வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

சந்திப்பிழையின்றி எழுதுவோம்.

                     சந்திப்பிழையின்றி எழுதுவோம். 


                                                                    

              
     இன்றைய எழுத்து வழக்கில் நாம் அதிகம் செய்யும் சந்திப்பிழைகள் சிலவற்றைச் சொல்வதை நோக்கமாகக் கொண்ட பதிவு இது


           எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
           என்றென்றும் வாழிய வே!

-என்று பாடி மகிழ்ந்தார் நம் மகாகவி பாரதி.

           எழுதுகின்ற பொழுது நாம் அறிந்தோ... அறியாமலோ பிழை ஏற்பட்டுவிடுவது தவிர்க்கமுடியாததாகிறது.   பிழையைத் தவிர்த்துப் பிழையின்றி எழுதவேண்டி............!
                                                       

      மெய்யெழுத்துகளில்  க், ச், ட், த், ப், ற் என்ற ஆறும் வல்லெழுத்துகள்.  இவற்றில் ட்,ற் என்பன சந்தி எழுத்துக்களாக வாரா.

           வல்லின மெய் க், ச், ட், ப், ற் என்ற ஆறும்... தமிழ்மொழியில் எந்தத் தமிழ்ச்சொல்லிலும் மேற்கண்ட எழுத்துகள் பக்கத்து பக்கத்தில் வராது என்பதை நாம் அறிந்து கொள்வோம்.

            (எடுத்துக்காட்டு ற்ப்பிக்க[கற்பிக்க]ற்ச்சிலை[கற்சிலை], ....)

                              வல்லினம் மிகும் இடங்கள்:

      நிலைமொழிச் சொற்களுக்குப் பின், வருமொழிச் சொற்கள் வந்து புணரும்போது க், ச், த், ப், ஆகிய வல்லொற்றுகளின் வருக்க எழுத்துகள் வந்தால், அவ்வல்லொற்றுகள் சில இடங்களில் மிகுந்தும், சில இடங்களில் மிகாமலும் வரும்.  வல்லினம் மிகும் இடங்களைப் பார்ப்போம்.

   வேற்றுமை உருபு வெளிப்படையாக அமைந்தால் அந்த சொற்றொடர்களை வேற்றுமை விரி அல்லது தொகா நிலைத் தொடர் என்று அழைக்கின்றோம்.


   நீரைக் குடித்தான் (நீர் + ஐ) இதில் இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) தெளிவாகத் தெரிகிறது.  எனவே இத்தொடர் இரண்டாம் வேற்றுமை விரி.

   வேற்றுமை உருபு தொக்கு (மறைந்து) வந்தால் அந்த சொற்றொடரை வேற்றுமைத் தொகை அல்லது தொகை நிலைத் தொடர் என்று அழைக்கின்றோம்.  

    நீர் குடித்தான். (நீர் + +  குடித்தான்) இதில் இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) தொக்கு (மறைந்து) வந்துள்ளது.  அதனால் இத்தொடர் இரண்டாம் வேற்றுமைத் தொகை எனப்படும்.    1.இரண்டாம் வேற்றுமை () விரியின் பின் (வெளிப்படையாக) வரும் வல்லினம் மிகும்.

                                   
         நெல்லை கண்டான்


         நெல்லைக் கண்டான்

 இங்கு இந்த இரண்டு சொற்றொடரிலும் ஒரு க் மட்டும்தான் சேர்ந்துள்ளது.
ஆனால் பொருள் வேறுபடுகிறது.

      நெல்லை கண்டான் என்றால் நெல்லை நகரத்தைக் கண்டான் என்பது பொருள்.

      நெல்லைக் கண்டான்நெலஎன்றால் நெல் மணியைக் கண்டான் என்று பொருள்படும். எனவே இரண்டாம் வேற்றுமை உருபான ஐ சொல்லின் இறுதியில் சேர்ந்தால் அங்கு வல்லினம் மிகுந்து வரும்.

     

  1.   முருகனின் கையில் இருக்கும் வேலைக் (வேல்+ஐ) காணவில்லை!
(வேற்றுமை உருபு வந்தால் மட்டும் வல்லினம் மிகும்)


        வினோத் படித்து முடித்த பிறகும் வேலைகிடைக்கவில்லை.
(சொல்லே  யில் முடிந்தால்வல்லினம் மிகாது.)


                  (வல்லினம் மிகும்)

    நான் சென்னையைச் சென்றடைந்தேன்.
    அவன் கொலையைச் செய்தான்.
                                         

(எ.டு) :  (வல்லினம் மிகாது)
           நான்   சென்னை சென்றேன்.
    அவன் கொலை செய்தான்.

 (சொல்லே ‘ஐயில் முடிந்தால் வல்லினம் மிகாது).
    
      
2.நான்காம் வேற்றுமை (கு) விரியில் வரும் வல்லினம் மிகும்

     கண்ணனுக்கு மகன் (கண்ணன் + கு) இதில் நான்காம் வேற்றுமை உருபு (கு) வெளிப்படையாக உள்ளது.  அதனால் இத்தொடர் நான்காம் வேற்றுமை விரி.

     கண்ணன் மகன். (கண்ணன் + கு + மகன்) இதில் நான்காம் வேற்றுமை உருபு (கு) மறைந்துள்ளது.  எனவே இத்தொடர் நான்காம் வேற்றுமைத் தொகையாகும்.

    (எ.டு) அவனுக்கு +  தா = அவனுக்குத் தா
          அண்ணனுக்கு + சோறு = அண்ணனுக்குச் சோறு

3. , ,  சுட்டெழுத்துகளின் பின்,  என்னும் வினா எழுத்தின் பின்னும்

ப்பழம், க்கல் ,  ச்செடி

   அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
அந்தப்பக்கம், இந்தக்கண், எந்தச்சாலை

4. அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின்
   அப்படிச்செல், இப்படிப்பார், எப்படிச்செய்தாய்,

5.ஓர் எழுத்து ஒருமொழியில் வரும் க், ச், த், ப் மிகும்

   தீப்பந்தம், பூச்செண்டு, கைத்தடி, தைத்திங்கள்.



6.வன்றொடர்க் குற்றியலுகரத்தின்பின் வரும் வல்லினம் மிகும்.

   தேக்குப் பலகை, நச்சுப் பொய்கை,
பாட்டுப்பாடு, கூத்துப்போடு, தப்புக்கணக்கு, கற்றுக் கொண்டான்.
(ஏனைய குற்றிலுகரங்களில் பொதுவாக மிகாது)

7.கரஈற்றுச் செய என்னும் எச்சத்தின்பின் வரும் வல்லினம் மிகும்.
  பாடக் கேட்டேன், தேடச் சென்றாள், பாடத் தெரியுமா? டப்பார்த்தான்.

8.கர ஈற்றுச் செய்து என்னும் எச்சத்தின்பின் வரும் வல்லினம் மிகும்.
  தேடிப்பார், டிப்போனாள்.

9.சால,தவ என்னும் உரிச் சொற்கள் பின் வரும் வல்லினம் மிகும்.
   சாலச் சிறந்தது, தவப் பெரிது.

10.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்முன் வல்லினம் மிகும்.
   ஓடாக் குதிரை, அழியாப்புகழ்.

11. பண்புத்தொகையில், இருபெயரொட்டுப் பண்புத் தொகையில்வல்லினம் மிகும்.
   பச்சைப்பட்டு,                   சாரைப்பாம்பு.


12.உவமைத்தொகையில் வல்லினம் மிகும்
    மலர்க்கண், தாமரைக்கை


             படைப்பாளர்களாகிய நாம் படைக்கின்ற பொழுது பிழையின்றி நல்ல தமிழில் படைக்க முயற்சிப்போம்! 

                        முயற்சி திருவினையாக்கும்!

                                                  வல்லினம் மிகா இடங்கள் வரும்...

                                                                                 தொடரும்..........
         
     

33 கருத்துகள்:

  1. நீங்கள் மொழிப்புலமை உள்ளவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், நீங்கள் எழுதி இருப்பதை புரிந்து கொள்வது மிக மிக கடினம். எளிமையாக எழுதினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதே போல, சிறு பத்திகளாக எழுதினால் படிக்கவும், படித்தவற்றை மனதில் கொள்ளவும் இலகுவாக இருக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
      ’நீங்கள் எழுதி இருப்பதைப் புரிந்து கொள்வது மிக மிகக் கடினம்’ எளிமையாகவும்... பத்திகளாக எழுத வேண்டியிருக்கிறீர்கள்.

      ‘நீங்கள் மொழிப்புலமை உள்ளவர் என்பது தெளிவாகத் தெரிகிறது’ என்று சொல்லியிருக்கிறீர்கள்... அப்படி எல்லாம் இல்லை... நான் எழுதுகின்ற பொழுது பிழைகள் ஏற்படுகின்றன... அதைத் தவிர்க்கலாம் என்று கற்றுக்கொள்வதற்காகவே!

      தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  2. அய்யா,
    அன்றாட வாழ்வில் இருந்து அமைந்த உதாரணங்கள். இலக்கணம் என்றாலே பழைய மரபிலிருந்துதான் எடுத்துக்காட்டுகளும் இருக்கும் என்கிற மாயையைத் தகர்த்து அமைந்த சான்றுகள். பொருத்தமான கண்ணில் நிற்கும் படங்கள்.
    உண்மையில் இது போன்ற பதிவுகள், எம் போன்ற தமிழ்ப்பதிவுலக எழுத்தாளர்களுக்கு மிகத் தேவை என்பேன்.
    பொய்யில்லை. மிக உண்மை.
    தங்களின் தமிழ்ப்பணி வாழட்டும்.
    பள்ளியில் மட்டுமல்லாது தமிழ்ப்பதிவுலகிலும் தொடரட்டும் என வேண்டுகிறேன்.
    மிக்க நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தாங்கள் காட்டிய வழியில் நடக்க அடியெடுத்தேன்,
      ‘எம் போன்ற தமிழ்ப்பதிவுலக எழுத்தாளர்களுக்கு மிகத் தேவை’
      -அய்யா நான் சொல்லவேண்டியதை நீங்கள் சொன்னதற்கு நன்றி.

      ‘பொய்யில்லை... கண்ணுக்குள் தீவளர்த்தேன்’.என்ற பாடல் வரி நினைவுக்கு வந்தது.
      தங்களின் வாக்கு வீண்போகாது!
      -மிக்க நன்றி.

      நீக்கு
  3. நல்ல பதிவு. இன்னும் கொஞ்சம் எளிமைப் படுத்த முயற்சியுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள அய்யா,

    தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஐயா

    நல்லதொரு பதிவு. எழுதும் போது இந்த சந்தேகங்கள் அடிக்கடி வரும். அதை நீங்கள் விளக்கமாக சொல்லி இருக்கிறீர்கள் அதற்கு நன்றி.

    இன்னும் படித்து படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். முடிந்த வரை முயற்சி செய்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி...வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள சகோதரி,

    தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. இனிய இலக்கணத் துளிகள்
    இனி நம்மவர்
    தவறின்றித் தமிழ் எழுத
    தவறாமல் கற்க உதவுமே!

    பதிலளிநீக்கு
  8. அருமை ஐயா பயனளிக்கும் குறிப்புகள் . எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அழகான விளக்கம்... பாராட்டுக்கள்...

    இது போல் தொடருங்கள் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வழிகாட்டுதலில் தொடர்கிறேன். தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் மணவையாரே...
    என்னைப் போன்ற பாமரனுக்கு பயனுள்ள பதிவு தந்தமைக்கு நன்றி நண்பரே....
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள ஜி,

    வலைத்தளத்தையே கலக்கிக்கொண்டிருக்கும் தாங்கள் பாமரன் என்றால்.... நானெல்லாம்...பாமரனுக்கும் மிக மிகக் கீழே இருக்கும் சாமான்யனுக்கெல்லாம் சாமான்யன்.
    பயனுள்ள பதிவென்றுப் பாராட்டியதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்

    அருமையான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்.. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள அய்யா,

    வணக்கம். தங்களின் பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அருமையான விளக்கக்குறிப்புக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  15. அன்புள்ள அய்யா,

    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. மிக மிகச் சிறந்த பதிவு நண்பரே! கற்கின்றோம். சும்மா இல்லை...குரித்து வைத்துள்ளோம்....மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள அய்யா,

    தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. குறித்து வைத்துள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
    -நன்றி.

    பதிலளிநீக்கு
  18. மிகவும் பயனுள்ள பதிவு. அடிக்கடி செய்யப்படும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வகையில் உதாரணம் தந்துள்ளமை சிறப்பாக உள்ளது. எந்த அளவிற்குப் பயன்படுத்துகின்றோமோ அந்த அளவிற்கு உதவியாக இருக்கும். முடிந்தவரை தாங்கள் சொன்னவற்றைப் பயன்படுத்த முயற்சிப்பேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள அய்யா,

    நாம் எழுதும்போது பிழை ஏற்படாமல் இருக்காது. முடிந்தவரை பிழையைத் தவிரித்து எழுத வேண்டி ஒரு சிறிய முயற்சி!
    தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. நல்ல முயற்சி ஐயா! இப்படியொரு தொடர் இன்றைய தமிழுலகுக்குக் கட்டாயம் தேவை. நன்றி! ஆனால், மிக மிக எளிமையாகத் தொடங்கியிருக்கும் நீங்கள் போப் போக, எடுத்த எடுப்பிலேயே நிலைமொழி, வருமொழி, இரண்டாம் வேற்றுமை உருபு, மூன்றாம் வேற்றுமை உருபு என்றெல்லாம் எழுதியிருப்பது அடிப்படை இலக்கணம் தெரியாதவர்களுக்கு மிரட்சியளிக்கும். ஆனால், ஓரளவு இலக்கணம் அறிந்தவர்களுக்கு இது பயனுள்ளதே! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  21. அன்புள்ள அய்யா,

    தொடரைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி. தாங்கள் சொல்வது முற்றிலும் சரியே.
    -மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. பயனுள்ள பகிர்வு. மிகவும் நன்றி ஐயா.
    அன்புடன் கீதா ரவி (கீர்த்தனா)

    பதிலளிநீக்கு
  23. நல்ல முயற்சி பயனுள்ள பகிர்வு தொடருங்கள் ! பதிவுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  24. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  25. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  26. நல்ல பயனுள்ள பதிவு. இறுதியில் முயற்சி செய்வோம் என்று இருக்க வேண்டும். முயற்சிப்போம் என்பது சரியன்று.

    பதிலளிநீக்கு
  27. அன்புள்ள அய்யா,

    தங்கள் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...