தூது
ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது இலக்கியம்.
காதலாலோ துயரத்தாலோ ஆண் அல்லது பெண் தூது அனுப்புவது.
அஃறிணைப் பொருளைத் தூது சென்று வருமாறு அனுப்புவது; அவர்களிடம் மாலை வாங்கி வருமாறு தூது செல்லும் பொருளிடம் வேண்டுவது.
காதலாலோ துயரத்தாலோ ஆண் அல்லது பெண் தூது அனுப்புவது.
அஃறிணைப் பொருளைத் தூது சென்று வருமாறு அனுப்புவது; அவர்களிடம் மாலை வாங்கி வருமாறு தூது செல்லும் பொருளிடம் வேண்டுவது.
‘பச்சை விளக்கு’ திரைப்படத்திற்காக கண்ணதாசன்- தூது செல்ல ஒரு தோழி வேண்டி தலைவியின் பாடல்.
தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி
அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி......................
‘பதினாறு வயதினிலே’ திரைப்படத்திற்காக கங்கை அமரன் அவர்கள் பூவையும் காற்றையும் குயிலையும் குருவியையும் மயிலையும் பறவைகளையும் தூது விடுகிறார். இந்தப் பாடலைப் பாடிய எஸ். ஜானகி அம்மாவுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
செந்தூரப் பூவே! செந்தூரப் பூவே! ஜில்லென்றக் காற்றே! என் மன்னன் எங்கே? என் மன்னன் எங்கே? நீ கொஞ்சம் சொல்லாயோ? செந்தூரப் பூவே! தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்! கண்களை மூட விட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்! கன்னிப் பருவத்தின் வந்தக் கனவிதுவே! என்ன இனிக்கிது அந்த நினைவதுவே! வண்ணப் பூவே! தென்றல் காற்றே! என்னைத் தேடி சுகம் வருமோ? – செந்தூரப் பூவே! நீலக் கருங்குயிலே! தென்னைச் சோலைக் குருவிகளே! கோலமிடும் மயிலே! நல்ல கானப் பறவைகளே! மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்! காலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்! வண்ணப் பூவே! தென்றல் காற்றே! என்னைத் தேடி சுகம் வருமோ? – செந்தூரப் பூவே! |