சனி, 31 ஜனவரி, 2015

என்னுடைய மேடை நாடகம் -2 ‘மண்ணில் இந்த காதல்’


என்னுடைய மேடை நாடகம்

மண்ணில் இந்த காதல்





28-7-94  வியாழக்கிழமை மாலை 7-00 மணிக்கு  நடந்ததை ‘மாலை மலர்‘ விமர்சனத்தை  அறியத்தரப்படுகிறது. 

                   திருச்சி ஆர்.ஆர். சபாவில்  80-ம் ஆண்டு நாடகப்போட்டி நடந்து வருகிறது.  6-வது நாளான நேற்று, திருச்சி புனிதாலயா குழுவினரின் நாடகமான  “மண்ணில் இந்த காதல்”  இடம் பெற்றது.



                                      (புதுமண தம்பதிகளாக தோன்றும் 
                                         இருதயராஜ் -எலிசபெத்   அருகில்  தந்தையாக                                                                     நிற்பவர்  ஜார்ஜ் ஸ்டீபன்) 


          கல்லூரி மாணவன் ஜெயராஜ்.  அவரது  காதலி துளசி.   இருவரும் நண்பர்கள் உதவியால் ஜாதி மதம் கடந்து திருமணம் செய்து கொள்கிறார்க்ள.  துளசியின் தந்தை போலீஸ் இன்ஸ்பெக்டர்.  அவர் ஜெயராஜை மிரட்டி திருமண ஜோடியை பிரித்து விடுகிறார்.  துளசிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கப் போவதாக திருமண பத்திரிகை வருகிறது.

          ஜெயராஜ் இடிந்து போகிறான்.  மாதங்கள் உருண்டோடுகின்றன.  ஜெயராஜுக்கு அவளது அத்தை மகள் ஏஞ்சலினை வற்புறுதி கல்யாணம் செய்து வைக்கிறார்கள்.  மாடு முட்டி படுகாயம் அடைந்த ஜெயராஜ் ஆஸ்பத்திரிக்கு செல்ல... அதே ஆஸ்பத்திரிக்கு துளசி பிரசவத்துக்காக வருகிறாள்.  அவளுக்கு குழந்தை பிறக்கிறது.  திருமணம் செய்து கொண்டு இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்த... ஒரு சில நாட்களை நினைத்து கண்ணீரில் கரைகிறார்கள்.

          அப்போது துளசி, ஜெயராஜிடம்,  “நான் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை.  இது நம் குழந்தைதான்” என்று சொல்கிறாள்.  மாடு முட்டி சிகிச்சை பெறும் ஜெயராஜ்,  ஏஞ்சலின் என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கிறான்.  அவன் இனி தந்தை ஆகும் தன்மையை இழந்து விட்டான் என்ற உண்மை துளசிக்கு தெரிய வருகிறது.  மயங்கி விழும் அவள் ‘கோமா’ நிலையை அடைகிறாள்.  “துளசி பெற்றது என் குழந்தை ... அதை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று ஜெயராஜ் கேட்க, துளசியின் தந்தை மறுக்கிறார்.  அது வழக்கு வடிவில் கோட்டுக்கு போகிறது.

          இந்த நிலையில் துளசி மயக்கம் தெளிந்து எழுகிறாள்.  தன் குழந்தையை ஜெயராள்-ஏஞ்சலின் தம்பரிதயினரிடம் ஒப்படைந்துவிட்டு தனிமரம் ஆகிறாள்.


காதல் ஜோடி

          கல்லூரி மாணவர் ஜெயராஜ் (ஆர். இருதயகுமார்) - துளசி (டி.ஆர்.ராஜேஸ்வரி) காதல் உயிர் உள்ளதாக இருந்தது.  இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்ச முய்ன்றார்கள்.  பிரிந்த பின்பு துளசியும், ஜெயராஜும் தவித்த தவிப்பு கண்முன்னேயே நிற்கிறது.

          நாயகன் இருதயகுமாரின் சோகம் - தாகம் - வேகம்  எல்லாமே ஏற்ற இரக்கம் இல்லாத ஒரே ‘பிராண்ட்’ கொஞ்சம் வித்தியாசப்படுத்தி இருக்கலாம்.  ராஜேஸ்வரி வழக்கம் போல் குறை வைக்கவில்லை.  ஆஸ்பத்திரி காட்சியில் ‘துடிக்க’ வைத்தார்.

          போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் (எம்.குணசேகர்) பொருத்தமான தேர்வு (முக பாவங்களுக்கு இன்னும் முயற்சி வேண்டும்)  ராயல்சாமி (ஜார்ஜ் ஸ்டீபன்) ஏஞ்சலின் (எலிசபெத்) குறை சொல்ல முடியாதவர்கள்.

          டாக்டர் (சகாயராஜ்), வக்கீல்கள் (பாண்டுரங்கள், மெல்க்யூர்) நீதிபதி (செபாஸ்டின்) உள்பட அனைவரும் அந்தந்த பாத்திரங்களாகவே வந்து இருநதனர்.  இதில் வெற்றி பெற்றவர் ஒப்பனையாளர் எம்.சி.தங்கராஜ்.

       
இயக்கம்

          ‘ஜாதி வெறிதான் இந்தியாவில் வரதட்சணை ஒழியாமல் இருப்பதற்கு காரணம்...’ -இது வசனத்தின் ஆழத்துக்கு ஒரு உதாரணம்.  நாயகன், வில்லன் பாத்திரங்களை இன்னும் மெருகேற்றி இருக்கலாம் என்றாலும் கதையில் சொல்ல நினைத்ததை சரியாக சொல்லி கதை,வசனம், இயக்கத்துக்கு பாராட்டு பெற்றவர் மணவை ஜேம்ஸ்.

          ஆஸ்பத்திரி, கோர்ட் கட்டிடங்கள் அப்படியே மேடைக்கு வந்திருந்தன.  இசை இசைந்து ஒலித்தது என்றாலும் குழந்தையின் குரல் ‘அபஸ்வரம்’.  “மணணில் இந்த காதல்...’ மனநிறைவு தரும் காதல்தான்.  நாடகப் போட்டியில் இந்த காதலுக்கு எந்த இடம் கிடைக்கும்?  நீதிபதிகள்தான் நிர்ணயிக்க வேண்டும்.

_________________________________________________________________________________------------------------------------------------------------------------------------------------------------
                                                                   
             நாடகம்  முதல்காட்சி  நிழல்காட்சி (Shadow)  காதலர்கள் இருவரும்  பல (Still) நிலைகளில் நிற்கவைத்து Live -வாக ‘பாயுமொளி நீயெனக்கு... பார்க்கும் விழி நானுனக்கு......’ Back ground -இல்  ‘பாரதியார்‘ பாடலை       ஆண்-பெண் பாடகர்களைப் பாடவைத்து இடையிடையே நடிகர்களை புரஜெக்டரில் சினிமாபோன்று  Title  சிலைடில் போட்டோம்!
                                                                  

          காதலர்கள் நண்பர்களின் உதவியால் நாயகிவீட்டைவிட்டு நாயகனோடு  வந்து திருமணம் செய்து.... பிறகு ஓர் இரவில்  வெளியில் ஓர் அறையில் தங்குகிறார்கள் ...நிழல்காட்சி (Shadow)   இரண்டு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருக்கிறது... இரண்டும் நெருங்கி வந்து... இணைந்து ஒன்றாக எரிவதைப்போலக்  காட்சிப்படுத்தினேன்.   அது அனைவரின் பாராட்டையும் பெற்றது.
                                                     

                                                                                மாடு முட்டுவதுபோன்றக் காட்சிக்காக கரகாட்டத்தின்போது மாடு வேஷம் போட்டு ஆடுவார்கள் அல்லவா?  அதைப் போல  ஏற்பாடு செய்து (Shadow)  நாயகனை முட்ட வைத்தோம்.  முட்டுகின்ற பொழுது  உண்மையான கொம்பு அவர் மேல்பட்டு அவருக்கு மயக்கம் வந்துவிட்டது.  அடுத்த காட்சி மருத்துவமனை என்பதால் அவர் வீல் சேரில் வருவதாகக் கதையிருந்ததால் தப்பிப்பிழைத்தோம்.

          இதில் உச்சகட்டம்  (Highlight) என்னவென்றால்... பிறந்த குழந்தை வேண்டுமே!  பொம்மையை வைத்தால் நன்றாக இருக்காது என்று எண்ணியதால் பிறந்த குழந்தை கிடைக்குமா என்று நண்பரிடம் கேட்டபொழுது ... பிறந்து ஒரு வாரங்கூட ஆகாத  குழந்தை இருக்கிறது... அந்தக் குழந்தையின் தாய் எனக்குத் தெரியும் என்று அந்தத் தாயைச் சம்மதிக்கவைத்து  அந்த தாயும் வந்து காத்திருக்க...(தொப்புள் கொடி அறுபடாத நிலையில்)  அந்த ஒரு வாரக் குழந்தையும் நடித்தது... அந்த குழந்தைக்கு இப்பொழுது  வயது இருபது இருக்கும்!


          அன்றைக்கு அந்த ‘பிறந்த குழந்தை’யாகப் பார்த்தது... இப்பொழுது நண்பரிடம் சொல்லி,   அந்தக் குழந்தை நட்சத்திரத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது!
                                                               


நன்றி.
-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.
 manavaijamestamilpandit.blogspot.in

18 கருத்துகள்:

  1. மணவையார் அவர்களுக்கு மனதை தொட்ட கதை
    தமிழ் மணம் 2
    மன்னிக்கவும் இந்தியாவில் 80 இந்தயாவில் என்று இருக்கிறது நம் நாட்டின் பெயர் என்பதால் குறிப்பிட்டேன் நண்பரே.. தவறாக நினைக்க வேண்டாம். நன்றி

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள ஜி,

    மனதைத் தொட்ட கதையென்று முதல் பின்னூட்டம் இட்டதற்கும் தமிழ் மணத்தில் வாக்களித்தற்கும் மிக்க நன்றி.

    தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி ஜி. திருத்திவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான கதை நண்பரே! எப்படி இவ்வளவு அழகாக ஒரு மேடை நாடகத்தைக் காட்சிப்படுத்தியிருக்கின்றீர்கள்! வியக்க வைக்கின்றது! பிறந்த குழந்தை முதல் அப்படியே கொண்டுவந்து....சில காட்சிகளை சினிமா போல் கொண்டுவந்திருப்பது அருமை...கதையும் மனதைத் தொடுகின்றது..நண்பரே! இறுதியில் மனம் கனத்தது. காணொளியில் கண்டால் இன்னும் மனம் கனத்துவிடும் என்று நினைக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      அருமையான கதையென்றதற்கு நன்றி. காரணம் கதை சிக்கலானது. காதலர்கள் இணைகிறார்கள்...ஜாதி மதத்தால் பிரித்துவிடுகிறார்கள். காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் முடிந்ததாகக்கூறி இவனுக்கும் திருமணம் முடித்துவிடுகிறார்கள்... ஆனால் காதலிக்கு வேறுதிருமணம் நடைபெறவில்லை... கர்ப்பமான அவள் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கின்ற பொழுது விபத்துக்குள்ளாகி காதலன் அதே மருத்துவமனையில் சேர்க்க...ஆண்மை இழந்து நிற்கின்றபொழுதுதான்... காதலியை சந்திக்கின்றான். காதலிக்கு திருமணம் நடந்து பிரசவத்திற்காக வந்து இருக்கின்றாள் என்று எண்ணுகின்றான்...! அப்பொழுதான் அவளுக்குத் திருமணம் நடைபெறவில்லை என்ற உண்மை தெரிகிறது... குழந்தையை பெற்றெடுத்து காதலனிடம் ஒப்படைத்து விட்டுச் செல்கின்றாள்.

      கத்திமேல் நடப்பதைப்போல் கதை சொல்லியிருந்தேன். வீடியோ எடுத்தேன். அப்பொழுதே வேறு டெக்கில் போட்டால் ஆடியோ சரியில்லை... பிறகு ஆடியோ கூட்டி சரிசெய்து கொள்ளலாம் என்று பல ஆண்டுகள் கழித்துப் பார்த்த பொழுது கேசட் காணவில்லை. ஒரு வேளை கிடைத்தால் நல்லது! புகைப்படங்கள் இருக்கின்றன.

      பாம்பின் கால் (இல்லையென்றாலும்) பாம்பறியும்.
      நன்றி.

      நீக்கு
  4. அன்புள்ள அய்யா,

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அய்யா,
    ஆயிரம் கதை படைக்கும் அளவிற்கு அனுபவமும், மனதிலோடும் திட்டமும் கொண்டு, நீங்கள் எழுதும் கதைகள் கவிதைகள், நாடகங்கள் அனைத்தும் மேலும் மேலும் செம்மையுற்று அறியப்படும் ஆளுமையாய் நீங்கள் விளங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
    நாடகத்தின் பின்னால் ,
    மெய்வருத்தம் பாரா பசி நோக்கா கண்துஞ்சா, எவ்விடர் வரினும் எதிர்கொள்ளும் உங்கள் உழைப்பிருப்பதைப் பார்த்தவன் என்னும் முறையில் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்.
    தம 4
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் ஆசை நிறைவேற முயற்சிக்கிறேன். தாங்கள் எந்தப் பிரதிபலன் பாராது பிறருக்காக உழைக்கின்ற... தவறுகளை சுட்டிக்காட்டத் தயங்காத...கருத்துகள் சொன்னாலும் சரியானவையாகச் சொல்லும்..... பேராற்றல் பெற்றும் இன்னும் மிகுந்த தன்னடக்கத்துடன் (அது தங்களுக்கு தேவையில்லை) இருக்கின்ற... தங்களை எண்ணி வியக்கின்றேன். பிழை திருத்த வேண்டி வருகின்றவற்றையெல்லாம் மனமுவந்து அவற்றையெல்லாம் திருத்துகின்ற செயலைச்செய்யும் தங்களைப் பாராட்டி மகிழ்வதில் பெருமை கொள்கின்றேன்.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்புள்ள வலைச்சித்தரே!

      தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அய்யா.

      நீக்கு
  7. ஒரு நாடகத்திருக்கு எவ்வளவு அற்பணிப்பும், உழைப்பும் தேவை என்பது இந்த பதிவை படித்தால் புரியும். அருமை அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரி,

      பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  8. இந்த பதிவை படிக்கும் போது நாடகத்தின்பால் நீங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு புரிகிறது. இதெல்லாம் தொடக்கமாகி, நீங்கள் மேன்மேலும் புகழ் பெற்று சிறக்க மனமார வாழ்த்துகிறேன்.

    எனது புதிய பதிவு : மதமாற்றம் மனமாற்றமாகுமா ?
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post_21.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.


    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள அய்யா,

    தங்கள் வாழ்த்திற்கு நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள அய்யா,

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. ஈடுபாட்டோடு செய்யப்படும் எந்த முயற்சியும் நல்ல பலனைத் தரும். தங்களுடைய ஈடுபாட்டினைப் பதிவில் காணமுடிந்தது. நாடகத்துறையில் தாங்கள் ஒரு சிறந்த பதிவு படைக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள அய்யா,

    தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே! தங்களின் வாழ்த்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...