“தெருவில் ஒரு திருவிளக்கு“- நாடகம்
“தெருவில் ஒரு திருவிளக்கு”-நாடகம்
திருச்சி, பாலக்கரை உலக மீட்பர் ஆலயத்தில் 2002 -ஆம் ஆண்டு அன்றைய பங்குத் தந்தை இன்றைய திண்டுக்கல் ஆயர் மேதகு. தாமஸ் பால்சாமி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அருட்தந்தை. இரா.மனோகரதாஸ் அன்றைய ஆர்.சி. மேனிலைப்பள்ளி தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் விருப்பத்தின்படி திருச்சி, ஆர்.சி. மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழாசிரியர்கள் திருவாளர் ஆரோக்கியசாமி (ஓய்வு), மனுவேல்ராஜ், & திரு. அருளானந்தம் அவர்களின் மகன் அருட்தந்தையாகப்போகும் செல்வன். மாணிக்கம் அவர்களும் நடிகை திருமதி. T.R. ராஜேஸ்வரி அவர்களும் வேளாங்கன்னி மாதாவாக ஒரு மாணவி (சொரூபம் அன்று) நடித்து அரங்கேற்றம் செய்யப்பட்ட நாடகம் “தெருவில் ஒரு திருவிளக்கு!”
இசையமைத்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு.பிரான்சிஸ் சேவியர்.
இலங்கையிலிருந்து அகதியாக வந்த தாயும் மகனும் வாழ வழியின்றி அல்லல்படுகிறார்கள். வேறு வழியின்றி பிச்சைக்காரியாகி வாழ்க்கையை நகர்த்தும் பொழுது ஒரு பால்காரன் அவனது ஆசைக்கு இணங்கி அவனோடு வந்தால் பணம் தருவதாக அழைக்கிறான். ‘நான் அப்படிப்பட்டவலல்ல’ என்று கூறி அழுது புலம்பிக் கொண்டிருக்கையில்… இதைக் கவனித்த பாதிரியார் அவளது நிலையை அறிந்து அவளுக்குக் கன்னியாஸ்திரி மடத்தில் சமைக்கிற வேலை வாங்கித் தருவதாகக் கூறி உதவி செய்வதாக அழைக்கிறார். அவளுக்கு அவர் தெய்வமாகத் தெரிய… அவர்கள் புறப்படுகிறார்கள். அதைக்கண்ட பால்காரன் “பாருடா… நா … கூப்பிட்டு வராதவ… அவரு கூப்பிட்டவுடனே போறாள்…” என்கிறான்.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.