வியாழன், 2 அக்டோபர், 2014

நீங்களே சொல்லுங்கள்! காந்தி...மகாத்மாவா? இல்லையா?




நீங்களே சொல்லுங்கள்! காந்தி...மகாத்மாவா? இல்லையா?



1869 அக்டோபர் 2-
கரம்சந்த் காந்தி+
புத்திலிபாய்க்கும்
புத்திரரான...
மோகன்தாஸ் அவதரித்தான்!

போர்பந்தரில்-
இந்திய விடுதலைப்
போருக்காகத்தான்...
பிறந்தானோ?

அடிமை இந்தியாவின்-                                              
விடுதலைச் சின்னம் நீ...!
ஊமையாய் இருந்தவர்களை...
உரிமைக்குரல் கொடுக்கச் செய்த      
மறுமலர்ச்சியின் வண்ணம் நீ...!
                                                                         


                                                       
 பதின்மூன்றில்-
இளம் வயதிலேயே
இனியவள் கஸ்தூரிபாயை...
தனக்கு-
இணையாக்கி...
வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்ட
தூயவன்.



இங்கிலாந்தில்-
பாரிஸ்டர் பட்டம் பெற்றே...
தென்னாப்பிரிக்காவில்
சட்டப்படிப்பிற்கான
வேலையைச் செய்தே
சமூக நீதி காத்தவன்.
.                                                                                          

அங்கு-
ஜோகன்னஸ்பர்க்கில்...
சத்தியாகிரகப்  போராட்டத்தில்
சமூக நீதிக்காகச்
சிறை சென்றவன்...!
காலனி ஆதிக்கம் செய்த
ஜெனரல் ‘ஸ்மட்ஸ்’க்கே
காலணி செய்து கொடுத்து              
நாணப்பட வைத்தவன்.
                                                                                 
நீ-
இந்தியா-
திரும்ப நினைத்த பொழுது...
உன் தியாகத்தைத்
திரும்பிப் பார்த்தவர்கள்...
52 பவுன் தங்கச் சங்கிலி...
தங்கக் கடிகாரம்...
வைர மோதிரம்...
இன்னும் எதை எதையோ
வெகுமதியாகக்  கொடுத்தபோதும்...
எதையும் எடுத்துக் கொள்ளாமல்
சமூக சேவைக்காக...
அவர்களுக்கே
அனைத்தையும் கொடுத்து...
வெறும் கையுடன்  வந்த
அவதாரப் புருஷன்.


இந்தியா வந்து-
இந்திய தேசிய காங்கிரஸ்
தலைவனானாய்...
இந்தியத் தலைகள் அனைத்தும்...
உனக்குத் தலை வணங்கின.


நமது மகான்-
நான்கு மகன்களுக்குத் தந்தை...!
நாட்டைக்   கவனித்த    எந்தை...
நால்வரைக் கவனிக்காதது விந்தை...!
                 


அகிம்சையென்ற-
ஆயுதம் கொண்டே...                                                    
பரங்கியரின் பீரங்கிப்படையை
நிராயுதபாணியாய் நின்று எதிர்த்தவன்...

அண்ணலின் ‘குருதேவ்’வான-
இரவீந்தரநாத் தாகூர் ஆத்மா...
காந்தியை ‘மகாத்மா’ வாக்கியது.

உன்னைக் கொல்ல...                                    
மெல்ல ஆள் அனுப்பிய
வெள்ளையனைத் தேடியே
நீ சென்றாய்...!
‘ஆக வேண்டியதைச்
செய்து கொள்’-என்று
நீ உடலைக் காட்டியவன்.


‘ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தைக் காட்டு’-என்ற
இயேசுவின் போதனையில் சென்றாயோ?
‘என் வாழ்க்கையே என் செய்தி’
-என்று சத்திய சோதனையில் சொன்னாயே!
இருந்தாலும்...
உனக்குத் துணிச்சல் அதிகம்தான்!

மனிதப் பிறவியில்...
தீண்டத்தகாதவன் என்று-
இருந்தவனை...-?
‘ஹ்ரிஜன்’ என்று துதித்தவன்.                                  
தாழ்த்தப்பட்டவன்  நுழையக்கூடாதென்ற
ஆலயத்திற்குள் பிரவேசம் செய்ததற்காகக்
கட்டிய மனைவியின் உறவையே
வெட்டிவிடத்  துடித்தவன்...
இருந்தாலும்...
உனக்குத் துணிச்சல் அதிகம்தான்!

மனித மனங்களின்-
இராட்டையைச் சுழற்றியே...
அன்புநூல் நூற்றவன்!
அரையில்-
அரையாடை கட்டியே
ஆங்கிலேயக் கறையை
அடியோடு அகற்றியவன்.
அடியவர்க்கெல்லாம்- நல்
அறிவுரை புகட்டிய மகான்.


நவகாளியில் கலவரத்தில்...
இந்து-
இஸ்லாமியர் ஒற்றுமைக்காக...
உண்ணாவிரதம் இருந்தே
உயிர்விடத் துணிந்தவன்.

‘நான் நோயில் மாண்டு போனால்...
இவன் ஏமாற்றுக்காரன்...’ என்றும்
ஒரு வேளை சுடப்பட்டு மாண்டு போனால்..
இவன் மகாத்மா’ என்றும்  சொல்லென்று
பேத்தியிடம் சொன்னவன்அல்லவா நீ!

அடுத்தநாளே...
நாதுராம் கோட்ஸே...
மனிதமிருகமொன்று
துப்பாக்கிக் குண்டுகளால்                         மனிததெய்வத்தைத்
தின்று பார்த்ததே...!
‘ஹே...  ராம்...ராம்...’என்றே
நின்று சாய்ந்ததே!

நீங்களே சொல்லுங்கள்...!
காந்தி...!
மகாத்மாவா? இல்லையா?
 




                                                                                 
                                                                                                                                                                                                                                                                                                                                           
                                                                                                                           
                                                                                     -மாறாத அன்புடன்,

                                                                                       மணவை ஜேம்ஸ்.                        
                         

26 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா!

    ஆக்கினீரே நற்கவி அற்புதமே!.. காந்திகதை
    தேக்கிய பெட்டி திறந்து!

    அண்ணல் மகாத்மாவே! அன்றியுண்டோ வேறுசொல்ல?
    எண்ணமே வீணென்பேன் இங்கு!

    அருமையான கவிதை! அகத்திலூன்றிப் படித்தேன்!
    நினைவுப் பதிவிற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  2. அன்புச் சகோதரி இளமதி அவர்களுக்கு,
    ‘ நீங்களே சொல்லுங்கள்! காந்தி...மகாத்மாவா? இல்லையா?’
    -கவிதைப் பற்றிய கருத்திட்டமைக்கு நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    பதிலளிநீக்கு
  3. காந்தி என்ற அரசியல்வாதியை பற்றி வேண்டுமானால் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் தன் வாழ்க்கையையே செய்தியாக வாழ்ந்துகாட்டிய அவர் நிச்சயம் மகாத்மாதான் !

    மகாத்மாவின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் மகத்தான கவிதை.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள திருமிகு.சாமானியன் அய்யா அவர்களுக்கு,
    வணக்கம். எனது வலைப்பக்கம் வந்து கவிதை பற்றி கருத்திட்டமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து பின்னூட்டம் இடும்படி அன்புடன் அழைக்கின்றேன்.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு
  5. “தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டுப்
    பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை
    வாழ்விக்க வந்த காந்தி“
    என்பான் பாரதி.
    தாங்களும் காந்திபற்றி அருங்கவிதை ஒன்றைத் தீட்டி விட்டீர்கள்!
    //காலனி ஆதிக்கம் செய்த
    ஜெனரல் ‘ஸ்மட்ஸ்’க்கே
    காலணி செய்து கொடுத்து
    நாணப்பட வைத்தவன்.//
    என்ற வரிகளை மிகவும் ரசித்தேக் மணவையாரே!
    பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. அன்பு நண்பருக்கு,
    காந்திபற்றிய அருங்கவிதை என்று என்கவிதையைப்பற்றிக் கூறியது உள்ளபடியே மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. தங்களின் பாராட்டுதலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. காந்தி மகாத்மாவேதான்! அருமையான கவிதை
    வரிகளை ரசித்தோம்!

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள திரு.துளதரன் தில்லைஅகத்து அய்யா,
    கவிதையை ரசித்துப் படித்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. Thiru.Avainaayagan.

    வணக்கம். கவிதை பற்றிய தங்களின் கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு
  10. முதன் முதலாக தங்களின் தளத்திற்கு வருகின்றேன்
    அருமை இனி தொடர்வேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திரு.கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு,
      வணக்கம். எனது வலைத்தளத்திற்கு வருகைபுரிந்ததற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
      படைப்புகளைப் படித்துக் கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
      -மாறாத அன்புடன்,
      மணவை ஜேம்ஸ்.
      manavaijamesstamilpandit.blogspot.in

      நீக்கு
  11. மகாத்மாக்களால் மட்டுமே இப்படி இருந்திருக்க முடிந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திரு.Vimalan Perali அவர்களுக்கு,

      வணக்கம். என் பக்கம் வந்து கருத்திட்டமைக்கு நன்றி.
      -மாறாத அன்புடன்,
      மணவை ஜேம்ஸ்.
      manavaijamestamilpandit.blogspot.in

      நீக்கு
  12. மறுமலர்ச்சியின் வண்ணம் என
    மாறுபாடில்லாமல் திகழ்ந்த
    மாசற்ற மகான் காந்தியடிகள்..!
    மிக அருமையான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திரு.இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு,
      வணக்கம். தங்களின் பாராட்டுதலுக்கு நன்றி.
      -மாறாத அன்புடன்,
      மணவை ஜேம்ஸ்.
      manavaijamestamilpandit.blogspsot.in

      நீக்கு
  13. பதில்கள்
    1. அன்புள்ள திருமிகு.திண்டுக்கல் தனபாலன் அய்யா அவர்களுக்கு,

      வணக்கம். தங்களின் பாராட்டுக்கு நன்றி.
      -மாறாத அன்புடன்,
      மணவை ஜேம்ஸ்.
      manavaijamestamilpandit.blogspot.in

      நீக்கு
  14. காந்தி மகாத்மாதான் ... அருமையான கவிதை ... ஆனால் கவிதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்ற வேண்டும்....

    பதிலளிநீக்கு
  15. அன்புள்ள இன்றைய வானம் வலைப்பூ அய்யா அவர்களுக்கு,

    வணக்கம். தங்களின் பாராட்டுக்கும்...இன்னும் மெருகேற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறியதற்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. அன்பை நூலாய் நூற்றகாந்தியக் கவிதை மூலம் தங்கள் தளத்திற்கு அறிமுகமாகியிருக்கிறேன். தொடர்கிறேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திரு.சசி கலா அவர்களுக்கு,
      எனது தளத்தை தொடர்வதற்கு நன்றி.

      நீக்கு
  17. மகாத்மாவுக்கு உங்கள் கவிதாஞ்சலி அருமை !
    தொடர்கிறேன் ,தொடருங்கள் ஜேம்ஸ் ஜி !

    பதிலளிநீக்கு
  18. அ ண்ணலின் வாழ்க்கை வரலாற்றை அழகாய் உரைக்கும் அருமைக் கவிதை.அருமை

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள அய்யா,

    வாழ்த்திற்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...