சந்திப்பிழையின்றி எழுதுவோம்...2
‘செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.’
-என்று தெரிந்து செயல்வகை அதிகாரத்தில் அய்யன்
திருவள்ளுவர் குறிப்பிடுவது நாம் அறிந்தே!
‘செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் பிழை ஏற்படும்’ என்பது வல்லினம் மிகும் இடங்களுக்குப்
பொருந்தும்.
‘செய்யக் கூடாத்தைச் செய்வாதாலும் பிழை ஏற்படும்’ என்பது
வல்லினம்
மிகா இடங்களுக்குப் பொருந்தும்.
‘சொல்வதற்கு
எவ்வளவோ இருக்கின்ற பொழுது இதைப்போய் சொல்கின்றீரே...’ என்று கேட்பது புரிகின்றது.
சந்திப்பிழையோடு எழுதினால் என்ன குடியா முழுகிவிடப்போகிறது? நீங்கள்மட்டும் என்ன பிழையின்றி எழுதுகின்றீரா?’ என்று கேட்பதும் காதில் விழுகிறது!
எனது சிற்றறிவிற்கும் சந்திப்பிழையின்றி எழுதுவது இயலாமல்தான் இருக்கின்றது
என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சரி... பிழையோடு எழுதினால் என்ன?
எழுதுவதே பெரிய காரியம்தான்.... இதில் சிறுசிறு ஒற்றுப்பிழைகளைப் பற்றிக்
கவலை கொள்வதேன்? இப்படியெல்லாம்
பார்த்தால் யாரும் எழுதமுடியாது... எழுத முன்வரமாட்டார்கள் என்பதெல்லாம் உண்மைதான். முற்றும் பிழையின்றி எழுதத் தமிழ்க்
கற்றுத்தேர்ந்த புலமைமிக்கவர் ‘ஆயிரத்தில் ஒருவன் இருக்கலாம்’ (நிச்சயம்
நானில்லை).
சந்திப்பிழையின்றி எழுதுவது கடினமான ஒன்றுதான் என்பதை மறுக்கவில்லை. முடிந்தவரை முயன்று பார்ப்போமே என்ற
முயற்சிதான்.
முயல்வேர்க்கு உதவுவோம் என்னும் சிறு முயற்சிதான்.
‘முயற்சி திருவினை ஆக்கும்
முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்’ –என்ற திருவள்ளுவரின் வாக்கினை எண்ணி
இருட்டு இருட்டு என்று பழிப்பதைவிட ஒரு மெழுவர்த்தியை ஏற்றி
வைப்போமே! என்று... மேலும் நம் தமிழுக்குக் கேடு என்றால் அது நமக்கும்
தானே!
இரண்டாம் வேற்றுமை விரி (ஐ),
நான்காம் வேற்றுமை விரி (கு)
இந்த வேற்றுமை உருபு வெளிப்படையாக நிலை
மொழியில்(முதலில் இருக்கும் சொல்) சேர்ந்து
வந்தால், வருமொழியில் (வந்து சேரும் சொல்) க, ச, த, ப, வந்தால் கண்டிப்பாக ஒற்று மிகும். தமிழில் அதிகமாக இந்த வேற்றுமை உருபுகளே
வருவதால் இதை மட்டுமாகிலும் மிகுந்த
கவனத்தில் கொள்வது நல்லது.
வேற்றுமை என்றால் என்னவென்று சொல்லாமலே சொல்லிக்கொண்டு இருந்தால்
எப்படி? என்று கேட்பது புரிகிறது.
இயல்பாய் உள்ள பெயர்ச் சொற்களோடு ஓர் எழுத்தோ, ஒரு சிறு
சொல்லோ சேர்ந்தால் முதலில்காட்டிய பொருள் பின்னர் வேறுபடும். அதுதான் வேற்றுமை. அதாவது தன்னை ஏற்ற பெயரின் பொருளை
வேறுபடுத்துவது வேற்றுமை.
‘வேற்றுமைதான் தெரியுமே...!
இதைக் கேட்கவில்லை வேற்றுமை உருபு என்று சொல்வதைத்தான் கேட்டேன்’ என்கிறீர்களா?
பொருளை வேறுபடுத்துவதற்குக் காரணமாய் இருக்கும் அந்த
ஓரேழுத்தோ, சிறு சொல்லோதான் வேற்றுமை உருபு எனப்படும்.
(எ.டு) இந்தியா
வென்றது.
இந்தியாவை வென்றது.
முதல் வாக்கியத்தில் வென்றது இந்தியா.
இரண்டாம் வாக்கியத்தில் இந்தியாவை இன்னொரு நாடு வென்றது... அதாவது இந்தியா தோற்றது
என்னும் பொருள் வருகிறது. இந்த
வேறுபாட்டுக்குக் காரணமாய் இருப்பது ‘ஐ’ என்ற எழுத்து. இந்த ‘‘ஐ’க்கு வேற்றுமை உருபு என்பது பெயர்.
‘இன்னும் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை... ஐயாவுக்கு
இல்லை கண்ணுன்னோ... என்னவோ எட்டாகப் பிரிச்சுச் சொல்லுவார்களே அதைப்பற்றிச்
சொல்லுங்கள்?’
எட்டு
ஓ...வேற்றுமை வகைகளைக் கேட்கிறீர்களா?
ஆமாம்... ஆமாம்... அது எட்டு வகைப்படும்.
‘அது
எங்களுக்குத் தெரியும்... அதைப் பற்றிப் புரியும் படியா நன்கு விளக்கிச்
சொல்லுங்கள்’
என்கிறீர்கள்... அப்படித்தானே!
அண்ணா
ஒரு முறை அமெரிக்கா சென்றார்; யேல்
பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தினார்; அவர் தமது
பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தார்.
அவரைப் பலரும் பாராட்டினர். அவரால்
தமிழ்நாடு பெருமையுற்றது. அவருக்குப்
பாராட்டுக்கள் குவிந்தன. பேச்சுத்திறனில்
அவரின் மிக்கார் யாரும் இலர். அவரது
பேச்சுக்கள் எல்லாம் நூல்களாக வெளி வந்தன.
அவரிடம் தமிழ்நாடு உயிரையே வைத்திருந்தது.
இந்தச்
சொற்றொடர்களை மீண்டும்
படியுங்கள்.
‘அவர்’ என்னும் ஒரு சொல்,
அவரை(ஐ-2), அவரால் (ஆல்-3), அவருக்கு (கு-4), அவரின் (இன்-5), அவரது(அது-6), அவரிடம்(இடம்-7/கண்) எனப் பல்வேறு வடிவத்துடன் வெவ்வேறு
பொருட்களைத் தருகிறது. அவ்வாறு
வேறுபடுத்தும் எழுத்தே வேற்றுமை
உருபு.
ஐ,ஆல்,கு,இன்,அது,கண், -அதான் வேற்றுமை உருபுன்னு தெரியுமே! எட்டுன்னுட்டு ஆறு மட்டும்தான் இருக்கு...?
இன்னும் ரெண்டு எங்கேன்னுதானே கேட்கிறீங்க?
பெயர்களே முதல்(1) வேற்றுமை. அது எழுவாய்ப்
பொருளில் வரும்.
‘கண்ணா வா’ –என்று
கூப்பிடும் (விளிக்கும்) பொருளில் வந்தால் அது
எட்டாம் வேற்றுமை. இதற்கு ’விளி வேற்றுமை’ என்ற பெயரும் உண்டு.
முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை.
முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை.
அதெல்லாம் எங்களுக்கு தெரியும்... இரண்டாம் வேற்றுமை(ஐ) விரியில்
வல்லினம் மிகும்ன்னா என்னான்னு சொல்ல வேண்டாமா?
ஆமால்ல... நான் மறந்தே போயிட்டேன்... வேற்றுமை உருபு
கண்ணுக்குப் புலப்படுமாறு வெளிப்படையாக அமையலாம்.
இவ்வகைச் சொற்றொடர்களை வேற்றுமை விரி அல்லது தொகா நிலைத் தொடர் எனப்படும்.
சரி... வல்லினம் மிகா இடங்களைப் பார்ப்போமா?
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
இருங்க... இருங்க... இரண்டாம் வேற்றுமை(ஐ) விரியில் வல்லினம்
மிகுன்னு சொல்லிட்டு... உடனே இரண்டாம் வேற்றுமைத் தொகையில் மிகாது சொன்னா
எப்படி? விரி... தொகைன்னு...
விளையாடுறீங்களா? தொகைன்னா என்னான்னு
விளக்கமாச் சொல்லுங்க...?
அது வேற ஒன்னுமில்லைங்க... வேற்றுமை உருபு சொன்னோமுள்ள...
அது தொக்கு (மறைந்து) வருவதுதான் வேற்றுமைத் தொகை அல்லது தொகை நிலைத் தொடர்ன்னு
சொல்றோம்... வேற ஒன்னும் இல்லை...!
(வல்லினம் மிகா இடம் வரும்....
தங்களால் கற்றுக்கொண்டு வருகிறேன் மணவையாரே எமது நூல் அகம் காண வாரீர்.
பதிலளிநீக்குதமிழ் மணம் 2
அன்புள்ள ஜி,
நீக்குமிக்க நன்றி. தமிழ் மணம் வாக்கிற்கும் நன்றி.
பலருக்குப் பயன்படும்
பதிலளிநீக்குதங்கள்
இலக்கணப் பாடத்தை விரும்புகிறேன்.
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
என்னவொரு விளக்கம்...!
பதிலளிநீக்குசுவாரஸ்யமாக.... விளக்கமாக...
பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள் ஐயா...
அன்புள்ள அய்யா,
நீக்குவலைச்சித்தரின் பாராட்டு... மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி.
நல்ல இடுக்கை பயனுள்ளதாக இருந்தது
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குபயனுள்ளதெனப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.
அசையும் படங்களுடன் ஆன இடுகையும் அழகுத் தமிழுக்கான பயிற்சியும் அருமை அய்யா!
பதிலளிநீக்குஇதழ்களை இமைகளாக்கி உருளும் கண்கள்தான் என்னவோ செய்கிறது..
த ம கூடுதல் 1
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குஅடிப்படை இலக்கணத்தை அறியத் தர ஆவலால்...! தமிழ்தானே என்றில்லாமல் தமிழ்த்தேனே என்று எண்ண வேண்டி ஒரு சிறிய முயற்சி!
இரண்டாம் வேற்றுமை ‘ஐ’ (கண்கள்) விரியில்...வல்லினம் மிகுந்துதானே காணப்படும்.
நன்றி.
மிக நல்ல பதிவு நண்பரே! கற்றுக் கொள்கின்றோம் தங்களிடமிருந்து.
பதிலளிநீக்குதாங்கள் எங்கள் பதிவுகளிலும் சரி செய்யலாம் அப்படியாவது கற்றுக் கொள்வோம் இல்லையா நண்பரே! தட்டச்சுப் பிழையாவதைத் தவிர்த்து....
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குகற்றது கையளவு... கல்லாதது உலகளவு...கொஞ்சம் தெரிந்ததைக் கொஞ்சம் சொல்லலாமென்ற சிறிய முயற்சி!
-மிக்க நன்றி.
அருமையான விளக்கங்கள்...இவை குறித்து அடிக்கடி எனக்கு சந்தேகம் எழும், இனி தெரிந்துக் கொள்ள உங்கள் பதிவு உதவும். நன்றி.
பதிலளிநீக்குஅன்புள்ள சகோதரி,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
தாங்கள் ஓர் ஆசிரியரா? அப்படி என்றால் நிச்சயம் தங்கள் மாணவர்களும் கொடுத்து வைத்தவர்கள், இப்படி எளிமையாக தமிழ் இலக்கணங்களை கற்பித்தால் தமிழ் கஷ்டம் என எந்த மாணவரும் சொல்லமாட்டார்கள்.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகைக்கு நன்றி.
தங்களின் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.
ஆகா! 'அண்ணா எடுத்துக்காட்டு' அருமை ஐயா! வேற்றுமை உருபுகளை நினைவில் வைத்துக் கொள்ளத் திணறுபவர்கள் இந்தப் பத்தியை மனப்பாடம் செய்து கொள்ளலாம்.
பதிலளிநீக்குவேற்றுமை உருபுகள், நிலைமொழி, வருமொழி ஆகியவை பற்றிய விளக்கங்கள் ஆகியவற்றைத் தாங்கள் இங்கு கொடுத்திருப்பது தெரியாமல், முதல் பகுதியில் இவற்றைப் பற்றிச் சொல்லவில்லையே என்று கேட்டு அந்தப் பதிவில் கருத்திட்டுவிட்டேன். பொறுத்தருளுங்கள்!
அன்புள்ள அய்யா,
நீக்குமிக்க நன்றி.
ஐயா! மேலே பதிவின் இறுதியில் கொடுத்துள்ள இரு தொடுப்புகளும் குறிப்பிட்ட கட்டுரைகளுக்குச் செல்வதற்கு மாறாக உங்கள் பிளாகர் கணக்குக்கே செல்கின்றன. திருத்த வேண்டுகிறேன்! ஆனால், அஞ்ச வேண்டியதில்லை! உங்கள் பிளாகர் கணக்குக்குள் நுழைய அவை இடம் கொடுக்கவில்லை. 'இதற்கு உங்களுக்கு அனுமதியில்லை' என்றுதான் காட்டுகின்றன.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குஇணைப்பிற்குள் செல்ல இடம் அளிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. சரி செய்ய முயற்சி செய்கிறேன்.
-நன்றி.