நினைவலைகளில் நீந்துகிறேன்...!(2)
நொண்டி நாடகமும் ராஜபார்ட்டும்.
பூம்புகார் பார்த்துத் திரைப்பட வசனங்களை
உருப்போட்டிருந்த எனக்கு, முதலில் தோன்றியது நான்மட்டுமே ஏற்ற இறக்கத்தோடு
பேசிப்பார்த்த அந்த வசனத்தைப்போல் நாமும் பலர்முன்னிலையில் பேசிப் பாராட்டு
வாங்கிவிடவேண்டும் என்ற ஆசைதான்.
ஆறாம் வகுப்பில் நாடகத்தில் நடிக்க
ஆசைப்படுகிறவர்கள் கையைத் தூக்கலாம் என்ற அறிவிப்பிற்கு, தான்முந்துற்ற முதல் கை
எனது கையாகத்தான் இருந்தது.
பெயர் எழுதிக் கொண்டார்கள்.
நாடகத்திற்கான கதாபாத்திரங்களை மறுநாள் தெரிவு
செய்வதாகச் சொல்லியிருந்தார்கள்.
அன்றிரவெல்லாம் உறக்கம் வரவில்லை.
எப்பொழுது கண்ணயர்ந்தேனோ தெரியாது.