சனி, 27 மே, 2017

புதிய உடன்படிக்கை - 11 நாடகம்




காட்சி – 11

இடம்மாளிகை

பாத்திரங்கள்:  ஆரோக்கியசாமி, ஜாக்லின் சித்ரா.




              (மாமனார் ஆரோக்கியசாமி தனியாக அமர்ந்து கொண்டு வெற்றிலையைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்.  அப்பொழுது உள்ளே வருகிறாள் மருமகள் ஜாக்லின்)



ஆரோக்கியசாமி: என்னம்மா...?  இன்னைக்கி வேலைக்கி போகலையா....?

ஜாக்லின்:  இல்லீங்க மாமா... லீவு போட்டுட்டேன்...

ஆரோக்கியசாமி:  ஏம்மா... ஒடம்புக்கு ஏதாவது...

ஜாக்லின்: அதெல்லாம் ஒன்னுமில்லைங்க மாமா...

ஆரோக்கியசாமி: வேறென்னம்மா...?

ஜாக்லின்:  வந்து...  வந்து... (தயங்கித் தயங்கி...) ஒங்கள்ட்ட எப்படி சொல்றதுன்னு பயமா இருக்கு...

ஆரோக்கியசாமி: என்னம்மா...?  என்னவா இருந்தாலும் சொல்லும்மா...

ஜாக்லின்: மாமா... அவரு... அவரு...

ஆரோக்கியசாமி: யாரு ஜான்சனா...?

ஜாக்லின்:   ஆமாங்க மாமா... அவரு தினமும் குடிச்சிட்டு வர்றாருங்க மாமா...

ஆரோக்கியசாமி: (ஆச்சர்யத்துடன் வேகமாக) என்ன...?  எ மகன் குடிச்சிட்டு வர்றானா...?  என்னம்மா சொல்றாய்...?  என்னால நம்பவே முடியலையே...!

ஜாக்லின்: நா சொல்றேன் நம்புங்க மாமா...

ஆரோக்கியசாமி: எப்பயில இருந்தும்மா...?

ஜாக்லின்:  எப்ப இருந்து குடிக்கிறார்ன்னு எனக்குத் தெரியாதுங்க மாமா... கல்யாணமான முதல் ராத்திரிக்கே குடிச்சிட்டு வந்தாருங்க மாமா... நானும் ஒங்கள்ட்ட சொல்லாமலே அவரைத் திருத்திடலாமுன்னு நெனச்சேன்... வரவர ரொம்ப ஓவரா குடிக்கறாருங்க மாமா...

ஆரோக்கியசாமி: அப்புடியா... இத ஏம்மா... என்னிட்ட உடனே சொல்லலை... இப்படிக் குடிச்சிட்டு வந்தா குடும்பம் எப்படி நடத்துவான்...?  ஆமா ஒன்ட்ட எப்படி நடந்துக்கிறான்...

ஜாக்லின்: என்னத்தங்க மாமா சொல்றது...?

ஆரோக்கியசாமி:  இப்போ எங்கே போயிருக்கான்...?

ஜாக்லின்விடிஞ்சா வெளியே போறாரு... பொழுது சாஞ்சா வீடு திரும்புறாரு... சமயத்தில பத்து... பன்னெண்டு மணின்னு ஆயிடுதுங்க மாமா...

ஆரோக்கியசாமி: வரட்டும்... ராஸ்கல்... காலிப்பயலுகளோட சேர்ந்துக்கிட்டு... குடிச்சிட்டு கூத்தடிக்கிறானா...?  தலைக்கு மேல வளர்ந்திட்டானேன்னு பாக்கிறேன்... இல்ல...

ஜாக்லின்: அவசரப்படாதிங்க மாமா... ஆத்திரப்பட்டு ஒன்னும் ஆகப்போறது ஒன்னுமில்லை... மீனு தூண்டியில மாட்டிக்கிடுச்சு... மீனக் காப்பத்தணும்... அவசரப்பட்டு ஆகப்போறது ஒன்னுமில்லை... 

ஆரோக்கியசாமி: சரிம்மா... நீ சொல்றதும் சரிதான்... இப்ப என்ன செய்யலாம்...?

ஜாக்லின்: அவர்ட்ட எப்படி நாசுக்கா எடுத்துச் சொல்லனுமோ... அப்படி எடுத்துச் சொல்லுங்க மாமா... எப்படியோ  தூண்டில்ல மாட்டிக்கிட்ட மீன காப்பாத்துங்க மாமா...

ஆரோக்கியசாமி: ம்...ம்... முயற்சி செய்றேன்... ஆண்டவா... இது எனக்கு வந்த சோதனையா...?
                                         


                                                                           
                                                                                                                                                                                                                                                    -தொடரும்...
                                                                                                                                                        
 -மாறாத அன்புடன்,
   மணவை ஜேம்ஸ்.  


திங்கள், 22 மே, 2017

புதிய உடன்படிக்கை- 10 - நாடகம்



காட்சி  10

இடம்மாளிகை

பாத்திரங்கள்ஜாக்லின் சித்ரா, ஜான்சன்.



முன்கதை

           செல்வந்தர் ஆரோக்கியசாமியின் ஒரே மகன் ஜான்சன்.  பள்ளிக்கூட ஆசிரியை ஜாக்குலினை கைப்பிடிக்கிறான்.  ஜான்சனின் குடிப்பழக்கம் காரணமாக ஜான்சன்-ஜாக்குலின் தாம்பத்திய உறவு தடைபடுகிறது.             “குடி நின்றால்தான் அந்தரங்க ஆசைகள் அரங்கேற்றம் ஆகும்-என்கிறாள்.)



     (ஜாக்லின்  சேரில் அமர்ந்து புத்தகத்தைப் படித்துக் 

கொண்டிருக்றாள்... தள்ளாடிக் கொண்டே உள்ளே நுழைகிறான் 

ஜான்சன்)

ஜான்சன்: என்னடி... ஒய்யாரமா ஒக்காந்திருக்காய்... ஒன்னும்... வீட்ல

வேலை ஒன்னும் இல்லையா...?

ஜாக்லின்: (எழுந்து நின்று) எல்லா வேலையும் முடிச்சிட்டுதாங்க

ஒக்காந்து இருக்கேன்... ஆமா இன்னைக்கும் குடிச்சிட்டுத்தான்

வந்திருக்கீங்களா...?  ஒங்கள எப்படிங்க திருத்துறது...?

ஜான்சன்: (எகத்தாளமாகச் சிரித்துக் கொண்டே) நாய் வாலை நிமித்த 

முடியுமா...?

ஜாக்லின்: நாய் நன்றியுடைதுங்க... அதுக்கு சோறு போடுறவங்க... 

சொல்றதையெல்லாம் கேக்கும் தெரியுமுல்ல... சொல்ல மறந்துட்டேன்... 

இன்னக்கி எங்க அப்பா வந்திருந்தாருங்க...


Related Posts Plugin for WordPress, Blogger...