புதன், 9 டிசம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (9)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (9)

  சசிரேகாவின் வீட்டின்  காலிங் பெல்லை ரோஸி அழுத்தினாள்.  வேலைக்காரி அலமேலு கதவைத் திறந்தாள். 


   ஈஸிச்  சேரில் சாய்ந்தவாறு  செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்த ரெங்கராஜ் ரோஸியை ஏற இறங்கப் பார்த்தார்.  அறைக்குள்ளிருந்து வெளியே வந்த  சசிரேகா ஒரு கணம் திகைத்துப் போய் நின்று,  சட்டெனச் சுதாரித்துக் கொண்டு...

  “வா... ரோஸி... நல்லா இருக்கியா... வா...வா...” அன்போடு வரவேற்றாள். 

  “நீ...யாரு...?” ரெங்கராஜின் அதட்டலான கேள்விக்கு என்ன சொல்வது என்று ரோஸி யோசித்த பொழுதே  சசிரேகா... “என்னோட காலேஜ் மெட்” என்றாள்.

  “ஓ கோ...என்ன விசயம் வந்தது...?”  என்றார் ரெங்கராஜ்.

  “திடீர்ன்னு... காலேஜுக்கு வரலையே... என்னான்னு பாத்து கேட்டிட்டு போகலாமுன்னு...!”  பயந்து தயங்கித் தயங்கிப் பேசினாள் ரோஸி.

  “இனி சசி காலேஜுக்கெல்லாம்  வரமாட்டாள்... சசியோட  அத்த மகனுக்கும் இவளுக்கும்  வர்ற ஞாயிற்றுக்கிழமை கல்யாணம்... கல்யாணம் முடிஞ்ச கையோட ... உடனே அமெரிக்கா போயிடுவாங்க... இந்தா பத்திரிக்கை...!”  எழுந்து பத்திரிக்கையை எடுத்துக் கொடுத்தார்.  அந்தப் பத்திரிக்கையை வாங்கிக் கொண்டாள் ரோஸி. 
                                                       
  “கன்கிராட்ஸ்”  என்று புன்முறுவலுடன் ரோஸி கூறினாள்.

  “காபியா...டீயா...” என்று கேட்டாள் சசிரேகா.

  “ஏதாவது...” என்றாள்  ரோஸி.  சசிரேகா அலுமேலு அம்மாவிடம் காப்பி கொண்டு வாங்க என்றாள்.

  “சரிம்மா...” என்று அடுக்களைக்குள் புகுந்தாள் வேலைக்காரி அலமேலு.

  “காலேஜு பிரண்ட்ஸ்ட்ட எல்லாம் இந்தப்  பத்திரிக்கையே எல்லாத்துக்கும் கொடுத்ததா நினைச்சு...  முக்கியமானவங்கள எல்லாம்  வரச்சொல்லு... ஏன்னா  எல்லாத்துக்கும் சசியால பத்திரிக்கை  தனித்தனியா வைக்க நேரமில்ல... இந்தா இன்னும் அஞ்சாறு பத்திரிக்கை வச்சுக்க...”  ரெங்கராஜ் மேலும் சில பத்திரிக்கையைக் கொடுக்க வாங்கிக் கொண்ட ரோஸி பத்திரிக்கையைப் பிரித்துப் படித்தாள்.

  ரெங்கராஜ் இருவரையும்  ஈசிச்சேரில் அமர்ந்தவாறே பார்த்துக் கொண்டிருந்தார்.  அலமேலு  காபி கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கிக் குடித்தாள்.

  காபி குடித்த டம்ளரை ரோஸி கொடுக்க அதை வாங்கிக் கொண்டு அடுக்களைக்குள் சென்றாள் அலமேலு;  அப்பொழுது  டெலிபோன் மணி ஒலித்தது.  ரெங்கராஜ் வேகமாகச் சென்று   எடுக்கச் சென்றார்.  ரோஸி தன் பேக்கில்  இருந்த லெட்டரை எடுத்துச் சசிரேகாவின் கையில் திணித்தாள்;  உடனே தனது ஜாக்கெட்டிற்குள்  மறைத்தாள்.

  “ஹலோ...யார் பேசுறது...?” என்று கேட்டுக் கொண்டே  இவர்கள் இருவரையும் நோட்டமிட்டார்  ரெங்கராஜ்.
                                                     
  “யாரு... மாப்பிள்ளையா... சொல்லுங்க... ... இன்னக்கிப் புடவை...நகையெல்லாம் எடுக்கப் போகணுமா...?  என்ன உடனே புறப்படணுமா...?  சசிட்ட சொல்றேன்...” ரிசிவரைக்  கையால் மூடிக்கொண்டே அப்பா ரெங்கராஜ் சசியிடம் கேட்டார்....

  “உடனே மாப்பள கிளம்பச் சொல்றார்... நகை புடவை எடுக்க...”

  “இன்னக்கி எனக்கு உடம்பு சரியில்ல....”

  ரெங்கராஜ் டெலிபோனில் பேசினார் “மாப்பிள  அப்புறம் நான் பேசுறேன்...”  என்று  ரிசிவரை வைத்தார்.

  “சரி... சசி... நா அப்ப கிளம்புறேன்...  நா வர்றேம்ப்பா...” என்று விடைபெற்று ரோஸி  வெளியே வந்தாள்.

  த்தை  வீட்ல புடவை நகை எடுக்கக்  கூப்பிடுறாங்க...அடம்பிடிக்காம போயிட்டு வாம்மா...”

  “நா போகலை... எனக்கு உடம்பு சரியில்ல...என்னால முடியாது”

  “மாப்பிளைட்ட என்ன சொல்ல...?”

  “என்னக் கேட்டா...?” 

  “உன்னக் கேக்காம...?”

  “என்னக் கேட்டா எல்லாம் செய்றீங்க...?”

  “உன்னக் கேட்டு எல்லாம் செய்ணுங்கிற அவசியம் இல்ல...!”

  “அப்ப இப்ப மட்டும் என்ன ஏ கேக்குறீங்க...?  உங்க இஷ்டத்துக்குச் செய்யுங்க...” என்று  சசி தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.  கட்டிலில் அமர்ந்து மறைத்து வைத்திருந்த  கடிதத்தை எடுத்துப் படித்தாள்.

 ‘அன்பிற்கினிய சசியே!  என் சகியே!

  உனது நிலையை அறிந்தேன்.
  எனது  நிலையை நன்றாக அறிவாய்...!
  உன்னைத்  திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
  என்னை நம்பி நீ வருவதாக இருந்தால்
  நாளை மறுதினம் ‘புதன் கிழமை’ இரவு  பன்னிரண்டு மணிக்கு
  வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் பேருந்து நிலையம் வரவும்...
  உனக்காகக் காத்திருக்கிறேன்...
  ஏதாவது வேலை செய்து உன்னைக் கண் கலங்காமல் காப்பாற்றுவேன்...
  என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு...!
  என்னை நம்பி நீ வரலாம்... உன் வரவுக்காகக் காத்திருப்பேன்...!


உன் அன்புத் தமிழ்.


கடிதத்தைப் படித்தவுடன் சசிரேகாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது; தலையணைக்கடியில் கடிதத்தை மறைத்து வைத்துக் கட்டிலில் படுத்தாள்.

                                                                                 
  ‘வருகின்ற ஞாயிற்றுக்கிழமை  கல்யாணத்திற்காக அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டு  இருக்கும் வேளையில் இவ்வாறு செய்தால் அப்பாவிற்கும் அத்தை வீட்டாருக்கும் சொல்லொண்ணா தலைக்குனிவு ஏற்படுமே!   சொந்த பந்தங்களெல்லாம்  தூற்றி விடுவார்களே...!
தமிழினியன் குறிப்பிட்டதைப் போல நாம் நாளை வீட்டை விட்டுப் புறப்பட்டால் அப்பாவை எதிர்த்து வாழ்ந்திட முடியுமா?  நம்மை அப்பா வாழ விட்டு விடுவாரா...?   தமிழினியனிடம் தன் மனைதைப் பறிகொடுத்துக்
 காதலித்து விட்டு,  இன்னொருவருடன் எப்படி வாழமுடியும்?   அப்படி வாழ்வது என்னை நானே ஏமாற்றிக் கொண்டு அவரையும் ஏமாற்றுவது ஆகாதா?  எதற்கும் துணிந்துதானே காதலில் விழுந்திருக்க வேண்டும். ‘ஏதாவது வேலை செய்து  கண் கலங்காமல் காப்பாற்றுவேன்...’
என்கிறார் தமிழினியன்;    .  வீட்டைவிட்டு வெளியில் சென்றால் கடுமையாகத்தான் போராட வேண்டி இருக்கும்!  அவரை மட்டும் வேலைக்குப் போக விட்டிட்டு நான் என்ன சும்மாவா இருப்பேன்...?  நானும் வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிச்சுக் குடும்பத்தக் காப்பாற்ற மாட்டேனா...? ’ என்ற எண்ணங்கள் அவளுடைய மனதில் மாறி மாறி  வந்தன.

  சசிரேகா புரண்டு புரண்டு படுத்தாள்;  நீண்டநேரம் ஆகியும் தூக்கம் வரவே இல்லை.  என்ன செய்வது  என்று யோசித்தாள்.

            தொலைக்காட்சியைப்  பார்க்க  முனைந்தான் சசிரேகா... இந்தப் பாடல் ஒலித்தது.

                                                                                                                                   


                                                                                                                                 காணொளி                                                  

                                                                                                                                          -வ(ள)ரும்...

                                                                                                                           

                                                                                                                                           .

 
படிக்க  ‘கிளிக்’ செய்க                                                                                                                                                                                                                                                          
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (7)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (8)-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

16 கருத்துகள்:

 1. ஆஹா நல்லாருக்கே ...முன்பு உள்ளதையும் விரைவில் படிக்கின்றேன் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் தொடரைத் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. தொடர்கதைக்கே உரிய திக் திக் மனபதைபதைப்போடு தொடர்கிறேன் ஐயா.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தாங்கள் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. சசிரேகா எடுத்த முடிவை அறிய காத்திருக்கிறேன் மணவையாரே...
  தொலைக்காட்சியில் ஒரு பாடலுடன் நிறுத்தி விட்டார்களே....
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   தங்கள் வருகைக்கும் வாக்கிற்கும் காத்திருப்பிற்கும் மிக்க நன்றி. தொலைக்காட்சியில் தொடர்ந்து பாடல் பார்க்கலாம்.

   நீக்கு
 4. கடைசியாக ,சங்கீதா பாடலைக் கேட்கும் சசி ரேகா எடுத்த முடிவை அறிய காத்திருக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜீ,

   சங்கீத(தா) ஜாதி முல்லை காணவில்லை
   கண்கள் வந்தும் பாவை இல்லை பார்வையில்லை
   ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை

   தங்களின் கருத்திற்கும் காத்திருப்பிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. ஆகா
  அருமை
  திக் திக் திக்
  தொடர்கிறேன் ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள கரந்தையாரே!

   தங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. என்ன முடிவு சசிரேகா எடுத்தாளோ அறிய ஆவல்....தொடர்கின்றோம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் ஆவலுக்கும் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. அன்புள்ள பெரும்புலவர் அய்யா,

   தாங்கள் தொடர்வதற்கு நெஞ்சார்ந்த நன்றி. நலம். நாடுவதும் அதுவே!

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...