வியாழன், 13 அக்டோபர், 2016

விரைவில் மாறப் போகிறது உங்கள் செல்போன் எண்?           மாற்றம் ஒன்றே மாறாதது...!


புது தில்லி: இந்தியாவில் தற்போதுள்ள 10 இலக்கங்களைக் கொண்ட செல்போன் எண்கள், விரைவில் 11 இலக்கங்களைக் கொண்டதாக மாற்ற மத்திய தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் செல்போன் சேவை அறிமுகம் செய்யப்பட்ட போது, 2003ம் ஆண்டில் 10 இலக்க எண்களைக் கொண்ட செல்போன் எண்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

செல்போன் வாடிக்கையாளர்களின் அடிப்படையில் அப்போதைய கணிப்பின்படி இந்த 10 இலக்க எண் என்பதை அடுத்து 30 ஆண்டுகளுக்கு பராமரிக்க முடிவும் செய்யப்பட்டது.

ஆனால், இந்தியாவில் செல்போன்  சேவையின் அசுர வளர்ச்சியும், வாடிக்கையாளர்களின் அதீத பயன்பாடு காரணமாக, பொருளாதார நிபுணர்களின் கணிப்பையும் மீறி செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதோடு, ஒருவரே பல எண்களைப் பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டது.

இதனால், செல்போன் நிறுவனங்களுக்கு 10 இலக்க எண்களை அளிப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாக உள்ளது. இந்த சிக்கலுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செல்போன் எண்களை 11 இலக்கங்கள் கொண்டதாக மாற்ற தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
  
                                                                                                                     - நன்றி. தினமணி.-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.

14 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்கள் வருகைக்கும் வாக்கிற்கும் மீண்டும் படித்ததற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்புள்ள கரந்தையாரே!

   பத்தோடு பதினொன்று... அத்தோடு இதுவொன்று...!

   தங்கள் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. 11-ம் பத்தாமல் 12 வரும் நாட்களும் வெகு அருகில்..... :)

  தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   கண்டிப்பாக... இதுவும் கடந்து போகும்...!

   தங்கள் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   பத்துப் போட்டால் போதாதில்ல...!

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. முத்துநிலவன் ஐயா அவர்களும் இது பற்றி எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன். கொஞ்சம் சிரமம் ஆரம்பத்தில்.

  பதிலளிநீக்கு
 7. அன்புள்ள முனைவர் அய்யா,

  தாங்கள் சொல்வது சரியே. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 8. அன்புள்ள அய்யா,

  ஆகாவென எழுந்தது பார் யுகப் புரட்சி...!

  இதுவும் நிரந்தரமல்ல - இந்த உலகில்
  எதுவும் நிரந்தரமல்ல...!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...