ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

எனது டூரிங் டாக்கிஸ் அனுபவங்கள் ! (2)

‘உத்தமபுத்திரன்’ 


பள்ளி  வகுப்பில் சக மாணவர்கள் இப்படி எழுதிக்காட்டினார்கள்.

‘சி  வா  ஜி
வா  யி  லே
ஜி  லே   பி

மேலும் கீழுமாக படித்தாலும் ‘சிவாஜி வாயிலே ஜிலேபி’  என்று வருவதைப் பார்த்து வியந்து அன்று ஆச்சர்யப்பட்ட காலமது.

‘உத்தமபுத்திரன்எங்கள் ஊர் டூரிங் டாக்ஸில் ஓடிக்கொண்டு இருப்பதை அறிந்து பார்க்கச் சென்றேன்.

உலக அளவில் தன்னுடைய நாவல்களால் சரித்திரம் படைத்தவர் பிரபல பிரெஞ்ச் கதாசிரியர் அலெக்ஸாண்டர் ட்யூமா. இவருடைய பல நாவல்கள் பெரும் வெற்றிப் படங்களாக ஆங்கிலத்தில் பல முறை எடுக்கப்பட்டன. அந்த வகையில் அவருடைய நாவல்களில் ஒன்று      ‘தி மேன் இன் அயன் மாஸ்க் (Man in the Iron Mask). இது ஹாலிவுட்டில் 1939-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதை 1940-இல் மாடர்ன் தியேட்டர் முதலாளி டி.ஆர். சுந்தரம் 1940இல் ‘உத்தமபுத்திரன் என்ற பெயரில் எடுத்தார். பி.யு. சின்னப்பா இரட்டை வேடங்களில் நடித்த இந்தப் படம் மகத்தான வெற்றி கண்டது.



‘உத்தமபுத்திரன் என்ற அதே பெயரில் அந்தக் கதைக்கு மீண்டும் உயிர் கொடுத்தார் கதை வசனகர்த்தாவான ஸ்ரீதர். பிரகாசராவின் இயக்கத்தில் சிவாஜிகணேசன் பார்த்திபன், விக்ரமன் எனும்   இரட்டை வேடங்களில் முதன்முதலில் நடிக்க, 1958ல் வெளிவந்து மகத்தான வெற்றி  கண்டது அந்தப் படம்.

‘யாரடி நீ மோகினி...பாடல் மட்டுமே போதும்.  கு.மா பாலசுப்பிரமணியம் அவர்கள் இயற்றிய பாடல், படத்தில் கேளிக்கைகளில் நாட்டம் கொண்டவனாக வளர்க்கப்பட்ட நாட்டை காக்க வேண்டிய  இளவரசன் விக்கிரமன் பாடும்படியாக அமைந்துள்ளது.
மதுபானங்களில் திளைத்த ஒருவன் எப்படி தன்னிலை இழந்து கேளிக்கைகளில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டு மங்கையரோடு ஆட்டம் போடுவான் என்பதைச் சித்தரிக்க இந்த பாடல் ஒன்று போதும்;  பாடலைப் பார்க்கும் போது நமக்கும் அந்த போதை வருவதை உணரலாம்.
பாடலில் சிவாஜியின் வேகமான மிக நேர்த்தியான அசைவுகள் மிக மிக நவீன பாணியிலான இளமையான அழகு,  தன் இடது கை பழக்கத்தை உபயோகப்படுத்திக் கைதட்டும் ஸ்டைல்.. அய்யய்யோ பாடலின் இசை துரிதகதியில் மாறிக்கொண்டே இருக்கும். அதற்கேற்றார் போலே சிவாஜியின் உடல் அசைவுகளும், முகபாவங்களும் மாறி கொண்டேயிருக்கும். 
தன்னை மற்றொரு வேடத்திலிருந்து வேறுபடுத்தி காண்பித்துக் கொள்ள சிவாஜி மிகவும் நேர்த்தியாக பல புதிய மேனரிசங்களை செய்திருக்கிறார். அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் ஆடல், பாடல், மது, மங்கை போதை, களியாட்டங்களுக்கு அடிமையாக்கப்பட்டவனின் வாழ்க்கை. அதுபோலவே வாழ்ந்து காட்டியிருப்பார். அப்படிப்பட்ட நடிப்பு, நடனம், ஸ்டைல், மேனரிசம் என்று சிவாஜி ஒரு ராஜாங்கமே நடத்திய பாடல். அவரை சுற்றி மங்கையர் என்ன..., ஊஞ்சல் என்ன..., மாட மாளிகையின் அலங்காரம் என்ன...?  என்ன...?!

கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்

ஹ் ஹ! யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி
ஹ்ஹ! யாரடி நீ மோகினி..
விந்தையான வேந்தனே! விந்தையான வேந்தனே!
வீராவேசம் ஆகுமா…? வீராவேசம் ஆகுமா?
பேயைப் போலே பாயனுமா? விந்தையான வேந்தனே
சந்தோஷமா கோபமா சந்தோஷமா கோபமா?
நான் சொந்தம் கொண்டாடி ஆடிப் பாடி கொஞ்சவே நெஞ்சமே அஞ்சுதே
விந்தையான வேந்தனே!


ஹ்ஹ! காதலி நீ தானடி….பேதமே ஆகாதடி
ரம்பை போல நீயே ஆடுகின்ற மானே
மேலும் மேலும் நீ ஆடடிரம்பை போல நீயே ஆடுகின்ற மானே
மேலும் மேலும் நீ ஆடடிஹ்ஹ! காதலி நீ தானடி ………


 நான் வேணுமா?
தேன் வேணுமா? நான் வேணுமா?
தீரா காதல் மாறுமா
தேன் வேணுமா? நான் வேணுமா?
தீரா காதல் மாறுமா
தேவகானமே பாடி ஆசை தீரவே ஆடி
பேரின்பம் தான் காண்போம் வா மன்னவா
பேரின்பம் தான் காண்போம் வா மன்னவா
தேன் வேணுமா? நான் வேணுமா?
தீரா காதல் மாறுமா
ஹ்ஹ! மன்மதா நீ ஓடி வா
மன்மதா நீ ஓடிவாஅன்புடன் சீராடி வா
மின்னல் போல துள்ளி உந்தன் நெஞ்சில் அல்லி 

இன்பவல்லி நான் ஆடவா
மின்னல் போல துள்ளி உந்தன் நெஞ்சில் அல்லி 

இன்பவல்லி நான் ஆடவா
ஹ்ஹ! மன்மதா நீ ஓடிவா……..
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
உன்மேல் ஆசை உண்டு
ரெண்டும் மூணும் அஞ்சு
என்னை நீயும் கொஞ்சு
மன்னாதி மன்னா  சின்னக் கன்னி எந்தன் கன்னம்
மயக்கும் மது கிண்ணமே
கண்ணா என்னைக்கண்டாலே உந்தன் உள்ளம் துள்ளும்
தன்னாலே போதை கொள்ளுமே (அஹ்..ஹ..ஹா)
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு (அ..ஹ..ஹஹா)
உன்மேல் ஆசை உண்டு (ஆஹ்..ஹ..ஹஹா)
…..……அன்பே…..ஆஹ்..ஹ….
என் அன்பே….ஓஹ்..ஹோஹோ
என் அன்பே வா….வா..வாவாவா
என் அன்பே நீ வாஹா!

பண்பாடும் என் அன்பே நீ வா….
….….அன்பேஆஹ்..ஹ்ஹா….ஹ்ஹா
என் அன்பே..ஓஹ்….ஹோ….ஹோ
என் அன்பே வா..வாவாவாவா
என் அன்பே நீ வாஹா
பண்பாடும் என் அன்பே நீ வா….



       பார்க்க ‘கிளிக்’ செய்க

‘உத்தமபுத்திரன்’  இறுதிக்காட்சியில்  மன்னன் விக்ரமன் இரும்பு முகமூடி அணிந்தபடியே தப்பித்துப் பிழைக்க குதிரை வண்டியை ஓட்டிக்கொண்டு செல்லும் பொழுது, அவனைக் காப்பாற்ற குதிரையில் விரைந்து பின்செல்லும் பார்த்திபன், அவனை நெருங்குவதற்குள் அதல பாதாளத்தில் வண்டியோடு விழுகின்ற காட்சியைப் பார்த்து, அய்யய்யோ காப்பாற்றாமல் விட்டு விட்டானே என்று எண்ணி மிகவும் வருத்தப்பட்டு அடுத்த நாள் சென்று படம் பார்த்தேன்; இன்றைக்காவது அந்தக் குதிரையை வேகமாக ஓட்டிச் சென்று விக்ரமனைக் காப்பாற்றி விட மாட்டானா பார்த்திபன் என்று!


                                 -அனுபவம் பழமை தொடரும்...                 
-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.
    




19 கருத்துகள்:

  1. நீண்ட நாட்களாகிவிட்டனவே
    தங்களை வலையில் சந்தித்து
    தொடர்ந்து எழுதுங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தையாரே!

      நிச்சயமாக... ! தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இன்றைக்காவது அந்தக் குதிரையை வேகமாக ஓட்டிச் சென்று விக்ரமனைக் காப்பாற்றி விட மாட்டானா பார்த்திபன் என்று, எத்தனை தடவை இந்த படம் பார்த்தீர்கள்? அன்றைய காலகட்டத்தில் சினிமா என்பது இளைஞர்களை பிரமிக்க வைத்த ஒன்றுதான். தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஆங்கிலப் பட தழுவல் என்றாலும் மண்ணின் மணத்தோடு எடுக்கப்பட்டு இருந்ததால் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜீ.

      நீக்கு
  4. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத பாடல்...! நடனமும் கூடவே வரும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைச்சித்தரே!

      உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை...!

      நன்றி அய்யா.

      நீக்கு
  5. பல ஆண்டுகள் பின்னரும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது

    மூலப் படம் மீண்டும் தொண்ணூறுகளின் கடைசியில் படமாக்கப்பட்டது
    பதினான்காம் லூயியின் கதை என்று அலக்சாண்டர் டூமாஸ் எழுதியிருப்பார்
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழரின் வருகைக்கும் கருத்துக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஆஹா. காப்பாற்றினாரா இல்லையா என இரண்டாம் முறையும் பார்த்தீர்களா? :)

    இனிய அனுபவம் தான்.

    பதிலளிநீக்கு
  7. உங்களின் எதிர்பார்ப்பு இளமைக்காலத்தில் பல நண்பர்களிடையே இருந்திருக்க வாய்ப்புண்டு. நானும் சில பட்ங்களில் அவ்வாறான மாற்று முடிவு வருமோ என்று எதிர்பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அய்யா,

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. நான் அந்த நாள் சிவாஜி ரசிகன். யாரடி நீ மோகினி- பாடலுக்காகவே இரண்டுமுறை உத்தமபுத்திரனைப் பார்த்தேன். கதை வசனம் ஸ்ரீதர் என்று எண்ணுகிறேன். வஞ்சிக்கோட்டை வாலிபனில் வரும் போட்டி நடனத்திற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் இருந்தது சிவாஜியின் இந்தப் பாடல்-நடிப்பு. (சொல்லிக்கொண்டே போகலாம்...நமக்கு வயதாகிவிட்டதாக நினைப்பார்களே என்ற பயம் உண்டாகிறது.)

    - இராய செல்லப்பா (சுற்றுப்பயணத்தில்) நியூ ஆர்லியன்ஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. உத்தம புத்திரன் - சிவாஜி
    அருமையான கண்ணோட்டம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...