12.10.1991 அன்று நான் எழுதி இயக்கிய ‘புதிய உடன்படிக்கை’ நாடகம் திருச்சி ரசிக ரஞ்சனா (ஆர்.ஆர்.) சபாவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு சிறந்த நாடகத்திற்கான முதல் பரிசைப் பெற்றது. மேலும் சிறந்த கதை வசனம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகருக்கான (தமிழாசிரியர் திரு.மனுவேல்ராஜ்) முதல் பரிசுகளைப் பெற்றது.
முதல் பரிசு பெற்ற 1991ஆம் ஆண்டு திருச்சி ரசிக ரஞ்சனா (ஆர்.ஆர்.) சபாவில் நடந்த எனது ‘புதிய உடன்படிக்கை’ நாடகத்தில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நடிகை T.R. ராஜேஸ்வரிக்கும் நாடகம் நடத்த அனுமதி அளித்த திருச்சி, ஆர்.சி. மேனிலைப்பள்ளி மேனாள் தலைமையாசிரியர் அருட்தந்தை S. தாமஸ் அடிகளார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப் பெருமைப்படுத்தி கெளரவித்த மதுரை பேராயர் மேதகு மரியானுஸ் ஆரோக்கியசாமி, திருவாளர் ஆசா (எ) ஆரோக்கியசாமி Ex.M.L.A., கவிஞர் அமலன் அய்யா அவர்களுக்கும் நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.