புதன், 24 டிசம்பர், 2014

‘இயேசு’ மண்ணிலே மனிதனான்...!


                          ‘இயேசு’  மண்ணிலே மனிதனான்...!                              
                                 
அன்பையே விதைக்க வந்த

              அருந்தவப் புதல்வன் இயேசு

தன்னையே தரவே இன்று

               தரணியில் மழலை யாகி

                         

புன்னகை இதழில் பூக்கப்

                பூவிழி விடியல் பார்க்க

அன்னையின் மடியில் நெஞ்சம்

                ஆளவே பிறந்தான் மண்ணில்!

 
மண்ணிலே பிறந்த பாலன்

                மனிதனாய் வந்தே இங்கு

விண்ணிலே மீன்கள் தோன்ற

               வியப்பிலே மூன்று மன்னர்                 


கண்ணிலே கவலை நீக்கிக்

              களிப்பிலே சென்றே பார்க்க

வெண்மையாய்ப் பூத்துக்  கண்ட

              விழியெலாம் கொண்டான் வென்றான்.

                                                                                
                                                                                                         

                                                                                                      

குளிரிலே நடுங்கி மாட்டுக்   
                             
             குடிலிலே கிடந்த கோமான்

தளிரிலே தாயின் மாதா
                      
            தயவிலே தந்தை சூசை

                                                                                                      
வளியிலே கலந்த மூச்சாய்

            வாழ்விலே இன்பம் கூட்டி

ஒளிதர வந்தான் ஞாலம்

            உய்யவே மனிதன் ஆனான்!
                                                                                                                 -மாறாத அன்புடன்,


                                                                                                 

* மாலை முரசு ‘கிறிஸ்துமஸ் மலர்’
  24.12.2014 வெளியிடப்பட்டது.                                                                              


                           


                                                                                                                 மணவை ஜேம்ஸ்.

18 கருத்துகள்:

 1. அன்புள்ள அய்யா,

  தங்களின் முதல் பின்னூட்டத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 2. வலைப் பூ நண்பருக்கு,
  வணக்கம்!
  அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்துக்கள்
  நட்புடன்,
  புதுவை வேலு,
  www.kuzhalinnisai.blogspot.fr

  (இயக்குனர் சிகரம் கே.பி அவர்களுக்கு கவிதாஞ்சலி!
  பங்கு பெற வாருங்கள்
  குழலின்னிசை வலைப் பூ பக்கமாய்!)
  நன்றி!

  பதிலளிநீக்கு
 3. ‘இயேசு’ மண்ணிலே மனிதனான்!"
  மீண்டும் ஒரு இயேசு காவியம் கவிதை வடிவில்
  நல்லருள் வேண்டி,
  நற்றமிழ் கவிதை!
  நன்றியுடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் பாராட்டுதலுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   நீக்கு
 4. வணக்கம் ஐயா!

  மண்ணிலே வந்து மனிதனாய்த் தோன்றினன்!
  கண்ணிலே அன்பொடு காருண்யம் கொண்டவன்!
  நன்நெறி நாதன்! இயேசுபாலன்! வந்துதித்த
  பொன்னாளைப் போற்றினீர் பூத்து!

  அருமையான பாவிசைத்து இயேசு பாலகன் பிறந்த
  இந்நாளைச் சிறப்பித்தீர்கள் ஐயா!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளம் நிறைந்த
  நத்தார் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 5. நல்ல சிந்தனையில் பிறந்த நல்ல கவி

  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகஶ்

  மணவையாரே. புதிய பதிவு இன்றைய MONEYதர்கள் காண வருக....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   கவிதையை வாழ்த்தியதற்கு நன்றி நண்பரே!
   நன்றி.

   நீக்கு
 6. அன்பு நண்பர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு, எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. அன்புள்ள அய்யா,

  மிக்க நன்றி .

  பதிலளிநீக்கு
 8. இனிய நந்தார் தின வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. அன்புள்ள அய்யா,

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 10. அன்புள்ள அய்யா,
  அழகிய விருத்தத்தில் கிறிஸ்மஸ் தினத்தைக் குறித்த தங்களது சிந்தனைகளைத் தந்துள்ளீர்கள்.
  அதிலும்,
  குறிப்பாய்,

  குளிரிலே நடுங்கி மாட்டுக்

  குடிலிலே கிடந்த கோமான்“

  என்னும் வரிகள் தங்கள் கவிதையின் உச்சம் என்பேன்.

  தங்கள் கவிதை இந்தக் கவிதை 24-12-2014 ஆம் நாளிட்ட மாலைமுரசு நாளிதழில் வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
  வாழ்த்துகள் அய்யா!
  நன்றி

  பதிலளிநீக்கு
 11. அன்புள்ள அய்யா,

  ஒன்றும் அறியாதவனை...
  தமிழ் மரபுக்குடிலில் கிடத்திய
  கோமகன்... தாங்களலல்லவோ?
  ஆசிரியப்பா விருத்தியடையச் செய்தவர் அல்லவா?
  முரசில் ஒலித்ததை முரசைறைந்ததற்கு என் நெஞ்சார்ந்த
  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. அருமையான வரிகள் !! வாழ்த்துக்கள் நண்பரே!

  பதிலளிநீக்கு
 13. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

  புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
  http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 14. மிக அருமையான பாடல்! அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் அழகிய எதுகை மோனைத் தொடையமைந்த கவிதை! உலகைக் காக்க வந்த உத்தமர் இயேசுவைப் போற்றும் இந்தப் பாடல் மனத்தை நெகிழ வைக்கிறது! வாழ்த்துகள்!

  அன்புடன்
  இமயவரம்பன்
  https://www.imayavaramban.com/இயேசு-பாமாலை/

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...