வெள்ளி, 1 மார்ச், 2019

மணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது!



மணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது!








சென்னை, மார்ச் 1.

நடிகைகள் பிரியாமணி, நளினி, நடிகர்கள் கார்த்தி, விஜய் சேதுபதி, மணவை பொண்மாணிக்கம் உள்பட 201 பேருக்குக் கலைமாமணி விருது.

8 ஆண்டுகளுக்கான விருதுகளைத் தமிழக அரசு  இன்று அறிவித்தது.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றமானது, தமிழ்நாடு அரசு வழங்கும் மானியத்தின் வாயிலாகக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு கலைப்பணி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழுவில் பரிந்துரைத்தபடி, இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், திரைத்துறை மற்றும் சின்னத்திற் போன்ற பல்வேறு கலைப்பிரிவுகளில் புகழ்பெற்ற திறமைமிக்க 201 கலை வித்தகர்களுக்கு மாநில அளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கலைமாமணி விருதுகளை அறிவித்துத் தமிழக அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

விருது பெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் மூன்று பவுன் (24 கிராம் எடையுள்ள பொற்பதக்கமும் சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த விருதுகளை அரசு விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாங்குவார்.


மணப்பாறைக்கு வராது வந்த கலை மாமணியே!


மணவையின் மாணிக்கமே!
மலைக்கோட்டை மாநகரின் பொன்மணியே!
மணப்பாறைக்கு வராது வந்த கலை மாமணியே!
சோழ மண்டலத்தின்  செல்வக்களஞ்சியமே!
உன் வாழ்க்கைப்பாறையில்-
அனுபவ உளியால்...
அடிவாங்கி அடிவாங்கி...
அல்லல்பட்டு அல்லல்பட்டு
கை கொடுக்கக் கைகள் இல்லாமல்
நீயே கையூன்றி எழுந்து நிற்கும் அதிசயமே...!

ஏழுக்கும் மேலான...
கலைப்பொக்கிச நூல்களை இயற்றியே
எம்.ஜி.ஆரை ‘எட்டாவது வள்ளல்’ ஆக்கி
 ‘புகழ் மணச் செம்மல்’ ஆக்கி செம்மாந்த ஆச்சர்யமே...!

 உன்னை  நீயே செதுக்கிய  சிற்பி!
கலைமாமணி விருது பெற்று
காலம்போற்றும்  கலைச்சிலையானாய்....!

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.






-மாறாத அன்புடன்,




















 மணவை ஜேம்ஸ்.


*‘கலைமாமணி விருது’
 

பெற்ற தங்களை மணவை வாழ்த்தி மகிழ்வதில் பெருமை கொள்கிறது.






Related Posts Plugin for WordPress, Blogger...