இணையத் தமிழை எளிதாக்குவோம்!
கணினி:மனிதனின் மூளையால் கண்டுபிடிக்கப்பட்ட கணினி, மூளையையும் விஞ்சி விட்டது. 1983 ஆம் ஆண்டு்த் தமிழ்க் கணினி வல்லுநர்கள் , தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர். “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்திடல் வேண்டும்” என்ற பாரதியின் கனவை இன்று ‘கணினி’ நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.
தமிழில் மென்பொருள்:
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர், கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கே வசதி கிடையாது. தமிழ் எழுத்துருக்கவிசைப்பலகைகள் உருவாக்கப்படவில்லை. தமிழ் உரையை ரோமன் எழுத்துகளில் உள்ளீடு செய்து, அதைத் தமிழ் எழுத்துருக்களில் மாற்றும் வசதி உருவாக்கப்பட்டது.
1984ஆம் ஆண்டு கனடாவில் வாழும் முனைவர் ஸ்ரீநிவாசன் என்பவரால் தமிழில் முதலில் மென்பொருட்களில் ஆவணங்கள் எழுதும் ஆதமி (Adami) உருவாக்கப்பட்டது. இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக ‘ஆதவின்’ என்ற மென்பொருளும் MS Windows இயங்கு தளத்தில் பயன்படக் கூடியதாகப் பின்னாளில் உருவாக்கம் பெற்றது.