வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சசிபெருமாளின் உயிர்த்தியாகம் ... வருங்காலச் சந்ததிக்காகத்தான்...!

மதுவுக்கு எதிராக குரல் கொடுத்த ... காந்தியவாதி  தியாகி சசிபெருமாள்


காலில் விழுந்து வேண்டுகோள் விடுக்கும் போராட்டத்தில் சசிபெருமாள்







சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகிலுள்ள இடங்கனசாலை பேரூராட்சி, கலைஞர் கருணாநிதி நகர் மேட்டுக்காடு என்ற  ஊரைச் சேர்ந்த கந்தசாமி, பழனியம்மாள் என்பவர்களின் மகனான சசிபெருமாள், ஆறாம் வகுப்பு வரை படித்தவர்.
                                                               


தனது 16-வது வயதிலேயே மது ஒழிப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.

முதல் மனைவி கோவிந்தம்மாள் இரண்டு ஆண் குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிட அதற்குப்  பிறகு ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த மகிழம் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.   இவர்களுக்கு சுதந்திர தேவி என்ற 14 வயது மகள் உள்ளார்.

சசிபெருமாளுக்குச் சொந்தமாக உள்ள இரண்டு ஏக்கர் மானாவாரி நிலத்தால் எந்த வருமானமும் இல்லை.  நாட்டு வைத்தியம், அக்குபஞ்சர் வைத்தியம், ஜோதிடம் எனப் பல தொழில்கள் தெரிந்திருந்தாலும் அதில் முழு ஈடுபாடு காட்டவில்லை.

*கடந்த 2013 ஜனவரி 30-ம் தேதி சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி, 33 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். டெல்லியிலும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து சென்னை நோக்கி மதுவுக்கு எதிரான பிரச்சார நடைபயணம் மேற்கொண்டார். இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி மதுவுக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி ‘தீபச் சுடர்’ போராட்டத்தையும் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் மதுவுக்கு எதிரானவர்களை ஓரணியில் திரட்டும் பணியை முன்னெடுத்திருந்தார் சசிபெருமாள். சில தினங்களுக்கு முன்பு, திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கருணாநிதி கூறியதும், அவரை நேரில் சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
                                                                         



"சசி பெருமாள் தற்கொலை செய்துகொண்டதாகப் போலீஸ் சொல்வது அப்பட்டமான பொய். இது அநியாயமாக அரங்கேறிய கொலை'’  என உண்மையை உரக்கச் சொல்கிறார்கள்   போராட்ட ஸ்பாட்டில் இருந்தவர்கள்.  குமரி மாவட்டம் மார்த்தாண் டத்தை அடுத்த உண்ணாமலைக் கடை பேரூராட்சி ஜங்ஷன் அருகே, பொதுமக்களுக்கு இடையூறாக ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்தக் கடையை அங்கிருந்து அகற்றவேண்டும் என 2012-ல் இருந்து போராடிவந்தனர் ஏரியா பெண்கள்.  கடந்த ஜூன் 30-ல் மது எதிர்ப்பு போராளி சசி பெருமாள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந் தது. கடையை மூடுவதாக காவல்துறை அளித்த உறுதி மொழி நிறைவேற்றப்படவில்லை. போராட்டம் தொடங்கப் பட்டு 1031-வது நாளான ஜூலை 31-ந் தேதி, பொதுமக்கள் தீப்பெட்டி மண்ணெண்ணெய் கேனுடன் திரண்டனர். சசிபெருமாள் 6 மணிக்கே வந்துவிட்டார்.போராட்டக்களத்தில் இருந்த சசிபெருமாள் "நான் இந்த செல்போன் டவர்மேல் ஏறிப் போராடுகிறேன். நீங்கள் கீழே போராடுங்கள். கடைக்கு மூடுவிழா காணாமல் போராட்டத்தை நிறுத்தக்கூடாது''  என்றபடி சரியாக 8 மணிக்கு, செல்போன் டவரில் ஏறினார். பேரூராட்சித் தலைவரான பா.ஜ.க.ஜெயசீலனும் ஏறினார். இவர்களைப்  போலீஸ் தடுக்கவில்லை. நேரம் போய்க்கொண்டே இருந்தது. அதிகாரிகள் உத்தரவாதம் எதையும் தரவில்லை. பிறகு நடந்த கொடுமைகளை பேரூராட்சித் தலைவர் ஜெயசீலனே விவரிக்கிறார்.

""கடுமையான வெய்யிலில் செல்போன் டவரில் நான் 150 அடி உயரத்தில் நின்றபடி போராடிக்கொண்டிருந்தேன். சசிபெருமாளோ 300அடி உயரத்தில் இருந்தார். மதியம் சரியாக 1 மணிக்கு, எங்களை கீழே இறக்க அதிரடியாக உத்தர விட்டார் எஸ்.பி. அப்போது சசி பெருமாள், "என்னை வலுக் கட்டாயமா இறக்கினால் தூக்கில் தொங்கிவிடுவேன். என்னை யாரும் நெருங்கக்கூடாது' என்றபடி தான் கொண்டு சென்ற கயிற்றைக் கழுத்தில் மாட்டிக்கொண்டார். இதைப் பொருட்படுத்தாமல் போலீஸ்காரர்களும் தீயணைப்புத் துறையினரும் பரபரப்பாக மேலே ஏறி சசிபெருமாளை நெருங்கினர். உடனே சசிபெருமாள் கயிற்றின் இன்னொரு முனையை டவர் கம்பியில் கட்டினார். நெருங்கிச் சென்றவர்கள் சசிபெருமாளை...சசிபெருமாள் கழுத்தில் கயிறு பலமாக இறுக்க, மூக்கிலிருந்து ரத்தம் வடியத் தொடங்கிவிட்டது.  அதுதான் அவரோட உயிரைப் பறித்தது .  சசிபெருமாளை சமாதானப்படுத்தி கீழே இறங்க வைத்திருந்தால், இறந்திருக்க மாட்டார்  அராஜகத்தாலும் அடாவடியாலும் கொன்று விட்டார்கள் என்றார் கலக்கமாய்.
                                                         

1.35-க்கு சசிபெருமாளைக்  கீழே இறக்கியபோது அவரது சட்டைப் பகுதி முழுவதும் ரத்தமாக இருந்தது.  அடுத்து அரங்கேறிய போலீஸின் நாடகத்தைப் பற்றி சொல்கிறார் தி.மு.க. பேரூர் முன்னாள் செயலாளர் கபிலன், “ஆம்புலன்ஸ் ரெடியாக இருந்தும் சசிபெருமாளை ஏற்றவில்லை.  காரணம், அப்போதே அவருக்கு உயிரில்லை.  இருந்தும், அவர் மயக்கத்தில் இருப்பதாகச் சொல்லி குழித்துறை ஜி.ஹெச்சுக்கு ஆற அமர கொண்டு போனார்கள்.  கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அங்கு வந்தார்.  அங்கே உயிரில்லா சசிபெருமாளுக்கு ரமணா படத்தில் வருவது போல், டிரிப்பெல்லாம் ஏற்றினார்கள்.  அங்கும் கூட்டம் கூட மேல் சிசிசைக்கு ஆசாரிப்பள்ளம் மருததுவக் கல்லரி மருத்துவமனைக்கு கொண்டு போகிறோம் என்று 3.30-க்கு அங்கிருந்து அவரைக் கொண்டுபோனார்கள்.  நேராக மார்ச்சுவரியில் கொண்டுபோய் போட்டுவிட்டார்கள்.  இப்படி ஒரு கொடுமை எங்கேயும் நடக்குமா?   என்கிறார் ஆவேசமாய்.

மறுநாள் காலை 10 மணிக்கு சசிபெருமாளின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது.  மருத்துவமனையில் இருந்த சசி பெறுமாளின் மகன், தமபி செல்வம் போன்றோர்     ‘ ‘மதுவிலக்கை அமல்படுத்த அரசு ஒப்புக்கொண்டால்தான் உடலை வாங்குவோம்’‘  என்றனர். 

                                                                



 கலெக்டரும் எஸ்.பி.யும், “இது குறித்து நாங்கள் உத்ரவாதம் தரமுடியாது மேலிடத்தோடும்  எங்களால் தொடர்கொள்ள முடியவில்லை” என்றபடி கைபிசைந்தனர்.  சசிபெருமாள் குடும்பத்தினரோ,  “கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றின் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடச் சம்மதித்தால்தான் உடலை வாங்குவோம்” என்று முடிவாகச் சொல்லிவிட்டார்கள்.  எப்படியாவது குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்துவிட வேண்டும் என திங்கள் இரவுவரை அரசுத் தரப்பு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

                                                           


தியாகி சங்கரலிங்கனாரின் உயிர்த் தியாகம் இந்த மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயரை பெற்றுத் தந்தது. 

                                                                      


*சென்னை: ஐகோர்ட் நீதிபதி தலைமையில் சசிபெருமாள் மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி  வலியுறுத்தியுள்ளார். ஆட்சியாளர்களின் அலட்சியம் காரணமாக சசிபெருமாள் உயிரிழந்ததாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார். 
                                                              
சேலத்தில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சசிபெருமாள் குடும்பத்தினர் உள்பட பல்வேறு கட்சியினரை போலீசார் கைது செய்தனர். 

சசிபெருமாள் உடலைப் பெற குடும்பத்தினர் சம்மதம்: சொந்த ஊரில் இன்று  (7.8.201 வெள்ளிக்கிழமை)  அடக்கம் .

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளும் சசிபெருமாளின் உறவினர்கள் | படம்: லக்‌ஷ்மி நாராயணன்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி கண்களில் கருப்புத் துணி கட்டிக் 
கொண்டு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளும் சசிபெருமாளின்
 உறவினர்கள் 

மதுவிலக்கு போராட்டத்தில் உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாள் உடலைப் பெற்று நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

       தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் கூறிவிட்டனர்.

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்பினரும் சசிபெருமாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதேவேளை மருத்துவ மனைப் பிணவறையில் சசிபெருமாளின் உடலை பாதுகாப்பதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்றுடன் 7 நாட்களாக போலீஸார் அப்பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில், சசிபெருமாள் உடலை பெறுமாறு உறவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், அதன் பிறகும் அவர்கள் உடலைப் பெறாவிட்டால் அரசு சார்பில் எரியூட்டவும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இந்நிலையில், சசிபெருமாளின் உடலைப் பெற அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் ஆகியோர் கோரிக்கையை ஏற்று சசிபெருமாள் உடலைப் பெற்றுக் கொள்வதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த பேட்டியில், "சசிபெருமாள் உடலைப் பெற்று அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை அவரது சொந்த ஊரான மேட்டுக்காட்டில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

மதுவிலக்குக்காக உண்மையாக போராடும் அனைத்து கட்சியினரும் சசிபெருமாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும். சசிபெருமாளுக்கு நினைவு மாளிகை எழுப்பப்படும். அவரது உயிர்த் தியாகத்தை ஈடு செய்ய பூரண மதுவிலக்கு ஒன்றே தீர்வாகும்.

Chennai: The High Court of Justice to investigate the death of the chief 
   தியாகி சசிபெருமாளின் உயிர்த்தியாகம் தமிழகத்தில் மதுவிலக்கை  கொண்டு வருமா?


நக்கீரன் 5-8-2015
தி இந்து 

-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.

16 கருத்துகள்:

  1. சசிபெருமாளின் உயிர்த்தியாகம் மதுவிலக்கைக் கொண்டுவரும் என நம்புவோம். அரசியல்வாதிகள் மத்தியில் நம்பி நம்பித்தானே வாழ்க்கையை நடத்தவேண்டியுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      சசிபெருமாளின் உயிர்த்தியாகம் மதுவிலக்கைக் கொண்டுவரட்டும்...!
      -மிக்க நன்றி.

      நீக்கு
  2. நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டேன்
    வருத்தம்
    விரைவில் விடியும்
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      விலைமதிப்பற்ற ஓர் உயிர் தியாகம் செய்திருக்கிறது... பொதுநலனிற்காக...! அன்னாரின் குடும்பம்...?

      -தங்களின் வருத்தத்தில் நானும்...! வாக்கிறற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  3. வணக்கம்,
    அறியாத தகவல்கள், பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நிறைய தகவல்கள் தந்தீர்கள் நண்பரே... அவரை காவு கொடுத்த பிறகாவது குடிகார மட்டைகள் உணர வேண்டும்
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      அவரின் உயிரைக் காவு கொடுத்த தியாகியின் உடல் இன்னும் அடக்கம் செய்யாத அவல நிலை. நாளைதான் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. பொதுநலனிற்காக விலைமதிப்பில்லா உயிர் துறந்தார்...! அன்னாரின் குடும்பம்...?

      -வாக்கற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  5. அவரது உயிர்த் தியாகத்தை ஈடு செய்ய பூரண மதுவிலக்கு ஒன்றே தீர்வாகும்.அவரை பற்றிய விபரங்களுக்கு நன்றி ! அய்யா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தாங்கள் சொல்வது முற்றிலும் சரியே!

      -மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வாக்கிற்கு மிக்க நன்றி.

      நீக்கு

  7. நிறைய தகவல்களோடு ஒரு பதிவு. கலைஞரை விட மாட்டீர்கள் போலிருக்கிறது. ( எதையும் படித்த பின்னரே கருத்துரை வழங்குவதால், தாமதமான எனது வருகைக்கு மன்னிக்கவும்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      எதையும் படித்து கருத்திடும் பாங்கு மிகவும் பாராட்டப்பட வேண்டியது. வந்து கருத்திடுவதே பெரிய விஷயம்... தாமதம் அதெல்லாம் ஒன்றுமில்லை.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  8. நிறைய தகவல்கள்.....வேதனையான விஷயம்....நிச்சயம் விடிவு வரும் நம்புவோம்...

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள அய்யா,

    சசிபெருமாளின் உயிர்த்தியாகத்தால்...மதுவிலக்கு நிச்சயம் விடிவு வரவேண்டும்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...