சனி, 18 அக்டோபர், 2014

குடிமகனின் பாடல்

                      

கள்ளச்சாராயத்தைக் குடித்ததனால் கண்ணிழந்த  ஒருவன்
                    பாடித்திரிகின்றான்


                          

         

     






              

                          அன்புகொண்ட உள்ளங்களே கொஞ்சம் நில்லுங்கள்....- நல்ல
                  
                           பண்பில்லாத பாவியெந்தன் பாடல்  கேளுங்கள்...




                                                       .                                           

                                கானலையே நீரும்என்றே ஓடிஅலைந்தேன்

                                காகிதத்தை   பூவும்என்றே   சூடிமகிழ்ந்தேன்

                                பாதைதன்னை  பாராதொரு  பயணம் புரிந்தேன்

                                போதைதானே வாழ்க்கைஎன்று  பொழுதும்  திரிந்தேன்


                                                                                                                                         (அன்பு...
                                                                                                                 

                                குடியினாலே குடும்பமெனுங் கூடுமறந்தேன்  

                                கொலையும்கூட செய்யச்சொல்லக் கொள்கை இழந்தேன்

                                என்வினையே என்னைச்சுட  எனையெரித்தேனே

                                கண்மணியை     நான்இழந்து     வாடுகின்றேனே


                                                                                                                                         (அன்பு...

                                                                 
                                அந்தநாளில் நானும்செய்த பாவங்களாலே

                                 இந்தநாளில் கண்ணிழந்து வாடுகின்றேனே

                                 சிறகொடிந்த   பறவைபோல   சீரழிந்தேனே

                                 சிரித்துவாழும் நிலையிருந்தும் பரிதவித்தேனே 


                                                                                                                                        (அன்பு... 

                           ( *  ‘புதிய உடன்படிக்கை‘  மேடைநாடகப் பாடல்)
                                                                                                                             

                                                                                                                -மாறாத அன்புடன்,

                                                                                                                  மணவை ஜேம்ஸ். 
manavaijamestamilpanit.blogspot.in

                                    

6 கருத்துகள்:

  1. அதன பார்த்தேன். வாசிக்கும் போதே மனதில் மெட்டு அமர்கிறதே என்று. அருமையான பாடல். குடிமக்கள்(!??) பார்த்து திருந்தினால் சரி.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா!

    குடியதனால் சீரழிந்து கொள்வீரே என்று
    இடித்தே இயம்பினீ ரே!

    அருமை! குடியானவர்கள் தாமாக உணர்ந்து திருந்தணும்!
    இசைப்பாடலாய் இசைக்கேற்ற ஏற்ற நல்ல சந்தமுடன்
    அழகாக அமைத்துள்ளீர்கள் ஐயா பாடல்! மிகச் சிறப்பு!

    வாழ்த்துக்கள்!

    ** தற்சமயம் என் வாழ்க்கைச் சூழலால் நேரம் போதவில்லை...
    கிடைக்கும் சந்தற்பங்களில் தங்களின் முந்தையப் பதிவுகளை அவ்வப்போது வந்து படித்துக் கருத்திடுவேன்..

    இதற்கென நீங்கள் மீள்பதிவிட வேண்டிய அவசியம் இல்லை!
    மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. அன்புச்சகோதரி,

    பாடல் பற்றிய தங்களின் கருத்துகளுக்கும்... வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    ஒன்றும் அவசரமில்லை....தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது கருத்திட்டால் போதும்...எப்போதும்....

    மகிழ்ச்சி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு
  4. அருமையாக உள்ளது நண்பரே! நல்ல மெட்டுடன் கூடிய பாடல்! கருத்துள்ள பாடல்!

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள அய்யா,

    தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...