செவ்வாய், 3 மார்ச், 2015

பெயரிலிகள்...! /(வயது வந்தவர்கள்!)



பெயரிலிகள்...! /(வயது வந்தவர்கள்!)





நாங்கள்-
தேர்தல் சந்தையில்...
வாக்கு வியாபாரியாகிப் போன
வயது வந்தவர்கள்!



அரசியல் முதலாளிகளே...!
மாடுகளை மாதிரி
எங்களையும்...                 
பேரம் பேசி
வாங்கிக் கொள்ளலாம்.



விலையை
நீங்களே நிர்ணயம் செய்ய
உங்களுக்கே அதிகாரம்...
யார் அதிகம் நிர்ணயிக்கின்றார்களோ
அவர்களிடம்                     விலை போவோம்...!      
   



திரு மங்கலத்தில் அரங்கேற்றப்பட்டுத்
திரு அரங்கத்தில் அமல்படுத்தப்பட்ட
சனநாயகம் அமங்கலமாக...
வெட்கப்பட்டு பட்டு நிற்கும்
வெட்கக் கேடுகள்...!



‘பாதகம் செய்பவரைக் கண்டால்...
நாம்-
பயம் கொள்ளல் ஆகாது...
மோதி மிதித்து விடு...
அவர்-
முகத்தில் உமிழ்ந்துவிடு
-சொல்ல பாரதி இல்லை!



மயிர் நீப்பின்-
உயிர் நீக்கும்...
அய்ந்தறிவுள்ள கவரிமானல்ல...
ஆறறிவுபடைத்த...
மானம் பெரிதெனக் கருதும்(?)
மா(ம)க்கள்...!              
                                       


காசுக்காக...
சோரம் போகும்
வேசிகளல்ல...!
பெயரிடப்படாத பெயரிலிகள்!!


                                                       
                                                                                                                  -மாறாத அன்புடன்,
                                                                                                                    மணவை ஜேம்ஸ்.



25 கருத்துகள்:

  1. அன்புள்ள அய்யா,

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள அய்யா,

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. அன்புள்ள வலைச்சித்தர் அய்யா,

      சாட்டையடியெனச் சட்டெனப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  4. அருமை! அருமை! உரைத்தவை அனைத்தும் உண்மை! உண்மை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள புலவர் அய்யா,

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அருமை அருமை அத்தனையும் நண்பரே! உண்மையை உரைக்கும் வார்த்தைச் சாட்டைகள்! அடி பின்னுகின்றீர்கள்!!!! இது உங்கள் கவிதைக்கும், சமூகத்தைச் சாடியதற்கும் என்றும் பொருள் கொள்ளலாம்!

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள அய்யா,

    தங்களின் பாராட்டிற்கு நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அனைத்தும் அருமை நண்பரே என்றும் உண்டு எமது வாக்கு.
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள ஜி,

    தங்களின் வாக்கு விலை மதிப்பில்லாது...!
    அதை விலை கொடுத்து யாரும் வாங்கவும் முடியாதது...!
    பாராட்டிற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. செ.... (அப்படியெல்லாம் சொல்லப்படாது )
    பாதுகை அடி
    தம +1

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள அய்யா,

    தங்கள் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. ஓட்டிற்கேற்ப நோட்டு என்பதைப் போல
    காலத்திற்கேற்ற கவிதை!
    “ திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் “ என்று வெளியில் சொல்லி விடுகிறேன்.
    நிச்சயமாக வாக்களிப்பதற்கு லஞ்சம் என்கிற பெயரில் அளிக்கப்படும் எந்தச் சலுகையானாலும் அது ஒழிக்கப்படத்தான் வேண்டும்.
    த ம 6
    ( அய்யா வாக்களித்துவிட்டேன். நாளை டீ வடை வாங்கித் தருவீரகள்தானே?)

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள அய்யா,

    தங்களின் வாக்குப் பலிக்கட்டும். அட...வட...இன்னும் வரவில்லை! அய்யா வந்தால் அவசியம் தேநீர் நீர் அருந்தலாம்! தங்களுக்கென்றால் ஊட்டிய வருத்தியாவது ஊட்டியில் நல்ல தேயிலை வாங்கி வந்துவிட மாட்டேனா?
    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள அய்யா,

    தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  14. சந்தையிலே மா க்கள் மந்தையாகி போன விந்தைகளை!
    பெயரிலிகளை பந்தை உதைத்தார்போல் கருத்தாய் விதைத்தீரே அய்யா!
    நன்று:
    த ம + 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  15. பொருத்தமான படங்களுடன் கவிதை அருமை ,கடைசி படத்தில் உள்ளது என்ன ,அதுதான் பெயரிலியா :)

    பதிலளிநீக்கு
  16. தங்களின் வாழ்த்துக்கு நன்றி. படத்தைச் சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்களே...! மிக்க நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  17. வாக்குகளை விலைக்கு விற்பவர்களுக்கு சரியாக 'சூடு' கொடுத்துள்ளீர்கள். ஆனாலும் நம்மவர்களுக்கு என்ன சொன்னாலும் உறைக்காதே.என் செய்ய!

    பதிலளிநீக்கு
  18. அன்புள்ள அய்யா,

    உறைக்காது என்பது உண்மைதான்... நாம் உரைப்பதை உரைத்து வைப்போம்...!

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...