வியாழன், 1 ஜனவரி, 2015

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!                இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


   தாலாட்ட நேரமில்லை


மணவை ஜேம்ஸ்
                                     பல்லவி


தாலாட்ட நேரமில்லை... பாலனே எழுந்திடு...
பணிசெய்யப்  புறப்படு...  எழுந்திடு!    புறப்படு...!

             அனுபல்லவி

மனித வடிவில் அவதரித்த
அன்பு வடிவம்  யேசுஅவர்
ஏழைக்கு ஏற்றம் தந்த அந்த
மாட்டுக் கொட்டில் தேவனவர்                              
                                                                                                                                      (தாலாட்ட...

              சரணம்

புன்னகை பூத்தே விழிக்கின்றார்
மானுடம் காக்க இமைக்கின்றார்
புனிதம் மலர வாழ்கின்றார்
குளிரில் குடிலில் இருக்கின்றார்
பாவம் போக்கப் பார்தனிலே
பாமர  னாக   அவதரித்தார்!    
                                                                                                                                      (தாலாட்ட...


மரியின் மடியில் தவழுகின்ற
மன்னன் உலகின் ஒளியல்லவோ?
வாடும் உலகை மீட்க அவர்
வாழும் வழியைக் காட்ட வந்தார்
அன்பை உலகில் விதைக்க வந்த
அவரை வாழ்த்திப் பாடுவோமே....!
                                                                                     
                                                                                                                                    (தாலாட்ட...
                                                                                                                                 
                                                                                                                                 
                                                                
                                                                                                                           

========================================================================

கடலில் ...!


மணவை ஜேம்ஸ்ஏலே ஏலோ... ஏலேலோ...ஏலே ஏலோ...!
ஏலே ஏலோ... ஏலேலோ...ஏலே ஏலோ...!

              பல்லவி

நீலக்கடல் அலைகளில் நீந்துகின்ற
படகுகளே...யேசுமகன் பிறந்திருக்கான்
துடுப்பசைத்து துள்ளித்துள்ளிப்
படகை  ஓட்டி  வாருங்களே!     
                                                                                                                                  (ஏலே ஏலோ...
   

                                                                     


                                                           
                   சரணம்                                                
         
கடல்மீது நீ நடக்க...
புயலதை நீ அடக்க...
புறப்படு பொன்மகனே
பூமியெலாம் உனைவணங்கும்...!
சின்னவனே சின்னவனே
சேதியென்ன சொல்ல வந்தாய்?
அன்புதனை விதைத்துவிட்டு
பாவங்களை அறுக்க வந்தாயோ?
கானம்பாடும் வானம்பாடி வாழ்த்திபாடுமே...!
                                                                                                                 
                                                                                                                      (ஏலே ஏலோ...                             

                        

அலைஓசை தாலாட்ட
தென்றல்வந்து சீராட்ட
கலங்கரை விளக்காக
நட்சத்திரம் வழிகாட்ட
சந்திரனின் சூரியனின்
மன்னனவன் மண்ணில்வந்தான்...
வேண்டும்வரம் வேண்டிடுங்கள்...
மீண்டும்அவன் தந்திடுவான்...
தங்கமகன் தங்கமீனும் தந்திடுவானே...!    
                                                                                                                                 (ஏலே ஏலோ...
                                                                                                                             

                                                                                                                                  

========++++++++========
                                                                                                       -மாறாத அன்புடன்,
                                                                                                          மணவை ஜேம்ஸ். 
                                                           

17 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  அன்புடன் DD...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
   -மாறாத அன்புடன்,
   மணவை ஜேம்ஸ்.

   நீக்கு
 2. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 3. அன்புள்ள அய்யா,

  எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
  -நன்றி.

  பதிலளிநீக்கு
 4. சகோதரர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.

  பதிவினில் படங்களும், கவிதை வரிகளும் நன்றாக உள்ளன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்கள் & குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

   தங்களின் பாராட்டுக்கு நன்றி.

   நீக்கு
 5. அருமை, அருமை நண்பரே...
  இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. அன்புள்ள ஜி,

  மிக்க நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் ஐயா!

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  தாலாட்ட நேரமின்றித் தந்தை அழைக்கிறார்
  ஏலேலோ பாடு எழுந்து!

  அருமையான பாடல்கள் இரண்டும்!
  வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் வாழ்த்திற்கு நன்றி.

   நீக்கு
 8. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
  துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

  வலைப் பூ நண்பரே!

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
 9. அன்புள்ள அய்யா,

  பின்னூட்டம் வெளியாவதில் ஏதோ சிக்கல் இருக்கிறது. அதனால் வெளியிடும் போது வெளியாகவில்லை. விரைவில் சரியாகி விடும்என்று எண்ணுகிறேன்.
  -நன்றி.
  மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்,

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் ஐயா
  சிறப்பான வரிகள் ஐயா. கவிதையின் வடிவில் ததும்பும் மகிழ்ச்சி படிப்பவர்கள் மீதும் அப்பிக் கொள்வது சிறப்பு. தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் எனது அன்பான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. அன்புள்ள அய்யா,

  தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. ஆஹா! புத்தாண்டுக்கு நல்ல பாடல் தான்:) வாழ்த்துகள் அண்ணா!

  பதிலளிநீக்கு
 13. எப்படி தங்கள் பதிவுகள் விட்டுப் போயின என்று தெரியவில்லை நண்பரெ!

  அருமையான பாடல்கள்! மெட்டுப் போடலாம் போல இருக்கின்றது...வரிகளும் அருமை! னண்பரே!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...