பரிசு பெற்ற சிறுகதை
திருவாளர்கள் ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி(2015)யில் பத்துபேர் சிறந்த போட்டியாளராகத் தேர்வு செய்யப்பட்டுச் சிறப்புப் பரிசு பெற்றவர் வரிசையில் இடம் பெற்ற
எனது சிறுகதை...
தடம்மாற்றிய பண்டிகை!
(மணவை ஜேம்ஸ்)
ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம்
அனுமதி வழங்கியிருப்பதால் மக்களனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தனர்.
முத்தப்பனைத் தெரியாதவர்களே
இருக்கமுடியாது. ‘மாடுபிடி வீரன்’ எனப்பெயரெடுத்தவன். இவனின்
வீரத்தில் மயங்கித்தான் மகாலட்சுமி இவனைப் பதினெட்டு வயதில் கரம் பிடித்தாள்.
கல்யாணமான மூன்று வருடத்தில் மூன்று பெண்பிள்ளைகளைப்
பெற்றெடுத்தாள். இன்று கொத்தனாராகிக் குடும்பத்தைப் பொறுப்பாகப் கவனித்துக்
கொள்கிறான் என்றால் அதற்குக் காரணம் மகாலட்சுமிதான்.