சனி, 3 மார்ச், 2018

‘சிரியா’-வின் அழுகை!



சிரியா போர்






சிரியாபடத்தின் காப்புரிமைREUTERS

சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 121 பேர் குழந்தைகள் என பிரிட்டனை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற கண்காணிப்பு குழுவான "சிரியன் அப்சர்வேட்டிரி ஃபார் ஹூமன் ரைட்ஸ்" அமைப்பு கூறியுள்ளது.
ரஷியாவால் ஆதரிக்கப்படும் சிரியா அரசு படைகள், இப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.





மேப்

இந்நிலையில், போர்நிறுத்த தீர்மானத்துக்கு ஒப்புக்கொள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் போராடி வருகிறது.
கிழக்கு கூட்டாவின் நிலை என்ன?
சனிக்கிழமையன்று முக்கிய நகரமான டூமாவில் 17 பேர் உட்பட 29 பேர் கொல்லப்பட்டதாக சிரிய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இந்த வாரம் மட்டும் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.





குழந்தைகள்படத்தின் காப்புரிமைEPA
Image captionசமீபத்திய தாக்குதல்களில் 20 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

தாக்குதலுக்கான நேரடி ஈடுபாட்டை ரஷியா மறுத்து வந்தாலும், சிரியா மற்றும் ரஷிய நாட்டு விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக இக்குழு கூறியுள்ளது.
மேலும், 3 லட்சத்து 93 ஆயிரம் பேர் சிக்கியுள்ள ஓரிடத்தில், பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன.
பொதுமக்களை தாக்கவில்லை என்று கூறி குற்றச்சாட்டுக்களை மறுத்து வரும் சிரியா அரசு, பயங்கரவாதிகளிடம் இருந்து கிழக்கு கூட்டாவை விடுவிக்க முயற்சிப்பதாக கூறுகிறது.
இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் நிலை, உலகத் தலைவர்களை எச்சரித்துள்ளது. கிழக்கு கூட்டாவை "பூமியின் நரகம்" என ஐ.நா செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் விவரித்துள்ளார்.


குண்டுவீச்சுகளால் சின்னாபின்னமாகும் கிழக்கு கூட்டா












சிரியா மண்ணே சிரி

 -கவிப்பேரரசு வைரமுத்து கவிதை

குருதித் துளி சொட்டுகிறது, மழை அறியா சிரியா வானம்..
இப்போது இது என்தேசம் என்கிறது;
மேகங்களை நாடுகடத்தி ஆகாயங்கள் கை பற்றிய கரும்புகை..
கருக்குழியில் வளர்த்த சிசுக்களை
பதுங்கு குழியில் பாதுகாக்கிறார்கள்
தங்கள் கற்பை போலத்  தாய் மார்கள்...!

சாந்தியும் சமாதானமும்
நிலவக்கருதும் பிராத்தனை குரல்...
நசுங்கி ப்போகிறது
குழந்தைகள் கதறும் கூட்டோசையில்...
மீட்டெடுத்த சிறார் உடம்பில் பாதி மாமிசம்..
பதுங்கு குழிகளில் மீதி மாமிசம்!
ரசாயன இறைச்சி உண்டதில் இறந்து கிடந்தனர் 
பறந்த கழுகுகள்!

வீடுகள் கான்கீரிட் கல்லறைகளாவதும்...
வீதிகள் உடல்களின் குப்பைத்தொட்டிகளாவதும்...
சாப்பாட்டு மேஜைகளில் பிணங்கள் பரிமாறப்படுவதும்...
அதிராத குரல்களில் உரையாடப்படுகின்றனர்  
.நா-வின் தேநீர் இடைவேளைகளில்!

எலும்புக்கூடுகளில் எது சன்னி?;  எது ஷியா?
தோண்டிய தோட்டாக்களில் எது அமெரிக்கா?; எது ரஷியா?
எரியும் நெருப்பில் எது சவூதி?;  எது கொரியா?
ஆயுத சூதாடிகளின் வங்கிக் கணக்கு நிறைவது
பணத்தினால் அன்று; பிணத்தினால்.

கபால கோப்பைகளில் ஒயின் பருக முடியாது.
போரும் மரணமும் எவ்வடிவிலும் அழகில்லை....!
வலியும் குருதியும் எவ்வுடம்பிலும் சுகமில்லை....!
அழுத குழந்தையே பால் குடிக்கும் எனில் 
அமைதிப் பால் எங்கே?
எல்லா நாடுகளின் மார்பிலும் 
சமாதானம்முலை முளைக்கட்டும்.

சிரியா மண்ணே சிரி!
வழியும் குருதியே வழி!
ஒழியாப் போரே ஒழி!
ரோஜாக்களில் இரத்தம் வடிவது வட்ட உருண்டைக்குக்  கெட்ட சகுனம்...!

கவிதையைக் கேட்க ‘கிளிக்’ செய்க!





 -மாறாத அன்புடன்,



 மணவை ஜேம்ஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...