சனி, 14 நவம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)

                             


   மிழினியன்  பேருந்தைப் பிடித்து வீட்டிற்குப் பயணப்பட்டாலும்;  அவனுக்கு மனசு மட்டும் சசிரேகாவைச் சுற்றியே சுழன்றது.  அவளின் தந்தையிடம் மாட்டிக்கொண்டு என்ன பாடு பட்டாளோ?  என்ற எண்ணம் மட்டும் மாறிமாறி மனதுக்குள் வந்து வட்டமிட்டுக் கொண்டே  இருந்தது.

  வீட்டிற்குள் நுழைந்த தமிழினியன், ‘அய்யோ...அம்மா... வலி தாங்க முடியலையே...அய்யோ எனத் தனியாகக் கத்திக்கொண்டிருந்த தங்கம்மாளின் குரல் கேட்டு  ஓடினான்.

  அம்மா... என்னம்மா...?  என்னாச்சு...?” தமிழினியன் பதட்டத்துடன் கேட்டான்.

  ரெண்டு மூணு நாளாவே... சரியாச் சாப்பிட முடியலப்பா...ஒன்னிட்ட சொன்னா சங்கடப்படுவேன்னு சொல்ல... இன்னக்கிச் சுத்தமாச் சாப்பிட முடியலப்பா... வயித்து வலி என்னால தாங்க முடியலப்பா... முடியல...!

  என்னம்மா...எதா இருந்தாலும் என்னிட்டச் சொல்ல வேண்டியதுதானே...  சரி மொதல்லஆஸ்பத்திரிக்குப் போலாம்... பொறப்படுங்க...”- என்று சொன்னவுடன் தங்கம்மாள் தன் சுருக்குப் பையை எடுத்துக் கொடுத்தாள்.  அதில் ஆயிரத்து இருநூறு ரூபாய் இருந்ததைப் பார்த்தான்.

  நாம தர்மாஸ்பத்திரிக்குத்தான் போறோம்...” - என்று வாங்கிய சுருக்குப் பையைத் திருப்பிக் கொடுத்தான்.

  இருக்கட்டுப்பா... அத நீயே வச்சுக்க... பத்தலைன்னா... காதுல மூக்குல கிடக்கிறத... கழட்டியாவது என்ன காப்பாத்துப்பா...”  தங்கம்மாள் அவனின் முகத்தைத் தடவியபடி கையெடுத்துக் கும்பிட்டாள்.

  என்னம்மா...நீ... ஒனக்கு ஒன்னும் இல்ல... பேசாம இரு... பொறப்படு...

  அதுக்கு இல்லப்பா... நா சாகறதப் பத்திக் கவலைப் படுல... ஒனக்கு ஒரு கண்ணாலம் காட்சியப் பாத்திட்டு... கண்ண  மூடணும்... ஏன்னா என்ன விட்டா யாரிருக்காக... எ ராசாவுக்கு...நீ  அனாதையா அலையக்கூடாது பாரு...!
தங்கம்மாள் சொல்வதில் அவனுக்கு மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆமாம் அவளை விட்டால் அவனுக்கு யாரிருக்கிறார்கள்.


  காத்மா காந்தி அரசு மருத்துவமனையில் தங்கம்மாளை உள்நோயாளியாகத் தங்க வைக்க அம்பது ரூபாயை மருத்துவமனை ஊழியரிடம் கொடுத்த பிறகே அவர்கள் மனது வைத்த பின்னே இடம் கிடைத்தது.
                                                       

  மருத்துவர்  வந்து தங்கம்மாளை நீண்ட நேரம் பரிசோதனை செய்தார். இரைப்பையில் கட்டி இருப்பது போல் தெரிகிறது  ஸ்கேன்எடுக்கவும், வேறு சில டெஸ்ட்கு எழுதித் தாரேன்.  மொதல்ல அத எடுத்திட்டு வாங்க... நர்ஸ்ட்ட எல்லாம் சொல்லி இருக்கேன்... என்னென்ன செய்யனுமோ... அவுங்க செய்வாங்க... போங்கஎன்று அனுப்பி வைத்தார்.

  நர்ஸ் அழைத்துச் சென்று பெட்டைக் காண்பித்தார்.  
பணம் ஏதும் வேணுமா வாங்கிக்கங்க சிஸ்டர்...!  எங்கம்மாவை கொஞ்சம் நல்லா பாருங்க...சிஸ்டர்... பிளிஸ்...!
தமிழினியன் கெஞ்சியதை உற்றுப் பார்த்து,   “அரசாங்கம் இந்த வேலை பார்க்கத்தான் எங்களுக்குச்  சம்பளம் கொடுக்கிது... நீ ஒன்னும் காசுதர வேணாம்... இப்படிக் காசு வாங்கினா எங்க குடும்பமெல்லாம் நல்லா இருக்காது... நீ ஒன்னும் கவலைப்படாதே...ஏன்... யாரும் பாத்துக்கப் பொம்பளைங்க இல்லையா!”  

  இல்லீங்க... சிஸ்டர்... எங்களுக்க யாருமில்ல... எனக்கு அம்மா... அம்மாவுக்கு நான்... அவ்வளவுதான்.. எங்க அம்மா கூலி வேலைக்குப் போயிதான் என்ன காலேஜ்ல்ல படிக்க வக்கிது... ரொம்பக்  கஷ்டப்படுற குடும்பம் சிஸ்டர்...” 

  அதான் சிஸ்டர்... நா ஒருத்தி இருக்கேன்ல்ல... கவலைப்படாதே...!
-அந்த நர்ஸின் ஆறுதல் வார்த்தை அவனுக்கு ஒரு தெம்பைக் கொடுத்தது. 
அனைத்து டெஸ்ட்டுக்கும் அவரே செலவு செய்யாமல் எடுக்கச் செய்தார்.  ஸ்கேன்எடுப்பதற்கு இவர்களின் ரேசன் கார்டை வாங்கி  இலவசமாக எடுக்க ஆவன செய்தார். 
                                                                          

  சாப்பிடுறதுக்குச் சாப்பாடு வாங்கி வாறேன்...” -என்று சொல்லித் தமிழினியன் புறப்பட்டான்.

  வேண்டாம்ப்பா... என்னனால சாப்பாட்ட முழுங்க முடியாது... ரொம்பக் கஷ்டமா இருக்கு...!

  சரிம்மா... சாத்துக்குடி ஜுஸ் வாங்கிட்டு வாறேன்...

சிறுது நேரத்தில் ஜுஸைக் கொண்டு வந்து கொடுக்கத்  தங்கம்மாள் அதைப் பருகினாள்.

  அன்று மருத்துவமனையில் கொடுத்த உணவைத்  தமிழினியன் சாப்பிட்டான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த தங்கம்மாளின் கண்ணில் நீர் வழிந்தது.  
  அப்படியே தங்கமாள்  உறங்கிப் போக,  தரையில் படுத்த தமிழினியன் உறங்கிப் போனான்.  

  தமிழினியன் விழித்த பொழுது,  சூரியன் உதித்திருந்த்து.  அம்மாவைப் பார்த்தான் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.  தேநீர் அருந்தாலாம் என்று எண்ணி வெளியில் கடைக்குச் சென்றான். 

  ஸ்ட்ராங்க...டீ ஒன்னு...” - சொல்லிவிட்டு  இன்றைய  செய்தி என்னவென்று அறியத்  தொங்கிக்கொண்டிருந்த வால்போஸ்டரைப் பார்த்தான்.  திருச்சி தீ குடிசை தீயில் எரிந்தது!என்றிருந்தது.  தேநீரை வாங்கிக் குடித்துக் கொண்டே திருச்சியில் எந்தப் பகுதியில் தீப்பிடித்த்து என்று தெரியவில்லையேஎண்ணியவாறு ஒரு தந்தி’  கொடுங்க என்று வாங்கி டீக்கும் சேர்த்துக்  காசைக் கொடுத்தான்.  

  துவாக்குடி செய்தியைத் தேடிப் பார்த்தான்.   எரிந்து கொண்டிருக்கும் வீட்டின்  படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது;   படத்தைப் பார்த்தும் திடுக்கிட்டுப் போனான்.  அது அவனுடைய வீடுதான் படத்தில் வந்திருந்தது. அவனுக்குக்  கையும் ஓடவில்லை,  காலும் ஓடவில்லை.   அவனின் அம்மாவின் பெயரும் அவனின் பெயரும் இடம்பெற்று இருந்தன.  அவர்கள் என்ன ஆனார்கள் என்பதும் அவர்களின் நிலை என்ன என்பதும் தெரியவில்லை.    தீ விபத்திற்கான காரணம் ஏதேனும் முன்விரோதம் காரணமா?  அல்லது இவர்களுக்கு எதிரிகள் யாரும் இருக்கிறார்களா?  என்ற கோணத்தில் காவல்துறை  விசாரணை நடைபெறுகிறது என்று செய்தி வெளியாகி இருந்தது.   

  தமிழினியன் நினைத்துப் பார்க்கையிலே தலை சுற்ற ஆரம்பித்தது.  தண்ணீரை எடுத்து முகத்தைக் கழுவித் தன்னை  ஆசுவாசப்படுத்திக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்றான்.  அம்மா இப்பொழுது விழித்திருந்தாள்.

  எங்கப்பா போயி இருந்தே...?”

  டீ குடிக்கம்மா... இப்ப எப்படிம்மா இருக்கு...?”

  பரவாயில்லப்பா... லேசா வலி இருக்கு...

  எல்லாம் சரியாயிடும்... நீ ஒன்னும் கவலைப்படாதே... சரியா... நா  வீட்டுக்குப் போயி டிரஸ் எடுத்திட்டு வாரேன்...

  சரிப்பா... சீக்கிரம் வந்திடு...என்று மகனை வழியனுப்பி வைத்தாள்.

  நகரப் பேருந்துக்காக நீண்ட காத்திருப்பிக்குப் பின் அவன் பயணிக்கும் ஒரு பேருந்து வந்தது.  அதிகாலை என்பதால் பேருந்துகள் குறைவாகவே இயங்குகின்றன என்று  நினைத்துக் கொண்டான்.  பேருந்து ஆங்காங்கே நிறுத்ததில் நின்ற மெதுவாகச் சென்றது.   வீடு என்ன ஆனதோ?  தான் அன்பாக வளர்த்த ‘டாமிநாய் சங்கிலால் கட்டப்பட்டு இருந்தது.  நாய் என்ன ஆனதோ?  அப்பாவின் பிரேம் போட்ட எரிந்து போயிருக்குமா?   எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கையில்,   பேருந்து அவனின் நிறுத்தத்தில் நிற்க இறங்கியவுடன் வேகமாக  வீட்டை நோக்கி ஓடினான்.  மேல் மூச்சுக்  கீழ்மூச்சு வாங்க  மின்னல் வேகத்தில் வீட்டை அடைந்தான்.

  வீட்டைப் பார்த்த அவனுக்கு ஈரக்கொலையெல்லாம் நடுங்கியது.  வீடு முழுவதும் எரிந்து பொருட்கள் அனைத்தும் நாசமாகிப் போயிருந்தது.  அவனைப் பார்த்ததும் தெருமுழுக்கக் கூடிவிட்டது.  

  எங்கே தமிழ் போயிருந்தா... நைட்டு  பன்னென்டு மணியிருக்கும் வீடு தீப் பிடிச்சு  எரிஞ்சப்ப... பாதி எரியும் போதுதான் அக்கம் பக்கத்தில பாத்து பயர் சர்வீஸ்க்கு போன் பண்ணி இருக்காங்க... வண்டி வர்றதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போயிடுச்சு...  வெளியில வேற கதவு சாத்தியிருந்திச்சா...   நாங்க  பயந்தே போய்ட்டோம்... உங்கள உள்ள வச்சு யாரும் கொளுத்திட்டாங்களோன்னு... நல்ல வேளை நீங்க யாரும் உள்ள இல்ல...ஆமா எங்க போனீங்க...? ”  பால்ய நண்பன் தினேஷ்பால் அக்கறையுடன் பேசினான்.

  இல்லடா... அம்மாவுக்குத்  திடீர்னு உடம்பு சரியில்ல... ஜி.எச்.சுக்கு கூட்டிட்டு போயி அட்மிட் பண்ணினேன்.

  நல்ல வேளை... நீங்க பொழைச்சீங்க... எந்தச் சாமி புண்ணியமோ...?”
                                                                                      

எரிந்த குடிசைக்குள் நுழைந்து பார்த்தான்.  மரபீரோ என்பதால் அதுவும் எரிந்து போய் அதில் இருந்த சான்றிதழ்கள் துணிகள் அனைத்தும்  எரிந்து போயிருந்தன.   ‘டாமிகரிக்கட்டையாகி தரையில் கிடந்த்தைப் பார்த்ததும் அழுதே விட்டான்.  வீடு எரிந்ததற்ககான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப்பான்.  உடனடியாகத் தமிழினியனின் மூளை வேலை செய்யவில்லை; சிறிது நேரத்திந்குப் பிறகு மீண்டும் மருத்துவமனையை நோக்கிப் புறப்பட்டான்.


  ங்கம்மா  மகனின் வரவுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள். தமிழினியன் வந்தவுடன்,  “ஏம்ப்பா... துணி ஒன்னும் எடுத்திட்டு வரலை...? தமிழ்... டாக்டர் வந்தாரு... ஒன்னக் கேட்டாரு...  நீ வந்தவுடனே வரச்சொன்னாரு..

  சரிம்மா...டாக்டரைப் பார்த்துட்டு வர்றேன்...டாக்டரின் அறைக்குச் சென்றான்.

  வணக்கம்... டாக்டர்...”  தமிழினியன் இருகரம் எடுத்துக் கும்பிட்டான்.

  வாங்க... எங்கே வெளியே போயிருந்தீங்களா...?” ‘ஆமாஎன்பதைப்போலத் தலையாட்டினான்.

  உட்காருங்க...ஒங்க அம்மாவோட எக்ஸ்-ரே, ரிப்போர்ட் எல்லாம் வந்திடுச்சு... அதான் ஒங்கள வரச் சொன்னேன்...”  ‘என்ன ரிசல்ட்?’ என்று அவன் கண்கள் கேட்டன.

  ரிசல்ட் எல்லாத்தையும் பார்க்கும் போது... ஒங்க அம்மாவுக்கு உணவுக்குழாயில கேன்சர் இருக்குமான்னு சந்தேகம் இருக்கு.  மைனர் ஆப்ரேசன் செய்து கட்டிய கொஞ்சம் சாம்பிள் எடுத்து ‘பயாப்ஸிடெஸ்ட்க்கு அனுப்பனும்.   தமிழினியன் இதைக் கேட்ட மாத்திரத்தில மயங்கிச் சரிந்தான்.  டாக்டர் அவனின் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தார்.

  “பயப்படாதிங்க... கேன்சரா இருக்கமான்னு டவுட்டுதான்.... ‘பயாப்ஸி டெஸ்ட் எடுக்கனுமுன்னு  ஒங்க அம்மாட்ட சொல்லுங்க... நாளைக்கு ஆப்ரேசன் ... அதைச்சொல்லத்தான் வரச்சொன்னேன்...
டாக்டரின் அறையிலிருந்து தமிழினியன் சிலைபோல வெளியே வந்தான்.

                                                                            -வ(ள)ரும்...படிக்க  ‘கிளிக்’ செய்க

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)


நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.24 கருத்துகள்:

 1. கடைசி வரியில் அதிர்ச்சி தமிழினியனுக்கு மட்டுமல்ல எனக்கும்தான் மணவையாரே..
  தமிழ் மணம் இணைப்புடன் ஒன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   தங்களின் முதல் வருகை எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறது... எப்படி ஜி?

   தமிழ் மணக்க இணைத்து மகிழ்ந்ததுடன் மனமார்ந்த வாக்கிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. ஐயா வணக்கம்

  நாங்க நினைக்காத நெஞ்சமாய்த்தான் இருக்கிறது.

  நீங்கள் அருகிருந்து சொல்வது போல இருக்கிறது உங்களிடன் நடை...

  தொடர்ச்சியை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   நீங்க நினைக்காத நெஞ்சம்?! தங்களின் பாராட்டிற்கும் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. இப்படி திக்குதிக்குனே முடிக்கிறீங்களே:((( கான்சரா இல்லாம போகட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புச் சகோதரி,

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. "ரிசல்ட்" பற்றி அறிய ஆவலாக இருக்கிறது ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. ம்ம் ஒரே சோகமா போகுது...கான்சரா இருக்கக் கூடாதுனு நினைச்சாலும் கதாசிரியர் அதைக் கான்சர் கட்டி, அதுவும் பரவக் கூடியது என்று டிஆர்பி ரேட் ஏற சொல்லுவாரோ என்று.....ஹஹ்ஹஹஹ

  அருமை! தொடர்கின்றோம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பாவம் தமிழினியனின் அம்மா!
  தமிழினியனும்தான்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   உண்மைதான்; இருவருமே பாவம்தான். தங்களின் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. முடிந்தவரை கேன்சர் குணமாகும் வ்கையில் கதையின்போக்கு அமையவேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. மனம் திக் திக் என்கிறது ஐயா
  தொடருங்கள் காத்திருக்கிறேன்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள கரந்தையாரே!

   தங்களின் அன்பிற்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி பாவம் தமிழினியனுக்கு..... தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. போதும் ஐயா அவனுக்கு அதிர்ச்சி,
  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...