வெள்ளி, 23 ஜனவரி, 2015

கே.பாலசந்தர் ஒரு சகாப்தம்

கே.பாலசந்தர் ஒரு சகாப்தம்


(மணவை ஜேம்ஸ்)

கே.பி. என்று-
அழைக்கப்படுகின்ற...
திரைத்துறையில்-
பொன்விழா கண்ட துரையவர்...
நல்லமாங்குடி மைனரவர்...
சதம் படங்களுக்குமேல் இயக்கிய
சரித்திர சிகரமவர்.

இவரின்-
மெழுகுவர்த்தி நாடகத்தில் உருகி...
தெய்வத்தாயின் வசனத்திற்கு
வாய்ப்பளித்தார் எம்.ஜி.ஆர்!

இருகோடுகளில் சிவாஜியை
இணைத்தார்...!
நீர்க்குமிழியில் உடையாமல்-
நாணலாக வளையாமல்
திரைக்கடலில்...
எதிர்நீச்சலிட்டே
அரங்கேற்றம் கண்டவர்.


அவள் ஒரு தொடர்கதையாக
சொல்லத்தான் நினைக்கிறேனென்றே...
மன்மத லீலையை வென்று
ஆபூர்வ ராகங்கள் மீட்டினார்.


கமல் ரஜினி ஸ்ரீதேவி மூவரை
மூன்று முடிச்சில் இணைத்து
அவர்களை
நிழல் நிஜமாக்கிக் காட்டினார்.

தெலுங்கில்- மரோ சரித்ரா

இந்தியில் ஏக் துஜே கே லியே

இந்திய மொழிகளில்...
வெற்றிக்கொடி கட்டினார்.

தப்புத் தாளங்கள் போட்டு...
தில்லு முல்லு செய்து...
நினைத்தாலே இனிக்குமென...
மீண்டும் கமல் ரஜினியை இணைத்தார்.வறுமை நிறம் சிகப்பாக்கி
தண்ணீர் தண்ணீர்குடிக்க வைத்து
அச்சமில்லை... அச்சமில்லையென்றே
உச்சம் தொட்டவர்.

அறுபதுக்கும் மேலானவர்களை
நடிப்பில் அறிமுகப்படுத்தி
மேலானவர்களாக்கிய
மேலானவர். 

புதுப்புதுப் அர்த்தங்களை
ன்னால் முடியும் தம்பியென
அழகனாய்
புன்னகை மன்னனானார்!

கல்கி அவதாரமெடுத்து
டூயட் பாடி
கடைசியில்...
பொய்யில் மெய்யாய் நடித்து
பார்த்தாலே பரசவப் படுத்தி
“தாதா சாகேப் பால்கே“
விருது வாங்கியே பரவசப்பட்டே
மூச்சை விட்டார்!.

            

                                        -மாறாத அன்புடன்,


                                         மணவை ஜேம்ஸ்.

14 கருத்துகள்:

 1. அஞ்சலியைக்கூட
  அருமையாக வர்ணனை செய்திருக்கிறீர்கள் மணவைாரே....
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள ஜி,

  தங்களின் முதல் பின்னூட்டத்திற்கும் பாராட்டுதலுக்கும் தமிழ்மணத்தில் வாக்களித்ததற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

 3. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
  http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

  பதிலளிநீக்கு
 4. அன்புள்ள அய்யா,

  மிக்க நன்றி. வாருங்கள் வரவேற்கின்றோம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. கே.பி யை பற்றிய சிறந்த ஆவணத்தொகுப்பு இந்த பதிவு!! அருமை அண்ணா!

  பதிலளிநீக்கு
 6. அன்புச் சகோதரி,

  தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 7. கே.பி அவர்களின் படைப்பு பூக்களை
  தூவி!
  நினைவஞ்சலி செய்த தங்களின் தனித்திறமையை
  போற்றி பாராட்டுகிறேன்.
  தங்களது அஞ்சலியில் கே.பி யின் ரசிகர் என்ற முறையில் நானும் பங்கேற்கின்றேன் அய்யா! நன்றி!
  வணக்கம்!

  "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
  ஜெய் ஹிந்த்!

  நன்றியுடன்,
  புதுவை வேலு

  www.kuzhalinnisai.blogspot.com
  (இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

  பதிலளிநீக்கு
 8. அன்புள்ள அய்யா,

  தங்களின் பாராட்டுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தாங்கள் கே.பி.யின் ரசிகர் .... என்றதனால் மிகுந்த பெருமைப்படுகிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 9. மிக அருமையான அஞ்சலி அதுவும் அவரது படைப்புகளைக் கொண்டே! கவிதை! அருமை அருமை நண்பரே! நாங்கள் கேபியின் ரசிகர்கள்!

  தாமதத்திற்கு மன்னிக்கவும். நண்பரெ!

  பதிலளிநீக்கு
 10. அன்புள்ள அய்யா,

  துணிவுடன் பல படங்களைத் தந்து... அதில் வெற்றி பெற்றவர். அவரின் கலைப்பயணத்திற்கு என்றென்றும் நன்றியுடன்!

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 11. கவிதை வடிவில், அவன் படைத்த படங்களைக் கொண்டே அவனுக்கு அஞ்சலி.
  வெகு சிறப்பு அய்யா!
  பகிர்விற்கு நன்றி.
  வாழ்த்துகள்.
  த ம கூடுதல் 1

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...