வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

பார்வையில்லாப் பாடகி!


 பார்வையில்லாப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி!

வைக்கம் விஜயலட்சுமி காயத்ரிவீணை எனும் அரியதோர் இசைக்கருவி இசைப்பதில் தேர்ந்தவரும் திரைப்படப் பின்னணிப் பாடகியும் ஆவார். செல்லுலாய்டு’ என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக இவர் திரைத்துறையில் அறிமுகமானார்.
   


1981 ஆம் ஆண்டில் விஜயதசமி நாளன்று முரளீதரன், விமலா இணையருக்கு ஒரே மகளாய்ப் பிறந்தவர் விஜயலட்சுமி. இவர் பிறந்த இரண்டொரு நாட்களுக்குப் பிறகு இவரது பெற்றோருக்குத் தங்கள் மகள் தீர்க்கவியலாப் பார்வைக் குறைபாடு பெற்றிருப்பது தெரிய வந்தது. பின்னர் இவர்களது குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. மிகச்சிறுவயதிலேயே ஒலிநாடாக்களில் வரும் பாடல்களை அப்படியே இராகம் தாளம் பிறழாமல் பாடும் விஜயலட்சுமியின் திறனைக் கண்ட அவர் தந்தை எம். எஸ். அம்மா, ஜேசுதாஸ், மகாராஜபுரம் சந்தானம்  ஆகியோரின் செவ்வியல் ஒலிநாடாக்களைக் கேட்கும்படிச் செய்தார்.
சிறுவயதில் கிடைத்தவொரு வீணையில் பாட்டு வாசிக்கப் படித்தார் விஜயலட்சுமி. பின்னர் இவரது தந்தை ஒற்றைக் கம்பி வீணை ஒன்றை அமைத்தளித்தார். இதன் காரணமாக இவருக்கு ஒற்றக்கம்பி வீணை காயத்ரி என்ற பெயர் கிட்டியது.  குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே இந்த வீணைக்குக் காயத்ரிவீணை என்னும் பெயரை அளித்தவர்.



விஜயலட்சுமிக்கு பார்வை பறிபோனாலும் 'குயில் ' போன்ற குரலுடன்  எம்.எஸ்.வி, இளையராஜாவின் பாடல்கள்தான் விஜயலட்சுமியின் குரல் வளத்துக்கு மேலும் தீனி போட்டு வளர்த்தன.


விஜயலட்சுமியின் மானசீக குரு  ஜேசுதாஸ். ஆறாவது வயதிலேயே  விஜயலட்சுமி தனது குருநாதர் ஏசுதாசைச் சந்தித்தார். சிறு வயதிலேயே தேர்ந்த பாடகர்கள் பாடுவதற்கும் கடினமான தோடி, பைரவி போன்ற அதிசய ராகங்களில் விஜயலட்சுமிக்கு இருந்த ஞானத்தைக் கண்டு ஏசுதாஸ் வியப்படைந்தார்.  திரைப்படத்துறைக்குள் நுழைவதற்கு முன், சென்னையில் மட்டும் 400 சபாக்களில் விஜயலட்சுமி பாடியுள்ளார்.
பிரபல  பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கும் கேரளத்தைச் சேர்ந்த, சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டு நிச்சயம் நடைபெற்று, இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. 'கண்கள் இல்லாத தனக்கு, தனது வருங்காலக் கணவரே கண்களாகக் கிடைத்துள்ளார்' என்று விஜயலட்சுமி நெகிழ்ந்தார்


 ''திருமணத்திற்குப் பிறகு தனது இசை வாழ்க்கையைத் தொடர வேண்டாம் என சந்தோஷ் கூறுகிறார். பள்ளி ஒன்றில் இசை ஆசிரியராகப் பணி செய்யுமாறும் சொல்கிறார். முதலில் எனக்கு எல்லாவிதத்திலும் ஆதரவாக இருப்பதாகச் சொன்ன அவர், இப்போது எனது லட்சியத்துக்கே தடை போடுகிறார். திருமண நிச்சயத்தின் போது, எனது வீட்டில் என்னுடன் வாழ்வதாகச் சொன்னார். ஆனால், இப்போது அவருடைய உறவினர்கள் வீட்டில் வாழ வேண்டும் எனக் கூறுகிறார். அதனால், இந்தத் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. திருச்சூரில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தோம். இந்தத் திருமணம் நிறுத்தப்பட்டு விட்டது. இது முற்றிலும் நான் எடுத்த முடிவு. என்னை யாரும் எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை''  என்று வைக்கம் விஜயலட்சுமி, தனது திருமணம் நின்றுபோனதைப் பற்றித் தெளிவுபடுத்தியுள்ளார் .


எர்ணாகுளத்தில் நடந்த கின்னஸ் சாதனை போட்டியில் தொடர்ந்து வீணையில் 5 மணி நேரம் 67 பாடல்களை வாசித்து உலகச் சாதனை படைத்தார்.  இதற்கு முன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் 51 பாடல்களை வீணையில் இசைத்தது சாதனையாக இருந்தது.

மேலும் இவர் வைத்திருக்கும் வீணை அதிக அளவில் யாரும் வைத்திருப்பதும் இல்லை, வாசிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ள வைக்கம் விஜயலட்சுமியின் இசை உலகச் சாதனையைப் பாராட்டி அவருக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பாடல் மட்டுமல்ல, வீணையிலும் கை தேர்ந்த இவரை அமெரிக்காவைச் சேர்ந்த உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் கவுரவிக்கும் விதமாக இந்தக் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறது.

மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான 'செல்லுலாய்டு' படத்தில் வைக்கம் விஜயலட்சுமி பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரசிகர்களால் அதிகம் விரும்பிக் கேட்கப்பட்ட அந்தப் பாடலை, பிறகு தமிழிலும் வைக்கம் விஜயலட்சுமியை பாட வைத்தனர். தமிழில் 'காற்றே காற்றே' என்ற பாடல் பலருடைய காலர் டியூனாகவும் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
அத்தகைய குரல்வளம் மிக்க வைக்கம் விஜயலட்சுமி  விக்ரம் பிரபு நடித்து வெளியாகிவுள்ள 'வீரசிவாஜி' படத்திலும் ஒரு பாடலைப் பாடியுள்ளார் 


சொப்பன சுந்தரி நான் தானே 
நான் சொப்பன லோகத்தின் தேன் தானே 
சொப்பன சுந்தரி நான் தானே 
நான் சொப்பன லோகத்தின் தேன் தானே 
இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே 
சோம்பல் இல்லாமலே கலிப்பேனே 
மீண்டும் இன்பம் மீண்டும் 
தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும் …… 
நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி 
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி 
நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி 
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி  

பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க



மார்கழியைச் சித்திரையாய் மாத்திடுமே முத்தம் ஒன்னு 
பூக்கடையே இங்கேவந்து பூஜை பன்னும் கிட்டே நின்னு 
இராத்திரிக்கும் தூக்கத்துக்கும் எப்பவும் இராசியில்லை 
ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும் எப்பவும் பஞ்சமில்லை 
நோன்டிலுக்கும் தென்றலுக்கும் சொந்தமும் தேவையில்ல 
எங்களுக்கும் தேவதைக்கும் சம்பந்தம் மாறவில்ல 
அத்தனை பேரையும் அத்தானா மாத்திடும் சங்கமும் இங்கேதான் 
சங்கமம் ஆகத்தான் காதல்தான்.

 'காற்றே.. காற்றே' பாடல் மூலம் பிரபலமானவர் பாடகி வைக்கம் விஜயலட்சுமி.

                                         பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க


                                                            

  -மாறாத அன்புடன்,


 மணவை ஜேம்ஸ். 




9 கருத்துகள்:

  1. விஜயலட்சுமி ஊனத்தை குறையாக கருதாமல் வெற்றி பெற்று சாதனை படைத்து விட்டார் போற்றுவோம்...
    த.ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      தங்களின் முதல் வருகைக்கும் வாக்கிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. காற்றே காற்றே பாடல் எனக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. அய்யா,

      தங்களுக்குப் பிடித்த பாடல் அனைவருக்கும் பிடிக்க... இதோ...!

      தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. இனிமையான குரல்,அவரின் சாதனை வெட்கப் பட வைக்கிறது ,நன்றாய் இருந்தும் நான் என்ன சாதித்தேன் என்று :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. சிறப்பான பதிவு. சோகத்திலும் உள் சோகமாக அவரது கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் மேலான கருத்திற்கும் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...