பொத்தமேட்டுப்பட்டியில் புதிய உடன்படிக்கை நாடகம்!
12.10.1991 அன்று எனது ‘புதிய உடன்படிக்கை’ நாடகம் திருச்சி இரசிக ரஞ்சனா (ஆர்.ஆர்.) சபாவில் நடந்த போட்டியில் திருச்சி ஆர்.சி. மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு நடித்த நாடகம் முதல் பரிசு பெற்றது.
அந்த நாடகத்தை அடுத்த ஆண்டு எங்கள் ஊரில் உள்ள பாத்திமா சேவா சங்கம் உறுப்பினர்கள் நடிக்க மீண்டும் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இன்றைய C.D. தொழில்நுட்பம் எல்லாம் இல்லாத காலத்தில் 30 ஆண்டுக்கு முன்பு நேரடியாக ஒளிப்பதிவு செய்து எடுக்கப்பட்ட நாடகம்.
அன்றைக்கு இந்த நாடகத்தில் நடித்த நடிகர்கள் கதாநாயகன் கோல்காரர் ஜேம்ஸ் ஆசிரியர், அவரின் தந்தையாக நடித்த G.G. என்கிற ஞானம் ஆசிரியர் (எனது குருநாதர்), கதாநாயகியாக நடித்த நடிகை தனலெட்சுமி, அவரின் தந்தையாக நடித்த சேவியர் ஆசிரியர் மற்றும் நடிகை எடமலைப்பட்டிபுதூர் எலிசபெத் அவர்களெல்லாம் இன்றைக்கு உயிருடன் இல்லை; மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
நினைவில் வாழும் அவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு இதைக் காணிக்கையாக்குகிறேன்.
"புதிய உடன்படிக்கை" காணொலியில் காண கீழே
'கிளிக்' செய்க.