பாரில்
பாரதத்தின் பண்பாடு போலில்லை...!
நாகரிகப்பண்புத் தொட்டிலைத்
தாலாட்டாமல்
பண்பாட்டிற்கு
முகாரி பாடும் மூடர்
கூடமே!
முன்னேறிய உலகில்-
பின்தங்கி விட்டனவே
‘காதல்’ கானல்நீராகி-
விவாகம்கூட விதிகளை
மீறுகின்றன...
விவாகரத்துக்கூட விளையாட்டாகிப்
போயின...!
ஓரினச் சேர்க்கையால்-
மனிதப்பாலின வேரில்
வெந்நீர்விட்டு
மனிதம் பாழ்பட்டுப்
போனது...
காந்தம்கூட ஒரே
துருவம் ஒட்டாதபோது
இதிலே ஏகாந்தம் ஏது?
ஒருவனுக்கு
ஒருத்தியென்ற
கற்புநெறி மாறா
காதல் இல்வாழ்க்கையே
வளரும் நம்நாட்டின்
பண்பாடு...!
உலகமே வியக்கும்-
நம் கூட்டுக்குடும்ப
வாழ்க்கையை...
வல்லரசு நாடுகள்கூட-
வாஞ்சையாய்
நாடுகின்றவே...!
பாரில் எங்கும்-
பாரதத்தின் பண்பாடு போலில்லை...!
****************
உறுதிமொழி:
இது எனது சொந்தப் படைப்பு என்று
உறுதிகூறுகிறேன்.
மேற்கண்ட படைப்பு “வலைப்பதிவர் திருவிழா - 2015” மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் -2015” க்காகவே எழுதப்பட்டது. இதற்கு முன் வெளியான படைப்பன்று, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதிகூறுகிறேன்.
இதிலே ஏகாந்தம் ஏது?
பதிலளிநீக்குநல்ல ஆக்கம்,,,,,,
வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.
அன்புள்ள சகோதரி,
நீக்குதங்களின் பராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
அடேங்கப்பா புதுக் கவிதையிலும் கலக்கி விட்டீர்களே . வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்கு.
அன்புள்ள சகோதரி,
நீக்குதங்களின் பராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
அருமை
பதிலளிநீக்குஅருமை
வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா
தம +1
அன்புள்ள கரந்தையாருக்கு,
நீக்குதங்களின் பராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
வெற்றி பெற வாழ்த்துகள்
பதிலளிநீக்குதம +
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் பராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
ஐயா வணக்கம்.
பதிலளிநீக்குபுதுக்கவிதைப் போட்டியில் தங்கள் கவிதை வெற்றி பெற வாழ்த்துகள்!
நன்றி
அன்புள்ள அய்யா,
நீக்குவணக்கம். தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அருமை மணவையாரே போட்டியில் வெற்றி நிச்சயம் வாழ்த்துகள்
பதிலளிநீக்குதமிழ் மணம் ஐந்தருவி
அன்புள்ள ஜி,
நீக்குதங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
ஓரினச் சேர்க்கையா
பதிலளிநீக்குகாந்தம்கூட ஒரே துருவம் ஒட்டாதபோது
இதிலே ஏகாந்தம் ஏது?
சிந்திக்க உறைப்பான வரிகள் இவை
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.
ஐயாவணக்கம்,வெற்றிபெறவாழ்த்துக்கள் கவிதையில்பண்பாட்டின்சாரங்கள்
பதிலளிநீக்குவெகுவாகவந்துள்ளது (ஒரேகருத்துமட்டும் இல்லாமல்)
அன்புள்ள சகோதரி,
நீக்குவணக்கம். தங்களின் உள்ளப்பூர்வமான பாராடடிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
அருமை! வெற்றி பெற வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.
வணக்கம் நண்பரே! சிறப்பான வரிகள் சிந்திக்க வைக்கின்றன! வாழ்த்துக்கள் நன்றி!
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.