்தது.  தண்ணீரை எடுத்து முகத்தைக் கழுவித் தன்னை  ஆசுவாசப்படுத்திக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்றான்.  அம்மா இப்பொழுது விழித்திருந்தாள்.

   எங்கப்பா போயி இருந்தே...?”

   டீ குடிக்கம்மா... இப்ப எப்படிம்மா இருக்கு...?”

   பரவாயில்லப்பா... லேசா வலி இருக்கு...

   எல்லாம் சரியாயிடும்... நீ ஒன்னும் கவலைப்படாதே... சரியா... நா  வீட்டுக்குப் போயி டிரஸ் எடுத்திட்டு வாரேன்...

   சரிப்பா... சீக்கிரம் வந்திடு...என்று மகனை வழியனுப்பி வைத்தாள்.

   நகரப் பேருந்துக்காக நீண்ட காத்திருப்பிக்குப் பின் அவன் பயணிக்கும் ஒரு பேருந்து வந்தது.  அதிகாலை என்பதால் பேருந்துகள் குறைவாகவே இயங்குகின்றன என்று  நினைத்துக் கொண்டான்.  பேருந்து ஆங்காங்கே நிறுத்ததில் நின்ற மெதுவாகச் சென்றது.   வீடு என்ன ஆனதோ?  தான் அன்பாக வளர்த்த ‘டாமிநாய் சங்கிலால் கட்டப்பட்டு இருந்தது.  நாய் என்ன ஆனதோ?  அப்பாவின் பிரேம் போட்ட எரிந்து போயிருக்குமா?   எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கையில்,   பேருந்து அவனின் நிறுத்தத்தில் நிற்க இறங்கியவுடன் வேகமாக  வீட்டை நோக்கி ஓடினான்.  மேல் மூச்சுக்  கீழ்மூச்சு வாங்க  மின்னல் வேகத்தில் வீட்டை அடைந்தான்.

   வீட்டைப் பார்த்த அவனுக்கு ஈரக்கொலையெல்லாம் நடுங்கியது.  வீடு முழுவதும் எரிந்து பொருட்கள் அனைத்தும் நாசமாகிப் போயிருந்தது.  அவனைப் பார்த்ததும் தெருமுழுக்கக் கூடிவிட்டது.  

   எங்கே தமிழ் போயிருந்தா... நைட்டு  பன்னென்டு மணியிருக்கும் வீடு தீப் பிடிச்சு  எரிஞ்சப்ப... பாதி எரியும் போதுதான் அக்கம் பக்கத்தில பாத்து பயர் சர்வீஸ்க்கு போன் பண்ணி இருக்காங்க... வண்டி வர்றதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போயிடுச்சு...  வெளியில வேற கதவு சாத்தியிருந்திச்சா...   நாங்க  பயந்தே போய்ட்டோம்... உங்கள உள்ள வச்சு யாரும் கொளுத்திட்டாங்களோன்னு... நல்ல வேளை நீங்க யாரும் உள்ள இல்ல...ஆமா எங்க போனீங்க...? ”  பால்ய நண்பன் தினேஷ்பால் அக்கறையுடன் பேசினான்.

   இல்லடா... அம்மாவுக்குத்  திடீர்னு உடம்பு சரியில்ல... ஜி.எச்.சுக்கு கூட்டிட்டு போயி அட்மிட் பண்ணினேன்.

   நல்ல வேளை... நீங்க பொழைச்சீங்க... எந்தச் சாமி புண்ணியமோ...?”
                                                                                      

எரிந்த குடிசைக்குள் நுழைந்து பார்த்தான்.  மரபீரோ என்பதால் அதுவும் எரிந்து போய் அதில் இருந்த சான்றிதழ்கள் துணிகள் அனைத்தும்  எரிந்து போயிருந்தன.   ‘டாமிகரிக்கட்டையாகி தரையில் கிடந்த்தைப் பார்த்ததும் அழுதே விட்டான்.  வீடு எரிந்ததற்ககான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப்பான்.  உடனடியாகத் தமிழினியனின் மூளை வேலை செய்யவில்லை; சிறிது நேரத்திந்குப் பிறகு மீண்டும் மருத்துவமனையை நோக்கிப் புறப்பட்டான்.


   ங்கம்மா  மகனின் வரவுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள். தமிழினியன் வந்தவுடன்,  “ஏம்ப்பா... துணி ஒன்னும் எடுத்திட்டு வரலை...? தமிழ்... டாக்டர் வந்தாரு... ஒன்னக் கேட்டாரு...  நீ வந்தவுடனே வரச்சொன்னாரு..

   சரிம்மா...டாக்டரைப் பார்த்துட்டு வர்றேன்...டாக்டரின் அறைக்குச் சென்றான்.

   வணக்கம்... டாக்டர்...”  தமிழினியன் இருகரம் எடுத்துக் கும்பிட்டான்.

   வாங்க... எங்கே வெளியே போயிருந்தீங்களா...?” ‘ஆமாஎன்பதைப்போலத் தலையாட்டினான்.

   உட்காருங்க...ஒங்க அம்மாவோட எக்ஸ்-ரே, ரிப்போர்ட் எல்லாம் வந்திடுச்சு... அதான் ஒங்கள வரச் சொன்னேன்...”  ‘என்ன ரிசல்ட்?’ என்று அவன் கண்கள் கேட்டன.

   ரிசல்ட் எல்லாத்தையும் பார்க்கும் போது... ஒங்க அம்மாவுக்கு உணவுக்குழாயில கேன்சர் இருக்குமான்னு சந்தேகம் இருக்கு.  மைனர் ஆப்ரேசன் செய்து கட்டிய கொஞ்சம் சாம்பிள் எடுத்து ‘பயாப்ஸிடெஸ்ட்க்கு அனுப்பனும்.   தமிழினியன் இதைக் கேட்ட மாத்திரத்தில மயங்கிச் சரிந்தான்.  டாக்டர் அவனின் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தார்.

   “பயப்படாதிங்க... கேன்சரா இருக்கமான்னு டவுட்டுதான்.... ‘பயாப்ஸி டெஸ்ட் எடுக்கனுமுன்னு  ஒங்க அம்மாட்ட சொல்லுங்க... நாளைக்கு ஆப்ரேசன் ... அதைச்சொல்லத்தான் வரச்சொன்னேன்...
டாக்டரின் அறையிலிருந்து தமிழினியன் சிலைபோல வெளியே வந்தான்.

                                                                            -வ(ள)ரும்...



படிக்க  ‘கிளிக்’ செய்க

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)


நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.











ஞாயிறு, 8 நவம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)

நீங்க நினைக்காத நெஞ்சம்...!  (4)


   காரின் கதவை அப்பா ரெங்கராஜ் வேகமாகத் திறக்க  சசிரேகா அமர்ந்ததும் கார் ‘விர்’ரெனச் சீறிப் பாய்ந்தது.  காருக்குள் யாரும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளவேயில்லை.  அப்பா கோபமாக இருக்கிறார் என்றால் பேசமாட்டார் என்பது சசிரேகாவுக்குத் தெரிந்ததுதான்.   பதினைந்து நிமிடத்திற்குள் வீட்டின் கார்பார்க்கில்   இடிக்கும்படி போய்க் குலுங்கிக் கார் நின்றது.

   வீட்டிற்குள் நுழைந்ததும் சட்டையைக்  கழட்டிக் கொக்கியில் மாட்டிக் கொண்டேஅப்பா ரெங்கராஜ்  கேட்டார்,  “யார் அவன்...?”

   “.....................................................................................“  சசிரேகா ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.


ஞாயிறு, 1 நவம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)

படிக்க  ‘கிளிக்’ செய்க
நீங்க நினைக்காத நெஞ்சம்...!(1)


நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)


   ரோஸியைப் பற்றித் தற்பொழுது தான்  அறிந்ததைத் தமிழினியன் சசிரேகாவிடம் சொல்லியதைக் கேட்டு  ரோஸியின் மீது இரக்கப்படுவதைச் சசியின்  முகம் காட்டிக் கொடுத்தது.    

   இருவரும் பேசியபடியே சாலையோரமாக நடந்தார்கள்.  இருமருங்கும் நெருக்கமாக வளர்ந்திருந்த பூ மரங்கள் அவர்களுக்குச் சாமரங்கள் வீசி வரவேற்பதைப் போலத்  தரையில் விழுந்து வணங்கிக் கிடந்தன.

Related Posts Plugin for WordPress, Blogger...