பொங்கட்டும் பொங்கட்டும்!
மணவைத் தமிழ்ச் சங்கம் இன்று (26.01.2016) நடத்திய
பொங்கல் விழாக் கவியரங்கில்
புலவர் சுப்பிரமணியன் அய்யா தலைமையில்
நான் எழுதி வாசித்த... கவிதை.
பொங்கட்டும்
பொங்கட்டும்!
சங்கமெங்கும்
பொங்கும் தமிழ் – மணவைத் தமிழ்ச்
சங்கத்தில் பொங்கும் தமிழ்!
சங்கமெல்லாம் வளர்ந்த
தமிழ் – மதுரைச் தமிழ்ச்
சங்கத்தில் பொங்கு தமிழ்!
அங்கமெல்லாம்
கலந்த தமிழ் – முச்சங்கத்தில்
சங்கமமான எங்கள் தமிழ்!
எங்கள் தமிழுக்கு முதல்
வணக்கம்- கவியரங்கத்
தங்கத் தலைவர் மணியாக!
அங்கம் வகிக்கும்
அரங்கத்தில் – சுவைஞராகச்
சிங்காதனத் தினருக்கும் வணக்கம்!
சூல்கொண்டாளோ?
பூமித்தாயவள்
பொங்கியதால்
பூகம்பமானாளோ?
ஆழிப்பேரலையானதோ?
ஆழிப்பேரலை
பொங்கியதால்
பேய்மழையானதோ?
பேய்மழை பொங்கியதால்
இல்லை... இல்லை...
கடலூரானதோ?
மாமழை போற்றினோம்-
ஆனால்
மாமழையே! - உனக்கு
இத்தனை ஆசையா?
எத்தனை உயிர்களைப்
பொங்கிப் பொங்கித் தின்றாய்...?!
எங்களுக்குச் சரிவர
புள்ளிவிவரத்தை
நீயாவது
சரியாகச்
சொல்வாயா...?
இயற்கையே! - நீயே பொங்கினால்
சாமன்யர்கள் நாங்கள்
என்ன செய்வோம்...?
உன் சக்தியைக்
காட்டிவிட்டாய்...!
இயற்கைப் பேரிடரா...?
இல்லை...
செயற்கைப்
பேரிடரா...?
பட்டிமன்றம் நடத்த
வேண்டாம்...!
நடுவர்கள்கூடத்
தீர்ப்பைத்
திரித்துச் சொல்லி விடலாம்...!
நீட்டி அளப்பதோர்
கோல்’
-என்று அய்யன்
சொன்னதைப் போல
இந்தக் ‘கேட்டினும்
உண்டோர் உறுதி’யாக
மனிதநேயம் பொங்கச்
செய்தாய்...!
மனித உயிர்களைப்
பிணைத்தாய்...!
சாதியைத் தொலைத்து
சாதிக்கச்
செய்திட்டாய்...! ஆமாம்...
தன்னார்வத்
தொண்டுள்ளங்களை
‘இணைவோம்...
இணைப்போம்’
என்றே
நாட்டுக்கு அடையாளம்
காட்டி...
மதுவெள்ளம்
மகாநதியாகப் பொங்கி
ஓடும்போது - அதில்
மாட்டிக் கொண்டவன்
குடிமகன்தானே!
‘குடி குடியை
கெடுக்கும்’
என்றால்
குடிமகனின்
உள்ளத்தின் பொங்கல்...!
பொங்கட்டும்
பொங்கட்டும்...!
மது அரவத்தின் நச்சுப்பல்லில்
-
நாசமாகிப் போகின்றனவே...
மாணவச்
சமுதாயங்கள்...!
எத்தனை சட்டக்
கல்லூரி ‘நந்தினி’கள்
எத்தனை முறைதான் சிறை
செல்வது...?
அய்ம்பது முறைக்கு
மேல் சிறைவாசம்...!
தமிழச்சிகளின் கோபம்...
விதவைகளின் சாபம் வீணாகுமோ...?
தாய்க்குலத்தின்
கண்ணீர்ப் பொங்கல்...!
பொங்கட்டும்
பொங்கட்டும்...!
காந்தியவாதி
சசிபெருமாள்...
வாதிட்டு...
வாதிட்டு...
கடைசியில்
உயிர்த்தியாகம் செய்தாரே!
அன்னாரின் குடும்பம்
அவரை இனி என்று(ம்)
காணும்...?
விரைவில் மதுவிலக்கு
காணும் பொங்கல்
தமிழனின் வீரவிளையாட்டு-
ஏறுதழுவுதலை
ஓரம்கட்டிய
மேல்தட்டினரைத்
தட்டிவிடுவது யார்?
விலங்கின
ஆர்வலர்களே...!
காளைமாடுகளைத்
தொட்டதாவதுண்டா...?
ஆண்டாண்டாக மாட்டை
வளர்த்துப்
பாதுகாப்பவர்களுக்குத்
தெரியாதா?
ஆவின் பாலைக் கன்றிற்குக்
கொடுக்காமல்
அருந்துவது மட்டும்
எந்த வகையில்
நியாயம்...?
நியாயமாகப்
பார்த்தால்...
மாட்டை வெட்டிக்
கொல்லப்படுவதையல்லவா
தடுக்க முனைப்புக்
காட்டியிருக்க வேண்டும்...?
அதற்காக உங்கள்
உள்ளம் பொங்கட்டும்...
பொங்கட்டும்
பொங்கட்டும்!
இலங்கைத் தமிழன்
வாழ்வில்
எப்போது பொங்கும்
விடுதலைப் பொங்கல்?
பொங்கட்டும் பொங்கட்டும்!
வருகிற(து) தேர்தல்
பொங்கல்...!
மக்கள் மனத்திற்குத்
தேறுதல் தருமா...?
ஆறுதல் தருமா தேர்தல்
பொங்கல்...
பொங்கட்டும்
பொங்கட்டும்... இன்பம்
தங்கட்டும்
தங்கட்டும்...இன்பம்
பொங்கட்டும்
பொங்கட்டும்!
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
வணக்கம் மணவையாரே மணவைத் தமிழ்ச் சங்கத்தில் ஒலித்த தங்களது கவிதை நல்லதொரு கருத்துகளை உள்ளடக்கிய உள்ளத்து ஓலம் கேட்டேன் அருமை வாழ்த்துகள்
பதிலளிநீக்குத.ம.வ.போ
அன்புள்ள ஜி,
பதிலளிநீக்குவணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அருமை... அருமை ஐயா... மிகவும் ரசித்தேன்...
பதிலளிநீக்குஅன்புள்ள வலைச்சித்தரே!
நீக்குதாங்கள் ரசித்துப் படித்ததற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
மிக மிக அருமையான கவிதை நண்பரே! ரசித்தோம்..
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குதங்களின் பாராட்டிற்கும் ரசித்துப் படித்ததற்கும் மிக்க நன்றி.
கவிதைக்கு ஏற்ற புகைப்படங்களா? புகைப்படங்களுக்கு ஏற்ற கவிதையா? அருமையான தெரிவு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅன்புள்ள முனைவர் அய்யா,
நீக்குதங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அருமை
பதிலளிநீக்குரசித்தேன் ஐயா
நன்றி
அன்புள்ள கரந்தையாரே!
நீக்குதாங்கள் ரசித்துப் படித்ததற்கு மிக்க நன்றி.
#நடுவர்கள்கூடத்
பதிலளிநீக்குதீர்ப்பைத் திரித்துச் சொல்லி விடலாம்...!#
நாட்டு நடப்பைப் படம் பிடித்து காட்டி விட்டீர்கள் :)
அன்புள்ள ஜீ,
நீக்குதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
பொங்கும் கவிதை! கேள்வியும் பதிலுமாய் பொங்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அருமையான கவிதை..... பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
கவிதை அருமை ஐயா! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.