கவிமதியின் கவிதை வரிகள்....
மூடிமறைத்துப் பேச
அறியார்
மூடப் பழக்கம் எதுவும்
தெரியார்
அறியார்
மூடப் பழக்கம் எதுவும்
தெரியார்
நூலார் திமிர் அறுத்த
வாளார்
நூற்றாண்டு கடந்து வாழும்
வரலாறார்
வாளார்
நூற்றாண்டு கடந்து வாழும்
வரலாறார்
எளிதாய்க் கடந்து செல்லும்
வழியார்
ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த
விழியார்
வழியார்
ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த
விழியார்
தெளியார் அறிவு நெய்த
தறியார் தெளிந்தோருக்குத் தெளிவான
குறியார்
தறியார் தெளிந்தோருக்குத் தெளிவான
குறியார்
உலகத் தமிழருக்கு
உரியார்
உணர்ந்தால் விளங்கும்
மொழியார்
உரியார்
உணர்ந்தால் விளங்கும்
மொழியார்
மநூ வேதம் கொளுத்திய
திரியார்
மாதருக்குத் தெளிவான
ஒலியார்
திரியார்
மாதருக்குத் தெளிவான
ஒலியார்
தேடிப் படிக்கச் சிறந்த
நெறியார் - தூய
தாடி முளைத்த
தந்தை பெரியார்.
நெறியார் - தூய
தாடி முளைத்த
தந்தை பெரியார்.
தந்தை பெரியாரின் புரட்சி மொழிகள்:
- மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
- பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி.
- மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்.
- விதியை நம்பி மதியை இழக்காதே.
- மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
- மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
- பிறருக்குத் தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
- பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து.
- பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
- தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்.
- கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
- பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
- ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
- ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
- வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
- ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
- என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்குத் தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
- எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவைக் கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
- மற்றவர்களிடம் பழகும் விதத்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.
“நான் சொல்கிறேன் என்பதற்காக, எதையும் ஏற்றுக்கொள்ளாதே, உன் பகுத்தறிவைக் கேட்டுப் பார், சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள், தவறு என்று பட்டால் ஏற்காதே, விட்டுவிடு” என்று பெரியார் சொல்வார்.
பகுத்தறிவை ஊட்டும் பணிக்கு வேறு யாரும்முன்வராததால் நான் செய்கிறேன். இந்தச் சமுதாயம் ஏற்றத்தாழ்வுகள் இன்றிச் சமதர்மசமுதாயமாக மாறி விட்டால் எனக்கு வேலை இல்லை என்றார்.
பண்பு!
ஒருமுறை கல்கி தனது இல்லத் திருமணத்துக்குத் தந்தை பெரியாரை அழைத்திருந்தார். காலையிலேயே பெரியார் வருவதாக இருந்தது. இருந்தாலும் அவர் வரவில்லை. இதனால் கல்கிக்குச் சற்று வருத்தமாகப் போய்விட்டது.
ஆனால் திடீரென்று மாலையில் பெரியார் திருமண வீட்டுக்கு வந்தார். கல்கிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.
பெரியாரிடம், கல்கி, ""ஏன் காலையிலேயே வரவில்லை'' என்று கேட்டார்.
அதற்குப் பெரியார், ""நான் கருப்புச் சட்டை அணிபவன். உங்கள் இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்போது, உங்கள் சுற்றத்தாருக்கு அது அபசகுனமாகத் தோன்றும். எனவேதான் காலையில் வராமல் இப்போது வந்தேன்'' என்று விளக்கமளித்தார்.
பெரியாரது உயர்ந்த பண்பு கண்டு அனைவரும் வியந்து போனார்கள்.
சிக்கனம்:
ஒருமுறை தந்தை பெரியார் கோவையிலிருந்து ஈரோடு வருவதற்காக
ஜி.டி.நாயுடு, பெரியாருக்கு முதல் வகுப்பில் ரயிலில் செல்ல டிக்கெட்
வாங்கிக் கொடுத்துவிட்டு, அவரும் அதே ரயிலில் வேறு ஒரு
பெட்டியில் பயணம் செய்து வந்தார்.
பெட்டியில் தேடினார். அங்கு அவரைக் காணாமல்
அடுத்தடுத்த
அடுத்தடுத்த
பெட்டிகளில் தேட ஆரம்பித்தார்.தேடிக் கொண்டு வருகையில்,
மூன்றாவது வகுப்புப் பெட்டியில் பெரியார்
இருப்பதைப் பார்த்து, ""ஏன்?
இருப்பதைப் பார்த்து, ""ஏன்?
முதல் வகுப்பு டிக்கெட்தான் வாங்கிக் கொடுத்தேனே... அதில் வராமல்
மூன்றாம் வகுப்பில் பயணம் செய்து வருகிறீர்களே!'' என்று
ஆச்சரியப்பட்டார்.
"நாயுடு சார், இந்தப் பெட்டியும் நாம் போக
வேண்டிய இடத்துக்குத்தானே போகிறது.
எதற்கு வீண் செலவு என்று
டிக்கெட் பரிசோதகரிடம் முதல் வகுப்பு
டிக்கெட்டை ஒப்படைத்துவிட்டு மூன்றாம் வகுப்பு டிக்கெட்டை
வாங்கிக் கொண்டேன்.. மீதிப் பணமும் பெற்றுக் கொண்டேன்!
நாமும் சாதாரண மனிதர்கள்தானே சார்...''
என்றார் பெரியார்.
பெரியாரின் சிக்கனத்தைக் கண்டு நாயுடு வியந்து போனார்.
பெரியார் செலவு செய்வதில் சிக்கனம் சமுகத்திற்கோ கொடைவள்ளல்:
திருச்சி,பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி
பெரியார், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒரு கல்லூரி துவங்க விரும்பினார். தனது நிலம் 20 ஏக்கரையும், ரூ.5 லட்சம் நிதியையும் அரசிடம் ஒப்படைத்தார். பெரியார் தனக்குத்தான் சிக்கனமாகச் செலவு செய்வார். ஆனால், சமூகத்துக்கு வாரி வழங்கும் கொடை வள்ளல்.
ஒரு பெரியவர் பெரியாரிடம் கேட்டார்...
"பொதுநலம் என்றால் என்ன? சுயநலம் என்றால் என்ன?'' என்று கேட்டார்.
உடனே பெரியார் சட்டென்று, ""மழை பெய்வது பொதுநலம்! குடை
பிடிப்பது சுயநலம்!'' என்று பளிச்சென்று பதிலளித்தார்.
ஒருமுறை தந்தை பெரியாரிடம் கேட்டார்கள்:
" அய்யா.. கடவுள் இல்லை, இல்லை என்று சொல்கிறீர்களே,அவர் உங்கள் முன் வந்தால் என்ன சொல்வீர்கள்?” என்று...
பெரியார் தயக்கமின்றிப் பதில் சொன்னார்.
"கடவுள் இருக்கார்னு சொல்லிட்டுப்போறேன்,!” என்றார்.
- தந்தை பெரியாரின் கொள்கை:
கடவுள் இல்லை
கடவுள் இல்லை,
கடவுள் இல்லவே இல்லை,
கடவுள் இல்லவே இல்லை,
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்,
கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன்,
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி
கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன்,
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி
விடையைத் தேடும் பகுத்தறிவு வினாக்கள்:
நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்குக் கோயில் ஒரு கேடா?
எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?
எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?
அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?
அன்பே உருவான கடவுளுக்குக் கொலைக் கருவிகள் எதற்கு?
ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?
மயிரை (முடி) மட்டும் கடவுளுக்குக் காணிக்கை
தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?
நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?
எல்லாம் அறிந்த கடவுளுக்குத் தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை?
அய்யப்பனை நம்பி கேரளாவுக்குப் போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?
அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?
பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?
‘சிவாயநம’ என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தைத் தொடுவார்களா?
-
(இன்று தந்தை பெரியாரின் 137-வது பிறந்த நாள்)
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
பிரமாதம்!
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
அவர் கூறிய, சிந்திக்க வேண்டியனவற்றைச் சிந்தித்தால் முன்னேற வாய்ப்புண்டு. நல்ல தொகுப்பு.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்கு“நான் சொல்கிறேன் என்பதற்காக, எதையும் ஏற்றுக்கொள்ளாதே, உன் பகுத்தறிவைக் கேட்டுப் பார், சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள், தவறு என்று பட்டால் ஏற்காதே, விட்டுவிடு” என்று பெரியார் சொல்வார். ஆமாம் அய்யா...சிந்திக்க வேண்டியனவற்றைச் சிந்தித்து அதன்படி நடந்தால் நாமும் முன்னேறலாம்... நாடும் முன்னேறும்.
தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
என்னவொரு சிறப்பான தொகுப்பு ஐயா... நன்றி... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅன்புள்ள வலைச்சித்தருக்கு,
நீக்குதங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அருமை
பதிலளிநீக்குதந்தைப் பெரியார் இல்லையேல் நாம் எங்கே?
பெரியாரின் நினைவினைப் போற்றுவோம்
தம +1
அன்புள்ள கரந்தையாருக்கு,
நீக்குபெரியாரை நினைத்துப் போற்றுவோம். தங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
இனி மேல் யாரிந்த பெரியார் என்று யாருமே கேட்க மாட்டார்கள் :)
பதிலளிநீக்குஅன்புள்ள ஜீ,
பதிலளிநீக்குபெரியார்-இனி
தெரியார்-என
மொழியார்!
தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
நான் சொல்கிறேன் என்பதற்காக, எதையும் ஏற்றுக்கொள்ளாதே, உன் பகுத்தறிவைக் கேட்டுப் பார், சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள், தவறு என்று பட்டால் ஏற்காதே, விட்டுவிடு” என்று பெரியார் சொல்வார்.
பதிலளிநீக்குஇதைவிட ஒரு பெருந்தன்மை உண்டா ?
அன்புள்ள ஜி,
நீக்குஆமாம். தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே! தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
நல்ல தொகுப்பு ஐயா!
பதிலளிநீக்குதெரிந்து தெளிந்துகொள்வோம்!
வாழ்த்துக்கள்!
த ம +1
அன்புள்ள சகோதரி,
நீக்குதங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அருமையான தொகுப்பு நண்பரே! அவரது பெருந்தன்மையும், பகுத்தறிவும் பளிச்! அருமை அருமை! இத்தனை நாள் உங்கள் தளம் ஏனோ வரவில்லை. இன்று மீண்டும் எங்கள் இடுகை வழி வந்த போது வந்துவிட்டது....
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
வணக்கம் ஐயா,
பதிலளிநீக்குதாமதத்திற்கு வருந்துகிறேன்.
அருமையான தொகுப்பு,,
அவரின் நினைவினைப் போற்றுவோம், அவர் இல்லை என்றால் எம் படிப்பு என்பது??????????
வாழ்த்துக்கள்.
அன்புள்ள சகோதரி,
நீக்குதங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.